வெள்ளி, 18 ஜனவரி, 2008

உலக தரித்திரம்

உலக தரித்திரம்


….அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர் கெட்டிருந்தது, பூவுலகு வன்முறையால் நிறைந்திருநதது. கடவுள் மண்ணுலகை உற்று நோக்கினார். மண்ணுலகில் ஒவ்வொருவரும் தீயவழியில் நடந்து வந்தனர். அப்பொழுது கடவுள் நோவாவிடம் பின்வருமாறு கூறினார்.: “எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லோரையும் ஒழித்துவிடப் போகிறேன். ஏனெனில் அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது. இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழித்துவிடப் போகிறேன். உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய். அதில் உன் குடும்பத்தாரையும் தக்க விலங்குகுளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும், தகாத விலங்குகளிலிருந்து ஒரு சோடியையும், வானத்துப் பறவைகளிலிருந்து ஏழு சோடிகளையும் உன்னோடு சேர்த்துக்கொள். இன்னும் ஏழு நாட்களில் நாற்பது இரவுகளும் நாற்பது பகல்களுமாக ஓயாது மழைபெய்வித்து நான் உருவாக்கிய அத்தனை உயிரினங்களையும் இந்நிலத்திலிருந்து அழித்தொழிப்பேன்.

….வெள்ளம் வற்றியது. நோவாவும் அவர் குடும்பத்தாரும், விலங்கு, பறவையினங்களும் பேழையிலிருந்து வெளியே வந்தனர். நோவா ஆண்டவருக்கு நன்றி தெரிவிப்தற்காக பலி பீடம் கட்டி அதன் மேல் எல்லா வகைத் தக்க விலங்குகளிலும் தக்க பறவைகளிலிருந்தும் எடுக்கப்பட்டவற்றை எரி பலியாகச் செலுத்தினார். ஆண்டவர்; அந்நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது: “ மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் நான் அழிக்கவே மாட்டேன்.


மேற்கூறிய வாசகங்கள் கிறிஸ்தவத்தின் பழைய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டன.

புனித பூமியான பாலஸ்தீனத்தில் இன்று நடைபெறும் கருமங்களுக்கான காரண காரியங்களை நினைவுகூரும்போது கடவுளின் இக்கூற்றுக்களை இரைமீட்காமல் இருக்க முடியாது.

கடவுள் தன் வாக்கைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை. தன்னுருவில் படைக்கப்பட்ட தன்னாற் தெரிவுசெய்யப்பட்ட விருப்புக்குரிய இஸ்ரேலிய மக்களைக் கொண்டு மீண்டும் அதையேதான் செய்கிறார். ஆபிரகாமின் சந்ததியினர் தமக்குள்ளேயே வன்முறைகளை அவிழ்த்துவிட்டிருக்கின்றனர். உலகம் மீண்டுமொரு அழிவை நோக்கி நடைபோடுகின்றது. புதிய நோவா தன் பேழையுடன் விண்ணுலகில் சஞ்சரிக்கிறார். சர்வதேச விண்தளமான (ஐவெநசயெவழையெட ளுpயஉந ளுவயவழைn) இல் புதிய நோவாவின் குடும்பத்தினரும், தக்க, தகாத விலங்குகள் பறவைகளினது மரபணுக் கூறுகளும் (னுNயு) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர் என்கிறார்கள். அது உண்மையானால் கடவுள் இன்னுமொரு தடவை உலகின் அழிவுக்காகத் தயாராகி விட்டார்.

நம்புவதும் நம்பாததும் எம்மைப் பொறுத்தது.

கடவுளாற் தேர்வு செய்யப்பட்தாகக் கருதிக்கொண்டு இப் பூவுலகத்தின் குரல்வளையை இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். அதன் கரங்களுக்கு வலுக்கொடுக்கும் அமெரிக்காவும் சகபாடிகளும் பாதிக்கப்பட்டவர்களையே வில்லர்களாக்கித் தம் அராஜகத்தை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். இஸ்ரேலின் அழுங்குப் பிடிக்குள் அகப்பட்டு மூச்சுத் திணறும் உலகத்தைப் பார்த்து கைதட்டி ஆரவாரிக்கும் இதர நாடுகளும் அவற்றின் மக்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். புதிய நோவாவினால் உதாசீனம் செய்யப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்.

இன்றய உலக சரித்திரத்தை மாற்றி எழுதும் பணிக்கான பூஜை இருநூறு வருடங்களுக்கு முன்னரே போடப்பட்டுவிட்டது. கடவுள் தமக்கிட்ட பணியென்று ஒரு சமுதாயம் அதைத் தன் தலைமேற் போட்டுக்கொண்டு காரியங்களைச் செய்ய ஆரம்பித்தது. ஜியோனிசம் என்று அதற்குப் பெயரிட்டார்கள். உலகின் சர்வாதிக்கமும் தங்களிடமிருக்க வேண்மென்பதே அதன் நோக்கம் என்று அதன் வரைவு சொல்கிறது. யூத எதிர்ப்பின் பின்னாலுள்ளவர்களால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட இனச்சிதைவின் வடிவமே அது என்று யூத மக்கள் சொல்கின்றனர். இருப்பினும் இன்றய உலக சம்பவங்கள் அச்சொட்டாற்போல் இந்த வரைவைத் தழுவியே நடைபெறுகின்றன என்பது யூதரல்லாதோரின் குற்றச்சாட்டு.

சோவியத் யூனியனின் உடைவிற்குப் பின்னான உலகத்தில் சமநிலை தடுமாறியதால் உலகம் கலங்கிப் போயிருந்தது. ஒரு கட்டுப்பாட்டிற்குள் இயங்கிக் கொண்டிருந்த அரசுகளும், நாடுகளும், குழுமங்களும் அனாக்கிரம நிலைக்குட் தள்ளப்பட்டன. சோவித் யூனியனின் உடைவைத் திட்டமிட்டுக் கனகச்சிதமாக முடித்துக்கொண்ட பங்காளிகள் இஸ்ரேலும் அமெரிக்காவும் இப்புதிய குழப்பநிலையைத் தமக்குச் சாதகமாக மாற்ற எடுத்த முயற்சியே இன்றய உலகின் இயங்கு நிலையின் வடிவம்.

குழம்பிய உலகை மீண்டும் ஒரு ஒழுங்கிற்குள் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு இருந்தது. கோர்பச்சேவினால் மிகக் கொடுமையான முறையிற் காயப்படுத்தப்பட்ட ரஷ்யா மீண்டும் எழுந்து நடமாடுவதற்குள் உலக வரைபடத்தை மீளவரைந்துவிட வேண்டும் என்று அமெரிக்கா முயன்றது. பலமான அரசுகளையும், பிராந்தியங்களையும் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்திவிடமேண்டுமென்ற அவசரம் முனைப்பெடுத்தது. பலமான துணைகளையும், கருவிகளையும் அது உருவாக்கியது. 1998ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய உலக ஒழுங்கு (New World Order) அதன் முதல் திட்ட வரைவு. அதில் தற்போது இருக்கின்ற அங்கத்தவர்களிற் பெரும்பங்கினர் இஸ்ரேலிற்கு ஒருவகையில் உறவினர். இவர்களது திட்டத்தின் முதற் செயல்வினை ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு. அதற்குக் காரணமாக அமைந்த செப்டம்பர் 11ன் பின்னணியிலான மர்மம் இன்னும் துலக்கப்படவில்லை.

தொடர்ந்து ஈராக் மீதான தாக்குதல். பின்னணியும் முன்னணியும் மிக வெளிப்படையாகவே தெரிந்தது. உலகமே எதிர்த்து நின்றது. இருந்தும் ஒரு சுயாதீனமான நாடும் அதன் மக்களும் சிதைத்து சின்னாபின்னமாக்கப் பட்டுவிட்டனர். ஐந்து லட்சம் குழந்தைகள் பட்டினியால் மரணடைந்திருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் மலைகளும் குகைகளும் நேசப்படைகளினால் தரைமட்டமாக்கப்படுகின்றன. மனித இழப்புகள் இங்கு கணக்கெடுப்பிற் சேர்க்கப்படுவதில்லை.

இப்பொழுது லெபனான். இரண்டு சோணகிரிகளைக் கடத்திய குற்றத்திற்காய் ஒரு நாடு தரைமட்டமாகக்ப்பட்டு வருகிறது. அதன் இறமையும், அதன் மக்களின் வாழுரிமைகளும் பீரங்கிகளின் வாய்களிற் புதைக்கப்பட்டு வருகின்றமை சர்வதேச ஜனநாயக அடிமைகளுக்குத் தெரியாமற் போகிறது. உலகமே வாய் பொத்தி மௌனியாகிவிட்டது. உலக காவலர் என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் ஐ.நா. வின் கூலிகள் தம்மையே பாதுகாத்தக் கொள்ள முடியாமற் போனபோது உலகை எப்படிக் காப்பாற்ற முடியும்?

1982ம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் 19 வரையில் லெபனானில் கட்டவிழ்த்து விடப்பட்ட மரனைட் மிருகங்களால் சாப்ரா, ஷட்டில்லா அகதி முகாம்களில் படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீனியர்களின் குருதி மணம் அகல்வதற்குள் மீண்டுமொரு படுகொலை. இந்த செப்படம்பர் படுகொலைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய மரனைட் கிறிஸ்தவர்களை ஊக்குவித்தவர்களில் முதன்மையானவர் தற்போது உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஆரியல் ஷரோன். 20000த்திற்கும் அதிகமான ஆண், பெண், குழந்தைகள் குத்திக் குதறி வல்லுறவுக்குட்படுத்திக் கொலை செய்யப்பட்டார்கள். போரை நிறுத்தும்படி கேட்ட அப்போதய ஜனாதிபதி றேகனுக்கே நடு விரலைக் காட்டிவிட்டுத் தன் அராஜகத்தைத் தொடர்ந்தார் ஷரோன். குற்றம் சாட்டப்பட்ட அதே ஷரோன் மீண்டும் அந்நாட்டின் மக்களாற் பிரதமராக்கப்பட்டார். பதவிக்கு வந்தவுடன் மீண்டும் அவர் செய்தது இன்னுமொரு படுகொலையைத் தூண்டி விட்டது. பாலஸ்தீனியர்கள் மிகவும் புனிதமாகக் கொண்டாடும் அல் அக்ஸா மசூதிக்குப் போயே தீருவேன் என்று சர்வதேச குரல்களையும் உதாசீனம் செய்துவிட்டுப் போனார். ஓய்ந்திருந்த பாலஸ்தீனியர்களின் கிளர்ச்சி மீண்டும் ஆரம்பமானது. இன்று வரையில் நின்றபாடில்லை. தினம் தினம் குழந்தைகள் முதல் முதியோர் வரை குறிவைக்கப்படும் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள். கொலையாளிகளுக்குப் பொறுப்பைக் கொடுத்த மனிதர் எதுவுமே தெரியாது நீண்ட உறக்கத்தில் இருக்கிறார்.

இன்றய லெபனான் பிரச்சினைக்குக் காரணம் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் என்கிறார்கள். இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினரைக் கடத்தியது குற்றம் என்கிறார்கள். ஆனால் இக்கடத்தல் விளையாட்டுகளை இப் பிராந்தியத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அறிமுகப் படுத்தியவர்களும் அவற்றை வெற்றிகரமாகப் பிரயோகப்படுத்தி வருபவர்களும் இஸ்ரேலியர்களே. தாம் விரும்பியபோது தமது இராணுவக் கைதிகளை விடுவிப்பதற்காக பலாஸ்தீனியர்களைக் கடத்திக்கொண்டுபோவது இஸ்ரேலியர்களின் வழமையான நடவடிக்கைகள். இப்படியாக தற்போது இஸ்ரேலிய சிறைகளில் வாடும் பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை பத்ததாயிரத்துக்கும் மேல். இவர்களில் பெரும்பான்மையோர் போர் முனைகளைக் காணாத சிறுவர்கள்.

லெபனான் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. ஐம்பது ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளப்பட்டாலும் லெபனான் மண்டியிட மறுத்து வருவது நல்ல விடயம். அதன் அரச தலைவர் ஹிஸ்புல்லாவுக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்திரு;க்கிறார். இத்தனை அழிவுகளுக்குப் பிறகும் அங்கு நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஹிஸ்புல்லாவிற்கு 85 வீதத்திற்கு மேலாக ஆதரவு கிடைத்திருக்கிறது. 1982ம் ஆண்டுப் போரில் இஸ்ரேலைத் துரத்தியடித்தது போன்று இன்னுமொரு தடவை செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இப்போரில் இஸ்ரேல் ஏற்கனவே தோற்றுவிட்டது. இஸ்ரேலை ஆதரித்த காரணத்தால் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளும் உலகில் தமக்கிருந்த செல்வாக்கை இழந்துவிட்டிருக்கின்றன. இந்நாடுகளின் கண்மூடித்தனமான ஆதரவு இஸ்ரேலின் பயங்கரவாதத்தைப் பன்மடங்காக அதிகரித்திருக்கிறது. இஸ்ரேலின் தோல்வி இவர்களின் தோல்வியே என்பதை இனிவரும் காலங்கள் நிரூபிக்கும்.

உலகில் அமைதியும் சமாதானமும் ஏற்படுவதை பல நாடுகள் விரும்பவி;ல்லை. இந்நாடுகளின் ஆயுத வியாபாரம் பாதிக்கப்படக் கூடாதென்பதும், நாடுகளின் அரசியல் ஸ்திரம் தமது வணிகத்தைப் பாதிக்கும் என்பதுமே குழப்பவாதிகளின் அச்சம். இன்று ஆயுத அரசியல் ஜனநாயகத்தைச் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. பலத்தை உருவாக்காது ஜனநாயக மரபைப் பேண முடியாது என்பதற்கு ஹமாஸ் பலஸ்தீனமும் ஹிஸ்புல்லா லெபனானும் அறிஸ்டீட் ஹெயிட்டியும் உதாரணங்கள். துர்ப்பாக்கியமாக அணுவாயுதமொன்றே இன்றய பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரவல்லதென்று இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா போன்ற நாடுகள் காட்டி வருகின்றன.

இனிமேலும் மக்கள் அரசியல்வாதிகளையும், உலக சேவை நிறுவனங்களையும் நம்பி வாழ்க்கையை ஓட்டிக்கொள்ள முடியாது. ஏனெனில் இன்றய உலகை ஆட்சி செய்வது வணிக நிறுவனங்களும் ஆயுத வியாபாரிகளுமே. மனித நேயத்தை உணரும் புலன் அவர்களுக்கு என்றுமே இருந்ததில்லை. எதிர்பார்க்கவும் முடியாது. இதுவே இன்றய உலகின் தரித்திரம்.

….ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும். ஏனெனில், கடவுள் மனிதரைத் தம்முருவில் உண்டாக்கினார் - தொடக்கநூல்

July 2006

கருத்துகள் இல்லை: