வெள்ளி, 18 ஜனவரி, 2008

புதிய புலிகள்

புதிய புலிகள்

கட்டுநாயக்கா அரச வான்படைத் தளத்தின் மீதான புலிகளின் தாக்குதல் சிறீலங்காவின் போர் சூத்திரதாரிகளையும் அவர்களின் வெளிநாட்டு கையாடிகளையும் (hயனெடநசள)மிகவும் பலமாக உலுப்பி விட்டிருக்கிறது. அவர்களின் பல வருட திட்டமிடல்களைக் குழப்பி ஆட்டத்தை மீண்டும் முதற் சதுரத்திற் கொண்டுவந்து விட்டிருக்கிறது.

கட்டுநாயக்கா வான்படைத் தளத் தாக்குதலின் பாதிப்பு எப்படியானது என்பது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் சூடுபிடித்துக்கொண்டு வரும் அதே வேளை புலிகளுக்கு அது எப்படியான ஒரு எதிர்காலத்தைப் பெற்றுத்தரப் போகிறது என்பது பற்றி ஒரு சில இந்திய ஊடகங்களைத் தவிர பரவலாகப் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.

புலிகளின் வான்படை நிர்மாணம் ஆரம்பித்து ஏறத்தாழ ஒரு தசாப்தமே கடந்துவிட்டது. செப்டம்பர் 11 க்கு முந்திய காலங்களில் எடை குறைந்த, அதி-எடை குறைந்த வான் கலங்களை மேற்கு நாடுகளில் பொதி (மவை) வடிவங்களில் வாங்கிக் கொள்ளலாம். இதன் அப்போதய விலைகள் சுமார் 15,000 முதல் 20,000 அமெரிக்க வெள்ளிகள். அயர்லாந்து, கனடா போன்ற நாடுகளில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகவே வான் பறப்புப் பயிற்சியைத் தமிழர்கள் பெற்று வந்ததும் புதிய விடயமல்ல. அத்தோடு உலக விடுதலை இயக்கங்களிடையே மட்டுமல்ல பல அரச இராணுவக் கட்டமைப்புகளோடு ஒப்பிடும் போது புலிகளின் தூரதரிசனம், அதிசிறந்த திட்டமிடல், கடுமையான பயிற்சி, அத்தோடு மிக முக்கியமாக, ஊழலற்ற நிர்வாகம் என்பன தனித்தன்மை பெற்றவை. மிகவும் பரகசியமான இந்த விடயங்களைத் தெரிந்து வைத்திருந்தும் ஈழப் போர் ஆரம்பித்து கால் நூற்றாண்டு கழிந்த பின்னரும் புலிகளின் இரண்டு சிறிய விமானங்களின் ஊடுருவலைக் கண்டுபிடிக்க முடியாதுபோன சிங்கள நாட்டின் மடமைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

புலிகள் தமது வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 40 வீதமான தொகையை புலனாய்வு செலவீனங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று அறியப்படுகிறது. உலகின் வேறெந்தொரு நாடுகளுமே தமது போர்க்கால நிர்வாகத்திலகூட இப்படியாகச் செலவழிப்பதில்லை என்கிறார்கள். சிங்கள அரசின் பாதுகாப்புச் செலவீனத்தில் சுமார் 40 வீதம் லஞ்சமாக அரசியல்வாதிகளுக்குப் போய்ச் சேர்கிறது என்றால் அதை நம்பும் வகையில்தான் மகிந்தவின் ஆட்சியும் நடந்து கொள்கிறது.

