வெள்ளி, 15 ஜனவரி, 2016

ஒரு குறிப்பு: வாசிப்பும் யோசிப்பும் / பதிவுகள் / வ.ந.கிரிதரன்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

வாசிப்பும், யோசிப்பும் 138 : உதித்தெழுந்தது அறிவென்னும் இரவி!! ; மின்னூல்கள் பற்றிய எழுத்தாளர் மாலனின் கூற்றும், அது பற்றிய சில எண்ணங்களும்....

E-mailPrintPDF
உதித்தெழுந்தது அறிவென்னும் இரவி!

'எழும் பசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவென்னும் இரவி!' -பாரதியார் -

இத்தாரக மந்திரத்துடன் மே-யூன்1998, யூலை-ஆகஸ்ட் 1998 என இரு இதழ்கள் ,டொராண்டோ, கனடாவில், வெளிவந்ததொரு மாதப்பத்திரிகைதான் இரவி. அக்காலகட்டத்தில் தொடர்ந்தும் வெளிவராது நின்று போனாலும், என் ஆர்வம் இன்றுவரை நின்று விடவில்லை. என் ஆர்வத்தின் வெளிப்பாடுகள்தாம் 'கணினி உலகம்', 'நமது பூமி' ஆகிய செய்திக்கடிதங்களும், 'குரல்' கையெழுத்துச்சஞ்சிகையும், 'இரவி', 'கல்வி' ஆகிய பத்திரிகைகளும் பதிவுகள் இணைய இதழும்.

'இரவி' பத்திரிகையின் முதற் பக்கத்திலுள்ள இரவி என்னும் பத்திரிகையின் எழுத்துருவினை வடிவமைத்துத் தந்தவர் எழுத்தாளர் 'அசை; சிவதாசன். அதற்காக அவருக்கு நன்றி. அவரும் அக்காலகட்டத்தில் மறுமொழி சஞ்சிகையினை வெளிக்கொணர்ந்தவர். இன்று வெளிவரும் 'தாய் வீடு' பத்திரிகையின் தாயான 'வீடு' பத்திரிகையினைத்தொடங்கி வெளியிட்டவர். சிறுகதைகள், கட்டுரைகள் பல பல்வேறு சஞ்சிகைகளில் எழுதியவர். 'தாயகம்' சஞ்சிகையில் அவர் எழுதிய 'அசை மறுபக்கம்' பத்தியின் மூலம் 'அசை' சிவதாசன் என்று அழைக்கப்பட்டவர். தொலைக்காட்சி நிகழ்வுகளில் அரசியல் ஆய்வாளராக அடிக்கடி வலம் வருபவர். வெளிவந்த இரு இதழ்களுமே வடிவமைப்பிலிருந்து, தட்டச்சு செய்தது வரை என் பங்களிப்பே. அன்று கணினியில் தட்டச்சு செய்வதென்பது இன்று போல் அவ்வளவு இலகுவானதாக எனக்கிருக்கவில்லை. தமிழ் தட்டச்சுப்பலகையினைப்பாவிக்க வேண்டியிருந்தது. அந்த நிலையிலேயே என்னால் இரவியினைத்தட்டச்சு செய்து வெளிக்கொணர முடிந்தது இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியத்தைத்தருகின்றது. ஆனால் பத்திரிகையினை வெளிக்கொணர்வதிலிருந்த தீராத ஆர்வம்தான் அதனைச் சாத்தியமாக்கியது.

தற்போது மீண்டுமொரு ஆசை துளிர் விடத்தொடங்கியிருக்கிறது. ஏன் இரவியினை மீண்டுமொருமுறை உதிக்க வைக்கக்கூடாது? வைத்தாலென்ன? வரும் சித்திரை மாதமளவில் மீண்டும் இரவியினை மாதப்பத்திரிகையாக ஆரம்பிக்கலாமாவென்று எண்ணுகின்றேன். சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால் நிச்சயம் மீண்டுமொருமுறை 'இரவி' உதிக்கும். பார்ப்போம்.

வெள்ளி, 1 ஜனவரி, 2016

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
இன்று 2016 இன் முதல் நாள். எல்லோருக்கும் இது நல்ல வருடமாக இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம். பெரும்பாலான தீயனவும் கெட்டனவும் நடப்பதற்குக் காரணமே அக்காரியமாற்றுபவர்களுக்கு நல்லன நடக்காததனானாலே தான் என்று நான் நினைப்பதுண்டு. வறுமை களவைத் தூண்டுவது போல. இல்லாமை பொறாமையைத் தூண்டுவது போல. ஒவ்வாமை எரிச்சலைத் தூண்டுவது போல. இந்த வருடம் இருப்பதைப் பகிரெனக் கேட்காது எடுப்பதைக் குறையெனக் கேட்போம்.

எல்லோருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!