சனி, 26 ஜனவரி, 2008

To Whom It May Concern

அசை

To Whom It May Cocern

‘Absence of Maliceè என்ற திரைப்படமொன்றில் ஒரு காட்சி. நிருபராகவிருப்பது பற்றி ஒரு முதிய பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சொல்வார் “செய்தியை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியும். மக்களைத் புண்;படுத்தாத வகையில் அச்செய்தியை எப்படிச் சொல்ல வேண்டுமென்றும் எனக்குத் தெரியும். ஆனால் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் எப்படிச் செய்வதென்பது மட்டும் எனக்குத் தெரியாமலிருக்கிறது” என்று.

உண்மை எங்கோ ஒருவரைச் சீண்டும், அவர் குறிவைக்கப்படாதவராக இருப்பினுங்கூட. இதை விளக்க கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாட்டில் ஒரு உபகதையுண்டு.

இஸ்ரேல் யூதேயா நாட்டு மன்னர்களுக்கிடையே நெடுநாட் பகையினால் அடிக்கடி போர் நடந்து வந்தது. யூதேயா நாட்டு மன்னன் நாள் நட்சத்திரம் பார்த்துப் போர் புரிபவனாகையால் தன் நாட்டிலுள்ள புத்திமான்களை அழைத்து ஆலோசனைகளைக் கேட்ட பின்னரே போருக்குப் போவான். ஒரு தடவை இவ்வாறு ஆலோசனை கேட்டபோது பல புத்திமான்கள் இந்தத் தடவை போரில் அவன் தோற்பான் என்று முன்னுரைத்தார்கள். அவர்களையெல்லாம் சிறையிலடைத்த அரசன் அந்நாட்டின் அதிமதிப்பிற்குரிய புத்திமானை அழைத்து அவரிடமும் ஆலோசனை கேட்டான். அந்த மனிதரும் “நீ கொல்லப்படுவாய் போருக்குப் போகாதே” என்று கூறினார். அக்கூற்றையும் நம்பாத அரசன் அவரையும் சிறையிலடைத்துவிட்டுப் போருக்குப் போனான். முதல்நாட் போரில் இஸ்ரேலிய மன்னனிடம் தோற்றபின் தன் முகாமுக்குள் முடங்கி அடுத்தநாட் போர் பற்றிய திட்டங்களைத் தீட்டலானான். அப்போது இஸ்ரேலிய போர் வீரனொருவன் தன் நாணில் அம்பேற்றி அந்த அம்பில் ‘வுழ றூழஅ ஐவ ஆயல ஊழnஉநசn’ என்றெழுதிக்; குறியெதுவும் வைக்காது எய்தான். அந்த அம்பு யூதேயா அரசனது முகாமின் கூடாரத்தைத் துளைத்து அரசனின் கவசத்தின் இடைவெளியால் புகுந்து அவன் இதயத்தைத் துளைத்ததனால் அவன் இறந்தான்.

இரண்டு விடயங்களை இக்கதையிலிருந்து உய்த்துணரலாம்.

ஒன்று, தன் முன்னால் பல புத்திமான்களைச் சிறையிலிட்டவன் என்று தெரிந்தும் அந்த அதிமதிப்பிற்குரிய புத்திமான் உண்மையைச் சொன்னார். இரண்டு, சொல்ல வந்த விடயம் உண்மையானால், அவ்வுண்மை குறியேதும் வைக்காத போதும் சேர வேண்டிய இடத்தைச் சேரும் என்பது.

சமீப காலமாக எனது மனதை நெருடிக் கொண்டிருக்கும் விடயங்களிலொன்று எழுத்து ஊடகம் மற்றும் இதழியல் பற்றியது. அந்த நெருடலுக்கு அடியாதாரம் என் சுய பரீட்சையென்றே சொல்ல வேண்டும்.

இன்னுமொரு பத்திரிகைக்கு எழுதிய பத்தியொன்றில், எமது சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட துறைசார் வல்லுனர் பற்றிப் பெயர் குறிப்பிடாதவாறு எழுதியிருந்தேன். பல பொது மக்கள் அவருடைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவந்தது. மிகுந்த ஆதாரங்கள் இருந்தும் அவரது பெயரைக் குறிப்பிடாது அந்தப் கட்டுரையை நான் எழுதியதற்கு காரணம் இவ்விடயத்தால் அவரது தொழில் பாதிக்கப்படக் கூடாது என்பதே. அதே வேளை அவருக்கு இவ்விடயம் போய்ச் சேர வேண்டும். அதனால் அவர் சில வேளைகளில் தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற நினைப்பிலேயே அதை எழுதினேன். எனது அம்பும் ‘To Whom It May Concern’ என்றவாறு அந்த விடயத்தை அவருக்குக் கொண்டு செல்லுமென்ற நினைப்பிலேயே அக்கட்டுரையை நான் எழுதியிருந்தேன்.

இரு வாரங்களில் அத்துறைசார்ந்த இன்னுமொரு வல்லுனர் தொலைபேசியில் அழைத்துக் கேட்டார் “நீங்கள் எழுதிய கட்டுரை என்னைக் குறிவைத்து எழுதப்பட்டதா?” என்று. “பாவிக்கப்பட்ட சொற்கள் எனக்கென்றே எழுதப்பட்டவை போல இருக்கின்றன” என்று அவர் மேலும் சொன்னார்.

“இல்லை, உங்களைக் குறிப்பிடவில்லை, வேண்டுமென்றால், அடுத்த இதழில் சம்பந்தப்பட்டவர் நீங்களில்லை என்று உங்கள் பெயரைப் போட்டு ஒரு பத்தி எழுதிவிடுகிறேன்” என்று ஆறுதல் கூறினேன்.

“தேவையில்லை” என்பதோடு எங்கள் உறவு திசை மாறியது.

செய்தியை எழுத எனக்குத் தெரிந்திருந்தது. மனதைப் புண்படுத்தாது (தொழிலைப் பாதிக்காது) எனக்கு எழுதத் தெரிந்திருந்தது. சரியாக (யாரையுமே புண்படுத்தாது) இரண்டையும் ஒன்றாகக் கொடுக்க என்னால் முடியாமற் போய்விட்டது.

‘வுழ றூழஅ ஐவ ஆயல ஊழnஉநசn’ –ழெவ ழடெல வை hயன ழெவ றழசமநன டிரவ அளைநசயடிடல கயடைநனஇ in அல உயளந!

ஆதாரங்களிலிருந்ததனால் சம்பந்தப்பட்டவரைப் பெயரோடு அறிவித்திருக்கலாம். அல்லது அவ்விடயத்தைப் பற்றி எழுதாமலே இருந்திருக்கலாம். சம்பந்தப்பட்டவரையா அல்லது சமூகத்தையா நான் பாதுகாப்பது? தேர்வு என்னுடையது. பேசாமல் ஒதுங்கிக் கொண்டு வருமானத்தை வளர்த்துக் கொள்ளலாம். பத்திரிகையாளனுடைய கடமையில் உறுதியான நம்பிக்கையுள்ளதால், அது இயலாதது.

நேற்று, இரண்டு தமிழ் இணையத் தளங்களைப் பார்த்தேன். குமரிக் கோட்டை மீண்டும் கொடுங்கடல் கொண்டதால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டன. இதர மக்களைப்போல் செய்திகளை உடனுக்குடன் அறிய எனக்கும் ஆவல். மக்கள் மிகவும் நொந்துபோயிருக்கிறார்கள். ஆனால் இவ்விரு இணையத் தளங்களும் மக்களின் பலவீனங்களில் குதிரையோடியிருந்தன. இயற்கையின் கொடுமைகள் போதாதென்று செய்திகளால் இரணக் கோடுகள் கிழித்திருந்தன. நெருடல் பிராண்டலாக மாறுவதற்குள் தளத்தை மாற்றிக் கொண்டேன்.

என்னைவிட அவர்கள் எதையும் வித்தியாசமாகச் செய்யவில்லை.

தீர்ப்பு?

அம்புகளில் விலாசங்களை இணைப்பது. செய்திகளை ஆதாரங்களோடு தரவேண்டியது.
-சரியாக வில் வித்தையைக் கற்றுக்கொள்ளும்வரை.
ஜனவரி 2005

சனி, 19 ஜனவரி, 2008

கோயிம்

“…கெட்ட இயல்புணர்ச்சியுள்ள (instinct) மக்கள் நல்லவர்களைவிட அதிகமாகக் காணப்படுவார்கள். இப்படியானவர்களைக் கருத்துப் பரிமாற்றத்தினால் ஆட்சி செய்துவிட முடியாது. மாறாக வன்முறையினாலும் பயங்கரவாதத்தினாலும் மட்டுமே அது சாத்தியமாகும். ஒவ்வொரு மனிதனும் அதிகாரத்துக்கு ஆசைப்படுபவன். ஒவ்வொரு மனிதனும் இயலுமானால் சர்வாதிகாரியாக உருவாவதையே விரும்புவான்….”

“…ஆரம்ப மனித சமூகத்தின் கட்டமைப்பில் மனிதன் கண்மூடித்தனமான மிருக பலத்தினால் கட்டி ஆளப்பட்டான். பின்னர் அதே மிருகபலமே இன்னொரு மாறாட்ட வடிவத்தில் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் அவனைக் கட்டி ஆள்கிறது. இயற்கை விதிகளின்படி சரியானது எப்போதும் வலிமையின் பக்கமே சார்ந்து நிற்கிறது…”

“ அரசியலும் நேர்மையும் ஒன்றுக்கொன்று இணங்க முடியாதவை. நேர்மையோடு ஆட்சி செய்பவன் ஒருபோதும் சாதுரியமான அரசியல்வாதியாக இருக்கவே முடியாது. தந்திரமுடைவனும், ஏனையோரை நம்ப வைக்கக் கூடியவனுமானவனே ஆள்வதற்குக் தகுதியானவன். நேர்மை, உண்மை பேசுதல் எல்லாம் அரசியலில் கெட்ட வார்த்தைகள்…”

……

மேலே வாசித்தவை இன்றய உலகை அச்சொட்டாக வரைவு செய்வதுபோலத் தோற்றமளித்தாலும் சிலரது கூற்றுப்படி இப்பந்திகள் எழுதப்பட்ட காலம் 1897 எனப்படுகிறது. எதிர்கால உலக ஏகாதிபத்தியத்துக்கான திட்டமிடுதலின் பிரகாரம் எழுதப்பட்ட வக்கணைத் தொகுதியின் (Protocol) முதலாவது அத்தியாயத்தின் சில பகுதிகள் இவை. யூத தாயக இயக்கத்தின் மூத்தவர்களினால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த வக்கணைத் தொகுதி நூறாண்டுகளுக்குப் பின்னர் உலக அரங்கில் அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பேசப்படுகிறது.

“இந்த உலகில் இரண்டே இரண்டு கருத்துக்களே இருக்க முடியும். ஒன்று எங்களுடையது மற்றது யூதர்களல்லாதவர்களுடையது (Goyem).” என்பதோடு ஆரம்பிக்கும் இந்த வக்கணைத் (Pசழவழஉழடள) தொகுதி முன்வைக்கின்ற கோட்பாடுகள் கடந்த, சமகால உலக நடைமுறைகளை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு உண்மையானதாகவே படும். இதன் நீட்சியாக எதிர்காலத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒருவித அச்சம் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

சோவியத் கூட்டாட்சியின் உடைவிற்குப் பின்னர் உலகெங்கும், குறிப்பாக ஐரோப்பிய சமூகத்தில் யூத எதிர்ப்பு பலத்த கோஷங்களோடு திரண்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் ஐரோப்பாவில் (உலகிலேயே என்றுகூடச் சொல்லலாம்?) அதிகம் விற்பனையாகும் புத்தகம் ஹிட்லரின் ‘த மெயின் காம்ப்வ்’. இரண்டு விடயங்களுக்கும் இலகுவாக முடிச்சுப் போட்டுவிடலாம்.

சமீபத்தில் சேர்பியன் நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரது சந்தேகம் என்னையும் மாசுபடுத்தியதன் விளைவே இந்தக் கட்டுரை.

உலகெங்கும் சர்வாதிகாரிகளை ஒழித்து மக்களாட்சிகளை, அது பொருள் முதல்வாத அல்லது சமதர்ம சமுதாய ஆட்சிமுறைகள் எதுவாகவும் இருக்கலாம், உருவாக்குவதில் முன்னின்றுழைத்ததில் யூத சமுதயாத்தினருக்குப் பெரும் பங்குண்டு. அத்துடன் கலை, இலக்கியம், தத்துவம், இசை, விஞ்ஞானம், அரசியல், பொருளாதாரம், ஊடகம் என்று சகல துறைகளிலும் முன்னோடிகளாகத் திகழும் அச்சமுதாயம் தாங்கள் ‘கடவுளாற் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்’ என்று சொல்லும்போது அது பிழையென்பதற்கு நடைமுறை உதாரணங்கள் அரிதென்பதைப் பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அச்சமுதாயத்தினால் மட்டுமே உலக மக்களை வழிநடத்த முடியும் என்று அவர்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையின் பிரகாரம் அதைச் செயன்முறைப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்களா என்பதுவே எனது சேர்பிய நண்பரின் சந்தேகம். இத்தனைக்கும் அவர் ஒரு யூத எதிர்ப்புவாதி என்று சொல்ல முடியாது. அவரது மனைவியின் தந்தை ஹிட்லரினால் பாதிக்கப்பட்ட ஒரு யூதர். அச் சேர்பிய நண்பர் முன்னாள் யுகோஸ்லாவிய அதிபர் மார்ஷல் டிட்டோவின் பரம விசிறி. அவர் உண்மையில் ஒரு குறோவேஷியர். குறோவேஷிய தேசிய வெறியினால் புறக்கணிக்கப்பட்ட சோஷலிசவாதி. நீர்மூழ்கித் தொழில்நுட்ப விஞ்ஞானி. பரந்த மன்பான்மை கொண்டவர். அப்டியானவரது மனத்தில் எழுந்த சந்தேகங்கள் என்னையும் பாதித்ததில் வியப்பில்லை.

அவரது பல கேள்விகளில் முக்கியமானவை சில. மார்ஷல் டிட்டோ ஒரு யூகொஸ்லாவியர் அல்ல. அவரது பூர்வீகம் பற்றி எதுவுமே அறியப்படவில்லை. அவர் ஒரு யூதராகவிருக்கலாமா? என்பது.

லெனின் தனது கலாச்சாரப் புரட்சியை வெற்றிகரமாகக் கொண்டு நடாத்துவதற்கு நிறையப் பணம் தேவைப்பட்டது. ரஷ்யாவின் அரச ஆட்சியை வீழ்த்துவதற்கான பணத்தை அவர் லண்டனிலிருந்து கொண்டு போனார் என்று கருதப்படுகிறது. அவ்வளவு தொகையான பணத்தை அவர் எங்கிருந்து பெற்றுக் கொண்டார்? ஐரோப்பா எங்கும் பரந்து வாழ்ந்த ரொத்ஷைல்ட் குடும்பத்தினருக்கும் லெனினுக்கும் என்ன சம்பந்தம்?

கார்ல் மார்க்ஸ் ஒரு யூதர். அவரது நூலில் ‘மூல தனம்’ என்ற அத்தியாயத்தை எடுத்துவிட்டுப் பார்ப்பின் அது கத்தோலிக்க திருநூலின் அம்சங்களை ஒத்திருக்கிறது என்று சிலர் வாதிக்கிறார்கள். இதில் உண்மையேதுமுண்டா?

இரண்டாம் உலக யுத்தத்தின்போது 23 மில்லியன் ரஷ்யர்கள் இறந்தார்கள். ஆரம்பத்தில் ரஷ்யா மீது படையெடுக்கும் உத்தேசம் ஹிட்லருக்கு இருக்கவில்லை என்றும், ஹிட்லர் உருவாக்கிய கொலைக் களங்கள் உண்மையில் யூதர்களைக் கொல்லவென உருவாக்கப்படவில்லை என்றும் இவற்றில் ஆரம்பத்தில் கொல்லப்பட்டவர்கள் ஜெர்மானியர்கள்தான் என்றும் வசதிகள் இருந்தபடியால் சாதகமாக அவை பயன்படுத்தப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா இவ் யுத்தத்தில் பங்கேற்பதாக உத்தேசித்திருக்கவில்லை என்றும் யூதர்களுக்கான தேச உருவாக்கத்தின்போது அமெரிக்க யூதர்களின் அழுத்தத்தின் பேரில் அமெரிக்கா இப்போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அதனால் ஏற்பட்ட கோபமே ஹிட்லர் யூதர் மீது தன் கொலைவெறியைத் திருப்பிவிட நேரிட்டது என்று சில சரித்திர ஆய்வாளர் கூறுகிறார்கள்.

ஒஸ்ட்றோ - ஹங்கேரியன் போரைத் தொடர்ந்து அரசாட்சி ஒழிக்கப்பட்டதும், ரஷ்ய சாரின் ஆட்சி ஒழிக்கப்பட்டதும், எகிப்திய சாம்ராச்சியம் ஒழிக்கப்பட்டதும், ஹிட்லரின் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டதும், சமீப நிகழ்வுகளான சோவியத் யூனியனின் உடைப்பு முதல் ஈராக் அதிபர் சதாம் உசேனின் சர்வாதிகார ஒழிப்பு என்று சகல அதிகார வர்க்கங்களினது முடிவுகளின் பின்னணியில் யூதர்களின் கரங்கள் இருக்கிறது என்பதே என் சேர்பிய நண்பரின் விவாதப் பொருள்.

இப்படியான பல வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கும்போது உலகின் பல அதிகாரக் கட்டுமானங்களை உடைப்பதில் யூதர்களின் பங்கு இருந்திருக்கலாமென்பதை 1897 இல் யூத இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட மேற் சொன்ன வக்கணைத் தொகுதியில் குறிக்கப்பட்ட விடயங்கள் நிரூபிப்பது போல அமைகின்றன.

அத்தோடு உலகில் பல நுற்றாண்டுகளாக இயங்கிவரும் பல இரகசிய இயக்கங்களிலொன்றான FREEMASONS என்பதற்கும் இந்த மூத்த யூத இயக்கத்துக்குமிடையேயான தொடர்புகள் பற்றி 1905 ம் ஆண்டிலேயே சேர்ஜி அலெக்சான்ட்ரோவிச் நைலஸ் என்பவர் தனது “The Great in the Small: Anti Christ considered as an imminent political possibility’ என்ற சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 1901 ம் ஆண்டு மூத்த யூதர்களால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் வக்கணைத் தொகுதி தனக்குக் கிடைக்கப்பெற்றதாக நைலஸ் கூறுகிறார். இத் தொகுதி யூதர்களால் எழுதப்படவில்லை என்றும் அது நாஜிகளின் வேலை என்றும் சமகால யூதர்கள் வாதிக்கிறார்கள்.

தற்போது பலருக்கும் வாசிக்கக் கிடைத்திருக்கும் இந்நூல் மாற்றப்பட்ட வடிவமெனவும் உண்மையான பிரதி; ஒன்றே ஒன்றுதான் அதுவும் பிரித்தானிய அரும்பொருட் காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. கடந்த இரு தசாப்தங்களில் இந்நூலின் முக்கியத்துவம் பற்றி இஸ்லாமிய தேசங்களில் பேசப்படுகிறது. அத்தோடு ஐரோப்பிய தேசங்களில் ஹிட்லரது ‘த மெயின் காம்ப்வ்’ நூலிற்கு ஏற்பட்டுள்ள மவுசு யூதர்களுக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பலைகளுக்குக் காரணம் கற்பிக்கிறது.

90களின் பிற்பகுதிகளில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட ‘The New Century Americaè என்ற இயக்கத்தின் பின்னணியில் பல அமெரிக்க யூதர்கள் (பெரும்பான்மை) இருக்கிறார்கள். சோவியத் கூட்டாட்சியின் உடைவிற்குப் பின் உலகை ஆளும் பலம் அமெரிக்காவிற்கு மட்டுமே இருக்கிறது. ஆனால் அந்த அமெரிக்கா யூத இயக்கத்தின் ஒரு கருவியென்பதே எனது நண்பரின் சந்தேகம்.

இதுவரை காலமும் இந்த யூத இயக்கத்தின் பரம எதிரியாக நிழலுருவத்தில் இயங்கிவருவது கத்தோலிக்க திருச்சபையே. அதை உடைத்து அழித்தொழிப்பதுவும் இந்த இயக்கத்தின் ஒரு நோக்கம் என்பதுவும் பரவலான ஒரு கருத்து. பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் திருச்சபைக்குத் தலைமைதாங்கும் வரை யூதர்கள் ஹிட்லரின் கொலைவெறியாற் பாதிக்கப்பட்டதற்கு திருச்சபை எதுவித எதிர்க்குரலும் கொடுக்காது வாளாவிருந்தது பற்றி அவர்களது விசனமும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. உலக அரங்கில் யூதர்களின் பலம் அதிகம் ஓங்கி வந்துகொண்டிருப்பதாகவும் அதைச் சமாளிக்க வல்ல பலத்தை வத்திக்கன் அரசு மட்டுமே கொண்டிருப்பதாகவும், தற்போதய கடுமையான போக்குடைய பாப்பரசரின் தேர்வு இப்பின்னணிலேயே நடைபெற்றது எனவும் ஒரு ஐதீகம் நிலவுகிறது.

இருப்பினும் யூத இயக்கத்தின் மேற்சொன்ன வக்கணைத் தொகுதியில் குறிப்பிடப்பட்ட பல அம்சங்களில் ஒன்றான ‘சமூகங்களை மிதவாதப் படுத்துதல்’ என்பதுதான் பல பழமைவாத சமூகங்களுக்கு எரிச்சலைக் கொடுத்து வருகிறது. கார்ல் மார்க்ஸ் இனுடைய மாக்ஸீய தத்துவம் சமூகக் கட்டுடைப்பின் நோக்கத்திற்காகவே எழுதப்பட்டதென்பது பலரது வாதம். லெனின் ரஸ்யப் புரட்சிக்காகக் கருக்கொண்டது இங்கிலாந்தில் என்றும் அதற்கான பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்தது இந்த மூத்த யூத இயக்கமென்றும் எதிர் முகாம்கள் குற்றம் சாட்டுகின்றன.

கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களாக உலகெங்கும் மிதவாதப் போக்குகள் தலைகாட்டுவது எழுந்தமானமான நிகழ்வுகளோ அல்லது விபத்துக்களோ அல்ல. ஒருபாற்சேர்க்கை, விவாகங்கள், மதங்கள் உடைபட்டு பல்லாயிரக் கணக்கான மதக்குழுக்களின் ஆரம்பம், கலாச்சாரச் சீரழிவுகள், ஊடகங்களின் மிதவாதப் போக்குகள் என்று பல வழிகளிலும் இறுக்கமான சமூகக்கட்டுமானங்களைத் தகர்த்தெறியும் போக்குகள் சமீப காலமாக அதிகரித்து வருவதற்கு யூத சமூகங்களே காரணமென்ற குற்றச்சாட்டுகள் தீவிர வலதுசாரிகளால் முன்வைக்கப்படுகிறது.

இவையெல்லாம் பொய்யான பரப்புரைகள் என்று விவாதித்தாலும் துரதிர்ஷ்டவசமாக யூத மூத்த இயக்கத்தின் வக்கணைத் தொகுதியில் குறிப்பிட்ட அம்சங்கள் வரிக்கு வரி இன்றய நடைமுறைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றனவே என்பதுதான் எனது நண்பரின் சந்தேகம். நானும் அவர்களது ‘கோயிம்’ ரகத்துக்குள் சேர்க்கப்படுவதால் என் நண்பரது சந்தேகம் என்னையும் தொற்றிக் கொள்வதையும் தவிர்க்க இயலாமலிருக்கிறது.

** பல ஊகங்கள் மீது உருவாக்கப்பட்டது இக்கட்டுரை. வெறும் வாசிப்புக்காக மட்டுமே. ஒரு குறிக்கப்பட்ட சமூகத்தின்மீது அவதூறு செய்வது எனது நோக்கமல்ல. திறந்த மனதுடன் இக்கட்டுரையை உள்வாங்கிக் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.- சிவதாசன்

வெள்ளி, 18 ஜனவரி, 2008

யேசுராசாவின் 'குறிப்பேட்டிலிருந்து'

நூல் விமர்சனம்

'குறிப்பேட்டிலிருந்து'

'அலை' யேசுராசா

பக்கங்கள்: 132

வெளியீடு: அலை, இல: 1, ஓடக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்

விலை: 200 ரூபா


--------------------------------------------------------------------------------

அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து (எமக்குத் தெரிந்தவரை) ஈழத்தமிழுலகில் இலக்கியத்துறையில் அறியப்பட்டவரான 'அலை' யேசுராசாவின் ஏழாவது படைப்பு இது.

அவர் வாழ்ந்த சூழலில் அவர் வாழ்ந்த சமூகமும், அவர் கண்ட மனிதர்களும் அவரை எவ்வாறு பாதித்தன என்பதை அவரது பாணியில் தந்திருக்கிறார். இயல்பாகவே எழுத்தாளனுக்குரிய விசனமும் விரக்தியும் ஏமாற்றமும் வரிக்கு வரி பின்னூடாகத் தொடர்வது வாசகனுக்கு ஏமாற்றத்தைத் தரவில்லையாயினும் ஈழத்து இலக்கிய வானில் நித்திய பிரகாசிகைகளாக இரவலொளி தந்து கொண்டிருந்த பன் முக நட்சத்திரங்களை தனது முப்பதாண்டு காலப் பட்டறிவின் மூலம் மீண்டும் மீண்டும் உரசிக் காட்டும் பணியில் யேசுராசா வெற்றி பெறுகிறார்.

'எமது கலை இலக்கியவாதிகள் மேன்மையானவர்கள்தானா? இவர்களது கலை, இலக்கியப் பிரகடனங்கள், விருதுகள், புகழ் எந்தளவிற்கு நேர்மையானவை? இவர்களுக்கு ஏன் ஒன்றிற்கு மேற்பட்ட 'முகங்கள்'? பட்டம், பதவி, பணம் - பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தோர், அரசாங்க அதிகாரிகள், வியாபாரிகள் பின்னால் 'அந்தரப்பட்டுச் சென்றுதானே தம்மை நிலை நிறுத்த முயல்கின்றனர்!

கோமாளித்தனங்கள், மோசடிகள், தன்னலம் மிக்க தந்திரச் செயல்களுடன் - ராஜ கம்பீரராய்ப் பெருமம காடிடிப் பவனி வருகின்றனர்! அதிசய ஆடை அணிந்த அரசனின் நிர்வாண உண்மை நிலை சொன்ன தூயமனக் குழந்தையாய் நம்மிற் பலர் ஏனில்லை?

நம்பிக்கை, எழுத்து, செயல் என்பவற்றுக்கிடையே இடைவெளி இல்லாத -

இயன்றவரை நேர்மையான வாழ்வைக் கொண்டிருக்கவேண்டுமென்ற-

அறம் சார்ந்த நிலைப்பாடு தளர்ச்சியுற்ற சூழல் தொடர்வது பெருமைக்குரியதல்ல.'

என்று தான் சார்ந்த இலக்கியச் சூழலைக் கரித்துக் கொட்டுவதில் மேலும் பல கலை இலக்கிய வாதிகளுடன் இவர் ஒத்திசைகிறார். இருப்பினும் இவரின் சாடலிலிருந்து தப்பித்த நல்ல பல இலக்கியவாதிகள் பற்றி நாமறியும் வாய்ப்பும் இங்கு கிடைக்கிறது.

கரங்களுக்குப் பாரமில்லாத, தூக்கம் தராத நடை. வாசிக்கலாம்.

-சிவதாசன்

புதிய புலிகள்

புதிய புலிகள்

கட்டுநாயக்கா அரச வான்படைத் தளத்தின் மீதான புலிகளின் தாக்குதல் சிறீலங்காவின் போர் சூத்திரதாரிகளையும் அவர்களின் வெளிநாட்டு கையாடிகளையும் (hயனெடநசள)மிகவும் பலமாக உலுப்பி விட்டிருக்கிறது. அவர்களின் பல வருட திட்டமிடல்களைக் குழப்பி ஆட்டத்தை மீண்டும் முதற் சதுரத்திற் கொண்டுவந்து விட்டிருக்கிறது.

கட்டுநாயக்கா வான்படைத் தளத் தாக்குதலின் பாதிப்பு எப்படியானது என்பது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் சூடுபிடித்துக்கொண்டு வரும் அதே வேளை புலிகளுக்கு அது எப்படியான ஒரு எதிர்காலத்தைப் பெற்றுத்தரப் போகிறது என்பது பற்றி ஒரு சில இந்திய ஊடகங்களைத் தவிர பரவலாகப் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.

புலிகளின் வான்படை நிர்மாணம் ஆரம்பித்து ஏறத்தாழ ஒரு தசாப்தமே கடந்துவிட்டது. செப்டம்பர் 11 க்கு முந்திய காலங்களில் எடை குறைந்த, அதி-எடை குறைந்த வான் கலங்களை மேற்கு நாடுகளில் பொதி (மவை) வடிவங்களில் வாங்கிக் கொள்ளலாம். இதன் அப்போதய விலைகள் சுமார் 15,000 முதல் 20,000 அமெரிக்க வெள்ளிகள். அயர்லாந்து, கனடா போன்ற நாடுகளில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகவே வான் பறப்புப் பயிற்சியைத் தமிழர்கள் பெற்று வந்ததும் புதிய விடயமல்ல. அத்தோடு உலக விடுதலை இயக்கங்களிடையே மட்டுமல்ல பல அரச இராணுவக் கட்டமைப்புகளோடு ஒப்பிடும் போது புலிகளின் தூரதரிசனம், அதிசிறந்த திட்டமிடல், கடுமையான பயிற்சி, அத்தோடு மிக முக்கியமாக, ஊழலற்ற நிர்வாகம் என்பன தனித்தன்மை பெற்றவை. மிகவும் பரகசியமான இந்த விடயங்களைத் தெரிந்து வைத்திருந்தும் ஈழப் போர் ஆரம்பித்து கால் நூற்றாண்டு கழிந்த பின்னரும் புலிகளின் இரண்டு சிறிய விமானங்களின் ஊடுருவலைக் கண்டுபிடிக்க முடியாதுபோன சிங்கள நாட்டின் மடமைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

புலிகள் தமது வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 40 வீதமான தொகையை புலனாய்வு செலவீனங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று அறியப்படுகிறது. உலகின் வேறெந்தொரு நாடுகளுமே தமது போர்க்கால நிர்வாகத்திலகூட இப்படியாகச் செலவழிப்பதில்லை என்கிறார்கள். சிங்கள அரசின் பாதுகாப்புச் செலவீனத்தில் சுமார் 40 வீதம் லஞ்சமாக அரசியல்வாதிகளுக்குப் போய்ச் சேர்கிறது என்றால் அதை நம்பும் வகையில்தான் மகிந்தவின் ஆட்சியும் நடந்து கொள்கிறது.

சோவியத் ஆட்சியின்போது கலைக்கப்பட்ட குடியரசுகள் பாவனைக்கு உதவாத போர்க்கலங்களை கழிவுலோக (ளஉயசி அநவயட) வியாபாரிகளுக்கே விற்க முடியாதிருந்தபோது இலங்கை அரசு அவர்களுக்குக் கைகொடுத்துதவியது. யுக்கிரெயினிடமிருந்து மிக் ரக போர் வான்கலங்களை தலா 2.5 மில்லியன் வெள்ளிகளுக்கு வாங்கியது மகிந்த அரசு. மத்தியகிழக்கு ஆயுத வியாபாரிகள் கற்களையே வரைபடங்களோடு ஆயுதங்களென விற்பவர்கள். லஞ்சத்துக்குப் பேர்போன இலங்கை அரசுடன் நட்புறவு கொண்டாடும் பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற சுலோகத்தின்கீழ் ‘கழிவுலோக’ வியாபாரத்தையே செய்கிறார்கள். வெளிநாடுகளின் பண உதவியிலும் (ஆழிப்பேரலை நிவாரணமும் சேர்ந்தே) ஆயுத வியாபாரிகளின் தயவிலும் மட்டுமே நம்பித் தமது போரை நடாத்திவரும் இலங்கை அரசுக்கு கட்டுநாயக்கா தாக்குதல் மிகவும் பேரிழப்பேயாகும்.

மாறாக, புலிகளோ தமது தேவைகளைப் பெரும்பாலும் தாமே பார்த்துக்கொள்ளுமளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றவர்கள். பெரும்பாலான ஆயுதங்களை அவர்கள் உற்பத்தி செய்து கொள்வது மட்டுமல்ல அவற்றின் வினைத்திறனை (நககiஉநைnஉல) அதிகரிக்கும் அளவுக்கு ஆற்றலையும் பெற்றவர்கள். திறமையான இளம் தலைமுறையினரை இனம்கண்டு அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி தொழிற்கல்வி பயிற்றுவித்து தமது மூளை வளங்களை வலுச்சேர்க்கும் நடைமுறை புலிகளின் ஆரம்பநாட்களிலிருந்தே நடபெற்று வருவது. கட்டுநாயக்கா தாக்குதலிற் பங்குபெற்ற வான்கல ஓட்டியிலொருவர் வெளிநாட்டில் பயிற்சி பெற்றவர் என்ற வதந்தியும் பலமாக அடிபடுகிறது. ஜோனி கண்ணிவெடி முதல் இன்றய வான்கலம் வரை புலிகளின் தொழில்நுட்ப வல்லமைக்கு அவை ஒரு எடுத்துக்காட்டு. இவ்வான்கலங்கள் பகுதிகளாகத் தருவிக்கப்பட்டு ஈழத்தில் பொருத்தப்பட்டவை என்ற கருத்து பலமாக அடிபட்டாலும் அவ் வான்கலங்கள் ஆயுத ஏவலுக்கான முறையில் வடிவமைக்கப்பட்டவை அல்ல என்பதும் ஓட்டியின் கட்டுப்பாட்டிலியங்கும் ஆயுத ஏவல் தொழில்நுட்பத்தைப் புலிகளே தயாரித்திருந்தார்கள் என்பதும் விடயம் தெரிந்தவர்களுக்கு ஆச்சரியமான செய்தியல்ல.

புலிகளின் கள வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணம் தலைமையின் வழிநடத்தலே. சிறிய பாம்பானாலும் பெரிய தடிகொண்டு அதை அடிக்க வேண்டும் என்று தலைவர் பிரபாகரன் சொல்வது வழக்கம். புலிகளின் எந்தவொரு தாக்குதலும் மிக நீண்ட கால, அதிக ஒத்திகைகளுடன்கூடிய திட்டமிடலின் பெறுபேறுகளே. சமீப காலமாக பல களங்களில் இலங்கை இராணுவத்தினர் வெற்றிகளை அடுக்கிக்கொண்டு போகும் போதெல்லாம் மக்கள் ஆதங்கப்பட்டார்கள். புலிகள் எதையுமே செய்யாது கைகளைக் கட்டிக்கொண்டு அடிவாங்குகிறார்களே என்ற கவலை அவர்களுக்கு. அவர்கள் பாரிய தாக்குலொன்றுக்குத் தயாராகுகின்றார்கள் என்பதில் தமிழர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைவிட வெளிநாடுகளின் இராஜதந்திரிகள் வைத்திருந்த நம்பிக்கை அதிகம். ஒரு வகையில் சில நாடுகள் இப்படியான ஒரு நடுநிலையாக்கும் (நெரவசயடணைiபெ) நடவடிக்கையை அவர்களும் எதிர்பார்த்தார்கள். சமீபகால இராணுவ வெற்றிகளினால் அகம்பாவம் கொண்ட மகிந்த அரசு, குறிப்பாக போகொல்லாகம, பாலித கொஹென்ன, சமரசிங்க மற்றும் ராஜபக்ச குடும்பம் எல்லோருமே கர்வம் தலைக்குமேல் ஏறி வரம் பெற்ற அசுரர்கள்போல் நடக்க முற்பட்டார்கள். சமாதானப் பேச்சினால் தாமே அதிகம் இழக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் இறுமாப்போடு நடந்து கொண்டார்கள். இதைச் சர்வதேச சமூகங்கள் விரும்பவில்லை. மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டினாலும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்கியது. அயலவர்களிடையே பகைமையேயும் போட்டியையும் வளர்ப்பதன்மூலம் தமது இலாபங்களை முன்னிறுத்தி அரசு நடந்துகொண்டது அயலவர்களிடையேயும் எரிச்சலை உருவாக்கியது. இப் பின்னணியில் புலிகளின் தாக்குதல் திட்டம் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் அதை அரசுக்குத் தெரிவித்திருப்பார்களா? சென்ற வாரம் பல ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்குச் செல்ல உத்தேசிக்கும் தமது பயணிகளை எச்சரித்தது நினைவிருக்கலாம். அரசுக்குத் தெரியாதது எதுவும் அவர்களுக்குத் தெரிந்திருந்ததா?

புலிகளின் கட்டுநாயக்கா வான்தளத் தாக்குதல் இலங்கையின் போர் அரங்கில் புதிய மாற்றங்களை எதிர்நோக்க வைத்துள்ளது. புலிகளின் வெற்றி உலகெங்குமுள்ள தமிழர்களைப் புளகாங்கிதமடையச் செய்தாலும் அது உருவாக்கப்போகும் எதிர்வினைகளையும் இப்போதே கருத்திலெடுத்து புலிகள் தங்கள் அடுத்துவரும் யுக்திகளையும் வியூகங்களையும் வடிவமைத்துக் கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கலாம்.

வான்தாக்குதலில் 40 வீதமான அரச வான்கலங்கள் சேதமாக்கப்பட்டன என்பது உண்மையானால் அரசு இராணுவரீதியாகப் பலமிழந்து விட்டது என அனுமானிக்கலாம். அதைவிடத் தென்னிலங்கையின் மனோபலப் பாதிப்பு மிக மோசமானதாக இருக்கலாமென்பதும் அங்குள்ள சமாதான விரும்பிகள் இத்தருணத்தைச் சாதகமாகப் பாவித்தால் எல்லோருக்கும் சாதகமானதாக அது இருக்கலாமென்பதும் கருத்து நிலவுகிறது.

சமீப காலங்களில் புலிகள் மேற்கொண்ட கெரில்லாத் தாக்குதல்களானாலும், மரபுவழித் தாக்குதல்களானாலும் (மட்டக்களப்பு வெபர் ஸ்ரேடியம் ஈறாக) எல்லாமே அவர்களின் பயிற்சி நடவடிக்கைகள் (வயசபநவ pசயஉவiஉந) தானென்று ஒரு நண்பர் அபிப்பிராயம் தெரிவித்தார். அப்படிப் பார்க்கின் கட்டுநாயக்கா வான்தளத் தாக்குதலும் ஒரு பயிற்சியாகவே இருக்கலாம். இப்பயிற்சியின்போதே 40 வீதமான வான்கலங்களைச் செயலிழக்கச் செய்யும் வல்லமை இருப்பின் “இப்படியான தாக்குதல்கள் தொடரும்” என்ற சு.ப.தமிழ்ச்செல்வனின் எச்சரிக்கையை தென்னிலங்கை மிகவும் உன்னிப்பாகவே கவனிக்க வேண்டும்.

புலிகளின் நடவடிக்கைகளைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் ஒரு விடயத்தை ஒத்துக் கொள்வார்கள். அதி தீவிர ஒத்திகை, மித மிஞ்சிய தயாரிப்பு, தேவைக்கு மேற்பட்ட வளங்கள் (ஆட்பலம், ஆயுத பலம்), உணர்ச்சி வசப்படாது தருணம் பார்த்து செயலாற்றல் போன்றவை புலிகளின் தனித்தன்மை. இதன் அடிப்படையில் பார்க்கும்போது போதிய அளவு வான்கலங்களைப் புலிகள் தயார் நிலையில் வைத்திருக்காமல் இரண்டொரு வான்கலங்களை மட்டும் உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே இரண்டு ஹெலிகொப்டர்கள், பல தாங்கிகள் என்று மரபு வழிப் போர்க்கலங்களை அவர்கள் வைத்திருந்தும் அவற்றைப் பாவனையில் ஈடுபடுத்தியதில்லை. வான்கலங்கைளைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது இதுவே முதற் தடவை என்றால் அவர்களிடம் பெரிய வான் படையே இப்போது இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

கட்டுநாயக்கா வான்தளத் தாக்குதலின்போது புலிகளின் கலங்கள் இராணுவத்தின் எந்தவித ராடார் எச்சரிக்கைச் சாதனங்களையும் முடுக்காது (வசபைபநச) சுமார் 400 கி.மீ. வரை இரவில் பயணம் செய்து அதிபாதுகாப்பு வலயத்துக்குட் சென்று அலுவல்களைக் கச்சிதமாக முடித்துக் கொண்டு பாதுகாப்பாகத் திரும்பியுள்ளன. இராணுவப் பேச்சாளரின் பேச்சின்படி தங்கள் எச்சரிக்கைக் கருவிகள் முறையாகவே தொழிற்பட்டன எனப்பட்டது. ஆனாலும் எந்தவித எதிர் நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு காரணம் ஒன்றில் வான்தள வலயப் பாதுகாப்பு நடைமுறைகள் சீராக இல்லை அல்லது புலிகளின் தொழில் நுட்பம், சாதுரியம் போன்றன அதிமெச்சும் நிலையில் இருந்திருக்கலாம். பின்னது உண்மையானால் இலங்கையின் எந்தவொரு பாதுகாப்பு வலயமும் அச்சத்தோடுதான் இருக்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்னர் முல்லைக் கடலில் புலிகளின் ஆயுதத் தரையிறக்கத்தின் பின்னர் கண்டெடுக்கப்பட்ட கொள்கலமொன்றில் ராடார் சமிக்ஞைகளை உள்வாங்கும் (யடிளழசடிiபெ) தன்மையுள்ள வர்ணக்கலவை காணப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. புலிகள் தமது அதிவேக படகுகளுக்கு இவ்வர்ணத்தைப் பூசுவதன் மூலம் ராடார் கண்காணிப்பில் சிக்காமற் தப்பித்துக் கொள்ளலாம். (அமெரிக்காவின் ஸ்ரெல்த் ரக விமானங்களின் வெளிப் ப+ச்சு இப்படியான வர்ணக் கலவையினாலானது) அது உண்மையாயின் புலிகளின் வான்கலங்களும் இப்படியான கலவையைப் பெற்றிருக்கலாம். அல்லது 1967ம் ஆண்டு இஸ்ரேலிய வான் கலங்கள் எப்படி ராடாரின் கண்காணிப்பு வலயத்தின் கீழாற் பறந்து இராக்கின் அணுநிலையத்தைத் தாக்கியழித்தனவோ அதே போன்று புலிகளின் கலங்களும் செய்திருக்கலாம்.

எப்படியானாலும், புலிகளின் வான்படை அறிமுகம் ஈழப் போரரங்கில் புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது. உள்ளுர் மற்றும் உலக அரங்குகளில் இது சாதகமானதும் பாதகமானதுமான எதிர்வினைகளைத் தோற்றுவிக்கப் போகிறது. தனது அயலில் ஒரு பலமானதும் சுயமானதுமான நாடொன்று உருவாகுவதை இந்தியா விரும்பாது. இஸ்ரேலைப் போல ஒரு நாடு உருவாவாகினால் எப்படியான உறவை அதனுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் வல்லரசுகளின் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படலாம். ஆனாலும் புலிகளின் ஆட்சிக்காலத்தில் பிறிதொரு நாட்டின் தயவில் அது இருக்காது. எனவே அப்படியான ஒரு நாட்டின் உருவாக்கத்தை முளையிலேயே கிள்ளி எறியவே பல நாடுகள் விரும்பும். அந்த வகையில் புலிகளின் பலமே புலிகளுக்கு ஆபத்தாகவும் முடியும். எனவே புலிகள் தமது இந்த வெற்றியைக் கொண்டு பலச் சமநிலையை மீண்டும் உருவாக்குவதே அனுகூலமானது. அதன் மூலம் ஒரு சமாதானத் தீர்வுக்கு இரு பகுதியினரும் நகர்வது புத்திசாலித்தனமானது. இச்சந்தர்ப்பத்தை உணர்ச்சிவச அரசியலாக்கி மகிந்த அரசு இராணுவ நடவடிக்கையை முடுக்கிவிட்டு பாரிய மனித அழிவுகளுக்குக் காரணமாகுமானால் அதை முறியடித்து தனிநாட்டை உருவாக்கும் பலம் புலிகளுக்கு இருக்கிறது என்பதை இவ் வான்தாக்குதல்கள் நிருபித்து விட்டன. ஏற்கனவே குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலவசமாகப் புதிய (பழைய) வான்கலங்களை இலங்கைக்குக் கொடுத்து தாமும் பங்கு பற்றுவதன் மூலம் புலிகளை நசுக்குவதற்கு எத்தனிக்கலாம். அப்படி நேரும் பட்சத்தில் புலிகளின் தேர்வு இராணுவ நிலைகளிலிருந்து மக்கள் நிலைகளுக்குத் திரும்பலாம். அப்படியாக ஏற்படுகின்ற பேரழிவின் பின்னர்தான் தீர்வொன்றுக்கான சாத்தியம் உருவாகலாம்.

புலிகளின் இத் தாக்குதல்கள் இராணுவ வெற்றிகளுக்குமப்பால் பல அரசியல் வெற்றிகளையும் ஈட்டிக் கொடுத்திருக்கிறது. புலிகளின் திறமைகள் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு வருகிறதா என்ற சந்தேகத்தைப் போக்கி மக்கள் ஆதரவு அலையை மீண்டும் அவர்கள் பக்கம் திருப்பியிருக்கிறது. புலிகளின் ஆட்சேர்ப்பு வாய்ப்புக்களை அதிகரித்திருக்கிறது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் முடங்கியோ, முடக்கப்பட்டோ இருந்த ஈழத்தமிழராதரவை மீண்டும் தட்டி எழுப்பியிருக்கிறது. வெளிநாடுகளில் பணச் சேர்ப்புக்கான வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறது. தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிலரது கனவை நனவாக்கியிருக்கிறது. வாகரை வெற்றிக்களிப்பினால் உருகிப்போய் அடுத்த தேர்தலுக்குத் தயாராகும் ராஜபக்சவினரை ஆட்டம்காண வைத்திருக்கிறது. பிரபாகரனைத் தமது தலைவராகக் கனவு காணும் சிங்கள மக்களை அதிகரிக்க வைத்திருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட, புலிகளின் தமழீழத்துக்கான தயாரிப்பில் முப்படைகளையும் உருவாக்கி செயலாற்ற வைத்ததன் மூலம் தனிநாட்டுக்கான அந்தஸ்த்;தை அண்மிக்கும் தகமையைப் பெற்றிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக…

திறந்திருந்த சில வாய்களை மூடவும் மூடியிருந்த பல வாய்களைத் திறக்கவும் வழி செய்திருக்கிறது.

இது புலிகளின் ஒரு எச்சரிக்கை மட்டுமே. இப்போதாவது சர்வதேசங்களும் சிங்கள தேசமும் சேர்ந்து ஒரு சுமுகமான தீர்வைத் தமிழருக்குப் பெற்றுக் கொடுக்கலாம். அது தவறும் பட்சத்தில் எம் ஆர் நாயராயணசாமி சொன்னதுபோல் துவிவண்டி தொடக்கிய ஈழப்போரை வான்கலங்கள் முடித்து வைக்கும்.

Thai Veedu May 2007

பழையதோர் உலகம் செய்வோம்

பழையதோர் உலகம் செய்வோம்

புதிய உலகம் ஏமாற்றம் தருவதாயிருக்கிறது. எதற்கெடுத்தாலும் ‘உலகம் எப்படியெல்லாம் இருந்தது, நாம் எப்படியெல்லாம் வாழ்ந்தோம்’ என்று பழைய முதியவர்களும் புதிய முதியவர்களும் ஆதங்கத்தோடு கிசு கிசுத்துக் கொள்கிறார்கள். இரைச்சல் மிகுந்த புதிய உலகத்தில் உளறுவாய் வணிகர்களே மகாவித்துவான்களாயிருக்கிறார்கள். வணிகர்களின் அழுங்குப் பிடியிற் சிக்கியுள்ள அரசுகள் மக்களுக்காக எதையுமே செய்யமுடியாத நிலைமை. மக்களை வெறும் மந்தைகளாகவும் நுகரும் அஃறிணைகளாகவும் மட்டுமே வைத்திருக்க வணிகர் குழாம் முடிவெடுத்ததிலிருந்து உலகம் அழியத் தொடங்கிவிட்டது.

சென்ற வாரம் செய்தியொன்று வந்தது. மது, புகைத்தல், இராணுவத் தளபாட வணிகர்களது தொழில்கள் மிக அதிக வருவாயை ஈட்டிக் கொடுத்து வருகிறது என்பதே அது. மேற்கு நாடுகளில் புகைத்தல் தடை என்பது மிக வேகமாகப் பரவிவரும் ஒரு நடைமுறை. அதற்கு முக்கிய காரணம் அரசுகள் தமது மக்கள் மீது வைத்திருக்கின்ற கரிசனை அல்ல. மது, புகைத்தல், வெடியாயுதங்கள் மூலம் அரசுகளும் அதன் நண்பர்களான வணிகர்களும் சம்பாதிக்கின்ற வரியும், லாபமும் பெருந்தொகையானவை. அப்படியிருந்தும் புகைத்தலை அரசுகள் ‘மக்கள் நலம் கருதித்’ தடைசெய்கிறார்கள் என்றால் அது வெறும் முதலைக் கண்ணீரே. உண்மையில் புகைத்தலால் பாதிக்கப்படும் நோயாளிகளைப் பராமரிக்க ஆகும் அரச செலவு அதனால் கிடைக்கின்ற வருமானத்தைவிட அதிகமானது என்பதாலேயே அரசுகள் புகைத்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கின்றன.

மக்கள் நலம் மீது அக்கறையிருப்பின் புகையிலைப் பொருட்கள் இறக்குமதியை ஒரேயடியாகத் தடைசெய்யலாம். சிறுதுப்பாக்கிகளால் வேட்டையாடப்படும் மக்கள் வடஅமெரிக்காவில் அதிகம். அப்படியிருந்தும் அமெரிக்காவில் மில்லியன் கணக்கில் ஆயுத உற்பத்தி தொடர்கிறது. மதுவால் சீரழியும் அமெரிக்க இந்திய சமூகத்தினர், போதைப்பொருட் பாவனையால் உருக்குலையும் கறுப்பின சமூகம் என்று எல்லோரும் வடஅமெரிக்க மக்களே. அப்படியிருந்தும் வியாபாரம் தடபுடலாக நடக்கிறதென்றால் அதற்கு அரச-வணிக கூட்டணியே காரணம்.

சென்றவாரச் செய்தியின் பின்னர் சீ.பி.சி. வானொலிப் பேட்டியின்போது செய்தியாளரின் கேள்விக்கு வணிக பிரதிநிதி அளித்த பதில் இது. “வடஅமெரிக்காவில் பொதுவிடங்களிற் புகைத்தல் தடைசெய்யப்பட்டதால் எமக்கு லாபம் அருகியது உண்மையே. ஆனால் அந்த இழப்பை இப்போது சீனா, இந்தியா போன்ற நாடுகளும் இதர மூன்றாமுலக நாடுகளும் ஈடுசெய்கின்றன. அது மட்டுமல்ல அங்கு எமது சந்தை மிக வகமாக வளர்ந்தும் வருகிறது”; என்றார். அதற்கு அடுத்தபடியாக அச் செய்தியாளர் கேட்டது “நீங்கள் புகைபிடிப்பதுண்டா?” என்று. “இல்லை” என்பது அவரது பதில்.

பல வருடங்களுக்கு முன் அமெரிக்க வணிக நிறுவனமொன்று புகைத்தற் பழக்கத்தை மூன்றாமுலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியபோது இலவசமாக அதிக நிக்கொட்டீன் செறிவுள்ள சிகரட்டுகளை இந்நாடுகளின் மக்களுக்கு வழங்கியது. கவர்ச்சியாக உடையணிந்த இளம் பெண்கள் சினிமா கொட்டகை வாசல்களில் நின்று இச்சிகரட்டுகளை வழங்குவார்கள். தென்கிழக்காசிய மக்கள் பலர் சிகரட், மது, அபின், சூது என்று பல பலவீனங்களுக்கு இலகுவாக அடிமையாவார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. சீனாவோடு போர் தொடுத்து வெல்லமுடியாதென்றறிந்த பிரிட்டன் அபின் போரைத் (ழிரைஅ றயச) மூலமே அவர்களை வெல்ல முடிந்தது. வியட்நாம் போரின்போது சூதாட்டம் பரவலாகப் பாவிக்கப்பட்டது.

இப்போது சீனாவில் அமெரிக்க பெரும் வணிகர்களான புகையிலை வியாபாரிகள் கூடாரம் அடித்துள்ளனர். சீனாவின் அபரிமிதமான பொருளாதார, இராணுவ வளர்ச்சியைத் தோற்கடிப்பதற்கான ஒரு வழி அந்நாட்டு மக்களது பலவீனத்தைச் சாதகமாக்குவதே.

உலகம் முழுவதையும் ஒரு குடைக்குட் கொண்டுவர வேண்டுமென்ற பாரிய திட்டத்தின் பிரகாரம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பல. 1970களில் அமெரிக்க அரச தேவைகளுக்கென உருவாக்கப்பட்ட இன்டர்நெட், இராணுவ தேவைகளுக்கென உருவாக்கப்பட்ட ஜீ.பி.எஸ் எனப்படும் பூகோளக் குறிகாட்டி மற்றும் செல் தொலைபேசிகள் போன்றவற்றை பொதுமக்களின் தேவைக்கென அறிமுகப்படுத்தியமை வெறும் வணிக நோக்குடனானதல்ல. சிலநாட்களுக்கு முன்னர் நண்பரொருவர் கேட்டார் “இந்த ர்ழவஅயடைஇ புஆயடைஇ யாஹ_ போன்ற இலவச ஈமெயிலைப் பொதுமக்களுக்குத் தருவதால் இந்நிறுவனங்கள் என்ன லாபத்தைச் சம்பாதிக்கின்றன?” என்று. இப்படியான கணனி மென்பொருட்களின் மூலம் மிகவும் சொற்பமான விளம்பரங்களே பயன் தருகின்றன. ஆனால் இவ்விலவசமான சேவைகளின் நோக்கம் அதன் பாவனையாளர்களைக் கண்காணிப்பில் வைத்திருப்பதே. இவ்விலவச நிறுவனங்கள் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களின் மேற்பார்வையில் இயங்குவன. தேசீய பாதுகாப்பு என்ற போர்வையில் தனி மனித சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மக்கள் தயார் என்றாலும் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் பல வழிகளிலும் கண்காணிக்கப் படுகிறார்கள். சமீபத்தில் பல தமிழ் பல்கலைக்கழக இளைஞர்கள் கனடிய – அமெரிக்க பாதுகாப்புத் துறையினாற் கைதுசெய்யப்பட்ட போது அவர்களது ஈமெயில் தகவற் பரிமாற்றமே ஆதாரமாகக் காட்டப்பட்டது.

இப்போதெல்லாம் காகிதத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று கணனியிலேயே உங்கள் விண்ணபப்ங்களைச் செய்யச் சொல்கிறார்கள். வீட்டிலிருந்தே பல காரியங்களை இலகுவாக முடித்து பலமணி நேரத்தை மீதப்படுத்தலாம். ஆனால் கணனி மூலம் நாம் வழங்கும் பிரத்தியேகத் தகவல்கள் பிரதான சேமக் கணனியிற் (ஆயin ளுநசஎநச) நிரந்தரமாகச் சேமிக்கபடுமென்பதோ அத் தகவல்கள் தேசீய பாதுகாப்பு காரணத்திற்காக பல நாடுகளின் பாதுகாப்புத் திணைக்களங்களாற் பகிர்ந்து கொள்ளப்படுகிறதென்பதோ பலருக்குத் தெரியாமலிருக்கலாம். நாம் எமது கணனிகளில் அழித்துவிட்டோமென்று நினைத்துக் கொண்டிருக்கும் தகவல்கள் பல சேமக் கணனிகளில் நிரந்தரமாகப் பதியப்பட்டிருக்கும் என்பதும் பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இப்படியான சேமக் கணனிகளோ அல்லது அவற்றில் சேமித்த தகவல்களைப் பாதுகாக்கும் டீயஉமரி ளுநசஎநச எனப்படும் கணனிகளோ எந்த நாட்டில் யார் பாதுகாப்பில் உள்ளன என்பதோ மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கலாம். எனவே ஒருவகையில் நாமெல்லோரும் உலக வலைக் கண்ணியில் சிக்குண்டவர்கள்தான்.

சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற பால்கன் போரில் அமெரிக்க விமானங்களின் தாக்குதலுக்கு முதலிற் பலியானது தொலைபேசித் தகவற் பரிவர்த்தனைக் கோபுரம். இதன் மூலம் தொலைபேசிச் சேவையைத் துண்டிப்பதன் மூலம் இரண்டு நோக்கங்கள் நிறைவேறின. ஒன்று ‘எதிரிகளின்’ தகவற் பரிமாற்றத்தைத் தடுத்து நிறுத்துவது. இரண்டாவது அமெரிக்க செல் தொலைபேசி நிறுவனங்களின் வியாபாரத்தை அங்கு அதிகரிப்பது. இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் அங்கு முதன் முதலில் நிறுவப்பட்ட செல் தொலைபேசி நிறுவனத்தின் அதிபர் அப்போது ஜனாதிபதி கிளின்டனின் பாதுகாப்புச் செயலாளராகவிருந்த மடலின் ஆல்பிறைட் என்பவரே. இதன் பின்னணியில் இருக்கும் பிறிதொரு காரணமே அமெரிக்க இராணுவத்தின் முதல் நோக்கம். அதாவது செல் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதன் மூலம் எதிரிகளை இலகுவில் அடையாளம் காணலாம். அதேவேளை தேவையான நேரத்தில் இத் தொலைபேசிகளைச் செயலிழக்கச் செய்து எதிரிகளின் நகர்வுகளைக் கட்டுப்படுத்தலாம். இதையேதான் இப்போது இலங்கை இராணுவமும் செய்கிறது. ஈராக்கிலும் இப்போதுள்ள செல் தொலைபேசிச் சேவைகள் அமெரிக்காவின் கைகளிலேயே இருக்கிறது.

இன்றய தொழில்நுட்பம் மனித குலத்துக்குக் கொடுத்த வஜ்ராயுதம் தகவற் சாதனமொன்றே. மனித குலத்தைப் பூண்டோடழிக்கக்கூடிய வல்லமை அதற்குண்டு. மக்களை இலகுவாகத் திசை திருப்பக்கூடிய வகையில் செய்திகளைப் பரிமாற்றி வாழிடங்களுக்குக் கொண்டுவரும் இச் சாதனங்களை நல்ல வழிகளிலும் பாவிக்கலாம். ஆனால் நவீன உலகில் நடைபெற்றதும் நடந்து கொண்டிருக்கின்றதுமான போர்களை எடுத்துப் பார்க்கின் அவற்றின் உருவாக்கத்திற்கும் முடிவுகளுக்கும் தகவற் சாதனங்களே காரணமாயிருந்திருக்கின்றன.

பெரும்பாலான ஜனநாயக மரபைப் பேணும் நாடுகள் போர்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதற்கு தம் நாட்டு மக்களின் ஆதரவைத் தேட முற்படுவார்கள். அதற்கு அவர்களுக்கு எப்போதும் துணையாக நின்றவை இத் தகவற் சாதனங்களே. பல தடவைகள் இச் சாதனங்கள் பொய்களைச் சொல்லியும், உண்மைகளைச் சொல்வாமல் விட்டும், திரித்துச் சொல்லியும் மக்களை உணர்ச்சிவசப் படுத்தி அதிகாரத்தில் இருபபவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவைப் பெற்றுக் கொடுக்கின்றன. உதாரணமாக முதலாம் வளைகுடாப் போரில் குவைத் நாட்டின் மீது படையெடுத்த ஈராக்கிய படைகள் பொது மருத்துவ மனையொன்றிலிருந்து குழந்தைகளைக் கொன்றார்கள் என்று ‘கண் கண்ட’ சாட்சியென ஒரு பெண் அமெரிக்கத் தொலைக்காட்சியொன்றிற்குப் பேட்டி கொடுத்தார். போர் முடிவுற்ற பின்னர்தான் தெரிய வந்தது அப் பெண் அப்போதய குவைத் ராஜதந்திரியின் மகள் என்றும் அமெரிக்க தகவல் நிறுவனமொன்றின் பிரச்சாரத் தேவைக்காக அமெரிக்காவிற் தயாரிக்கப்பட்ட குறும் படமே அவ்விவகாரம் என்பதும்.

பெரும்பாலான உலக நாடுகளில் இப்போது நடைபெறும் பிரச்சினைகள் பல அரசியற் காரணங்களுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்டவையே. மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நடைபெற்றுவரும் இஸ்ரேல் பலஸ்தீனிய பிரச்சினை இன்றுவரை முடிவுக்குக் கொண்டுவரப்படாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருப்பினும் அப் பூசலைத் தக்கவைத்துக் கொள்வதற்கு தகவற் சாதனங்களே காரணம். இரண்டு தரப்பிலும் அமைதியான தீர்வுக்கு மக்கள் ஆதரவில்லை, போர் மூலமே பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையை இரு பக்க மக்களும் பரஸ்பரம் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தகவற் சாதனங்கள் கூறுகின்றன. அதுவேதான் மக்களின் உண்மையான கருத்தா அல்லது அவை தகவற் சாதனங்களால் உருவாக்கப்பட்டவையா என்ற ஐயம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் போர்கள் திணிக்கப்படுவதற்கு முன்னர் மேற்குலக நாடுகளில் தகவற் சாதனங்கள் பல விதமான பரப்புரைகளை முன்னீடுகளாகச் செய்து வந்தன. பல ஊடகங்கள் ஒன்றையொன்று மேற்கோள் காட்டி எல்லாமே ஒத்தூதி வந்தன. தேசீயப் பாதுகாப்பு என்ற காரணத்தைக் காட்டி அவை எல்லாம் தேசீயத் தாளத்துக்கு நர்;த்தனமாடின. பொய்கள் உண்மைகளாக்கப்பட்டன. மக்கள் நம்பினார்கள். போருக்கு ஆதரவளித்தார்கள்.; உண்மைகள் மீண்டும் பொய்களானபோது இத் தகவற் சாதனங்கள் வேறிடங்களுக்கு நகர்ந்து அங்கும் மீண்டும் பொய்களின் தொழிற்சாலைகளாகத் தம்மை ஆக்கிக் கொண்டன.

உலகில் இயற்கை வளங்கள் அருகிப் போய்க் கொண்டிருக்கும் அதே வேளையில் இந்தியா, சீனா, மலேசியா போன்ற புதிய நுகர்வுக் களங்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் பொருளாதாரப் பட்டினியைத் தீர்க்க வல்ல புதிய வளங்களைத் தேடிப் போட்டிகள் உருவாகிவருகின்றன. இதனால் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா என்று பல வளமான பூமிகளைத் தம்வசப்படுத்தும் போட்டிகளில் பல அரசியல் நகர்வுகளும். பல இராணுவ நகர்வுகளும் முன்னெடுக்கப் படுகின்றன. இப் போட்டிகளில் பல விசித்திரமான நட்புகளும் உறவுகளும் உருவாக்கப்படலாம். முன்னர் இருந்ததாகக் கருதப்படும் சித்தாந்த ரீதியான நட்புகள் திடீரென்று கைவிடப்படலாம். இப்படியான காய் நகர்த்தல்களில் இந்து சமுத்திரத்தில் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் எதிர்கால நட்புகளும் புதிய வடிவங்களை எடுக்கும் என எதிர்பார்க்கலாம். இப் பின்னணியில் இராமாயணத்து அணிலாக இலங்கை தன்னை உருவகப்படுத்தி வருவது தெரிகிறது. இந்தியாவோடு ஊடலும் கூடலுமாகவும், பாகிஸ்தான், சீனாவோடு கூடலுமாகவும் இந்து சமுத்திர ஆதிக்கப் போட்டிகளில் தன்னை ஒரு பங்காளியாகக் காட்ட இலங்கை பகீரத முயற்சி எடுத்து வருகிறது.
இலங்கையின் இந்த சர்வதேசங்களின் ‘செல்லப் பிள்ளை’ நிலை சர்வதேச தகவற் சாதனங்களையே அவர்களுக்குச் சாதகமாக மாற்றி வைத்திருக்கிறது. பயங்கரவாதம், தேசீய பாதுகாப்பு என்பன தனிமனித உரிமைகளை முன்னெப்போதுமில்லாத அளவுக்குப் பாதித்திருக்கிறது. தனிமனித உரிமைகளைப் பாதுகாக்க வல்ல தகவற் சாதனங்கள் அதிகாரங்களின் சாதனங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

வியட்நாம் போரின் தாக்கங்கள் மறக்கப்பட்டதற்கும், ஈராக் ஆப்கானிஸ்தான் போர்கள் மறைக்கப்பட்டதற்கும் தகவற்சாதனங்களே காரணம். ஆனாலும் மக்கள் விழிப்படையத் தொடங்கி விட்டார்கள். உண்மைகள் மெதுவாகவேனும் ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. பொய்களைத் திணித்த தகவற்சாதனங்களை மக்கள் இனங்கண்டு ஒதுக்கிவிடும் நிலைமை ஏற்படும். ரஷ்யாவின் அக்டோபர் புரட்சிக்கு அடுத்ததாக உலகில் ஏற்படப்போகும் மாபெரும் புரட்சி இதுவேயாகவிருக்கும்.

போர்கள் எப்போதும் ‘தேசீய நன்மை’ என்ற காரணத்திலேயே முன்னெடுக்கப்படுகின்றன. மக்களை வசப்படுத்தும் இக்கோஷங்கள் இனிமேல் எடுபடப் போவதில்லை. புதிய தலைமுறையினர் இவ் வேற்றுக் கோஷங்களை இனங்கண்டு அவற்றை ஒதுக்குவதற்கான புதிய புரட்சியை முன்னெடுப்பார்கள். பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கும் இப்புரட்சி போர்களை ஒழித்து சூழல் பற்றிய கரிசனையோடு செயற்படும். அப்போது இயற்கையே அவர்களுக்கு உதவிக்கரம் கொடுக்கும். தகவற்சாதனங்களை முறியடிக்கும் வல்லமை இயற்கையிடம் மட்டுமே உண்டு. இயற்கையால் மீள உருவாக்கப்பட்ட அந்தப் பழைய உலகத்தில் மட்டுமே அமைதி அமைதியாக வாழ இயலும்.


மாசி 2007

உலக தரித்திரம்

உலக தரித்திரம்


….அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர் கெட்டிருந்தது, பூவுலகு வன்முறையால் நிறைந்திருநதது. கடவுள் மண்ணுலகை உற்று நோக்கினார். மண்ணுலகில் ஒவ்வொருவரும் தீயவழியில் நடந்து வந்தனர். அப்பொழுது கடவுள் நோவாவிடம் பின்வருமாறு கூறினார்.: “எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லோரையும் ஒழித்துவிடப் போகிறேன். ஏனெனில் அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது. இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழித்துவிடப் போகிறேன். உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய். அதில் உன் குடும்பத்தாரையும் தக்க விலங்குகுளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும், தகாத விலங்குகளிலிருந்து ஒரு சோடியையும், வானத்துப் பறவைகளிலிருந்து ஏழு சோடிகளையும் உன்னோடு சேர்த்துக்கொள். இன்னும் ஏழு நாட்களில் நாற்பது இரவுகளும் நாற்பது பகல்களுமாக ஓயாது மழைபெய்வித்து நான் உருவாக்கிய அத்தனை உயிரினங்களையும் இந்நிலத்திலிருந்து அழித்தொழிப்பேன்.

….வெள்ளம் வற்றியது. நோவாவும் அவர் குடும்பத்தாரும், விலங்கு, பறவையினங்களும் பேழையிலிருந்து வெளியே வந்தனர். நோவா ஆண்டவருக்கு நன்றி தெரிவிப்தற்காக பலி பீடம் கட்டி அதன் மேல் எல்லா வகைத் தக்க விலங்குகளிலும் தக்க பறவைகளிலிருந்தும் எடுக்கப்பட்டவற்றை எரி பலியாகச் செலுத்தினார். ஆண்டவர்; அந்நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது: “ மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் நான் அழிக்கவே மாட்டேன்.


மேற்கூறிய வாசகங்கள் கிறிஸ்தவத்தின் பழைய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டன.

புனித பூமியான பாலஸ்தீனத்தில் இன்று நடைபெறும் கருமங்களுக்கான காரண காரியங்களை நினைவுகூரும்போது கடவுளின் இக்கூற்றுக்களை இரைமீட்காமல் இருக்க முடியாது.

கடவுள் தன் வாக்கைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை. தன்னுருவில் படைக்கப்பட்ட தன்னாற் தெரிவுசெய்யப்பட்ட விருப்புக்குரிய இஸ்ரேலிய மக்களைக் கொண்டு மீண்டும் அதையேதான் செய்கிறார். ஆபிரகாமின் சந்ததியினர் தமக்குள்ளேயே வன்முறைகளை அவிழ்த்துவிட்டிருக்கின்றனர். உலகம் மீண்டுமொரு அழிவை நோக்கி நடைபோடுகின்றது. புதிய நோவா தன் பேழையுடன் விண்ணுலகில் சஞ்சரிக்கிறார். சர்வதேச விண்தளமான (ஐவெநசயெவழையெட ளுpயஉந ளுவயவழைn) இல் புதிய நோவாவின் குடும்பத்தினரும், தக்க, தகாத விலங்குகள் பறவைகளினது மரபணுக் கூறுகளும் (னுNயு) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர் என்கிறார்கள். அது உண்மையானால் கடவுள் இன்னுமொரு தடவை உலகின் அழிவுக்காகத் தயாராகி விட்டார்.

நம்புவதும் நம்பாததும் எம்மைப் பொறுத்தது.

கடவுளாற் தேர்வு செய்யப்பட்தாகக் கருதிக்கொண்டு இப் பூவுலகத்தின் குரல்வளையை இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். அதன் கரங்களுக்கு வலுக்கொடுக்கும் அமெரிக்காவும் சகபாடிகளும் பாதிக்கப்பட்டவர்களையே வில்லர்களாக்கித் தம் அராஜகத்தை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். இஸ்ரேலின் அழுங்குப் பிடிக்குள் அகப்பட்டு மூச்சுத் திணறும் உலகத்தைப் பார்த்து கைதட்டி ஆரவாரிக்கும் இதர நாடுகளும் அவற்றின் மக்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். புதிய நோவாவினால் உதாசீனம் செய்யப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்.

இன்றய உலக சரித்திரத்தை மாற்றி எழுதும் பணிக்கான பூஜை இருநூறு வருடங்களுக்கு முன்னரே போடப்பட்டுவிட்டது. கடவுள் தமக்கிட்ட பணியென்று ஒரு சமுதாயம் அதைத் தன் தலைமேற் போட்டுக்கொண்டு காரியங்களைச் செய்ய ஆரம்பித்தது. ஜியோனிசம் என்று அதற்குப் பெயரிட்டார்கள். உலகின் சர்வாதிக்கமும் தங்களிடமிருக்க வேண்மென்பதே அதன் நோக்கம் என்று அதன் வரைவு சொல்கிறது. யூத எதிர்ப்பின் பின்னாலுள்ளவர்களால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட இனச்சிதைவின் வடிவமே அது என்று யூத மக்கள் சொல்கின்றனர். இருப்பினும் இன்றய உலக சம்பவங்கள் அச்சொட்டாற்போல் இந்த வரைவைத் தழுவியே நடைபெறுகின்றன என்பது யூதரல்லாதோரின் குற்றச்சாட்டு.

சோவியத் யூனியனின் உடைவிற்குப் பின்னான உலகத்தில் சமநிலை தடுமாறியதால் உலகம் கலங்கிப் போயிருந்தது. ஒரு கட்டுப்பாட்டிற்குள் இயங்கிக் கொண்டிருந்த அரசுகளும், நாடுகளும், குழுமங்களும் அனாக்கிரம நிலைக்குட் தள்ளப்பட்டன. சோவித் யூனியனின் உடைவைத் திட்டமிட்டுக் கனகச்சிதமாக முடித்துக்கொண்ட பங்காளிகள் இஸ்ரேலும் அமெரிக்காவும் இப்புதிய குழப்பநிலையைத் தமக்குச் சாதகமாக மாற்ற எடுத்த முயற்சியே இன்றய உலகின் இயங்கு நிலையின் வடிவம்.

குழம்பிய உலகை மீண்டும் ஒரு ஒழுங்கிற்குள் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு இருந்தது. கோர்பச்சேவினால் மிகக் கொடுமையான முறையிற் காயப்படுத்தப்பட்ட ரஷ்யா மீண்டும் எழுந்து நடமாடுவதற்குள் உலக வரைபடத்தை மீளவரைந்துவிட வேண்டும் என்று அமெரிக்கா முயன்றது. பலமான அரசுகளையும், பிராந்தியங்களையும் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்திவிடமேண்டுமென்ற அவசரம் முனைப்பெடுத்தது. பலமான துணைகளையும், கருவிகளையும் அது உருவாக்கியது. 1998ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய உலக ஒழுங்கு (New World Order) அதன் முதல் திட்ட வரைவு. அதில் தற்போது இருக்கின்ற அங்கத்தவர்களிற் பெரும்பங்கினர் இஸ்ரேலிற்கு ஒருவகையில் உறவினர். இவர்களது திட்டத்தின் முதற் செயல்வினை ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு. அதற்குக் காரணமாக அமைந்த செப்டம்பர் 11ன் பின்னணியிலான மர்மம் இன்னும் துலக்கப்படவில்லை.

தொடர்ந்து ஈராக் மீதான தாக்குதல். பின்னணியும் முன்னணியும் மிக வெளிப்படையாகவே தெரிந்தது. உலகமே எதிர்த்து நின்றது. இருந்தும் ஒரு சுயாதீனமான நாடும் அதன் மக்களும் சிதைத்து சின்னாபின்னமாக்கப் பட்டுவிட்டனர். ஐந்து லட்சம் குழந்தைகள் பட்டினியால் மரணடைந்திருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் மலைகளும் குகைகளும் நேசப்படைகளினால் தரைமட்டமாக்கப்படுகின்றன. மனித இழப்புகள் இங்கு கணக்கெடுப்பிற் சேர்க்கப்படுவதில்லை.

இப்பொழுது லெபனான். இரண்டு சோணகிரிகளைக் கடத்திய குற்றத்திற்காய் ஒரு நாடு தரைமட்டமாகக்ப்பட்டு வருகிறது. அதன் இறமையும், அதன் மக்களின் வாழுரிமைகளும் பீரங்கிகளின் வாய்களிற் புதைக்கப்பட்டு வருகின்றமை சர்வதேச ஜனநாயக அடிமைகளுக்குத் தெரியாமற் போகிறது. உலகமே வாய் பொத்தி மௌனியாகிவிட்டது. உலக காவலர் என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் ஐ.நா. வின் கூலிகள் தம்மையே பாதுகாத்தக் கொள்ள முடியாமற் போனபோது உலகை எப்படிக் காப்பாற்ற முடியும்?

1982ம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் 19 வரையில் லெபனானில் கட்டவிழ்த்து விடப்பட்ட மரனைட் மிருகங்களால் சாப்ரா, ஷட்டில்லா அகதி முகாம்களில் படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீனியர்களின் குருதி மணம் அகல்வதற்குள் மீண்டுமொரு படுகொலை. இந்த செப்படம்பர் படுகொலைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய மரனைட் கிறிஸ்தவர்களை ஊக்குவித்தவர்களில் முதன்மையானவர் தற்போது உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஆரியல் ஷரோன். 20000த்திற்கும் அதிகமான ஆண், பெண், குழந்தைகள் குத்திக் குதறி வல்லுறவுக்குட்படுத்திக் கொலை செய்யப்பட்டார்கள். போரை நிறுத்தும்படி கேட்ட அப்போதய ஜனாதிபதி றேகனுக்கே நடு விரலைக் காட்டிவிட்டுத் தன் அராஜகத்தைத் தொடர்ந்தார் ஷரோன். குற்றம் சாட்டப்பட்ட அதே ஷரோன் மீண்டும் அந்நாட்டின் மக்களாற் பிரதமராக்கப்பட்டார். பதவிக்கு வந்தவுடன் மீண்டும் அவர் செய்தது இன்னுமொரு படுகொலையைத் தூண்டி விட்டது. பாலஸ்தீனியர்கள் மிகவும் புனிதமாகக் கொண்டாடும் அல் அக்ஸா மசூதிக்குப் போயே தீருவேன் என்று சர்வதேச குரல்களையும் உதாசீனம் செய்துவிட்டுப் போனார். ஓய்ந்திருந்த பாலஸ்தீனியர்களின் கிளர்ச்சி மீண்டும் ஆரம்பமானது. இன்று வரையில் நின்றபாடில்லை. தினம் தினம் குழந்தைகள் முதல் முதியோர் வரை குறிவைக்கப்படும் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள். கொலையாளிகளுக்குப் பொறுப்பைக் கொடுத்த மனிதர் எதுவுமே தெரியாது நீண்ட உறக்கத்தில் இருக்கிறார்.

இன்றய லெபனான் பிரச்சினைக்குக் காரணம் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் என்கிறார்கள். இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தினரைக் கடத்தியது குற்றம் என்கிறார்கள். ஆனால் இக்கடத்தல் விளையாட்டுகளை இப் பிராந்தியத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அறிமுகப் படுத்தியவர்களும் அவற்றை வெற்றிகரமாகப் பிரயோகப்படுத்தி வருபவர்களும் இஸ்ரேலியர்களே. தாம் விரும்பியபோது தமது இராணுவக் கைதிகளை விடுவிப்பதற்காக பலாஸ்தீனியர்களைக் கடத்திக்கொண்டுபோவது இஸ்ரேலியர்களின் வழமையான நடவடிக்கைகள். இப்படியாக தற்போது இஸ்ரேலிய சிறைகளில் வாடும் பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை பத்ததாயிரத்துக்கும் மேல். இவர்களில் பெரும்பான்மையோர் போர் முனைகளைக் காணாத சிறுவர்கள்.

லெபனான் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. ஐம்பது ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளப்பட்டாலும் லெபனான் மண்டியிட மறுத்து வருவது நல்ல விடயம். அதன் அரச தலைவர் ஹிஸ்புல்லாவுக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்திரு;க்கிறார். இத்தனை அழிவுகளுக்குப் பிறகும் அங்கு நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஹிஸ்புல்லாவிற்கு 85 வீதத்திற்கு மேலாக ஆதரவு கிடைத்திருக்கிறது. 1982ம் ஆண்டுப் போரில் இஸ்ரேலைத் துரத்தியடித்தது போன்று இன்னுமொரு தடவை செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இப்போரில் இஸ்ரேல் ஏற்கனவே தோற்றுவிட்டது. இஸ்ரேலை ஆதரித்த காரணத்தால் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளும் உலகில் தமக்கிருந்த செல்வாக்கை இழந்துவிட்டிருக்கின்றன. இந்நாடுகளின் கண்மூடித்தனமான ஆதரவு இஸ்ரேலின் பயங்கரவாதத்தைப் பன்மடங்காக அதிகரித்திருக்கிறது. இஸ்ரேலின் தோல்வி இவர்களின் தோல்வியே என்பதை இனிவரும் காலங்கள் நிரூபிக்கும்.

உலகில் அமைதியும் சமாதானமும் ஏற்படுவதை பல நாடுகள் விரும்பவி;ல்லை. இந்நாடுகளின் ஆயுத வியாபாரம் பாதிக்கப்படக் கூடாதென்பதும், நாடுகளின் அரசியல் ஸ்திரம் தமது வணிகத்தைப் பாதிக்கும் என்பதுமே குழப்பவாதிகளின் அச்சம். இன்று ஆயுத அரசியல் ஜனநாயகத்தைச் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. பலத்தை உருவாக்காது ஜனநாயக மரபைப் பேண முடியாது என்பதற்கு ஹமாஸ் பலஸ்தீனமும் ஹிஸ்புல்லா லெபனானும் அறிஸ்டீட் ஹெயிட்டியும் உதாரணங்கள். துர்ப்பாக்கியமாக அணுவாயுதமொன்றே இன்றய பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரவல்லதென்று இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா போன்ற நாடுகள் காட்டி வருகின்றன.

இனிமேலும் மக்கள் அரசியல்வாதிகளையும், உலக சேவை நிறுவனங்களையும் நம்பி வாழ்க்கையை ஓட்டிக்கொள்ள முடியாது. ஏனெனில் இன்றய உலகை ஆட்சி செய்வது வணிக நிறுவனங்களும் ஆயுத வியாபாரிகளுமே. மனித நேயத்தை உணரும் புலன் அவர்களுக்கு என்றுமே இருந்ததில்லை. எதிர்பார்க்கவும் முடியாது. இதுவே இன்றய உலகின் தரித்திரம்.

….ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும். ஏனெனில், கடவுள் மனிதரைத் தம்முருவில் உண்டாக்கினார் - தொடக்கநூல்

July 2006

சு.ப.தமிழ்ச்செல்வன்

சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலை: தனி நாடே தீர்வு?



விடுதலைப் புலிகளின் அழகிய குரலொன்று அடக்கப்பட்டுவிட்டது. புலிகளுக்கு மிதவாத முகத்தைக் கொடுத்தவரென சர்வதேச ஊடகங்களால் சிலாகிக்கப்பட்ட சு.ப. தமிழ்ச்செல்வன் சிறீலங்காவின் விமானப்படைத் தாக்குதலின்போது மேலும் பல போராளிகளுடன் சேர்த்துக் கொல்லப்பட்டார் என்ற சேதி தமிழ் மக்களை மட்டுமல்ல பல உலக தலைவர்களையும் அரசியல் அவதானிகளையும் எமது பிரச்சினை மீது அக்கறை கொண்டவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் மண்ணெங்கும் துன்பம் சூழ்ந்திருக்கிறது. அமைதிப் பேச்சுகளுக்கான அற்ப சொற்ப சந்தர்ப்பங்களையும் இக் கொலைகள் அறவே இல்லாது ஒழித்துவிட்டிருக்கின்றன.

இக் கொலைகளின் மூலம் புலிகளின் வெஞ்சினம் மேலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உலக தமிழர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள். தமிழர்களின் தனி நாட்டுக்கான அத்திவாரத்தைச் சிங்கள தேசமே போட்டுக் கொடுத்திருக்கிறது. தென்னிலங்கையின் அழிவுக்கான நகர்வு துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது.

இச் சம்பவத்தின் பின்னான அரசு சார்பான முதல் அறிக்கையில் “ எதிரியின் தலைவர்கள் எங்கு மறைந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம.; புலிகளின் அத்தனை தலைவர்களையும் ஒவ்வொருவராக அழித்தே தீருவோம்” என்று பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச கர்ச்சித்திருக்கிறாhர். மிகையொலியான கர்ச்சிப்பு. தென்னிலங்கை மகிழ்ச்சியில் ஆரவாரிக்கிறது. பிரதான சிங்கள அரசியற் கட்சிகள் எல்லாம் தமிழ்ச்செல்வன் கொலையை ஆதரிப்பதாகவே தெரிகிறது.

ஈழப் போர் சமீப காலமாக பரிணாம மாற்றத்துக்கு உட்பட்டு வருகிறது. சர்வதேசங்களின் ஈடுபாடு, குறிப்பாக இந்தியாவின் ஈடுபாடு, இம் மாற்றத்தின் அதி முக்கிய முடுக்கியாக இருக்கிறது. தமிழ்ச் செல்வன் குழவினரின் கொலைச் சம்பவம் இம் மாற்றத்தின் முதல் பெறு பேறு.

தமிழ்ச்செல்வன் படுகொலையில் இலங்கை விமானப்படை புதிய தொழில்நுட்பத்தைப் பாவித்திருப்பதற்கான தடயங்கள் தெரிகின்றன. ஏற்கெனவே இஸ்ரேலினால் பலஸ்தீன, ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராகப் பாவிக்கப்பட்ட குறி வைத்துத் தாக்கும் (வயசபநவவநன மடைடiபெ) நடைமுறை இங்கு முதல் முறையாக வெற்றிகரமாகப் பாவிக்கப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் வலுவாகவிருக்கிறது. கோதபாயயின் அதீத தன்நம்பிக்கையுடனான ஆர்ப்பரிப்பும், ஏனைய சிங்களத் தலைவர்களின் போரை முன்னெடுப்பதில் காட்டுகின்ற ஒற்றுமையும் இராணுவத்தின் வழமைக்கு மேலான உற்சாகமும் ஒரு பொதுமையைக் கோடிட்டுக் காட்டுகிறது. அது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பாரிய தொழில் நுட்ப, நிபுணத்துவ உதவியாகவிருக்கலாம் என்பதே எனது கருத்து. இந்தியாவின் சமீபகால ஈடுபாடுகளின் அதிகரிப்பும் சீன, பாகிஸ்தான் நாடுகள் பற்றித் தென்னிலங்கை இப்போது எதையுயே பேசிக்கொள்ளாத தன்மையும் இந்திய-சிறீலங்கா உறவின் இறுக்கத்திற்கான தடயங்கள். யாழ்ப்பாணத்தில் இடருறும் மக்களுக்காகத் தமிழ்நாட்டு மக்களால் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை அனுப்புவதற்கு மறுத்த இந்தியா தென்னிலங்கையின் வேண்டுகோளுக்கிணங்கி உடனடியாகவே 6000 தொன் அரிசியை ஏற்றுமதி செய்ய இணங்கியிருப்பது இந்தியாவின் தமிழ் விரோத மனப்பான்மைக்கு நல்ல உதாரணம்.

இப்பின்னணியில், இந்தியாவின் நவீன இராணுவத் தளபாடங்களின் பரீட்சைக் களமாகத் தமிழ் தேசம் மாற்றப்படும் அபாயம் உருவாகியிருக்கலாம், அதன் ஆரம்பமே தமிழ்ச்செல்வன் படுகொலை என்ற கருத்து வலிமை பெறுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் சிறீலங்கா இராணுத்துக்கு தாக்குதல் ஆயதங்களை (னநகநnஉiஎந றநயிழளெ)யும், சில நிபுணர்களையும் இந்தியா வழங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. அதே காலத்தில் துல்லியமாக வழிகாட்டித் தாக்கும் (Pசநஉளைழைn புரனைநன ஆரnவைழைn Pபுஆ) ஆயதங்களைத் தயாரிப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்த ரக ஆயதங்களை வேறு பெயர்களில் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகள் பல போர்களில் உபயோகித்தன. துழiவெ னுசைநஉவ யுஉவழைn ஆரnவைழைn (துனுயுஆ) எனப்படும் செய்மதி வழிகாட்டலில் இலக்கைத் தேடிச்சென்று தாக்கியழிக்கும் ளுஅயசவ டீழஅடிள வல்லமையுள்ள குண்டுகளை இஸ்ரேல் பாலஸ்தீனத்திலும், லெபனானிலும் அதேவேளை அமெரிக்கா இவற்றை வளைகுடாப் போரிலும் வெற்றிகரமாகப் பாவித்தன. இந்தியா இவ்வாயுதத்தை (Pசஉளைழைn புரனைநன ஆரnவைழைn) வேறு பெயரில் தயாரிப்பதெனவும் அவற்றை சிறீலங்கா இராணுவம் வாங்கவிருப்பதாகவும் சமீபகாலமாகச் செய்திகள் வெளிவந்தன. இப்படியான ஆயதங்களைப் பாவிப்பதற்கு இலக்கு தவறாமல் அடையாளப்படுத்தப்பட வேண்டும். புPளு என்ற செய்மதி குறிகாட்டும் கருவிகள் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் இந்தியா தனது பிரத்தியேக செய்மதியொன்றை இராணுவ பாதுகாப்பு காரணங்களுக்காக வானில் ஏவியது.

இத்தரவுகளை ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது தமிழ்ச்செல்வனின் கொலைக்கு இப்படியான Pபுஆ பாவிக்கப்பட்டதா? அதற்கான இலக்கை அடையாளப்படுத்துவதில் செய்மதித் தொழில்நுட்பம் உபயோகப்பட்டதா? அப்படியானால் அந்த வல்லமை சிறீலங்கா இராணுத்திடம் இருந்திருக்க முடியுமா?

விடைகள் இந்தியாவின் ஈடுபாட்டையே குறிவைக்கின்றன. இது எனது அனுமானமே தவிர முடிந்த முடிபல்ல. விடுதலைப் புலிகளின் பகுப்பாய்வே இவற்றுக்கு விடைதர முடியும்.

இதே வேளை பிராந்திய அரசியற் காரணங்கள் இந்திய ஈடுபாட்டை வலியுறுத்துகின்றன என்பதில் எனக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. அண்டை நாடான பர்மாவில் ஜனநாயகத்துக்கு எதிரான அச்சுறுத்தல் இடம்பெற்றபோது அதில் தலையிடவேண்டிய கடப்பாடு இருந்தும் அதைத் தவிர்த்ததன் காரணமாக சீனா அங்கு தன் கடையைப் பரப்பிவிட்டது என்ற குற்றச்சாட்டு வலுவாகவிருக்கிறது. நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் வலுப்பெற்றதற்கும் இந்திய அக்கறையின்மையே காரணம் எனப்படுகிறது. இப்பின்னணியில் சிறீலங்காவில் அதன் தலையீடு தவிர்க்கப்படின் சீனாவும் பாகிஸ்தானும் நிரந்தர குடிமக்களாகிவிடுவார்கள் என்ற அச்சம் இருப்பது உண்மையே. அதனால் இந்திய தலையீடு அவசியமானதே. ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான தலையீடாக மட்டுமே அது இருக்க வேண்டும். அந்த விடயத்தில் இந்தியா மாபெரும் தவறை இழைத்துவருவதற்கான தடயங்களே தெரிகிறது.

அதே வேளை தற்போதய இந்திய ஆடசியாளருக்கு புலிகளைப் பலவீனமாக்க வேண்டிய அக்கறையிருப்பதையும் அனுமானிக்க முடிகிறது. அது தனியே ராஜீவ் காந்தியின் கொலையில் மையம் கொண்டதல்ல. மாறாக புலிகளின் பலமும், அவர்கள் ‘வாங்கப்பட முடியாதவர்கள்’ என்ற தன்மையும் அதற்குக் காரணம் புலிகளின் தலைமைதான் என்பதுமே. அதனால் இப்போதுள்ள புலிகளின் தலைமை பலவீனமாக்கப்பட வேண்டும் அல்லது ஒழிக்கப்பட வேண்டும் என்ற முடிவில்தான் இந்திய ஈடுபாடு தொங்கி நிற்கிறது.

இந்த வேளையில் புலிகளின் விமானப்படை உருவாக்கம் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது. புலிகளின் விமானப்படை உருவாக்கம் பெறுவதற்கு முன்னர் இந்திய அரசின் அக்கறை சிறீலங்காவின் ஆயுதச் சேர்ப்பு, தனது எதிரிகளுடனான நட்பு போன்றவற்றில் மையமிட்டிருந்தது. புலிகளின் விமானப்படை உருவாக்கம் இந்திய பாதுகாப்பு சமூகத்தைத் தட்டி எழுப்பிவிட்டது. புலிகளினால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு என்று நான் நம்பவில்லை. ஆனாலும் புலிகளின் வளர்ச்சியையிட்டு இந்தியா ஒருபோதும் பெருமைப்படுமென்று நாம் எதிர்பார்க்கவும் முடியாது. இதன் பின்னர் சிறீலங்கா அரசின்மீது இருந்த இந்தியாவின் கவனம் புலிகளின் மீது திரும்பியது. ஈழப்போரில் இந்தியாவின் ஈடுபாட்டில் மாற்றமேற்படத் தொடங்கிதன் ஆரம்பப் புள்ளி இங்குதானிருக்கிறது. ஒரு காலத்தில் புலிகளைப் பாவித்து சிறீலங்காவைப் பதம் பார்த்தது இந்தியா. இப்பொழுது மேசை திருப்பப்பட்டிருக்கிறது. இந்தியாவின் சிறீலங்காவுக்கான (ஆயத) தான தருமம் இப்போது புதிய பரிணாமத்தை அடைந்திருக்கிறது. அதன் முதற் களப்பலி தமிழ்ச்செல்வனாக இருக்கலாமோ என்பது எனது பலத்த சந்தேகம்.

இதே வேளை ஈழப்போரை அதிவிரைவாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவை இலங்கை அரசுக்கு முன்னெப்போதும் போலல்லாது ஒரு அவசரத்தைக் கொடுத்திருக்கிறது. தென்னிலங்கையில் பொருளாதாரச் சீரழிவு, பால்மா, பாண் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் விலையுயர்வு போன்ற நெருக்கடிகள் தென்னிலங்கை பாமர மக்களை மிகவும் வதைத்து வருகிறது. இம் மக்களின் பட்டினியில் பசி போக்கிவரும் போலி மார்க்சீயவாதிகளான ஜே.வி.பி யினர் தொடர்ந்தும் ‘போர்ப் பாத்திரத்தில்’ வாக்குப் பிச்சை கேட்க முடியாதென்ற நிலையில் அரசை நிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிவிட்டார்கள். இதுவரை சரிந்து கொண்டிருக்கும் அரசுக்கு முண்டுகொடுத்துக் கொண்டிருக்கும் பெரிய கட்டையான இந்த ஜே.வி.பி;. அரசைக் கவிழ்க்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறார்கள். தேர்தலுக்குப் போகும்போது திட்டித் தீர்க்க அவர்களுக்கு ஒரு கட்சி தேவை. சுதந்திரக் கட்சியின் வாக்குத் தளம்தான் அவர்களதும். எனவே தனது ஆட்சிக் காலம் எண்ணப்பட்டுவிட்டது என்ற பயத்தில் தமிழரைத் தோற்கடித்த வெற்றி வீரனாக மக்களிடம் செல்லவேண்டுமென்பது ராஜபக்சவின் விருப்பம். எனவேதான் இந்த முடுக்கப்பட்ட போர். ரணிலுக்கு விருந்து வைத்து ராஜபக்சவை ஒதுக்கிய மன்மோகன் சிங்கிற்கு திடீரென்று ராஜபக்ச பரிவாரத்துக்கு விருந்து வைக்க வேண்டிய தேவை என்ன? மர்மம் துலங்க இன்னும் காலமிருக்கிறது. பொது மக்கள் இழப்பு அதிகமின்றி புலிகளை ஒழித்துக் கட்டுவதே இருவரதும் பொ.சி.பெ.

மறு பக்கத்தில் ரணில் காட்டில் கொண்டாட்டம் விமரிசையாக நடக்கிறது. புலிகளை ஒழித்துக்கட்டினால் பிரச்சினையற்ற அரசைத் தான் சுவீகரித்துக் கொள்ளலாம். அதே வேளை போரை நடத்துவதன் மூலம் அரசின் கஜானா விரைவில் காலியாகிவிடும். மக்கள் மஹிந்தவைத் தூக்கி எறிந்து விடுவார்கள். அதனால் தனது செங்கம்பளம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அவர் கனவு கண்டுகொண்டிருக்கிறார். சில வேளை இந்தியாவின் நோக்கமும் அதுவேயாகவும் இருக்கலாம். அல்லாது போகில் இந்தியா மஹிந்த பரிவாரத்தை உபசரித்தபோது ரணில் ஆர்ப்பாட்டமெதுவுமில்லாது இருந்தார். தலையணை மந்திரம் பலமானதாக இருந்திருக்கலாம்.

தமிழ்ச்செல்வனது கொலையின் பின்னால் இந்திய ஆயதமும் நிபுணத்துவமும் இருந்திருக்கலாமென்று வைத்துக் கொண்டால் ‘குறி’ வைத்துக் கொடுத்தது யார்? யாரோ நம்மவராகவே இருக்க வேண்டும். கிளிநொச்சி, வன்னி என்று அத்துபடியாகப் பழகிய அம்மானின் அனுக்கிரகம் இன்னும் சிங்கள அரசு பக்கம் இருக்கிறது. அதைவிட அருகே வவுனியாவில் ஆழ ஊடுருவும் நாட்கூலிக்காரர்கள் நிறையவே இருக்கிறார்கள். புPளு கருவிகள் தாராளமாகக் கிடைக்கிறது. வசதிகள் ஏராளம். தாராளம். இப்படியிருக்கும் போது கோதபாய மிகையொலியில் கர்ச்சிக்காமல் என்ன செய்வாh?

தமிழ்ச்செல்வனின் கொலை புலிகளின் முதகெலும்பை உடைத்துவிட்டதாக சிங்கள அரசு எக்காளமிட்டால் அது நகைப்புக்குரியது. மாறாக, இக்கொலை விடுதலைப் புலிகளின் கைவிலங்குகளை உடைத்திருக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சாவதேச சமூகம் புலிகளின் கரங்களில் மாட்டிய விலங்குகள் தகர்க்கப்பட்டு விட்டன. சர்வதேசங்களின் நியமங்களை மதித்து தற்கொலைப் போராளிகளைத் தடுத்து வைத்துக்கொண்டிருந்த தலைவரைச் சர்வதேச சமூகம் வஞ்சித்து விட்டது. தமிழ்ச்செல்வனின் கொலை மூலம் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தையே கொலைசெய்திருக்கிறது சிறீலங்கா அரசு. அத்தோடு இனி வரப்போகும் இரத்தக்களரிக்கும் இவர்களே பொறுப்பு.

மண்ணின் பொருட்டு மடிந்துபோன தமிழ்ச்செல்வன் மற்றும் இதர போராளிகளினதும் குடும்பத்தினருக்கும் இவர்களைத் தன் தானையில் ஊட்டி வளர்த்து அறுவடை காட்டுவதற்கு முன்னர் அஞ்சலி செலுத்தவேண்டி ஏற்பட்டதற்காக தலைவர் பிரபாகரனுக்கும் எமது ஆழ்நத அனுதாபங்கள்!

இலங்கையின் கள நிலவரம்: ஜே.வி.பி யின் வெற்றி

இலங்கையின் கள நிலவரம்: ஜே.வி.பி யின் வெற்றி


இன்றய இலங்கை அரசியல் சதுரங்க ஆட்டத்தின் இதுவரை அறிவிக்கப்பட்டாத முடிவுகளில் ஜே.வி.பி யினருக்கே அதிக புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அதிக சாணக்கியத்தோடும் மிடுக்கோடும் களமிறங்காமலே (றிமோட்டில்) காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் இந்தியா படுதோல்வியடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ஐக்கிய தேசீயக் கட்சியைத் தன் கால்களில் நிபந்தனை ஏதுமின்றி வீழ்த்திய இறுமாப்புடன் மீசையை முறுக்கிக் கொண்டு நிற்கும் சுதந்திரக்கட்சியையும் அதன் அடிமைக் கட்சிகளையும் பார்த்து ஜே.வி.பி பரிகாசமாகச் சிரிக்கின்றது. இவை எல்லாவற்றையும் பார்த்து சர்வதேச சக்திகள் தமக்குக் காரிய சித்தி கைகூடும் நாட்களை எண்ணிக் களிப்புடன் இருக்கின்றன.

தமிழர் தரப்பு? ஒத்திகையில் பிசியாகவிருக்கிறது.

இலங்கையின் தலைநகரில் பரபரப்பாகவிருக்கும் செய்தி ஜே.வி.பி. யினரின் ஆதரவோடு சரத் பொன்சேகா தலைமையில் இராணுவ சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றத் திட்டம் தீட்டுகிறார் என்பது. நகைச்சுவை உணர்வோடு இதை நீங்கள் படித்தால் அது உங்கள் வெற்றி. ஆனாலும் இலங்கை அரசியலில் சமீப காலங்களில் நடைபெறும் நடவடிக்கைகளைப் பார்க்கின் இச் செய்தியைப் பொய்யென்று உதாசீனம் செய்ய முடியாது.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் அசலாகச் சிந்திக்கவோ செயலாற்றவோ முடியாதவர்கள் என்பதைப் பல தடவைகள் நிரூபித்திருக்கிறார்கள். தென் லெபனானில் இஸ்ரேலிய விமானங்கள் பாலங்களைத் தகர்க்க ஆரம்பித்ததும் கிழக்கிலங்கையில் கிபீர் விமானங்கள் கிராமங்களின் ஒற்றையடிப் பாதைகளையெல்லாம் தகர்க்க ஆரம்பித்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன் மந்திரி பரிவாரங்களுடன் நியூ யோர்க் வீதிகளில் பவனிவரும்போது தாய்லாந்தைப் பார்த்துவிட்டு சரத் போன்சேகா ஒரு கணம் தாய்லாந்து இராணுவ அதிகாரியாகத் தன்னை வரித்துக் கொண்டுவிட்டார். பேச்சுவார்த்தை என்று அறிவித்த பின்னர்தான் புலிகள் புதிய நிபந்தனைகளை அள்ளி வீசுவார்கள் என்று குற்றம் சாட்டிய அரசு இப்போது புலிகள் பேசாமல் இருக்கத் தாமே நிபந்தனைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.

மஹிந்த தன்னை ஒரு இஸ்ரேலிய பிரதமராகவும் இலங்கை இராணுவம் தன்னை இஸ்ரேலிய இராணுவமெனவும் தற்செயலாகச் சிந்திக்க ஆரம்பித்து சம்பூர் வெற்றிக்குப் பின்னர் புலிகளை பலஸ்தீனியர்களாகவே உருவகித்துவிட்டார். தென் லெபனானில் மக்கள் படுகொலை செய்யப்படும்போது எப்படிச் சர்வதேச சமூகமும் குறிப்பாக அயல் நாடுகளிலுள்ள அண்ணன் தம்பிகளும் வாளாவிருந்தார்களோ அப்படியே தான் ஈழத்தமிழரது நிலையும் இருக்கக்கூடும் என்று மஹிந்த போட்ட கணக்கு சரியாவே வந்துவிட்டது. எனவே, தான் இஸ்ரேலிய பிரதமர் எஹ_ட் ஒல்மேர்ட் இனது ஒரு ‘குளோன்’ என்றே உள்ளுர நம்ப ஆரம்பித்துவிட்டார். தனது ‘இஸ்ரேலிய பாதுகாப்பு படை’ யான இராணுவத்தினால் எதையுமே சாதிக்க முடியும் என்று மிகவும் திடமாக நம்ப ஆரம்பித்து விட்டார்.

இதில் அவர் வெற்றி பெற்றுமிருக்கிறார். ‘விடுதலைப் புலிகளைச் சம்பூரிலிருந்து ஓட ஓடக் கலைத்துவிட்டோம்… ஏனைய அரங்குகளிலும் வெளுத்து வாங்குகிறோம’; என்று தென்னிலங்கையில் அரசு செய்யும் பரப்புரைகளை ஐக்கிய தேசீயக் கட்சியே நம்பிக்கொண்டு நிபந்தனையற்ற கட்டியணைப்பில் ஈடுபட்டிருக்கிறது என்றால் சாதாரண மக்கள் எந்தளவுக்கு? புலிகள் பலவீனப்பட்டிருக்கிறார்கள் என்று தென்னிலங்கை மிகவும் உறுதியாக நம்புகிறது. தென்னிலங்கையில் ஒரு காலத்தில் ‘கொட்டியா’ விற்கு இருந்த பயம் இப்போது அகல ஆரம்பித்திருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் நாமே என்று ஜே.வி.பி. யினர் பட்டி தொட்டியெங்கும் பரப்புரை செய்ய ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தியதே நாங்கள்தான் என்று அவர்களும் உறுதியாக நம்புகிறார்கள். தென்னிலங்கையிலுள்ள பெரும்பான்மையான தொழிற் சங்கங்கள் - குறிப்பாக மாணவர் அமைப்புகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்கள், பிக்குகள் சங்கம்- என்று எல்லாமே வரிந்து கட்டிக்கொண்டு ஜே.வி.பி. யின் பின்னால் அணி திரள்கிறார்கள். இராணுவத்தில் கணிசமான பங்கினர் ஜே.வி.பி. யினரின் கட்டளைக்குள் பணியாற்றுபவர்கள் என்ற வதந்தியை உண்மையாக்குமாற்போல் சமீபத்தில் சரத் பொன்சேகாவுடன் அவர்கள் காட்டும் உறவுகள் சமிக்ஞைகளைத் தந்தவண்ணமிருக்கின்றன. தென்னிலங்கையில் மட்டுமல்லாது மலையகத்திலும் ஜே.வி.பி. யினருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதனால் ஜே.வி.பி. எதிர்காலத்தில் தனியாகவே ஆட்சியமைக்கக் கூடிய பலமான கட்சியாக வளரும் என்று ஆரூடம் கூறப்படுகிறது. இது ஐ.தே.க. மற்றும் சு.கட்சிகளுக்கு அதி பீதியைக் கொடுத்திருக்கிறது.

இப்பின்னணியில் ஐக்கிய தேசீயக் கட்சி- சுதந்திரக் கட்சி இணைந்து ஒரு தேசீய அரசை அமைக்குமானால் அது இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொண்டுவர உதவுமென்று எதிர்பார்க்கப்பட்டாலும் இவ்வுறவு ஜே.வி.பி யினiரு ஓரம் கட்டிவிட்டு ஆட்சியைக் கூட்டாக அமைப்பதே பிரதான நோக்கமாகவிருக்கும். இந்நிலையில் இராணுவச் சதியொன்றின் மூலம் ஆட்சியைக் கவிழ்த்து விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம் என்ற கோஷத்தோடு ஜே.வி.பி யினர் தம்மையே ஆட்சியில் அமர்த்துவதாகவே முடியும்.

ஜே.வி.பி. யினர் இதற்கான திட்டமிடலை வெகு கச்சிதமாகவே கையாண்டு கொண்டு வருகிறார்கள். நாட்டில் இனங்களுக்கிடையேயான கலவரங்களை உருவாக்குவதும் விடுதலைப் புலிகளுக்கெதிரான ‘கொரில்லாப் போர்களை’ உதிரி இராணுவத்தினரைக் கொண்டே நடாத்தி வருவதும் பலரும் அறிந்த விடயம். நாட்டில் அமைதிப் பேச்சு பற்றிய பேச்சுக்கள் எடுக்கப்படும் போதெல்லாம் குழப்பங்களை உருவாக்கி புலிகளின் மீது பழிகளைச் சுமத்துவதன் மூலம் இனங்களுக்கிடையேயான மோதல்களை ஆரம்பிப்பதும் இவர்களது நோக்கம். நாடு அல்லோல கல்லோலப்படும்போதுதான் இராணுவ ஆட்சிக்கான களம் பதமாகவிருக்கும்.

தென்னிலங்கையில் ஐ.தே.க. – சு.க. கூட்டின் பயனால் ஒரு தேசீய அரசாங்கம் உருவாகி அதனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படப் போகிறதென்ற செய்தியே நாட்டில் குழப்ப நிலை உருவாக ஆரம்பமாகவிருக்கும். விடுதலைப் புலிகளைப் பங்காளிகளாக்கிய எந்தத் தீர்வையும் Nஐ. வி. பி அங்கீகரிக்காது. எனவே போர் தொடரும்.

தேசீய அரசின் தீர்வு சமஷ்டி முறையில் இல்லாத வரைக்கும் எத் தீர்வையும் தமிழர் மீது திணிக்க சர்வ தேசங்களினால் முடியாது. எனவே தேசீய அரசுக்கும் ஜே.வி.பி யினருக்குமிடையேயான போர் ஆரம்பிப்பது தவிர்க்க முடியாதது.

இத்தருணத்தில் விடுதலைப் புலிகளின் ஒத்திகை பூரணமாகவிருக்கும் என்றே நம்பலாம். தேசீய அரசினால் சமஷ்டித் தீர்வு முன்வைக்கப்படாவிட்டால் விடுதலைப் புலி;கள் தமிழீழப் பிரகடனத்தைச் செய்ய இதுவே தருணமாகவிருக்கும்.

இதையெல்லாம் தவிர்த்து சுமுகமான தீர்வொன்றைப் பெற்றுத்தரும் வல்லமை இன்னும் இந்தியாவுக்கு மட்டுமேயுண்டு. தன் அயலுக்குள் இவ்வளவும் நடைபெற வாளாவிருந்து வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தால் இப் பிராந்திய சதுரங்கத்தில் தோல்வி இந்தியாவிற்கு – வெற்றி ஜே.வி.பி யிற்கு என்பதைத் தவிர்க்க முடியாது போய்விடும்.

September 30,2006

ஞாயிறு, 6 ஜனவரி, 2008

பின் புத்தி

‘பின்’ புத்தி 

 என் மனைவிக்கு அரவிந்தனைப் பிடிக்காது. அவன் நல்லதொரு எழுத்தாளன், பேச்சாளன், மிகவும் அடக்கமான சுபாவமுள்ளவன். சில, விருப்பமானால் ‘பல’ என்றும் மாற்றிக் கொள்ளலாம், இலக்கியவாதிகளைப் போலல்லாது வீட்டுக்குள்ளும் வெளியேயும் அவன் ஒருவனேதான். அவனுடைய பிரச்சினையே அங்கேதான் ஆரம்பிக்கிறது. 

இதுவரையில் சுமார் ஐநூறு கவிதைகள், எண்பது சிறுகதைகள், அரை குறையாக ஒரு நாவல் என்று எழுதியிருப்பதாகச் சொன்னான். அன்றிரவு அதை என் மனைவிக்குச் சொன்னபோது அவனுக்குக் கொஞ்சம் மது வெறியாக இருந்திருக்கலாமென்று அவள் நம்ப மறுத்து விட்டாள். 

வெள்ளி இரவுகளில் இலக்கிய அல்லது அரசியல் கூட்டங்கள் எதுவுமில்லாதபோது அவனுக்கு என் வீட்டிலேயே கூட்டம். எந்த நேரத்தில் வந்தாலும் என் வீட்டில் வேண்டிய அளவு, வேண்டிய ரகத்தில் மது இருக்கும். 

 நான் ஒரு வியாபாரி. வியாபாரிகளோடு சேர்ந்து மது அருந்தும் போது அங்கும் வியாபாரமே பேசு பொருளாகவிருக்கும். அதனால் வார இறுதி மாலை வேளைகளில் எனது வீட்டில் இலக்கிய நண்பர்களே கூடுவார்கள். படித்தவர்கள், பட்டதாரிகள், கலாநிதிகள் என்று பலர் என் வீட்டுக்கு வந்து போவது ஒரு வகையில் பெருமைதான். 

நல்ல பதவியிலிருக்கும் எழுத்தாளர்களை மனைவி முக மலர்ந்து உபசரிப்பாள். அதனால் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும்போது அவர்களுடைய பட்டம் பதவிகளை நான் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். அதன் பிறகுதான் எப்படியான சமையல் செய்யவேண்டுமென்று அவள் தீர்மானிப்பாள். 

அரவிந்தன் வரும்போது சிலவேளைகளில் எனக்கும் சாப்பாடு கிடைப்பதில்லை. இந்த வருடம் எப்படியாவது தனது சிறுகதைத் தொகுதியைப் பதிப்பித்துவிடவேண்டுமென்று அரவிந்தன் சொன்னான். சென்னையில் தனக்குத் தெரிந்த ஒரு இலக்கிய நண்பர் மூலம் ஒரு பதிப்பகத்தையும் ஒழுங்குசெய்து விட்டான். அதற்குரிய செலவை நான் ஆரம்பத்தில் கொடுப்பதெனவும் சுமார் எண்ணூறு புத்தகங்களை தமிழ்நாடு அரசு வாங்குவதுபோக மீதியை கனடாவிலும் இதர புலம் பெயர்ந்த நாடுகளிலும் வெளியீடு செய்து பெற்று விடலாமென்றும் அவன் நம்பியிருந்தான். 

மனைவியின் கண்களில் பல தடவைகள் மண் தூவி ‘நான் புதிதாக ஆரம்பித்திருக்கும்’ புத்தக இறக்குமதி வியாபாரத்தின் மூலம் அரவிந்தனுக்கு ஒரு வழி பிறக்கச் செய்யலாமென்பது என் திட்டம். ஒரு இரவு சந்தோசமாக இருக்கலாமென்ற பெருங்கனவோடு கைகளைச் சொடுக்கி பொய்க் கொட்டாவியொன்றின் சத்தத்தினால் மனைவியை அழைத்தபோதுதான் என் கனவு அன்றிரவு கைகூடாதென்பது தெரிந்தது. 

அரவிந்தன் தொலைபேசியில் அழைத்ததாகவும் சென்னையிலிருந்து மேலும் ஒரு லட்சம் ரூபாய்கள் அனுப்பாவிட்டால் புத்தகம் அச்சுக்கே போகாது என்றும் என்னிடம் சொல்லும்படி அரவிந்தன் சொல்லியிருந்தானாம். 

நான் நித்திரைக்குப் போய்விட்டேன் என்று மனைவி பொய் சொன்னதன் விளைவு அரவிந்தன் என்னை வசமாக மாட்டிவிட்டதுதான். “உங்களது காசில அவர் புத்தகம் போடுகிறாரா?” என் மனைவி தான் விரும்பியபோது லட்சுமியாகவோ அல்லது துர்க்கா தேவியாகவோ தன்னைத் தானே மாற்றிவிடக் கூடியவள். அன்றிரவு ‘லட்சுமி’ கடாட்சம் எனக்கிருக்கவில்லை. ‘எடி இல்லையடியம்மா. என்னுடைய புதுக் கொம்பனியின்ர கணக்கில காசு மாற்றித் தரலாமா என்று அரவிந்தன் கேட்டிருப்பான்’ நீ பேசாமப் படு’. 

அன்றிரவு அவள் லட்சுமியாக இருந்தாளா, துர்க்காவாக இருந்தாளா எனக்குத் தெரியாது. பார்க்கவும் விருப்பமில்லை. இரண்டாயிரம் கனடிய டாலர்களில் செய்து கொண்ட புத்தகப் பதிப்பு ஒப்பந்தம் எண்ணாயிரம் டாலர்களில் முடிந்தது. பதிப்பக முகவர் ஒரு கில்லாடியா அல்லது நான் ஒரு முட்டாளா என்று விவாதிக்கக் காலமில்லை. இருநூறு புத்தகங்களை அவசரம் அவசரமாக அதிக பணம் கொடுத்து இறக்கி சுங்கக் கிட்டங்கியில் மூன்று மாசம் கிடந்து வெளீயீட்டு விழா மண்டபத்தில் நாய்க் காதுகள் போல் மட்டைகளோடு வீற்றிருந்த புத்தகங்களைக் கண்டபோது போர்த் தேங்காய்தான் ஞாபகத்தில் வந்தது. 

 புத்தக வெளியீட்டு விழாவிற்கு முன்னர் இரண்டு வாரங்களாக அரவிந்தன் வேலையில் விடுமுறை பெற்றிருந்தான். அவனது தொலைபேசி இலக்கப் பதிவுப் புத்தகம் இரண்டு வாரங்களாக விடுமுறையின்றித் தவித்தது. ஆனாலும் அரவிந்தனைவிட அது அழகாகவிருந்தது. 

தனது இலக்கிய நண்பர்கள், அரசியல் நண்பர்கள், உறவினர்கள் என்று ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. இது அவனது முதலாவது புத்தகம். நெடு நாளைய உழைப்பு. நிறையச் சனம் வரவேண்டுமென்று அவன் இரவு பகலாக உழைத்தான். இலவசப் பத்திரிகைகள் கட்டணத்துக்கும் காசுக்கு விற்பனையாகும் பத்திரிகைகள் இலவசமாகவும் விளம்பரம் செய்துதவியதாகச் சொன்னபோது அரவிந்தன் வழமையாக அழுவதைவிட மிகவும் உருக்கமாக அழுதான். தான் வேலைக்கு லீவு எடுத்தது மட்டுமல்ல மனைவியையும் மூன்று நாட்கள் லீவு போட வைத்து பலகாரமும் கேக்கும் செய்ய வைத்தான். 

சனிக்கிழமையாதலால் நல்ல சனம் வரும் என்பதால் முன்னூறு பைகளில் பலகாரமும் சுடச்சுட காப்பியும் மண்டப வாயிலை வரவேற்றன. சிறியதொரு கலை நிகழ்ச்சியைத்தர ஒத்துக் கொண்டிருந்த டான்ஸ் ரீச்சர் திடீரென்று காலை வாரிவிட்டார் என்று அரவிந்தன் குறைப்பட்டுக் கொண்டான். யாரோ ஒரு தனவந்தரின் மகனின் பிறந்த நாளுக்கு ‘புரோகிராம்’ செய்வதற்காக தனது ‘நிகழ்ச்சியைக்’ கான்சல் பண்ணிவிட்டாராம் அவர். 

 ஆறு மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிகழ்ச்சி பேச்சாளப் பெருமக்களின் எரிச்சலைத் தாங்க முடியாத தலைவரால் அரவிந்தனின் இருபது ‘இலக்கியக் குடும்பத்தினரோடு’ ஏழு மணிக்கு இரண்டு நிமிட மௌனத்தோடு ஆரம்பித்தது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல மூன்று நிமிடங்களும் சில முனகல்களும் கழிந்த பின்னர் ஒரு செல் தொலைபேசியின் தொல்லையால் தூக்கம் கலைந்தவர்போல் தலை குனிந்த தலைவர் இரண்டு நிமிட மௌன அஞ்சலியை முடித்து வைத்தார். 

 அரவிந்தனுக்கு திரும்பிய பக்கமெல்லாம் தன்னை ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்யும் ‘செந்தேள்’ நின்று கொண்டு நக்கலாகச் சிரிப்பதாகவே தெரிந்தது. 

சண்முகநாதன் என்ற ‘செந்தேள்’ எழுத ஆரம்பித்து இரண்டே வருடங்கள். ஆனால் இதுவரை அவன் மூன்று புத்தகங்களை வெளியிட்டு விட்டான். எல்லாமே கட்சிப் பிரசாரப் பதிப்புகள்தாம். அவன் கடைசியாக வெளியிட்ட ‘மாக்சிசம்-லெனினிசம்: மீணடெழும் காலம்’ என்ற புத்தகமும் இதே மண்டபத்தில்தான் வெளியிடப்பட்டது. நெரிந்து கொள்ளாது சனம் உள்ளே வெளியே போக முடியாதிருந்தது. அப்படியிருக்கும்போது தனது நூல் வெளியீட்டுக்கு ஏன் இந்தக்கதி? விரத காலங்கள், கல்யாண முகூர்த்த காலங்கள், தமிழ்த் தேசீய எழுச்சி நாட்கள் என்று எல்லாமே தவிர்த்துத்தான் இந்த நாளையே தெரிவு செய்தான். 

 அவசரம் அவசரமாகத் தலைவரிடம் சென்று அவர் காதுக்குள் ஏதோ சொல்லக் கொள்வதற்கு முன்னர் தலைவர் மைக்கிரோபோனை விரல் நுனியாற் தட்டிக் குரலையும் செருமிக் கொண்டார். 

இருந்தாலும் அரவிந்தன் தன் கடமையில் தவறவில்லை. தலைவர் தலையைச் சுழற்றிக் கொண்டார். அவர் அரவிந்தனுடன் உடன் பட்டாரா அல்லது முரண்பட்டாரா என்பது யாருக்குமே தெரியாது. இருப்பினும் எல்லோரும் இருக்கைகளிலிருந்து எழும்பித் தாய் நாட்டு, வதி நாட்டுத் தேசீய கீதங்கள் இசைப்பதற்கு மனமிசைத்தனர். 

ஒருவாறு மேலும் பத்து நிமிடங்களை நகர்த்திக் கொண்டது பற்றி அரவிந்தனுக்கு உள்ளுரப் பெருமையாகவிருந்தது. இறுதிப் பேச்சாளர் பேசும்போது மண்டபத்துக்கு உள்ளே இருந்தவர்களைவிட வெளியே நின்றவர்களே அதிகம். 

பேச்சாளரோ அவையறிந்து பேசவே மாட்டேன் என்று அடம் பிடித்தார். தலைவரின் துண்டையே உதாசீனம் செய்துவிட்டு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எவர் எவரையெல்லாம் திட்ட வேண்டுமோ எல்லோரையும் திட்டித் தீர்த்துவிட்டு ஓரிரு கைதட்டலுடன் வந்தமர்ந்தார் பேச்சாளர். 

அரவிந்தனின் கண்பார்வையை உத்தேசமாகக் கொண்டு புத்தக வெளியீட்டை ஆரம்பித்தார் தலைவர். பலரின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்ட ‘பிரமுகர்களின்’ லிஸ்டை வைத்துத் தலைவர் பெயர்களை அழைக்க ஆரம்பித்ததும் அரவிந்தன் சபையையே பார்த்துக் கொண்டிருந்தான். சுமார் ஐம்பது பேர் கொண்ட லிஸ்டில் ஐந்து பேர்கூடச் சபையில் சமூகம் தரவில்லை. 

அரவிந்தனுக்கு அழுகை அழுகையாக வந்தது. சபையிலிருந்த ஆனால் லிஸ்டில் இல்லாத சாதாரணங்களைத் திடீர் பிரமுகர்களாக்கியவுடன் பலரும் அரவிந்தனைத் திட்டிக் கொண்டே என்வலப்புகளுக்காக ஓடிக் கொண்டிருந்தார்கள். 

நிகழ்ச்சி தொடங்கிய நேரத்திலிருந்தே முகத்தைச் சுழித்துக் கொண்டிருந்த என் மனைவியே என் விலா எலும்பில் இடித்துச் சிரித்துக் கொண்டாள். 

ஒருவாறு வெளியீட்டு விழா முடிந்து மண்டபத்தை விட்டு வெளியே வரும்போது பலகாரப் பைகள் இருந்த பெட்டி வெறுமையாகவிருந்தது. சுமார் முந்நூறு பைகள். விழாவிற்கு வந்தவர்கள் ஆளுக்கு நான்கு பைகள் வீதம் சாப்பிடடிருப்பார்கள் போலிருக்கிறது. 

அரவிந்தன் தன் கையில் தூங்கிய பையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தான். சுமார் ஐம்பது புத்தகங்கள் விற்ற பண நோட்டுக்கள் என்வலப்புகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்தன. 

அரவிந்தனின் மனைவியும் பிள்ளைகளுமாக மீதியிருந்த புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வாகனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். 
தொண்டர்களை விழா ஆரம்பித்த பின்னர் மண்டபத்தில் காணவேயில்லை. 

 அன்றிரவு அரவிந்தன் என் வீட்டுக்கு வந்தான். மிகவும் வாடிப் போயிருந்தான். மொத்தம் எழுநூறு டாலர்களும் எட்டு வெறுமையான என்வலப்புகளும் கிடைத்ததாகக் கூறினான். ஒவ்வொரு சொல்லுக்கிடையேயும் ஒரு மிடறு குடித்துக் கொண்டான். 

என் மனைவி குறிப்பறிந்திருப்பாள் போலிருக்கிறது, கோழிப் பொரியலுடன் வந்தாள். அரவிந்தன் அன்று முதன் முறையாகச் சிரித்தான்.

‘என்ர மனிசி சுகமில்லாமற் கிடக்கிறாள்’ அரவிந்தன் ஆரம்பித்தான்.

 ‘என்ன நான்காவதுக்குச் சரிப்பண்ணிப் போட்டாய் போலிருக்குது’

 ‘இல்லை. இரண்டு மூன்று நாளாய்ப் புத்தக வெளியீட்டு வேலையோட சரியாகக் கஷ்டப்பட்டுப் போயிட்டாள். காய்ச்சலெண்டு படுத்திருக்கிறாள்’. 

‘அப்போ ஏன் நீ அவளைத் தனிய விட்டுப்போட்டு இங்க வந்தனி?’ 

‘புத்தக வெளியீட்டில சேர்ந்த எழுநூறு டாலர்களையும் உடனே உங்களிட்டக் குடுத்துவிட்டு வரும்படி அவள்தான் அனுப்பினாள்’. அரவிந்தன் மீண்டும் அழத்தொடங்கி விட்டான்.

 ‘அரவிந்தன், சும்மா விசர் வேலை பார்க்க வேண்டாம். காசை எடுத்துக் கொண்டு போ. எனக்கு வேணாம். நீ வசதியாய் இருக்கும்போது தா.”

 அரவிந்தன் மேலும் கொஞ்ச விஸ்கியைக் கிண்ணத்துள் வார்த்தான். கதவு திறந்தது மனைவி மீண்டும் ஒரு பாத்திரத்தில் அவித்த முட்டையை நான்காகப் பிளந்து உப்பும் மிளகுத்தூளும் தூவி அழகாக அடுக்கிக் கொண்டு வந்திருந்தாள். எனக்கே ஆச்சரியமாகவிருந்தது. அரவிந்தனின் மூக்கின் நுனியில் திரவம் விடைபெறத் தயாராகிக் கொண்டிருந்தது. 

மனைவி கிளீனெக்ஸை நீட்டியபடியே எதிரிலிருந்த ஆசனத்தில் அமர்ந்தாள்.

 ‘அரவிந்தன். சொல்கிறேனெண்டு கோபிக்கக் கூடாது. நீங்கள் இந்த எழுதிற வேலையை முதலில் விடுங்கோ. நீங்க கனடாவுக்கு வந்து இருபத்தி ஐஞ்சு வருஷம் முடிஞ்சிட்டுது. உங்களுக்குப் பிறகு வந்த ஆட்கள் பெரிய மாளிகைகளும் வாகனங்களும் வைத்திருக்கினம். நீங்க மூண்டு பிள்ளையளோட இன்னும் அரச உதவிக் கட்டிடத்தில சீவிக்கிறீங்க. மூண்டு பொம்பிளைப் பிள்ளையளும் வயசுக்கு வந்ததுகள். அதுகள் போடுறதுக்கு நல்ல உடுப்புகளில்லை. பள்ளிக்கூடத்திலை மற்றப் பிள்ளைகள் பிறாணட் நேம் உடுப்புகளோட வருகிறபோது உங்கட பிள்ளையள் ‘குட் வில்’ உடுப்புகளோட போக வேண்டியிருக்கு. நீங்க வேண்டுமென்றால் எழுத்தில சமத்துவத்தைக் கடைப்பிடியுங்கோ நிஜமான வாழ்வில அது முடியாது. உங்களின்ர தத்துவங்களை மனிசி பிள்ளையளில திணிக்காதீங்க. பிள்ளையள் வளர்ந்து அறிவு தெளியிறபோது உங்கள மாதிரி அவங்களும் தங்களுக்குச் சரியெண்டு தெரியிற தத்துவத்தைக் கடைப்பிடிப்பாங்க. இருபத்தைந்து வருஷமா என்னத்தைச் சாதிச்சிருக்கிறீங்க? நீங்க வாழ்க்கையில ஒரு தோத்துப்போன மனிசன். உங்களை நம்பியிருக்கிற நாலு சீவன்களுக்கு நல்ல வாழ்க்கையைக் குடுக்க முடியாத தோத்துப்போன மனிசன். எழுதிறது பொழுது போக்குக்கு மட்டுமே சரி. அப்பிடித்தான் அநேகமாக எல்லா எழுத்தாளரும் செய்யிறாங்க. ஆனா நீங்க எழுத்து மட்டும்தான் வாழ்க்கை எண்டு நினைக்கிறீங்க. போங்க எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு நல்ல வேலை ஒண்டை எடுத்துக் கொண்டு காசைச் சேமியுங்க. இஞ்ச உங்களுக்கு முன்னால இருக்கிறவரும் முந்தி ஒரு எழுத்தாளர்தான். அவரை இப்ப நான் வாசிக்கவே விடுகிறதில்லை. மனிசன் புத்தகத்தைக் கண்டா வேலைக்கே போகாது. எழுத்தும் ஒரு வகையான அபின் தான். உங்கட மனிசி பிள்ளைகளோட நான் அடிக்கடி கதைக்கிறனான். அதுகளின்ர கனவுகளை நீங்க முடக்கி வைத்திருக்கிறீங்க.’ 

அரவிந்தன் முகத்தை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு சத்தம் போட்டு அழுதான். என் மனைவி விடுகிறதாயில்லை. 

‘என்ர மனிசன் எண்ணாயிரம் டாலர் மட்டில செலவழிச்சு உங்கட புத்தகம் போட்டவர் எண்டு எனக்குத் தெரியும். அது ஒரு பெரிய தோல்வியாகவே முடியுமெண்டும் எனக்குத் தெரியும். புத்தகம் எழுதிப் பணக்காரரான ஒருவரும் இல்லை. ஆனா ஏழைகளானவர் நிறைய இருக்கினம். உங்கட ஆசையை வீணடிக்கக் கூடாது. ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கட்டுமே எண்டுதான் நானும் ஒண்டும் சொல்லவில்லை.’ 

அரவிந்தன் பாவம் குனிந்த தலை நிமிராது எதையுமே பேசாது இருந்தான். காசைக் கடன் பட்டு விட்டோமே இதையெல்லாம் கேட்கவேண்டும் என்ற மன நிலையில் இருந்திருப்பானோ என்று என் மனம் குறு குறுத்தது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்று என் மனைவி போட்டு வாங்கு வாங்கென்று வாங்கி விட்டாள். 

 ‘சரி போதும். எங்களுக்குச் சாப்பாடு போடு.’ இருவரையும் சமாளிக்க நான் முயன்று பார்த்தேன் திடீரென்று என் மனைவி அழ ஆரம்பித்தாள். குலுங்கிக் குலுங்கி அழுதாள். அரவிந்தன் கொண்டு வந்த பணத்தை எடுத்து அவன் கைகளில் திணித்தாள். 

‘ஈகோ இல்லாத ஆம்பிளையளை நான் மதிக்கிறதில்லை. இப்ப உங்களின்ர ஈகோவைச் சீரழிக்கிற மாதிரி நான் பேசிப்போட்டன். உங்கட மனிசி பிள்ளையள் பெருமையோட ‘இவர் எங்கட அப்பா’ எண்டு சொல்லுறபோதுதான் உங்கட ஈகோ உங்கள மனிசனாக ஆக்கும். அதுகளின்ர சொல்லை நீங்க கேட்காமல் உலகத்துக்கு எழுதி ஒண்டையும் கிழிக்கப் போறதில்லை. இவ்வளவும் சொன்னதுக்காக நான் உங்களிட்ட மன்னிப்பும் கேட்கப் போறதில்லை. ஏனெண்டா இதுவரையில என்ர குரலுக்கால வந்தது உங்கட மனிசி பிள்ளையளின்ர குரல தான்;. அவங்களுக்கு நீங்க குடுக்க மறுத்த குரல்’ 

 அரவிந்தன் முகத்தைத் தூக்கி என் மனைவியைப் பார்த்துப் புன்னகை செய்தான். காசை எடுத்துப் தன் சட்டைப் பையினுள் திணித்தான். 

 ‘அக்கா சாப்பாட்டைப் போடுங்கோ. இனி நான் எழுதிறதெண்டா அது நீங்க கேட்கிறபோதுதான் நடக்கும்’ 

அரவிந்தனின் கதையை நானே எழுத ஆரம்பித்துவிடுவேனோ என்ற பயத்தை நிறுத்த எனக்கு இப்போ அதிகம் விஸ்கி தேவைப்பட்டது. என் மனைவியின் ‘பின்’; புத்தியை நினைத்துப் பெருமைப்பட்டேன். அரவிந்தனுடைய இதயத்தைக் குத்திக் குத்தித் துளைத்து விட்டாளே! தை 6, 2008