சோவியத் ஆட்சியின்போது கலைக்கப்பட்ட குடியரசுகள் பாவனைக்கு உதவாத போர்க்கலங்களை கழிவுலோக (ளஉயசி அநவயட) வியாபாரிகளுக்கே விற்க முடியாதிருந்தபோது இலங்கை அரசு அவர்களுக்குக் கைகொடுத்துதவியது. யுக்கிரெயினிடமிருந்து மிக் ரக போர் வான்கலங்களை தலா 2.5 மில்லியன் வெள்ளிகளுக்கு வாங்கியது மகிந்த அரசு. மத்தியகிழக்கு ஆயுத வியாபாரிகள் கற்களையே வரைபடங்களோடு ஆயுதங்களென விற்பவர்கள். லஞ்சத்துக்குப் பேர்போன இலங்கை அரசுடன் நட்புறவு கொண்டாடும் பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற சுலோகத்தின்கீழ் ‘கழிவுலோக’ வியாபாரத்தையே செய்கிறார்கள். வெளிநாடுகளின் பண உதவியிலும் (ஆழிப்பேரலை நிவாரணமும் சேர்ந்தே) ஆயுத வியாபாரிகளின் தயவிலும் மட்டுமே நம்பித் தமது போரை நடாத்திவரும் இலங்கை அரசுக்கு கட்டுநாயக்கா தாக்குதல் மிகவும் பேரிழப்பேயாகும்.

மாறாக, புலிகளோ தமது தேவைகளைப் பெரும்பாலும் தாமே பார்த்துக்கொள்ளுமளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றவர்கள். பெரும்பாலான ஆயுதங்களை அவர்கள் உற்பத்தி செய்து கொள்வது மட்டுமல்ல அவற்றின் வினைத்திறனை (நககiஉநைnஉல) அதிகரிக்கும் அளவுக்கு ஆற்றலையும் பெற்றவர்கள். திறமையான இளம் தலைமுறையினரை இனம்கண்டு அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி தொழிற்கல்வி பயிற்றுவித்து தமது மூளை வளங்களை வலுச்சேர்க்கும் நடைமுறை புலிகளின் ஆரம்பநாட்களிலிருந்தே நடபெற்று வருவது. கட்டுநாயக்கா தாக்குதலிற் பங்குபெற்ற வான்கல ஓட்டியிலொருவர் வெளிநாட்டில் பயிற்சி பெற்றவர் என்ற வதந்தியும் பலமாக அடிபடுகிறது. ஜோனி கண்ணிவெடி முதல் இன்றய வான்கலம் வரை புலிகளின் தொழில்நுட்ப வல்லமைக்கு அவை ஒரு எடுத்துக்காட்டு. இவ்வான்கலங்கள் பகுதிகளாகத் தருவிக்கப்பட்டு ஈழத்தில் பொருத்தப்பட்டவை என்ற கருத்து பலமாக அடிபட்டாலும் அவ் வான்கலங்கள் ஆயுத ஏவலுக்கான முறையில் வடிவமைக்கப்பட்டவை அல்ல என்பதும் ஓட்டியின் கட்டுப்பாட்டிலியங்கும் ஆயுத ஏவல் தொழில்நுட்பத்தைப் புலிகளே தயாரித்திருந்தார்கள் என்பதும் விடயம் தெரிந்தவர்களுக்கு ஆச்சரியமான செய்தியல்ல.

புலிகளின் கள வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணம் தலைமையின் வழிநடத்தலே. சிறிய பாம்பானாலும் பெரிய தடிகொண்டு அதை அடிக்க வேண்டும் என்று தலைவர் பிரபாகரன் சொல்வது வழக்கம். புலிகளின் எந்தவொரு தாக்குதலும் மிக நீண்ட கால, அதிக ஒத்திகைகளுடன்கூடிய திட்டமிடலின் பெறுபேறுகளே. சமீப காலமாக பல களங்களில் இலங்கை இராணுவத்தினர் வெற்றிகளை அடுக்கிக்கொண்டு போகும் போதெல்லாம் மக்கள் ஆதங்கப்பட்டார்கள். புலிகள் எதையுமே செய்யாது கைகளைக் கட்டிக்கொண்டு அடிவாங்குகிறார்களே என்ற கவலை அவர்களுக்கு. அவர்கள் பாரிய தாக்குலொன்றுக்குத் தயாராகுகின்றார்கள் என்பதில் தமிழர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைவிட வெளிநாடுகளின் இராஜதந்திரிகள் வைத்திருந்த நம்பிக்கை அதிகம். ஒரு வகையில் சில நாடுகள் இப்படியான ஒரு நடுநிலையாக்கும் (நெரவசயடணைiபெ) நடவடிக்கையை அவர்களும் எதிர்பார்த்தார்கள். சமீபகால இராணுவ வெற்றிகளினால் அகம்பாவம் கொண்ட மகிந்த அரசு, குறிப்பாக போகொல்லாகம, பாலித கொஹென்ன, சமரசிங்க மற்றும் ராஜபக்ச குடும்பம் எல்லோருமே கர்வம் தலைக்குமேல் ஏறி வரம் பெற்ற அசுரர்கள்போல் நடக்க முற்பட்டார்கள். சமாதானப் பேச்சினால் தாமே அதிகம் இழக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் இறுமாப்போடு நடந்து கொண்டார்கள். இதைச் சர்வதேச சமூகங்கள் விரும்பவில்லை. மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டினாலும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்கியது. அயலவர்களிடையே பகைமையேயும் போட்டியையும் வளர்ப்பதன்மூலம் தமது இலாபங்களை முன்னிறுத்தி அரசு நடந்துகொண்டது அயலவர்களிடையேயும் எரிச்சலை உருவாக்கியது. இப் பின்னணியில் புலிகளின் தாக்குதல் திட்டம் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் அதை அரசுக்குத் தெரிவித்திருப்பார்களா? சென்ற வாரம் பல ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்குச் செல்ல உத்தேசிக்கும் தமது பயணிகளை எச்சரித்தது நினைவிருக்கலாம். அரசுக்குத் தெரியாதது எதுவும் அவர்களுக்குத் தெரிந்திருந்ததா?

புலிகளின் கட்டுநாயக்கா வான்தளத் தாக்குதல் இலங்கையின் போர் அரங்கில் புதிய மாற்றங்களை எதிர்நோக்க வைத்துள்ளது. புலிகளின் வெற்றி உலகெங்குமுள்ள தமிழர்களைப் புளகாங்கிதமடையச் செய்தாலும் அது உருவாக்கப்போகும் எதிர்வினைகளையும் இப்போதே கருத்திலெடுத்து புலிகள் தங்கள் அடுத்துவரும் யுக்திகளையும் வியூகங்களையும் வடிவமைத்துக் கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கலாம்.

வான்தாக்குதலில் 40 வீதமான அரச வான்கலங்கள் சேதமாக்கப்பட்டன என்பது உண்மையானால் அரசு இராணுவரீதியாகப் பலமிழந்து விட்டது என அனுமானிக்கலாம். அதைவிடத் தென்னிலங்கையின் மனோபலப் பாதிப்பு மிக மோசமானதாக இருக்கலாமென்பதும் அங்குள்ள சமாதான விரும்பிகள் இத்தருணத்தைச் சாதகமாகப் பாவித்தால் எல்லோருக்கும் சாதகமானதாக அது இருக்கலாமென்பதும் கருத்து நிலவுகிறது.

சமீப காலங்களில் புலிகள் மேற்கொண்ட கெரில்லாத் தாக்குதல்களானாலும், மரபுவழித் தாக்குதல்களானாலும் (மட்டக்களப்பு வெபர் ஸ்ரேடியம் ஈறாக) எல்லாமே அவர்களின் பயிற்சி நடவடிக்கைகள் (வயசபநவ pசயஉவiஉந) தானென்று ஒரு நண்பர் அபிப்பிராயம் தெரிவித்தார். அப்படிப் பார்க்கின் கட்டுநாயக்கா வான்தளத் தாக்குதலும் ஒரு பயிற்சியாகவே இருக்கலாம். இப்பயிற்சியின்போதே 40 வீதமான வான்கலங்களைச் செயலிழக்கச் செய்யும் வல்லமை இருப்பின் “இப்படியான தாக்குதல்கள் தொடரும்” என்ற சு.ப.தமிழ்ச்செல்வனின் எச்சரிக்கையை தென்னிலங்கை மிகவும் உன்னிப்பாகவே கவனிக்க வேண்டும்.

புலிகளின் நடவடிக்கைகளைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் ஒரு விடயத்தை ஒத்துக் கொள்வார்கள். அதி தீவிர ஒத்திகை, மித மிஞ்சிய தயாரிப்பு, தேவைக்கு மேற்பட்ட வளங்கள் (ஆட்பலம், ஆயுத பலம்), உணர்ச்சி வசப்படாது தருணம் பார்த்து செயலாற்றல் போன்றவை புலிகளின் தனித்தன்மை. இதன் அடிப்படையில் பார்க்கும்போது போதிய அளவு வான்கலங்களைப் புலிகள் தயார் நிலையில் வைத்திருக்காமல் இரண்டொரு வான்கலங்களை மட்டும் உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே இரண்டு ஹெலிகொப்டர்கள், பல தாங்கிகள் என்று மரபு வழிப் போர்க்கலங்களை அவர்கள் வைத்திருந்தும் அவற்றைப் பாவனையில் ஈடுபடுத்தியதில்லை. வான்கலங்கைளைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது இதுவே முதற் தடவை என்றால் அவர்களிடம் பெரிய வான் படையே இப்போது இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

கட்டுநாயக்கா வான்தளத் தாக்குதலின்போது புலிகளின் கலங்கள் இராணுவத்தின் எந்தவித ராடார் எச்சரிக்கைச் சாதனங்களையும் முடுக்காது (வசபைபநச) சுமார் 400 கி.மீ. வரை இரவில் பயணம் செய்து அதிபாதுகாப்பு வலயத்துக்குட் சென்று அலுவல்களைக் கச்சிதமாக முடித்துக் கொண்டு பாதுகாப்பாகத் திரும்பியுள்ளன. இராணுவப் பேச்சாளரின் பேச்சின்படி தங்கள் எச்சரிக்கைக் கருவிகள் முறையாகவே தொழிற்பட்டன எனப்பட்டது. ஆனாலும் எந்தவித எதிர் நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு காரணம் ஒன்றில் வான்தள வலயப் பாதுகாப்பு நடைமுறைகள் சீராக இல்லை அல்லது புலிகளின் தொழில் நுட்பம், சாதுரியம் போன்றன அதிமெச்சும் நிலையில் இருந்திருக்கலாம். பின்னது உண்மையானால் இலங்கையின் எந்தவொரு பாதுகாப்பு வலயமும் அச்சத்தோடுதான் இருக்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்னர் முல்லைக் கடலில் புலிகளின் ஆயுதத் தரையிறக்கத்தின் பின்னர் கண்டெடுக்கப்பட்ட கொள்கலமொன்றில் ராடார் சமிக்ஞைகளை உள்வாங்கும் (யடிளழசடிiபெ) தன்மையுள்ள வர்ணக்கலவை காணப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. புலிகள் தமது அதிவேக படகுகளுக்கு இவ்வர்ணத்தைப் பூசுவதன் மூலம் ராடார் கண்காணிப்பில் சிக்காமற் தப்பித்துக் கொள்ளலாம். (அமெரிக்காவின் ஸ்ரெல்த் ரக விமானங்களின் வெளிப் ப+ச்சு இப்படியான வர்ணக் கலவையினாலானது) அது உண்மையாயின் புலிகளின் வான்கலங்களும் இப்படியான கலவையைப் பெற்றிருக்கலாம். அல்லது 1967ம் ஆண்டு இஸ்ரேலிய வான் கலங்கள் எப்படி ராடாரின் கண்காணிப்பு வலயத்தின் கீழாற் பறந்து இராக்கின் அணுநிலையத்தைத் தாக்கியழித்தனவோ அதே போன்று புலிகளின் கலங்களும் செய்திருக்கலாம்.

எப்படியானாலும், புலிகளின் வான்படை அறிமுகம் ஈழப் போரரங்கில் புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது. உள்ளுர் மற்றும் உலக அரங்குகளில் இது சாதகமானதும் பாதகமானதுமான எதிர்வினைகளைத் தோற்றுவிக்கப் போகிறது. தனது அயலில் ஒரு பலமானதும் சுயமானதுமான நாடொன்று உருவாகுவதை இந்தியா விரும்பாது. இஸ்ரேலைப் போல ஒரு நாடு உருவாவாகினால் எப்படியான உறவை அதனுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் வல்லரசுகளின் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படலாம். ஆனாலும் புலிகளின் ஆட்சிக்காலத்தில் பிறிதொரு நாட்டின் தயவில் அது இருக்காது. எனவே அப்படியான ஒரு நாட்டின் உருவாக்கத்தை முளையிலேயே கிள்ளி எறியவே பல நாடுகள் விரும்பும். அந்த வகையில் புலிகளின் பலமே புலிகளுக்கு ஆபத்தாகவும் முடியும். எனவே புலிகள் தமது இந்த வெற்றியைக் கொண்டு பலச் சமநிலையை மீண்டும் உருவாக்குவதே அனுகூலமானது. அதன் மூலம் ஒரு சமாதானத் தீர்வுக்கு இரு பகுதியினரும் நகர்வது புத்திசாலித்தனமானது. இச்சந்தர்ப்பத்தை உணர்ச்சிவச அரசியலாக்கி மகிந்த அரசு இராணுவ நடவடிக்கையை முடுக்கிவிட்டு பாரிய மனித அழிவுகளுக்குக் காரணமாகுமானால் அதை முறியடித்து தனிநாட்டை உருவாக்கும் பலம் புலிகளுக்கு இருக்கிறது என்பதை இவ் வான்தாக்குதல்கள் நிருபித்து விட்டன. ஏற்கனவே குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலவசமாகப் புதிய (பழைய) வான்கலங்களை இலங்கைக்குக் கொடுத்து தாமும் பங்கு பற்றுவதன் மூலம் புலிகளை நசுக்குவதற்கு எத்தனிக்கலாம். அப்படி நேரும் பட்சத்தில் புலிகளின் தேர்வு இராணுவ நிலைகளிலிருந்து மக்கள் நிலைகளுக்குத் திரும்பலாம். அப்படியாக ஏற்படுகின்ற பேரழிவின் பின்னர்தான் தீர்வொன்றுக்கான சாத்தியம் உருவாகலாம்.

புலிகளின் இத் தாக்குதல்கள் இராணுவ வெற்றிகளுக்குமப்பால் பல அரசியல் வெற்றிகளையும் ஈட்டிக் கொடுத்திருக்கிறது. புலிகளின் திறமைகள் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு வருகிறதா என்ற சந்தேகத்தைப் போக்கி மக்கள் ஆதரவு அலையை மீண்டும் அவர்கள் பக்கம் திருப்பியிருக்கிறது. புலிகளின் ஆட்சேர்ப்பு வாய்ப்புக்களை அதிகரித்திருக்கிறது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் முடங்கியோ, முடக்கப்பட்டோ இருந்த ஈழத்தமிழராதரவை மீண்டும் தட்டி எழுப்பியிருக்கிறது. வெளிநாடுகளில் பணச் சேர்ப்புக்கான வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறது. தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிலரது கனவை நனவாக்கியிருக்கிறது. வாகரை வெற்றிக்களிப்பினால் உருகிப்போய் அடுத்த தேர்தலுக்குத் தயாராகும் ராஜபக்சவினரை ஆட்டம்காண வைத்திருக்கிறது. பிரபாகரனைத் தமது தலைவராகக் கனவு காணும் சிங்கள மக்களை அதிகரிக்க வைத்திருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட, புலிகளின் தமழீழத்துக்கான தயாரிப்பில் முப்படைகளையும் உருவாக்கி செயலாற்ற வைத்ததன் மூலம் தனிநாட்டுக்கான அந்தஸ்த்;தை அண்மிக்கும் தகமையைப் பெற்றிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக…

திறந்திருந்த சில வாய்களை மூடவும் மூடியிருந்த பல வாய்களைத் திறக்கவும் வழி செய்திருக்கிறது.

இது புலிகளின் ஒரு எச்சரிக்கை மட்டுமே. இப்போதாவது சர்வதேசங்களும் சிங்கள தேசமும் சேர்ந்து ஒரு சுமுகமான தீர்வைத் தமிழருக்குப் பெற்றுக் கொடுக்கலாம். அது தவறும் பட்சத்தில் எம் ஆர் நாயராயணசாமி சொன்னதுபோல் துவிவண்டி தொடக்கிய ஈழப்போரை வான்கலங்கள் முடித்து வைக்கும்.

Thai Veedu May 2007

கருத்துகள் இல்லை: