ஞாயிறு, 4 நவம்பர், 2007

Why?

Why ?


Why do we press harder on a remote control when we know the batteries are getting dead?

Why do banks charge a fee on " insufficient funds" when they know there is not enough money?

Why does someone believe you when you say there are four billion stars, but check when you say the paint is wet?

Why doesn't glue stick to the bottle?

Why do they use sterilized needles for death by lethal injection?

Why doesn't Tarzan have a beard?

Why does Superman stop bullets with his chest, but ducks when you throw a revolver at him?

Why do Kamikaze pilots wear helmets?

Whose idea was it to put an "S" in the word "lisp"?

If people evolved from apes, why are there still apes?

Why is it that no matter what color bubble bath you use the bubbles are always white?

Is there ever a day that mattresses are not on sale?

Why do people constantly return to the refrigerator with hopes that something new to eat will have materialized?

Why do people keep running over a string a dozen times with their vacuum cleaner, then reach down, pick it up, examine it, then put it down to give the vacuum one more chance?

Why is it that no plastic bag will open from the end on your first try?

How do those dead bugs get into those enclosed light fixtures?

When we are in the supermarket and someone rams our ankle with a shopping cart then apologizes for doing so, why do we say, " It's all right?" Well, it isn't all right, so why don't we say, " That hurt, you stupid idiot?"

Why is it that whenever you attempt to catch something that's falling off the table you always manage to knock something else over?

In winter why do we try to keep the house as warm as it was in summer when we complained about the heat?

How come you never hear father-in-law jokes ?

The statistics on sanity are that one out of every four persons is suffering from some sort of mental illness. Think of your three best friends -- if they're okay, then it's you.



Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

செவ்வாய், 9 அக்டோபர், 2007

Miss Me - But Let Me Go

When I come to the end of the road
And the sun has set for Me.
I want no rites in a gloom filled room
Why cry for a soul set free?

Miss Me a little - but not too long
And not with your head bowed low
Remember the love that we once shared.
Miss Me - but let me go.

For this is a journey that we all must take
And each must go alone.
It's all a part of the Master's Plan
A step on the road to home.

When you are lonely and sick at heart,
Go to the friends we know
And bury your sorrows in doing good deeds.
Miss Me - but let me go.

-Thanks to the unknown author of this beautiful poem

வெள்ளி, 5 அக்டோபர், 2007

சேதத்தின் குரல்

தெற்கிலிருந்தொரு சேதத்தின் குரல் ஒலிக்கவாரம்பித்திருக்கிறது- ரணிலின் தொண்டையிலிருந்து! ‘ஒற்றையாட்சியை’ மஹிந்தவின் கைகளிலிருந்து பிடுங்கியெடுத்து ஊரெல்லாம் கொண்டோடப் போகிறார்.; ‘கண்டி யாத்திரை’ போய் பண்டா- செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியக் காரணமாகவிருந்த ஜே.ஆரின் மருமகனிடமிருந்து இது எதிர்பார்க்கப்பட வேண்டியதே.
தமிழர்களின் வாழ்வையும் வளத்தையும் சேதப்படுத்தியே அரசியல் நடத்திவரும் இப்படியான குரல்கள் தென்னிலங்கையில் பல தடவைகள் ஒலித்திருக்கின்றன. தமிழர்கள் இதற்குப் பழக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பான்மையான சிங்கள மக்கள் அதையேதான் விரும்புகிறார்கள். அதுதான் ஜனநாயக மரபு , அதுவேதான் மக்கள் விருப்பு. போர் என்றால் போர், சமாதானமென்றாலும் போர் என்னும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது.
பதில்? தமிழ் மக்களும் விரைவில் தென்னிலங்கையின் சேதத்துக்காகக் குரல் கொடுக்கப் போகிறார்கள். அழிவு நிச்சயம். அம் மக்களின் ஜனநாயக விருப்பை மீறுவது அழகல்ல.
84 வீதமான தென்னிலங்கை மக்கள் புலிகளைத் தோற்கடித்தபின்னர்தான் அரசியல் தீர்வு காணப்படவேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். 70 வீதமான மக்கள் ‘புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பினால் அவர்களோடு பேசலாம்’ என்று கூறியிருக்கிறார்கள். மக்கள் முட்டாள்களா? அல்லது கருத்துக் கணிப்புக் கேள்விகளைத் தயாரித்தவர்கள் முட்டாள்களா? என்ற விவாதத்தில் இறங்கி நாமும் முட்டாள்களாகத் காட்டிக் கொள்ள வேண்டாம். இதுவரை உருப்படியான தீர்வுப் பொதியொன்றை முன்வைக்கத் தகுதியற்ற அரசியல்வாதிகளும் அவர்களை உருவேற்றும் மக்களும் ஒரே ரகத்தினரே. பஞ்சம் பட்டினியை நாடு எதிர்கொள்ளப் போகிறது, விலைவாசி, வரி உயர்வு என்று பல அச்சுறுத்தல்கள். இதற்கெல்லாம் காரணம் போர்தான் என்றெல்லாம் உணர்ந்து கொள்ளாது ‘புலிகளைத் தோற்கடிப்பதே’ மிக முக்கிய விடயமெனக் கருதும்போது போரினால் வரும் இரத்தக் களரிகளையும் ஏற்க அவர்கள் தயாராகவேயிருக்க வேண்டும்.
ஆட்சியைக் கைப்பற்ற அரசியல்வாதிகள் எதையுமே செய்வார்கள். ரணிலும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் நி;றுத்த உடன்படிக்கை செய்துகொண்டதிலிருந்து சமஷ்டி ஆட்சியை ஏற்றுக்கொண்டு தமிழர்களிடம் சோரம் போய்விட்டதற்காக சிங்கள தேசத்தின் எதிரியாக்கப்பட்ட ரணில் இப்பொழுது (குப்பை)அரசியலில் இறங்கியிருக்கிறார். ஜே.வி.பி. என்ற வைரஸ் சுதந்திரக் கடசியோடு சேர்ந்து இனவொழிப்பைத் தீவிரமாக்கியது. இப்போது அமிழப்போகும் கப்பலைக் கைவிட்டுவிட்டு இன.னொன்றுக்குத் தாவியிருக்கிறது அது. தனித்து ஆட்சியமைக்க முடியாது ஒட்டுண்ணி வாழ்க்கை வாழும் இக்கட்சி இருக்கும் வரை நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் விமோசனம் இல்லை.
புலிகளை முற்றாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று கோதபாய ராஜபக்ஷ பேசியிருக்கிறார். அது நாடு முழுவதுக்குமான பிரகடனம். அப்போது அருகிலிருந்த ‘சர்வ வல்லமை பொருந்திய’ கனம் ஜனாதிபதி அவர்கள் மறுப்புத் தெரிவிக்காமையால் அவரும் அப் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாகவே கருத வேண்டும். அதே வேளை போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்குக் காரணமான ஐ.தே.கட்சியும் தாம் ஆட்சிக்கு வந்தால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்வோமென்று அறிவித்திருக்கிறது. இதன் பின்னர் தமிழர் தரப்பு மட்டும் ஏன் இவ்வொப்பந்தத்தைக் கட்டிக்கொண்டழ வேண்:டும்?
கோதபாயவின் போர்ப்பிரகடனம் புலிகளுக்கு ஒரு வகையில் கிடைத்த அதிர்ஷ்டமென்றே கருத வேண்டும். சர்வதேசங்களின் வேண்டுகோளுக்கிணங்க புலிகள் பேசப் போனார்கள். ஒப்பந்தத்திற் கையெழுத்திட்டார்கள். அப்பொழுது அவர்களிடம் பலமிருந்தது. ஆனால் அதற்கு சர்வதேசங்களும் தென்னிலங்கை மக்களும் கொடுத்த வெகுமதி ஏமாற்றமே. தனிநாட்டுக் கோரிக்கையிலிருந்து இறங்கி சமஷடி ஆட்சியை ஏற்றுக்கொள்ளத் தயாராகவிருந்த புலிகளை வஞ்சித்ததில் தென்னிலங்கை மக்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. புலிகளை ஜனநாயகத்துக்குக் கொண்டுவர போர்தான் வழியென்று அவர்கள் நினைத்து அதன் விளைவாக தமிழினப்படுகொலைதான் எஞ்சுமானால் தமிழர்களின் துன்பங்களை அவர்கள் சுமக்கும் காலம் வந்துவிட்டதென்றே கருத வேண்டும்.
இதனால் தமிழர்களும் போரின்பநாதர்களாக மாறவேண்டுமானால் …ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முடிவொன்றிற்காக மக்கள் தம்மைத் தயார்படுத்திக்கொண்டு வருகிறார்கள். நாடு இரத்தக்களரி ஒன்றிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. சமாதானத்திற்காகக் குரல்கொடுக்க வேண்டிய மக்களிடமிருந்து உயிர்ச் சேதத்திற்கான குரல்களே உயர்ந்தெழுகின்றன.
உலகில் பல நெடுநாட் போராட்டங்கள் நிரந்தர ஓய்வெடுத்துக்கொண்டுவிட்டன. வட அயர்லாந்துப் போராட்டம், பாஸ்க் போராட்டம், பிலிப்பைன்ஸ் மின்டனோ தீவுப் போராட்டம், இந்தோனேசிய ஆச்சே மாகாணப் போராட்டம், நேபாள மாவோயிஸ்ட்டுகளின் போராட்டம் என்று பல மீசையையும் மண்ணையும் பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாது இரகசியமாக அலுவல்களை முடித்துக்கொண்டுவிட்டன. தரகர்கள் யார்? அவர்களுக்கு என்ன ஊதியம் கிடைத்தது? கையூட்டு (?) வாங்கியது யார்? கொடுத்தது யார்? யார் யார் எந்தெந்த ஓட்டல்களில் சந்தித்தார்கள்? என்ற எந்த விடயங்களிலும் மக்கள் அக்கறை கொள்ளவில்லை. அவர்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள். நீண்டநாளையக் களைப்பைப் கழைவதே அவர்களின் முதல் தேவை. ஆனால் நமது நாட்டிலோ அரைநூற்றாண்டுப் போராட்டம் இன்னும் பள்ளி கொள்ள மறுக்கிறது. அவமானம்!
இதுவரை காலமும் சிங்களத் தலைவர்களாலேயே ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. இனி வரப்போவது தமிழரிடமிருந்து வரட்டும்! போர் நிறுத்த ஒப்பந்தத்தை…
எழுமின்! கிழிமின்!!

திங்கள், 3 செப்டம்பர், 2007

தாய்லாந்து

சமீபத்தில் தாய்லாந்து போயிருந்தேன். இது இரண்டாவது தடவை எனினும் பல புதிய தரிசனங்கள் கிடைத்தன. 

 சில வேளைகளில் சில மக்களின் குணவியல்புகளைப் பொதுமைப்படுத்தும்போது குறும்பார்வைத் தன்மைகள் முகம் காட்டலாம். அதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்கமாட்டேன். மாற்றியல்புகளோடு அம் மக்கள் மீண்டும் தோற்றமளிக்கும் வரை. 

 தாய்லாந்தில் தென்னிந்திய, குறிப்பாகத் தமிழரின், வாழ்வியல், கலாச்சாரம், பண்பாடுகள் கலந்துறவாடுகின்றன. அது புத்த சமயத்தின் பாதிப்பாக இருக்கலாம் என்றால் அதே பழக்க வழக்கங்கள் ஏன் இலங்கையிற் காணப்படவில்லை? 

 பாங்கொக், சியங் மாய் போன்ற இடங்களில் மக்கள் பெரும்பாலும் மரியாதையாக நடந்து கொள்கிறார்கள். இரு கை கூப்பி, தலை வணங்கி வரவேற்கிறார்கள். இயற்கையாகவே அழகானவர்கள். அவர்களது தேசிய உடைகள் அழகானவை. இடுப்பிலிருந்து கணுக்கால் வரை பட்டுச் சேலையைச் சுற்றிக் கட்டி, முழுக் கை நீளச்சட்டையோடு குறுந் தாவணி போட்டுக் கொள்கிறார்கள். வேற்றின மக்களைத் துவேஷத்தோடு பார்த்ததாக நான் அறியவில்லை. 

 தெற்கில் ஹுவான் ஹி என்ற கடற் கரை சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப் பட்டிருக்கிறது. தாய்லாந்து மன்னரின் கோடை வாடி இங்குதானிருக்கிறது. 

தெற்கில் அரைக்கரைவாசி நமது திராவிடக் கலப்புடன் மக்களைக் கண்டேன். பாவம் தாய்லாந்துக்காரர். அவர்களது அழகெல்லாம் இங்கு இழக்கப்பட்டிருக்கிறது. 

காலை 10 மணி போல் ஒருவர் வெறியோடு தள்ளாடிக்கொண்டு வந்தார். அவர் நமது திராவிடக் கலப்பினர். கலாச்சாரத்தையும் விடாது வைத்திருக்கிறார். 

கை கூப்பித் தலை வணங்குதல் இங்கு காணப்படவில்லை. அழகான பெண்களையும் காண்பது அரிதாகவே இருந்தது. 

 தாய்லாந்து மேற்கு நாடுகள் போல் வறியவர்களுக்கு சமூக மானியம் கொடுக்கும் நாடல்ல. எல்லோரும் உழைத்துத்தான் வாழ வேண்டும். 

தெருவோரச் சாவடிகள் பட்டி தொட்டியெங்கும் இருக்கின்றன. பெரும்பாலும் பெண்கள், வயதானவர்கள் பண்டங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவை உணவுப் பண்டங்களாகவோ அல்லது கை வினைப் பொருட்களாகவோ தானிருக்கும். 

 தாய்லாந்து காலனித்துவப் பிடியில் அகப்படாத நாடு. இப்பொழுதும் பெயரளவில் மன்னராட்சி. அரச குடும்பத்தை மக்கள் தெய்வத்திற்கிணையாக மதிக்கிறார்கள். அரசர், அரசி, இளவரசிகளது பெரிய படங்கள் தெருச் சந்திகளெங்கும் வைக்கப்பட்டிருக்கின்றன. எங்களூர்களில் போல சினிமா நடிகர்களினதோ அல்லது அரசியல்வாதிகளினதோ படங்கள் எங்கும் காணப்படவில்லை. 

தாய்லாந்து மக்கள் சுய உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டுமென்ற விருப்பில் மஹாராணியார் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும்படி மக்களை ஊக்குவிக்கிறார். அதற்காக கைவினைப் பயிற்சிக்கூடங்களைக் கிராமங்கள்தோறும் அமைப்பித்து நிர்வகிக்கிறார். 

சூழற் பாதுகாப்பில் அரசர் அதிக அக்கறை காட்டுகிறார். தனது கல்வியறிவைப் பயன்படுத்தி இயற்கையான பசளை மற்றும் விவசாயப் பொருட்களைத் தயாரிக்க உதவுகிறார். 

 தாய்லாந்து பெரும்பாலும் சுற்றுலாத் துறையில் தன் வருமானத்தைப் பெற்றுக்கொள்கிறது. அதற்காக பழம்பெரும் ஆலயங்களையும் அரச மாளிகைகளையும் முன்நாள் அரண்மனைகளையும் பரிபாலித்து வருகிறது. இருப்பினும் ஆடை மற்றும் பாவனைப் பொருட்களின் உற்பத்தியிலும் கவனம் செலுத்துகிறது. 

 நகரங்களில் வாகன நெரிசல் அதிகம். மோப்பெட்டுகள் முதல் மினி பஸ்கள்வரை தனியார் வாகனங்களும் பேருந்து, தொடர்வண்டி போன்ற பொதுப் போகுவரத்து சாதனங்களும் சேவையில் உண்டு. டாக்சிகள் ஏராளம். கட்டணம் அதிகமில்லை. சென்ற வருடம் புதிய விமானத்தளமொன்றைப் பாவனையில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அழகான பிரமாண்டமான தளம். முகப்பில் (தளத்தினுள்ளே) அசுரரும் தேவரும் திருப்பாற்கடலைக் கடையும் காட்சியைச் சிற்பமாகச் செய்து வைத்ததிருக்கிறார்கள். சுமார் எழுபது அடிகள் இருக்கும். பொறாமைப்ப்டும்படியான - அழகான நாடு, அழகான மக்கள்.

புரிந்துணர்வைப் புரிந்துகொள்ளல்

புரிந்துணர்வைப் புரிந்து கொள்ளல்

சென்ற ‘வீடு’ இதழில் வெளியான கட்டுரை கொஞ்சம் பரபரப்பாகவிருந்ததென்று கேள்வி.

இதயங்களாற் சிந்திப்பதற்கும் மூளையாற் சிந்திப்பதற்குமிடையில் வித்தியாசமுண்டு என்பதை ஏற்றுக் கொள்பவர்களுக்கு அக் கட்டுரை ஆச்சரியத்தைத் தந்திருக்க முடியாது. அரசியல், மதம், காதல் இவற்றிலெல்லாம் மூளையை ஓய்வெடுத்துக் கொள்ளப் பழக்கப்பட்டிருப்பது துர்ப்பாக்கியமேதான்.

“If we embark on (these) romantic ideas to revive a mythical past of greatness and culture, we would be damned” என்று முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ அவர்கள் சமீபத்தில் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியொன்றிற் கூறியிருந்தார். இதயங்களினாற் சிந்திப்பவர்களுக்கு இடம் கொடுக்காது தனது நாட்டை அவர் உருவாக்கியமையே இன்று அங்கு மதம், மொழி ஆகியவற்றுக்கு அரசாசனம் வழங்கப்படாது ஆட்சி நிர்வாகம் ஒழுங்காகக நடைபெறுவதற்குக் காரணம்.

பிரச்சினைகளுக்கு போர் அல்லது வன்முறை மட்டுமே தீர்வாகும் என்பதில்லை. சிறிய பிணக்குகளைத் தீர்ப்பதற்காக பல மில்லியன் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதே வேளை அணுவாயுதப் போராக வெடிக்கவிருந்த பல பிணக்குகள் சில மனிதர்களின் சமயோசித உடன்படிக்கைகளினாற் தீர்க்கப்பட்டிருக்கின்றன. முதலாவதற்கு உதாரணம் சேர்பிய விடுதலைப் போராட்டம் பின்னர் ஆஸ்திரிய-ஹங்கேரிய போராக வெடித்து உலகப் போராக வெடித்தமை. இரண்டாவதற்கு உதாரணம் சோவியத் குடியரசின் வீழச்சி.

1917 அக்டோபர் புரட்சிக்குத் தேவையான ஆரம்ப பின்புலப் பண உதவியை அளித்தது மேற்கத்தய உலகப் பெரும் தனவந்தர்கள். அப்போது லியோன் ட்றொட்ஸ்கி நியூயோர்க்கிலிருந்து வெளிவந்த ‘த நியூ வேர்ல்ட்’ என்ற பத்திரிகையின் நிருபராகப் பணிபுரிந்தார். அமெரிக்க காங்கிரஸ் ஆவணங்களின்படி போல்சவிச் புரட்சிக்கு பண உதவி செய்த தனவந்தர்களில் றொத்ஷைல்ட், ஜேக்கப் ஷிவ், ஜோர்ஜ் வால்க்கர் போன்றவர்கள் அடங்குவர். இந்த வாக்கர் என்பவர் தற்போதய அமெரிக்க ஜனாதிபதி புஷ் இனது பாட்டனாராவார். அக்டோபர் புரட்சியின் பெறுபேறாக இழக்கப்பட்ட உயிர்களும் உடமைகளும் பல மில்லியன்கள். ‘மனித சமத்துவம்’ வேண்டி நடத்தப்பட்ட இப் புரட்சிக்கு கொடுக்கப்பட்ட விலை மனித உயிர்களே.

இதே போன்று இப் புரட்சியின் பெறு பேறாகிய சோவியத் குடியரசைக் ‘கத்தியின்றி இரத்தமன்றி’ முடித்து வைத்த பொறுப்பும் அமெரிக்காவையே சாரும். இதற்கு அவர்கள் பாவித்த முதன்மையான கருவி மதம். அப்போதய கத்தோலிக்க தந்தை பாப்பரசர் ஜோன் போல் மற்றும் அப்போதய அமெரிக்க ஜனாதிபதி றேகன் இருவரும் இதற்குப் பொறுப்புடையவர்கள். சோவியத் குடியரசின் உடைவால் அமெரிக்க வணிக நிறுவனங்களும் கத்தோலிக்க திருச்சபையும் லாபமடைந்தன. அதே வேளை பாரிய உயிர் உடமை இழப்புகள் ஏதுமின்றி இப் புரட்சி நடைபெற்றதால் மானிடம் நன்மை பெற்றது. அதற்குரிய பெருமையும் இவ்விருவரையுமே சாரும்.

எமது ஈழப் போராட்ட வரலாற்றில் மேற்கூறிய இரு முறைகளும் நடைமுறைப் படுத்தப்பட்டன. இதயங்களினாற் சிந்திக்கின்ற மக்களின் உணர்வுகளைத் திருப்திப்படுத்துவதற்காகப் பல ஆயிரம் உயிர்கள் காவுகொடுக்கப்பட்டிருக்கின்றன. தென்னிலங்கை இனக்கலவரங்கள், இந்தியாவின் தூண்டுதலாற் செய்யப்பட்டது என்று கருதப்படும் அனுராதபுரப் படுகொலைகள என்று பல மக்களின் உணர்வுகளைக் கிளறி விடவும், அதன்பால் உருவேற்றப்பட்ட உணர்வுகளுக்குத் தீனி போடவும் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு இவை செயலாற்றப்பட்டவை.

மாறாக, 1987 இல் நடைபெற்ற இந்திய இராணுவத்தினரோடு விடுதலைப் புலிகள் செய்த போரின்போது புலிகள் ஜனாதிபதி பிரேமதாசவுடன் ‘புரிந்துணர்வு’ உடன்படிக்கை செய்வது அவசியமாகவிருந்தது. இதே போன்ற உடன்படிக்கைகள் சிங்கள – தமிழ் அரசியலில் நடைபெறாத ஒன்றல்ல. சோழர்களுக்கெதிராக சிங்கள அரசுகள் சேரர்களுடனும் பாண்டியர்களுடனும் உடன்படிக்கை செய்து கொண்ட சம்பவங்களும் வரலாற்றிலுண்டு. அதே போன்று கருணாவின் கிளர்ச்சியைப் புலிகள் முறியடிக்க எடுத்த முயற்சியில் பாரிய உயிரிழப்பு ஏற்படாது வெற்றியை எட்டுவதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் பல தந்திரங்களைக் கையாண்டார். தனித்தனி முகாம்களிலிருந்த போராளிகளைத் தனிமைப்படுத்தி அவர்களோடு பேச்சுக் கொடுத்து உளவியல் ரீதியாக அவர்களை மாற்றி எதிர்ப்புகளையும் இழப்புக்களையும் தவிர்த்து வெற்றியை ஈட்டினார். முழு அளவிலான போராக அது நடைபெற்றிருப்பின் பல ஆயிரக் கணக்கான போராளிகளின் உயிர்கள் இழக்கப்பட்டிருக்கும்.

பிணக்குகள் போர் முனையில் மட்டும்தான் தீர்க்கப்பட வேண்டியதல்ல என்பதற்கு உலக வரலாற்றில் பல உதாரணங்களைக் காட்டலாம். அதே வேளை பல கொலைவெறி அபிலாட்சைகளைப் போர் மூலம் மட்டுமே நிறுத்தலாம் என்பதற்கும் உலகவரலாற்றில் பல தடயங்களுண்டு. பாபர் முதல் அவுரங்கஷீப் வரையிலான முகலாய சக்கரவர்த்திகளின் மத விஸ்தரிப்புப் போர்களைத் தடுப்பதில் இந்தியாவின் மராத்திய அரசர்களின் பங்கு முக்கியமானது. பிரித்தானியருக்கு எதிராகக் கிளர்ந்த சுபாஷ் சந்திரபோஸின் ஆயுதக் கிளர்ச்சி, தென் ஆபிரிக்க விடுதலைக்காக ஆயுதமேந்திய ஆபிரிக்க தேசீய காங்கிரஸின் ஆயுதக் கிளர்ச்சி, சிம்பாப்வே விடுதலையைப் பெற்றுத் தந்த முகாபே, நுக்கோமா போன்றவர்களின் ஆயுதப் போராட்டம் இவையெல்லாம் உலக வரலாற்றில் தேவை கருதி ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பவங்கள்.

இப்பின்னணியில் தற்போதய ஈழப்போராட்டத்தை அணுகிப் பார்த்ததால் எனக்குக் கிடைத்த ஒரு பார்வைக் கோணமே சென்ற இதழ்க் கட்டுரையான ‘பொங்கு சிங்களம்’.

போராட்டத்தில் கால நேரத் தேவைகளுக்கேற்ப உத்திகளும், வடிவங்களும், வியூகங்களும், தந்திரோபாயங்களும் மாறும் என்பதை எல்லோரும்ஏற்றுக் கொள்வார்கள். அதை மாற்றும் தகமையும், வல்லமையும் போராட்டத்தில் பங்கு கொள்ளும் இரு பகுதியினருக்குமே உண்டு. இதயங்களினாற் சிந்திக்கும் பெரும்பான்மையான பொது மக்களுக்கு உணர்வுகள் மட்டுமே வழிகாட்டும். இப்படியான மக்களின் உணர்வுகளை மதித்து அதற்காகவே போரை வழிநடத்தும் தேவை எல்லா சிங்கள அரசுகளுக்குமே இருந்துவந்திருக்கிறது. ஜனநாயக மரபிலான தேர்தல்களை நம்பி ஆட்சிநடத்தும் சிங்களக் கட்சிகளுக்கு அது தேவையானது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் போரில் தமிழர் தரப்பு வெல்லவேண்டும் என்ற உணர்வு வழிப்பட்ட வெளிப்பாடுகள் இருக்கும் என்பதையும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகள் வெளியேறியது பற்றிய பார்வையில் தமிழ் மக்களுக்கு இரண்டு கோணங்களுண்டு. கிழக்கு மாகாணத்துக்கு வெளியேயிருந்து பார்ப்பவர்களுக்கு புலிகள் வெளியேறியது தந்திரோபாயமாகப் பார்க்கப்படலாம். ஆனால் கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு தாங்கள் தமிழர் தரப்பினால் ‘கைவிடப்பட்ட’ மக்கள் என்ற எண்ணம் உருவாகும்போது தங்கள் காவலர்கள் தோற்றுப்போய் விட்டார்கள் என்ற நினைப்பு வருவதையும் தவறென்று கூறிவிட முடியாது.

இந்த நிலையில் கிழக்கு மாகாண மக்கள் (பாதிக்கப்பட்ட) இப்போதைக்குத் தங்களது உடனடியான அவலங்களுக்கான தீர்வொன்றையும் பின்னர் நீண்டகாலத்தை மையப்படுத்திய தீர்வொன்றையும் யார் பெற்றுத்தர வல்லவர்கள் என்பதைப்பொறுத்தே தமது ஆதரவை வெளிப்படுத்துவார்கள். சகல தமிழ் பேசும் மக்களும் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். கருணா குழுவினரின் பிரிவு ஈழவிடுதலைப் பேராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று உணர்ச்சிவசப்பட்டு நமக்கு நாமே சொல்லிக் கொண்டாலும் உண்மை அதுவல்ல. அதே வேளை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் வடக்கு கிழக்கு இணைந்த தீர்வொன்றை மட்டுமே ஏற்பதற்குத் தயாராகவுள்ளார் என்பதையும், வடக்கை மட்டும் தனது பரிபாலன பிரதேசமாக ஏற்றுக் கொண்டிருப்பின் இப்போது போர் நடைபெற்றுக்கொண்டிருக்காது என்பதையும் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வார்கள். வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழத்தின் தீர்வொன்றே தமிழ் மக்களின் அபிலாஷை என்பதை முன்வைத்தே அவர் அக்கோரிக்கையைத் தனது குறிக்கோளாக முன்வைக்கிறார். இவ்வேளை கிழக்கு மாகாணத்தில் புலிகளின் பிரசன்னம் இல்லாதுபோய் கருணா குழவினரின் ஆதிக்கம் பரவலாக்கப்பட்டு அதன் மூலம் அம் மக்களுக்குத் தேவையான உடனடி நிவாரணம் கிடைக்கப்பெறுமானால் அரசியல் ரீதியாகப் புலிகள் தோல்வியுற்றவர்களாகவே பார்க்கப்படுவார்கள்.

அதற்கு அடுத்த கட்டமாக கிழக்கு மாகாண மக்கள் தங்கள் நீண்டகால பிரதேச தனித்துவத்தைப் பற்றி யோசிக்கும் கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் அரசின் வலிந்த குடியேற்றங்கள் காரணமாக தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் இழக்கப்பட்ட நிலையில் அதைத் தடுத்து நிறுத்த கருணா குழுவினர் எதுவுமே செய்யாதிருக்கும் பட்சத்தில் புலிகளை நிராகரித்ததற்காக அவர்கள் வருத்தமடையவே செய்வார்கள். இதுவரை கால இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழரிடமிருந்து அபகரிக்கப்பட்ட பிரதேசங்கள் மீட்டெடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லாதபோது தற்போது இழக்கப்படும் பிரதேசங்களுக்கும் அதே கதிதான் என்பதையும் நாம் உணர வேண்டும். எனவே தற்போதிருக்கும் சூழ்நிலையில் பிரதேசங்களைப் பாதுகாப்பது தமழருக்கு மிக அவசியமானதொன்று. கிழக்கு மாகாணத்தில் அதைச் செய்யும் வல்லமை இப்போது விடுதலைப் புலிகளுக்கு உண்டா என்பது கேள்விக்குறி. கருணா குழுவினரால் அதைச் செய்யும் வல்லமை உண்டா என்றால் அதுவும் ஒரு மிகப் பெரியதொரு கேள்விக்குறி.

இந்நிலையில் தமிழ் மக்களது எதிர்பார்ப்பு எப்படியிருக்கும். புலிகள் தமிழர் பாரம்பரிய பிரதேசங்களை மீட்டெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பே பலரிடமும் இருக்கிறது. ஆனால் கிழக்கு மாகாண மக்களது உடனடியான மனநிலை அப்படியில்லை என்பதே எனது கருத்து. இதற்கான ஒரு தீர்வாக அம் மாகாண மக்களது பெரு விருப்பாக இருக்கக்கூடிய ஒன்று மீண்டும் தமிழர் தரப்பு ஒற்றுமையாக நின்று ஒரு நிரந்தரமான தீர்வைத் தமக்குப் பெற்றுத்தரவேண்டும் என்பதே. உணர்வுகளின் மேலீட்டால் நாம் இப்போது சொல்லிக்கொள்ள முடிவது – அது சாத்தியமாகாது என்பதே. ஆனால் அதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டிய தேவை இப்போது மிகவும் அவசியமாகவிருக்கிறது என்பதையே நான் சென்ற இதழில் கோடிட்டுக் காட்டினேன்.

கருணாவுடன் எம். ஓ. யு. என்பது மேலோட்டமான பூடகமான ஒரு சொற்பதமென்பதை இதயங்களினாற் சிந்திப்பவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அதை நான் எதிர்பார்க்கவுமில்லை. ஆனால் அப்பதத்தின் பின்னணியில் தொக்கி நிற்கும் விவாதத்திற்கான தேவையை தர்க்கரீதியாகச் சிந்திப்பவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். புரிந்துணர்வு என்பது இதய சுத்தியான ஒரு விடயமானாலும் தற்போது அது ஒரு தந்திரோபாய அரசியல் பதமாகவே பாவிக்கப்படுகிறது. எதிரியுடன் பேச்சுவார்ததைக்கான தளத்தைப் பண்படுத்துவதில் இச் செயல் முக்கியமானது. இன்னுமொரு தளத்தில் தற்காலிக இடைவேளை பெற்றுக்கொள்வதிலும் இது நிரம்ப உதவி செய்கிறது. எதிரியை ஊடறுத்துப் பலவீனமாக்குவதிலும் இது பயன்படுகிறது. புலிகள் இந்தப் புரிந்துணர்வைத் தமக்குச் சாதகமாகப் பலதடவைகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப் பின்னணியில், சென்ற இதழில் நான் சொன்ன எம்.ஓ.யு. வைப் புலிகள் சாதகமாக்கினால் கிழக்கை அரசியல் ரீதியாக வென்றெடுக்க அது ஒரு வழி. அதன் பிறகு இராணுவ வெற்றியை அவர்கள் நிச்சயித்துக் கொள்வார்கள். வரியிடை வாசிப்பில் பரிச்சயமானவர்களுக்கு என் கருத்தின் பின்னணி புரிந்திருக்கும். புரியாதவர்கள் தத்தம் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப சம்பலை அரைத்துக்கொண்டுதானிருப்பார்கள்.

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டினைப் புரிந்து கொண்டவர்களுக்கு ஒரு விடயம் நன்றாகவே புரிந்திருக்கும். தேவையேற்படின் அவர்கள் யாரோடும் பேசுவார்கள். யாரோடும் போர் புரிவார்கள். அது அவர்களது போரியல் தந்திரம். அச் செயற்பாடுகளின் வெற்றி தோல்விகளுக்கும் அவர்களே பொறுப்பாளிகள். உணர்வு மேலீட்டால் அதைச் செய்வதில்லை என்பதில் எனக்கு மிகவும் உடன்பாடு இருக்கிறது. இல்லாவிடில் ஈழப்போர்களின் எண்ணிக்கை இப்போது இருபதைத் தாண்டியிருக்கும்.

பேச்சுவார்த்தைகள் எதிரிகளைப் பலமிழக்கச் செய்வதற்கும் பயன்படலாமென்பதை மனதிற்கொண்டு பார்ப்பின் புரிந்துணர்வைப் புரிந்து கொள்வதில் சிரமமேயிருக்க முடியாது. இதற்கு மேல் அரைப்பவர்களுக்கு அம்மிதான் மிஞ்சும்.

சனி, 21 ஜூலை, 2007

Understanding Andy அல்லது ஆனந்தனைப் புரிந்துகொள்ளல்

Hi எனது பெயர் Andy. அப்படித்தான் எனக்கு என்னை அழைக்க விருப்பம். ஆனால் என் அம்மா என்னை ஆனந்தன் என்றே அழைக்க விரும்புகின்றாள். போகட்டும். அவளது ஆசையை நான் நிறைவேற்றியே ஆகவேண்டும். பாடசாலையில் எனது peers and teachers என்னை Andy என்றே அழைப்பர்.

இவ்வளவும் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து எழுதியதை வாசிப்பதற்கே உங்களுக்குச் சிரமமாயிருந்திருக்கும் இல்லையா? அப்படியானால் தினமும் பாலசாலையிலும் வீட்டிலும் என்று எத்தனை தடவைகள் நான் கனடியனாகவும் தமிழனாகவும் வாழக் கஷ்டப்பட்டிருப்பேன்?

போகட்டும். அவள் எனது தாய். அவளுக்காக நான் கஷ்டப்படுவதில் பாவமேதுமில்லை. இதுவெல்லாம் என் துன்பங்களில் ஒரு அற்ப பங்கேதான்.

எனக்கு 16 வயது. கனடாவில்தான் பிறந்தேன். எனக்கு ஒரு தாயும் (சிரிக்காதீர்கள்) ஒரு அக்காவும் இரண்டு மாமன்காரரும் இருக்கிறார்கள். எனக்கு பதின்மூன்று வயதாகவிருக்கும்போதே என் தந்தை அம்மாவை விட்டு விட்டு வேலையில் சந்தித்த யாரோ பெண்ணுடன் ஓடிவிட்டானாம் என்று அம்மா சொன்னாள். அப்பா ஏன் ஓடினார் என்று காரணம் தெரியும்வரை 'ஓடினான்' என்று அழைப்பதாகவே நான் தீர்மானித்திருக்கிறேன். தயவுசெய்து குறை நினைக்காதீர்கள்.

அம்மா சுமாரான அழகுடையவள். ஆனால் அவளுக்குக் காது கேட்பது கொஞ்சம் குறைவுதான். அப்பா ஓடிய பிறகு வீட்டில் சண்டை பிடிப்பதற்கு எவருமில்லை. பக்கத்து அப்பாட்மெண்டிலிருந்து சுவரில் தட்டுவது இப்போது இல்லை. உரத்த குரலில் பேசிய அப்பன் போனதிலிருந்து வீடு வெறிச்சோடிப் போனதை அம்மாவே ஒத்துக் கொண்டாள்.

அக்காவுக்கு 20 வயது. ஒரு காலத்தில் நன்றாகப் படித்தவள். University of Toronto வில் இரண்டாவது வருடம் படித்துக்கொண்டிருந்தபோதுதான் அப்பா ஓடினான். அதன் பிறகு அவள் படிப்பில் கவனம் செலுத்தாது விட்டுவிட்டாள். இப்பொழுது College க்குப் போகிறாள். முன்பு போலெல்லாம் அவளுக்குச் சிநேகிதிகள் இல்லை. மேக்கப் போடுவதில்லை. தலை சீராக வாருவதில்லை. படிப்பு எப்படிப் போகிறது என்று எப்போதாவது நான் கேட்டால்தானுண்டு. அப்போதும் ஒரு shrug ஓடு அப்பாற் போய்விடுவாள். அவளுடைய மனதில் என்ன இருக்கிறது என்றறிவதற்கு அம்மாவிற்கு நேரமுமில்லை அறிவும் போதாது.

அம்மா இரண்டு வேலை செய்கிறாள். காலையில் ஒரு Book Binding கம்பனியில். பின்னேரம் ஒரு தமிழ்ச் சாப்பாடுக் கடை Kitchen இல். அரச உதவிப்பணம் பெற்றுக்கொண்டு பேசாமல் தானுண்டு தன் சோலியுண்டு என்று அவள் வாழ்ந்திருக்கலாம். பெரீய ego வைத் தலையில் வைத்துக்கொண்டு திரிகிறாள். தான் வேலை செய்து பிள்ளைகளைப் படிப்பித்தேன் என்று ஊருலகம் சொல்ல வேண்டும் என்பது அவளது ஆசை போலும்.

இரவு பதினொரு மணிக்குப்பின் அவள் கொண்டுவரும் சாப்பாடுதான் எங்களதும். ஆனால் நாங்கள் எத்தனை மணிக்குச் சாப்பிடுவதென்பது அவளது முதலாளியின் கைகளிலேதானிருக்கிறது. அவர் தனது வாகனத்தில் கொண்டுவந்து விட்டால்தான் அம்மா வீட்டுக்கு வரலாம். அம்மாவின் காது கேட்காத பிரச்சினையால் அவளால் வாகனம் ஓட்ட முடியாது.

அப்பன் ஓடியதிலிருந்து எனக்கும் வாழ்க்கையில் சலிப்புத்தட்டி விட்டது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்னதான் brave face என்று மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளே வெறுமை சதா அரித்துத் தின்றுகொண்டிருக்கிறது. அப்பனைப் பற்றி அம்மா எதுவும் பேசுவதில்லையாதலாலும் அவளோடு என்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது சரியில்லை என்பதாலும் நான் அப்பனைப் பற்றிப் பேசுவதை வெகுவாகக் குறைத்து விட்டேன். ஆனாலும் அவனைப் பற்றியும் அவன் ஏன் எங்களை அநாதரவாக விட்டு ஓடினான் என்பது பற்றியும் எப்போவாவது ஒரு நாள் அறிந்தேயாக வேண்டும் என்று என் மனம் விழைகிறது.

அப்பன் குரைப்பான், சத்தமிடுவான் ஆனால் ஒருபோதும் அம்மாவை அடித்ததில்லை. வீட்டுக்குத் தேவையான அத்தனையும் கொண்டுவந்து போடுவான். He was a great provider, I must admit.

அம்மாவும் அவனை நேசித்துத்தானிருக்க வேண்டும். இப்போதும் இடைக்கிடையே வீட்டில் இருக்கக் கிடைக்கும் போதெல்லாம் அவள் சட்டைத் தலைப்பைக் கண்ணுக்குள் விட்டுக்கொண்டிருக்கிறாளென்றால் அது கண்ணீரைத் துடைக்கவல்லாது வேறெதற்கு? எனக்கும் அக்காவுக்கும் முன்னால் அப்பனைத் திட்டித் தீர்ப்பாள். அதில் மட்டும் அவள் நன்றாக நடிப்பாள்.

அப்பனுக்கும் அம்மாவுக்குமிடையில் சண்டை முற்றியிருந்தபோது இரண்டு தடவைகள் மாமன்மார் என் வீட்டிற்கு வந்தார்கள். ஒரு கடுமையான குளிர் இரவில் அப்பனை அடித்துத் துரத்தி வெளியேவிட்டுக் கதவைப் பூட்டினார்கள். இன்னுமொரு நாளில் அப்பன் தனது உடுப்புகளையும் பெறுமதிகளையும் எடுத்துக்கொண்டு இறுதியாக விடைபெறும்போது அம்மா அவன் பின்னால் ஓடிவிடாது 'காப்பற்றுவதற்காக' அவளைப் படுக்கையறையுள்ளே வைத்துப் பூட்டினார்கள். அதன் பிறகு அவர்கள் எங்கள் வீட்டுப் பக்கம் வந்ததேயில்லை.

அப்பன் இறுதியாக விடைபெற்ற இரவில் அம்மாவின் கூப்பிய கரங்களும் கெஞ்சிய கண்களும் என்னால் இன்னும் மறக்க முடியாதவை. காரணம் அவள் அப்படிக் கெஞ்சியது தனது சகோதரர்களிடம்தான். அன்று அவர்கள் கொஞ்சமேனும் இரக்கம் காட்டியிருந்தால் இன்று எனது அப்பன் எங்களோடு இருந்ததிருக்கலாம் என்று பலதடவைகள் நான் நினைத்ததுண்டு. அதையேதான் அம்மா தினம் தினம் நினைத்துக் கொள்கிறாளோ என்னவோ.

எங்களை விட்டுப்போய் சில நாட்களில் அப்பனை மால்களில் சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். எனது பாடசாலைக்கு அருகில் இருக்கும் அந்த மாலுக்கு அவன் வருவதே என்னைப் பார்க்கத்தான் என்று அவன் ஒரு தடவை சொன்னான். அப்போதெல்லாம் அவன் அன்போடு என்னைக் கட்டிப் பிடித்து சாப்பிட வரும்படி அழைப்பான். ஏதாவது வாங்கித் தருகிறேன் என்று அடம்பிடிப்பான். இன்றுவரை அவனிடம் எதுவுமே வாங்கியதில்லை. இப்போ சில வருடங்களாக அவனை நான் கண்டதில்லை. எனது பதினெட்டாவது பிறந்தநாளுக்கு அவனை அழைக்கவேண்டுமென்று அம்மாவைக் கேட்டபோது 'உன் மாமன்மார் கொலை செய்துவிடுவார்கள்' என்று அவள் சொன்னதோடு அப்பனோடு உறவு கொண்டாடும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன்.

எங்களை விட்டுப் பிரிந்து சில வருடங்களுக்கு அப்பன் வேறு திருமணம் புரிந்து கொள்ளவேயில்லை என்று அம்மா சொன்னாள். பின்னர் அவன் மிசிசாகாவுக்குப் போய்விட்டான். சுமார் 50 கி.மீ. தொலைவுதான். இருப்பினும் இங்கிருக்கும்போதெ அவன் எங்களை மறப்பதற்குத் தீர்மானித்து விட்டான் போலிருக்கிறது. தூரமும் நேரமும் பாசத்தைப் பிரிக்குமென்பார்கள். I had no choice.

எனக்கும் இப்போது படிப்பில் அவ்வளவு அக்கறையில்லை. அக்காவின் மனதை இப்போது மிகவும் அதிகமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. வகுப்பில் ஆசிரியர் பல தடவைகள் முயன்றும் நான் எனது குடும்பப் பிரச்சினைகளப் பற்றி அவரிடம் எதையுமே கூறியதில்லை. அப்படிச் சொல்லியிருப்பின் இப்போது எங்கோ ஒரு Foster parent வீட்டில் ஒரு வெள்ளைக்கார அப்பா அம்மாவுக்கு பதிநான்காவது பிள்ளையாக Anti-depressant குளிசைகளோடு மால்களில் திரிந்திருப்பேன். அல்லது ஒரு medium security prison இல் ஏனைய கைதிகளோடு கஞ்சா குடித்துக் காலம் கழித்திருப்பேன். நான் ஆனந்தனாக வளர்க்கப்பட்டதன் விளைவே இன்னும் நான் நானாக இருப்பது என்று நினைத்து மகிழ்வதுண்டு.

ஒருநாள் நானும் அக்காவும் சில நிமிடங்கள் பேசக் கிடைத்தபோது இருவரும் ஏகோபித்து எடுத்த முடிவு - நாங்கள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்வதில்லை - என்பதே. அவள் ஆசையாக நேசித்திருந்த பிருந்தனிடம் தன் முடிவைச் சொன்ன அன்று அவள் sleeping tablets எடுக்கவிருந்தாள். எப்படியோ இன்று அவள் உயிர் தப்பியிருந்தாலும் ஒரு நடைப்பிணமாகவே இருக்கின்றாள்.

எங்கள் குடும்பம் சிதைந்து போனதற்கு யாரைக் குற்றம் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட எல்லோருமே தங்கள் சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் முடிவுகளைத் தீர்மானித்தார்களென்றே எனக்குப் படுகிறது. என்னுடைய அல்லது எனது அக்காவுடைய நலன்கள் எதையும் எவரும் கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் தத்தமது ego வைத் திருப்திப் படுத்தும் வகையிற்றான் நடந்துகொண்டுள்ளார்கள்.

நாங்கள் நன்றாகப் படிக்க வேண்டுமென்று அம்மா இரண்டு வேலை செய்தாள். இருந்தும் என்ன பிரயோசனம்? அம்மாவே வீட்டிலிருந்து நாங்கள் என்ன படிக்கிறோம் என்றுகூடக் கேடடதில்லை. அம்மாவுக்குச் சரியானதென்பதை எப்படி மாமன்மார் தீர்மானிக்கலாம்?.

எல்லோருமே தாங்கள் ம்ற்றவர்களுக்கு நன்மை செய்வதாகவே நினைத்துக் காரியங்களைச் செய்கின்றார்கள். ஆனால் அந்த 'மற்றவர்களிடம்' என்ன பெறுபேறுகள் விளைந்தன என்பது பற்றி எதுவித அக்கறையிமில்லாது தங்கள் ego திருப்தியடைந்தால் மட்டும் போதுமானது என்றளவில் நின்றுவிடுகிறார்கள். இது தான் எமது பிரச்சினை.

என் மனதில் நெருடல்கள் ஆயிரம் இருக்கின்றன. யாருடனாவது பேசினால் கொஞ்சம் ஆறுதலாகவிருக்கும். I am sure என்னைப்போல் தான் என் அக்காவும் துடித்துக்கொண்டிருப்பாள் என்று நினைக்கிறேன். என் நண்பர்களும் என்னைப் போலவே ஆயிரம் பிரச்சினைகளைச் சுமந்துகொண்டு திரிகின்றார்கள். Everyone needs a shoulder to cry, I guess.

சென்ற வாரம் எனது பாடசாலையில் இரண்டு மாணவர்கள் என்னை மிரட்டினார்கள். Lunch money யைத் தரும்படி மிரட்டினார்கள். என்னிடம் lunch money இல்லை, வேண்டுமானால் lunch ஐத் தருகிறேன் என்றேன். இரண்டு பேரும் சேர்ந்து என்னை அடித்தார்கள். சக மாணவர்கள் பார்த்துச் சிரித்தார்கள். ஏனென்றால் அடித்தவர்கள் ஏதோ ஒரு gang ஐச் சேர்ந்தவர்கள். நான் இச் சம்பவத்தை பிறின்சிபாலிடம் முறையிடவில்லை ஏனென்றால் அடித்தவர்களும் தமிழர்கள்தான்.

இப்போது நான் இன்னுமொரு gang member. இனி என்னை ஒருவரும் தொட முடியாது. எனக்குப் பாதுகாப்பு வழங்க ஒரு குழு இருக்கிறது. ஆனால் நானும் என் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

Ryan என்ற றட்னாகரன் எனது gang இல் இருக்கிறான். மிகவும் நல்ல பையன். ஆனால் போதை வஸ்து எடுப்பான். 'நீ எப்போது இதைப் பழகினாய்' என்று கேட்டதற்கு அவன் சொன்னான் 'எல்லாம் ஒரு பெண்ணுக்காக' என்று. அவனது காதலி ஒருநாள் அவனிடம் சொன்னாளாம் 'Thats it. We have to part our ways. You are not tough enough for me. Look at the guy who is leaning on the red Honda Civic. He is my my new guy. Bye...'

இதுதான் இன்றய உலகம். This is real. I don't want to bury my head in the sand!. Ryan இப்போது ஒரு tough guy. He goes to prison every weekend for three months. Assault with weapon, possession of narcotics with the intent of trafficking and obstruction of justice. எல்லாமே பொய் வழக்கு. போலீஸ் சோடித்த வழக்கு. றயான் எல்லாக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டுவிட்டான். காரணம் அவனைப் பிணை எடுக்கக்கூட ஒருவரும் முன்வரவில்லை. He also comes from a single parent family. I won't blame him.

எனது நிலைமை எப்படியாகும் என்று சொல்வதற்கில்லை. நான் வீடு போகும்போது வீட்டில் விளக்கு எரியாது. வெறுமையாக இருக்கும். சாப்பிட எதுவும் இருக்காது. கையில் காசும் இருக்காது. வீட்டுக்கு வருவதற்கே மனமிருக்காது. மற்ற நண்பர்களைப் போல சட்டத்துக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டுப் பணம் சம்பாதிக்கல்லாம். மனம் ஒத்துழைக்குதில்லை. So far I have resisted successfully. The only other option is to take my life. Is this life worth living?

I hope you understand me. Please don't feel sorry for me. There are so many kids out there crying for help. There could be a kid out there pricking needle in a back alley. There could be one waiting to jump off a highrise building. Please save them. For god sake, they have many more years to live, just the way you do. They are your children.

மன்னிக்க வேண்டும். I got carried away.

நான் இதுவரை சொன்னது ஆனந்தனைப் பற்றி மட்டுமே. அறிகுறிகளைச் சொன்னேன். ஆதங்கங்களைச் சொன்னேன். நாங்கள் நல்லவர்களாக உருவாகுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

I wouldn't have been in this state had my father not abdicated his responsibility.

இற்தியாக, அப்பாவுக்கு! 'அப்பா எனக்கும் உங்களைப்போல கல்யாணம் செய்து பிள்ளை குட்டி பெற்று முழுமையாக வாழ்வதற்கு ஆசைதான். அடுத்த தடவை முயற்சி செய்யுங்கள்.

Forgive me உங்களை அப்பன் என்று சொன்னதற்கு. அதுவே இல்லாது எத்தனை குழந்தைகள் இருக்கும்போது. Please lookafter my sister, at least.'

செவ்வாய், 17 ஜூலை, 2007

பொங்கு 'சிங்களம்'

சிங்கள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததே அதிசயம் என்றார்கள். இப்போது அதைவிடப் பெரிய அதிசயம் இலங்கையில் நடைபெற்றிருக்கிறது.

ஆறென்றால் அது மலையில் ஆரம்பித்து கடலில் விழும். தமிழர் தேசத்திலோ போராறு கடலில் (மாவிலாறு) ஆரம்பித்து (குடும்பி) மலையில் முடிவடைந்திருக்கிறது.

பேரழிவுகளுக்கு முன் அதிசயங்கள் நிகழுமென்பார்கள். மஹிந்தவைப் புலிகள் ஏற்றி வைக்கப் புலிகளை மஹிந்த இறக்கி வைத்திருக்கிறார் குடும்பிமலையிலிருந்து.

அதிசயமேதான்!

புலிகள் இறங்கினார்களா அல்லது இறக்கப்பட்டார்களா என்பது 'குடும்பிமலை ரகசியம்'. இப்போதைக்கு அறிய முற்படுவது தேவையற்றது.

எப்படியாயினும் புலிகள் தந்திரோபயமாகத் தப்பி மரபு வழிப் போரிலிருந்து மீண்டும் கரந்தடிப் போர் யுக்தியைக் கையாளப் போகிறார்கள் எனப்படுகிறது.

உண்மை அதுவாகவிருப்பினும் சிங்கள ஆட்சிக்கும் இராணுவத்துக்கும் இது ஓர் பாரிய வெற்றி. உள்ளூர் மக்களிடத்தும் சர்வதேச அரங்கிலும் புலிகளுக்கு இது ஒரு பெரிய தோல்வி.

சிங்கள ஆட்சியாளர்களுக்கு இது அரசியல் வெற்றியே தவிர இராணுவ வெற்றியல்ல என்கிறார் சர்வதேசப் புகழ் பெற்ற இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ்.

இருக்கலாம். ஆனால் காலம் காலமாக தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இராணுவத்தைப் பாவித்து வருவதே அரசியல் வெற்றிக்காகத்தானே! மக்களின் அதிருப்தி, சரிந்துவரும் பொருளாதாரம், கட்சியுடைவு என்று பல வழிகளிலும் அதல பாதாளத்தை நோக்கி விழுந்துவிடத் தயாராகவிருந்த மஹிந்த்வுக்கு குடும்பிமலையையே சஞ்சீவியாகப் பெயர்த்துக் கொடுத்துக் காப்பற்றியிருக்கிறார் அனுமார் சரத் பொன்சேகா. தென்னிலங்கை மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை இருவரும் காப்பாற்றியிருக்கிறார்கள். அதற்கான வெகுமதியை மக்களிடமிருந்து ஏற்பதற்கு அவர்கள் தகுதியுடையவர்களே.

மாறாகப் புலிகள் மக்களுக்குக் கொடுத்த வாகுகுறுதிகளை நிறைவேற்றவில்லை. 'ஒரு வருடமாகவே இப்படித்தான் எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் எதுவுமே செய்ய முடியாது' என்று இராணுவ அதிகாரி கேலியாகப் பேசுகிற அளவுக்கு நிலைமைகள் இருக்கின்றன.

புலிகளைத் தெரிந்தவர்கள் வழமைபோற் சிரிப்போடு உதாசீனம் செய்கிறார்கள். பாரிய தாக்குதல் ஒன்றுக்கு அவர்கள் தயாராகிறார்கள் என்பதிலும் இரண்டாம் அபிப்பிராயமில்லை. முன்பு பல தடவைகள் இதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். மக்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அதுவேதான்.

ஈழ்த் தமிழர்களுக்கு அதுவே இறுதி நம்பிக்கையும்கூட. இலங்கை அரசுகளை நம்பி ஏமாந்தார்கள். இந்தியாவை நம்பி ஏமந்தார்கள். இறுதியாக சர்வதேசங்களை நம்பி மோசமே போய்விட்டார்கள்.

இந்த நிலையில் புலிகள் ஏதாவது செய்தேயாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

எங்கு எப்படி எப்போது என்பது மர்மமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் மூதூர் கிழக்கு, சம்பூர், குடும்பிமலை என்று தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் பறிபோய்க்கொண்டிருக்க இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அரை வயிறுகளோடு சில்லுக்கும் செல்லுக்கும் தப்பி நெடுங்காலம் வாழமுடியாது. அரசிடம் இருந்து இவர்களுக்கு நிவாரணம் கிடைக்காது. அவர்களை மீண்டும் அவர்களது நிலங்களிற் குடியேற்றுவது தமிழர் கடமை.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அங்குள்ள மக்கள் ஒரு பேருண்மையை உணர வேண்டும். ஜே.வி.பி போன்ற தென்னிலங்கை இனவாதிகளின் (இவர்களை மார்க்சீயவாதிகள் என்றால் அது மேதை மார்க்ஸ் இற்கு இழுக்கு!) ஒரே நோக்கம் இலங்கை முழுவதையும் ஒரு பெளத்த சிங்கள நாடாக்குவதே. அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தளவுக்கு அவர்களது திட்டங்கள் நிறைவேறியிருக்காது. புலிகள் எந்தளவுக்கு கோமாளியான ராஜபக்ஷவைப் பாவித்து தமது தனி ஈழத்தைப் பெற முயற்சித்தார்களோ அதே போன்றுதான் ஜே.வி.பி. யினரும் ராஜபக்ஷவுடன் கூட்டணியமைப்பதன்மூலம் தமது திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்தார்கள். இன்றய கள நிலவரத்தின்படி ஜே.வி.பி. யினர் தமது முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். வடக்குக் கிழக்குப் பிரிப்பு, கிழக்கின் வெற்றி எல்லாம் ஜே.வி.பி. யின் திட்டங்களே.

கிழக்கைக் கைப்பற்றியது இராணுவ வெற்றியல்ல அரசியல் வெற்றிதான் என்று ஒப்புக்குக் கூறினாலும் கிழக்கில் புலிகளின் வெற்றிடத்தையும், மக்களின் இடப்பெயர்வையும் சாதகமாக்கி சிங்களமயமாக்கல் துரிதப்படுத்தப் படுகிறது என்பதே உண்மை. கருணாவின் பிரிவிற்கு முன்னர் இது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று! இப்பொழுது கருணா விரும்பினாலும் கிழக்கின் சிங்கள மயமாக்கலை நிறுத்த முடியாது. அப்படி முயற்சித்தால் சிங்கள இராணுவம் கருணா அணியைத் துவம்சம் செய்துவிடும். 'வன்னிப் புலிகளை' த் துரத்துகிறோம் என்று மண்ணையே தாரை வார்த்துக் கொடுத்ததே கருணா அணியும் அதன் ஆதரவாளர்களும் சாதித்தது.

இந்த நிலையில் கருணா அணியினர் ஜனநாயக வழிக்குத் திரும்பித் தேர்தல்களிற் பங்கேற்றால் நிலைமை மாறும் என்று நினைக்கலாம். கிழக்கு மாகாணத் தமிழ் மக்களது உணர்வுகளை அர்சு மதித்திருந்தால் மக்கள் பட்டினியால் வாடும்போது வெற்றி விழாக் கொண்டாடியிருக்க மாட்டார்கள். இராணுவ ஆட்சியோ ஜ்னநாயக ஆட்சியோ சிங்கள மயமாக்கல் அதி வேகத்தில் நடைமுறைப் படுத்தப்படும். இதைத் தடுத்து நிறுத்தும் ஒரே வழி-கருணா அணியும் புலிகளும் MOU செய்து கொண்டு போரை உக்கிரப்படுத்துவதுதான். மிகவும் கோபப்படுகிறீர்கள் போலிருக்கிறது. மண்ணைக் காப்பாற்ற இதைவிட வேறேதும் வழியிருந்தால் சொல்லுங்கள்!

விடுதலைப் போராட்டம் ஆரம்பித்ததே தமிழரின் மொழியுரிமை, பிரதேச உரிமை வாழ்வுரிமைகளைக் காப்பாற்றிக்கொள்வதற்காக. அவற்றை இழந்து பெறும் விடுதலைக்கு அர்த்தமில்லை.

ஞாயிறு, 1 ஜூலை, 2007

வன்னியின் செல்வன் - அத்தியாயம் இரண்டு

வன்னியின் செல்வன்


இரண்டாவது அத்தியாயம்


மங்களரின் கனவு


ஏற்கனவே அமளி துமளிப்பட்டுக் கொண்டிருந்த ரோஹண நாடடின் ஆட்சிக்கு சோதிடர்களின் கூற்றுப்படி பல துர்நிமித்தங்கள் தோன்றின. எங்கே தூமகேது தோன்றப்போகிறதோ என்று மக்கள் துயரப்பட்டுக் கொண்டார்கள். நாளுக்கு நாள் பண்டங்களின் விலை அதிகரித்தது. அரச தானியச்சாலை விரைவில் காலியாகிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது என்று களஞ்சிய அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.


நாட்டின் நிலைமை மன்னர் மகிந்தருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. சோதிடர்களின் வாக்கு பலித்துவிடுமோ தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று மகிந்தர் நாளொரு குப்பியும் பொழுதொரு தொப்பியுமாக அரண்மனையிலேயே மறைந்து வாழ நேரிட்டது.


இந்த வேளையில் அரசரின் சகோதரரும் அந்தரங்க ஆலோசகருமான பசிலர் செய்தியொன்றைக் கொண்டோடி வந்தார். முன்னாள் அமைச்சரும் மகிந்தரின் பல அரசியற் களப் போர்களை முன்னின்று நடத்தி வெற்றிவாகைகளைச் சூடக் காரணமானவருமான மங்கள சமரவீரர் அரசருக்கு எதிராகச் சதியொன்றை மேற்கொள்ளுகிறார் என்பதே அச் செய்தி.
தன்னை எந்த உலக மகா சக்திகளாலும் அசைக்க முடியாதென்று இறுமாப்பிலிருந்துவந்த மகிந்தர் ஒரு கணம் ஆடிப்போய்விட்டார். என்ன இருந்தாலும் நாயக்கர் வம்சத்தின் அழுங்குப்பிடியிலிருந்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி மகாராணி சந்திரிகையை நாட்டை விட்டே துரத்துவதற்கு உதவி செய்த மங்களரர் இப்படியாகுவார் என்று எதிர்பார்க்கவில்லைத்தான்.


‘எத்தனை பேருக்கு வெகுமதிகளை அள்ளி இறைத்தேனே! உலகத்திலேயே தேவைக்குமதிகமான அமைச்சர்களை நியமித்து அத்தனை பேருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பல்லக்கு தேர் குதிரை யானை என்று அள்ளி அள்ளிக் கொடுத்தேனே! கஜானா காலியாகிய போதெல்லாம் புத்தம் புதிதாக பணத்தை அச்சடித்து அபிஷேகம் செய்தேனே! தூரதேச யாத்திரைகள் போகும்போதெல்லாம் நூற்றுக்கணக்கில் அமைச்சர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கொண்டு திரிந்து இறக்கைக்குள் வைத்துப் பராமரித்தேனே! இப்படியாகி விட்டதே’

இப்படியாக மகிந்தர் தலையிலடித்துப் புலம்பினார்.


இந்த நேரம் பார்த்து அமைச்சர் பர்னாந்துப்பிள்ளை உள்ளே வந்தார். அவர் மன்னர் மகிந்தருக்கு மிக நெருக்கமானவர். தமிழ் சிங்களவர் ஓருடலும் ஈருயிருமாக வாழ வேண்டுமென்பதற்கு உதாரணமாக வாழ்பவர் அமைச்சர் பர்ணாந்துப்பிள்ளை அவர்கள். மன்னரின் சிவப்பு உத்தரீயத்தின் தலைப்பால் ஏற்கனவே சிவந்து போயிருந்த கண்களைத் துடைத்துவிட்டுக் கொண்டே அமைச்சர் சொன்னார்:


“மன்னாதி மன்னா. இந்த மங்களரின் சதி பற்றி நீங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். உங்கள் ஆடசியில் தமிழ் மக்களைத் தவிர எந்த ஒரு உயிரையும் நீங்கள் புண்படுத்தியதில்லை. மக்கள் உங்கள் பக்கமிருக்கிறார்கள். புத்த சங்கங்கள் இரண்டும் உங்கள் பக்கம். போதாதற்கு தமிழர் பக்கத்திலிருந்து பல சிற்றரசர்கள் உங்கள் கால்களையே தினம் கழுவிக்கொண்டிருக்கிறார்கள். சிங்கள இனத்துக்கே பெயரையும் புகழையும் பெற்றுத்தந்த கெமுனு மன்னரின் மறு பிறப்பே நீங்கள்தான் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்”


“உண்மையாகவா அமைச்சரே..?”


“ஆமாம் மன்னா! இரண்டாம் கெமுனு என்ற பட்டத்தைச் சூட்டிக் கொள்வதற்கு நீங்கள் தகுதியுடையவர்தான். எல்லாள அரசனின் மறுபிறப்பென்று மக்கள் அழைக்கும் கரிகாலனின் ஆட்சியிலிருந்து கிழக்கு மண்டலத்தை விடுவித்த பெருமை உங்களைத்தானே சேரும்”


“ஆமாம் அமைச்சரே… கொஞ்சம் பொறுங்கள். யாரங்கே அந்தக் குப்பிக்காரனை அழைத்துவரச் சொல்…. கலப்பதற்கு என்ன வேண்டும் அமைச்சரே."

" ஜலமே போதும் மஹாவலியிலிருந்தல்லவா வருகிறது..”


மன்னர் மகிந்தருடைய கோபத்தை எப்படி அடக்கலாமென்ற ரகசியம் அமைச்சர் பர்ணாந்துவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இருவரும் களிப்போடு ஏனைய அரச கருமங்களைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள்.


“அமைச்சரே இந்த மங்களருக்கு நாம் என்ன குறை வைத்தோம். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? . உண்மையில் அவர் இல்லாவிட்டால் நாம் ஆட்சி அமைத்திருப்பதே சிரமம். சிற்றரசர் சோமவன்சர் போன்றவர்கள் கிளர்ச்சி செய்தபோது அவரோடு சமரசம் செய்து கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தியவர் இந்த மங்களர். இப்போது அந்த கபடர் சூரியாராய்ச்சியாரோடு சேர்ந்து எனக்கெதிராகச் சதி செய்கிறார். என் சகோதரர் கோதபாயரிடம் சொன்னால் ஒரே நாளில் இருவரையும் வெண் புரவிகளிற் கொண்டுபோய்த் துவம்சம் செய்துவிட முடியும். ஆனால்….” மஹிந்தர் மீசையை முறுக்கினார்.


“அரசே எனக்கு ஒரு சந்தேகம் தோன்றுகிறது. மங்களரின் சதியின் பின்னால் வலுவான அந்நிய தேசங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர்கள் எல்லோருடைய நோக்கமும் கரிகாலனை ஒழித்துக்கட்டவேண்டுமென்பதே. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட சோழ சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவும் வல்லமை இந்த கரிகாலனுக்கேயுண்டு என்று ஈரேழுலகமும் நம்புகிறது. கரிகாலனால் எங்கே தமது நாடுகளுக்கே ஆபத்து வந்துவிடுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். எந்தவித வெளிநாடுகளின் உதவிகளுமில்லாமலே பாரிய படைக்கலங்களைச் சோழர் படை தாமாகவே உருவாக்குகிறதென்ற விடயம் வெளிநாடுகளுக்குத் தெரிந்ததிலிருந்து அவர்கள் எச்சரிக்கையடைந்திருக்கிறார்கள்.”


“அதற்கும் மங்களரின் சதிக்கும் என்ன சம்பந்தம்.?”


“கரிகாலனை ஒழித்துக்கட்டும் வல்லமை உங்களுக்கு இல்லை என்று அயற்தேசங்கள் கருதுகின்றன. அத்துடன் சமீபத்தில் நீங்கள் பல வெண் புரவிகளை அரேபியாவிலிருந்து இறக்கியது அமைச்சர் கோதபாயரின் வேண்டுகோளுக்கிணங்கவே என்றும் அவை தருவிக்கப்பட்டதன் பின்னர் தலைநகரில் மட்டும் சென்ற மாதத்தில் 125 தமிழர்கள் வெண்புரவியிற் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள் என்றும் வெளிநாட்டு பிரதானிகள் கருதுகிறார்கள். இக்காரணங்களுக்காக உங்களை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு மங்களரை ஆட்சியிலமர்த்தும் நோக்கம் அயற் தேசங்களுக்கு உண்டு என்று நமது ஒற்றர்கள் அறிந்து வந்திருக்கிறார்கள். அத்தோடு தலைநகரில் தங்கியிருந்த பல அப்பாவித் தமிழர்களைப் பலவந்தமாக இரவோடு இரவாக வெள்ளைத் தேர்களில் ஏற்றி நகரின் எல்லைகளிற் கொண்டுபோய்விட்ட சம்பவம் அயற் தேசங்களை உலுப்பியிருக்கிறது.”


“அப்படியா..? அதற்கு மாற்று வழியாக என்ன செய்யலாம்?

மஹிந்தர் கேட்டார்.அப்போது வாயிற்காவலன் வந்து பணிவாகக் கூறினான்:


“அரசே வாயிலில் அமைச்சர் தேவானந்தர் நிற்கிறார். உங்களை அவசரம் பார்க்க வேண்டுமாம்”


“வரச்சொல். அமைச்சரே உங்களுக்கு ஒரு ஆடசேபணையும் இல்லையே. நீங்கள் இருவரும் ஒரு வழியில் தமிழர்கள் தானே. எங்கே நாயும் பூனையுமாக…”

"இல்லை. எனக்கும் தேவானந்தருக்கும் எதுவித பிரச்சினையும் கிலையாது. தாராளமாகப் பேசுங்கள்"


அமைச்சர் தேவானந்தர் பளிச்சென்ற வெண்ணாடை தரித்து நிதானமாக வந்தார்.


வணக்கம் மன்னர் பெருமானே!


“என்ன விடயம் அமைச்சரே? சிற்றரசர்கள் கருணாகரர் பிள்ளையார் ஆகியோருடைய பிணக்குகளைத் தீர்த்துவைக்க ஏதாவது முயற்சி எடுத்தீர்களா? இப்போதே தீர்க்காவிட்டால் பிள்ளையாரைத் தம்பக்கம் இழுத்துவிடக் கரிகாலன் முயற்சிக்கலாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்”


“ஆம் மன்னரே. மண்டலக்காரர்களை இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு பணித்திருக்கிறேன்”


“அது சரி… வந்த விடயம்?


“தலை நகரிலிருந்து 300 தமிழர்களை உங்கள் சகோதரர் பலவந்தமாக வெண் தேர்களில் ஏற்றி நகரின் எல்லைகளுக்கு அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டேன்”


“அதற்கு என்ன இப்போது. பிற தேசங்கள் எங்களைக் கடிந்து கொண்டனதான். இருந்தாலும் பாரதூரமாகக் கண்டிக்கவில்லை. ‘கவலை தெரிவிக்கிறோமென்று’ சிரித்துக்கொண்டுதான் கூறினார்கள். இருந்தாலும் அதை நிறுத்தி தமிழர்களிடம் மன்னிப்புக் கோரும்படி கோரினார்கள். நானாவது மன்னிப்பு அதுவும் தமிழரிடம் கேட்பதாவது. எனக்காக முதலமைச்சர் இரத்தினநாயக்கருக்கு தமிழரிடம் மன்னிப்புக் கோரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.


“தமிழரைப் பலவந்தமாக அனுப்பியது பிழையானது. அப்படித் தொடர்ந்தும் செய்திருந்தால் நாமே நமது அன்பிற்குரிய தாய்நாட்டைப் பிரித்துக் கொடுத்தவர்களாக வரலாற்றில் பார்க்கப்படுவோம்.” அமைச்சர் தேவானந்தர் பணிவோடு கூறினார்.


“உண்மைதான் அமைச்சரே. எனது தம்பி கோதபாயரை உங்களுக்குத் தெரியும்தானே. கொஞசம் முற்கோபக்காரன். அவன் அவ்வளவாகக் கல்வி கற்றதில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும். தமிழரின் கொலை முயற்சியிலிருந்து தப்பியவனுக்கு கொஞசம் கோபம் அதிகம் தான்….அது சரி அமைச்சர் மங்களர் எமது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறாராமே. அமைச்சர் பர்ணாந்து சொல்கிறார்…”


“கேள்விப்பட்டேன் மன்னா. அது நடக்கவல்ல காரியமல்ல. மங்களர் தனது நண்பரும் சிற்றரரசருமான சோமவன்சரினதும் முன்னாள் முதலமைச்சரான விக்கிரமசிங்கருடனும் கூட்டுச்சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றலாமென்று கனவு காண்கின்றார். சோமவன்சருடைய படைபலமும் விக்கிரமசிங்கருடைய படைபலமும் ஒன்று சேர்ந்தாலும் எங்களது பலத்தை மீற முடியாது. அப்படியானாலும் அதற்கு முன்னராக நாம் இன்னுமொரு சதியொன்றை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுடைய சதியை இலகுவாக முறியடிக்கலாம்.”


“எப்படி எப்படி… சொல்லுங்கள் அமைச்சரே. இதற்காகத்தானே சிங்கள அரசுகள் எப்போதும் தமிழமைச்சர்களை ஆலோசகர்களாக வைத்திருப்பது….”


“மன்னா! ஒரு நாட்டில் ஆட்சி ஈடாட்டம் காணும்போது அது அயல் நாடுகளின் மீது படையெடுப்பைச் செய்ய வேண்டும். தேசீயத்துக்கு அச்சுறுத்தல் வரும்போது மக்கள் ஒரு கொடியின் கீழ் அணிதிரள்வார்கள். உங்களுக்கு மக்கள் ஆதரவு அலையலையாக வந்துகொண்டே இருக்கும். எனவே இப்போ உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது மக்களுக்கு கிராமங்கள் பட்டி தொட்டிகள் எங்கும் பறையடித்துச் சேதியனுப்ப வேண்டியது. தேசீயத்துக்கு அச்சுறுத்தல் என்றால் மக்கள் பொங்கியெழுவார்கள். அத்தோடு கிழக்கு மண்டலத்தை விடடுவித்ததும் நாடு தழுவிய ரீதியில் வெற்றிக் களியாட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். ”


“நல்லது அமைச்சரே. சரியான தருணத்தில் வந்து உங்கள் மதியூகத்தால் எங்கள் நாட்டைக் காப்பாற்றியமைக்கு நான் என்றென்றும் நன்றியுடையவனாயிருப்பேன். இன்னும் சில நாட்களில் கரிகாலனைத் தோற்கடித்து ஈழம் முழுவதையும் வெற்றிகொண்டவுடன் கிழக்கு மண்டலத்தைக் கருணருக்கும் வடக்கு மண்டலத்தை உங்களுக்கும் பாத்தியதையாக எழுதிக்கொடுப்பேன் என்று இப்போதே உறுதி மொழி தருகிறேன்”

மன்னர் மகிந்தர் பறையடித்துப் பிரசித்தம் செய்வோருக்குப் பின்வருமாறு ஓலையை எழுதி அனுப்பினார்.


‘மக்களே எங்கள் சிங்கள தேசத்துக்கும், புத்த சமயத்துக்கும் எங்கள் மத்தியிலிருக்கும் புல்லுருவிகளின் ஆதரவுடன் பிற தேசத்தாரினால் ஆபத்து விளையக் காத்திருக்கின்றது என்று நமது ஒற்றர் படை தகவல் கொண்டு வந்திருக்கிறது. எனவே மக்கள் விழிப்போடு இருந்து எமது தேசத்துக்கு அச்சுறுத்தல் தருபவர்களைக் காட்டிக் கொடுத்து நாட்டை வரப்போகும் ஆபத்திலிருந்தும் காப்பாற்றும்படி இத்தால் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு இரண்டாம் கெமுனு உங்கள் மகிந்த மகாராஜா’


அப்போது அவசரம் அவசரமாக கோதபாயர் அரண்மனைக்குள் நுழைந்தார். சாதாரணமாகவே கடு கடுவென்றிருக்கும் அவர் முகத்தில் இன்னும் ஆயிரம் முகங்கள் முளைத்திருந்தன.


“அண்ணா.. எமது நாட்டுக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. ஒரு பக்கம் தமிழர். மற்றப்பக்கம்….” மேலும் சொல்வதை நிறுத்திக் கொண்டு கோதபாயர் இரு அமைச்சர்களையும் மகிந்தரையும் மாறி மாறிப் பார்த்தார்.


“எனதருமைத் தம்பியே சொல். உன்னைக் கொலை செய்ய முயற்சித்தபோது ஓடோடி வந்து கட்டிப் பிடித்து முத்தமிட்டேனே.. ஞாபகமிருக்கிதாடா என் தம்பியே. நீ சின்னவனாயிருந்தபோது….”


“போதும் நிறுத்து. அண்ணா…தெற்குக் கடலில் பிரமாண்டமான கப்பல் ஒன்று நங்கூரமிட்டிருக்கிறதாமே. அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?


“தெரியாதடா தம்பி. எனக்கு எதுவுமே தெரியாது.”


“தெரியாதே.. தெரிந்தே இருக்காதே.. உங்கள் நட்பான அயற் தேசம் இந்துஸ்தானம் இது பற்றிச் சொல்லியிருக்காதே…இந்த நண்பர்களும்கூடச் சொல்லியிருக்க மாட்டார்களே..?”


“உனக்கெப்படியாடா தம்பி இதுபற்றித் தெரிந்தது”


“சீனத்து பிரதானி தகவல் அனுப்பியிருந்தார். தமிழருக்கு உதவி புரிவதற்காக வந்திருக்கலாமாம். எதற்கும் விசாரியுங்கள்…”

அப்போது அரண்மனையின் மந்திராலோசனைக் கூடத்திலிருந்து யாரோ வலியினால் முனகும் சத்தம் கேட்டது. ஒருவர் தள்ளாடிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்.

"அண்ணா சமலரே. என்ன கோலமிது? உங்களுக்கு என்ன நடந்தது? "

மன்னர் மஹிந்தரும் அமைச்சர்களும் ஓடிப்போய் அமைச்சர் சமலரைக் கைத்தாங்கலாக அழைத்துவந்து இருக்கையில் அமர்த்தினர்.

"எனதருமைத் தம்பிகளே! தம்பி பசிலரின் ஆலோசனைப்படி நாட்டில் பரிபாலனம் எப்படியிருக்கிறது என்று பார்த்துவரலாம் என்று மாலை நகர் வலம் போனேனா. மக்கள் கற்களால் எறிந்தும் அடித்தும் துரத்தியும் விட்டார்கள். அவர்கள் மிகவும் கோபமாய் இருக்கிறார்கள். நீங்கள் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்"

அப்போது அமைச்சர் தேவானந்தர் அருகே வந்து மெதுவான குரலில் ஏதோ கூறினார். மன்னர் மஹிந்தரின் முகம் மலர்ந்தது.

தொடரும்.





சனி, 30 ஜூன், 2007

வெறும் - குறும் பா

எத்தனையோ விதம் விதமாய்ப் பார்ப்பாள்


எதற்கு எது அர்த்தமென விதி விதிப்பாள்


இத்தனையும் செய்பவளென் கண்மணியாள் என்றெடுத்து


முத்தமிடப் போனால் முகத்தைச் சுளிப்பாள்.




திங்கள், 25 ஜூன், 2007

சிவாஜி - வழமையான சங்கர் .......

சிவாஜி பார்த்தேன். முதலில் பார்ப்பதற்கான எண்ணம் இருக்கவில்லை. பூங்குழலியின் அன்புக்கும் அனுசரணைக்கும் மறுப்புச் சொல்ல முடியாமற் போய்விட்டது. பார்க்கக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. பூங்குழலிக்கு நன்றி. 

 தமிழரை இழிவு படுத்துவதில், திராவிட அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாக இயக்குனர் சங்கரைச் சொல்லலாம். அவருடைய எல்லாப் படங்களிலும் தமிழரைப் பழித்தல் மறைமுகமாக இழையோடும். ரஜனியின் தமிழெதிர்ப்புவாதமும் சங்கரின் தமிழரைப் பழித்தலும் சேர்ந்தே எனக்கு இப்படத்தைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பத்தைத் தகர்த்திருந்தது. ஆனாலும் பூங்குழலியின் ஆசைக்குப் பலம் அதிகம். என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு ஒரு வெறும் திரைப்பட ரசிகனாகப் பார்த்தால் இப்படம் என்னைத் தன் பக்கம் இழுத்திருக்கிறது என்பதனால் அது சங்கருக்கு வெற்றியே. 

 'இந்தியன்', 'அந்நியன்' வரிசையில் மணிரத்னம், சங்கர் போன்றவர்கள் இந்தியாவைத் திருத்துகிறோமென்று தாமும் அதே கூவத்தில்தான் குளித்தெழும்புகிறார்கள். ஆனாலும் தாங்கள் புனித கங்கையிற் குளித்ததாகச் சொல்லி ரசிகர்களை ஏமாற்றி அதில் வெற்றியும் பெறுகிறார்கள். 

இப்படி ஆயிரம் படங்கள் வந்தாலும் ரசிகர்கள் நடிகர்களின் கட் அவுட்டுகளுக்குப் பாற் பொங்கல் பொங்கியும் ஆட்டுக் கடா வெட்டியும், கற்பூரம் கொழுத்தியும் கொண்டாடுவது நிறுத்தப்பட மாட்டாது. காரணம் அவைகளும் சந்தைப்படுத்தற் திட்டப்படியே நடைபெறுகின்றன. 

மொத்தத்தில் சங்கர், ரஜனி, மெய்யப்பன் போன்ற கறுப்புப்பண தாதாக்களையும் ரஜனி ரசிகர்களையுமே இப்படம் திருத்த முயல்கிறது. ஆனாலும் இந்தியாவின் பிரச்சினகளை மீண்டும் மீண்டும் காட்டிக் கொள்வது இந்தியா திருந்த வேண்டும் என்ற நல்ல நோக்கம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பலவீனமான ரசிகர்கள் இதற்குப் பலிக்கடாவாகிறார்கள் என்பதே கவலை. 

எப்போதுமே கெட்டவர்களும், சோம்பேறிகளும், பாமரர்களும், நம்பத் தகாதவர்களும், குரூர முகங்களைக் கொண்டவர்களும் தமிழர்களாகக் காட்டப்படுவது சங்கரின் முத்திரை. 'சிவாஜி' படத்திலும் இது விதி விலக்கல்ல. 

 'அவன் என்னோட படிச்ச ஐயர்ப் பையன். நம்பிக்கையாகக் கொடுக்கலாம்' என்று விவேக் ரஜனிக்குச் சொல்வதன் மூலம் சங்கர் திராவிடருக்கு உச்சி அடி போடுகிறார். 

 இப்படம் வசூலை எதிர்பார்த்துத் தயாரிக்கப்பட்டது. இளைய தலைமுறையினதும் பாமர ரசிகர்களினதும் பலவீனங்களை நன்றாக அறிந்து வைத்திருக்கின்ற சங்கருக்கு அது பிரச்சினையே அல்ல. பொழுது போக்கு ஒன்றே நோக்கம் என்று இப்படம் பார்க்கப் போவோரை அது ஏமாற்றவில்லை. ரஜனியும் தன் பங்கைச் சரியாகவே செய்திருக்கிறார். 

 எல்லோருக்கும் வெற்றி தமிழினத்தைத் தவிர. இதற்குக் காரணமானவரே தமிழராகவிருக்கும்போது யாரைக் குறை சொல்வது?

செவ்வாய், 19 ஜூன், 2007

காதல் -King Arthur - கார்ல் ஜுங்

காதல் என்றதும் றோஜாப் பூ, மாலைச் சூரியன், கடற்கரை, தென்றல் காற்று, கவிதை என்ற இத்தியாதிகளையெல்லாம் கடந்து ஆட்டம், பாட்டு என்று சினிமா ரகமாகி காதலர் தினம் என்ற வியாபாரப் பொருளாகியிருக்கிற இந்தக் காலத்தில்....

இந்தக் காதலெல்லாம் காதலேயல்ல என்று சொன்னால் சங்க காலத்து அகத்திணை நூல்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சண்டைக்கு வந்துவிடுவீர்கள்.

உண்மையில் 'நம்ம சினிமாவில' வார காதல்தான் 'நிஜமான' காதல் என்று ஆதர் ராஜா (King Arthur) வைக் காரணம் காட்டி நவீன உளவியல் விற்பன்னர்கள் கூறுகிறார்கள். சரி ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறதா? மேலே படியுங்கள்.

சில வருடங்களுக்கு முன் லண்டனில் நான் வாழ்ந்தபோது இச் சம்பவம் நடந்தது. எனது நண்பர் ஒருவர் சாகசக்காரர். 'குழப்படிக்காரன்' என்ற ரகத்தில் இலகுவாக அடங்குவார். Handsome ஆனவர் என்று அவரைச் சொல்ல முடியாது. நாங்கள் வழக்கமாகப் போகும் மதுச்சாலைக்கு வரும் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணிற்கு என் நண்பர் மீது பிரியம். என் நண்பரைவிட அப் பெண்ணுக்கு வயது இரண்டு மடங்கிற்கு மேல். திருமணம் முடித்து இரண்டு வளர்ந்த பையன்கள் உண்டு. கணவன் ஆஜானுபாகுவான ஆனால் நல்ல சுபாவமுள்ளவன். அவனும் அவளோடு மது அருந்த வருவதுண்டு.

விடயம் முற்றி ஒரு நாள் அப்பெண்ணை அழைத்துக் கொண்டு எனது நண்பன் தனிக்குடித்தனம் ஆரம்பித்து விட்டான். எனக்கு அது சரியானதாகப் படவில்லை.

'நல்ல கம்பீரமான கணவனும் இரண்டு அழகான குழந்தைகளும் இருக்கும்போது நீ ஏன் இப்படியொரு காரியத்தைச் செய்தாய்?' என்று நான் அவளிடமே கேட்டேன்.

' என் கணவன் நல்லவன் தான். ஆனால் அவன் சதா என் காலுக்குள்ளேயே கிடப்பான். இரவு இரண்டு மணிக்கு போய் சிகரட் வாங்கிக்கொண்டு வா என்றால் ஓடுவான். ஆனல் உன்னுடைய நண்பனோ எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவான் என்று நான் ஏங்கிக்கொண்டு இருக்கிறேன்' அதுதான் வித்தியாசம் என்றாள்.

அவளது மனோநிலையைப் புரிந்துகொள்ள நாம் விஞ்ஞானியாயிருக்க வேண்டியதில்லை. அவளைப் போல் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவள் ஒரு துணிச்சல்காரி அவ்வளவுதான்.

எமது விருப்பு வெறுப்புகள் எல்லாம் ஒரு வகையில் ஆழ்மனத்தில் பதிவுகளாகி இருக்கின்றன. எமக்குக் கிடைப்பவை இப் பதிவுகளோடு ஒத்தவையாகிவிட்டால் நாம் அதிர்ஷ்டசாலிகள். இல்லாதபோது கிடப்பவற்றை இரண்டாம், மூன்றாம் பட்சமாகவே ஏற்றுக்கொள்வோம்.

இலட்சிய கனவன் பற்றி அவள் கொண்டிருந்த 'பதிவு' திருப்தியற்றதாக இருந்திருக்கலாம். அப்படியானால் அவள் அப் பதிவை எங்கிருந்து பெற்றாள்?

இங்குதான் King Arthur ஐத் துணைக்கழைத்துக் கொண்டு வருகிறார் கார்ல் ஜுங். எல்லா மனிதர்களினதும் ஆழ்மனங்களில் சில மூலப்படிவங்கள் (archetypes) துயில் கொள்கின்றன என்றும் அவை எங்கும் எக்காலத்திலும் கனவுகள் மூலம் வெளிக்கொணரப்படலாம் என்றும் கார்ல் ஜுங் கருதுகிறார்.

ஆர்தர் மன்னனை ஒரு புராண நாயகனாகப் பார்ப்பதனால் தான் அவனை மக்கள் மோகிக்க முடிகிறது. அவனது துணிச்சலான சாகசமிக்க வாழ்வே அவனைக் காதலின் ஒரு மூலப்படிவமாக்கியிருக்கிறது.

இன்றய சினிமாவின் அடி தடி வல்லவர்களும், படை வீரர்களும் மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பதின் காரணமுமிதுவே.

துணிச்சலான காரியங்களைச் செய்யும் நாயகர்களைப் பற்றி எழுகின்ற மோகமே காதலாகப் பரிணமிக்கிறது. இந்நாயகர்களைச் (இரு பால்)சுற்றி எழுப்பப்படும் பிம்பம் (image) மனங்களில் நிரந்தரமாகவே பதிக்கப்பட்டு விடுகிறது. நமது காப்பிய நாயகர்களான கண்ணனும், ராமனும் தெய்வங்களாகப் பார்க்கப்படுவதைவிட 'காதலர்' களாகப் பார்க்கப் படுவதும் பக்த சிரோன்மணிகள் பரவசப் படுவதுமே அதிகம். முப்புரமெரித்த சிவனின் மீதும் ஆறு படை வீடுகளைக் கொண்ட முருகன் மீதும் கண்ணீர் சொரிந்து பாடப்பட்ட பக்தி இலக்கியங்கள் அக் கடவுள்களை நாயகர்களாக (heroes) உருவகப்படுத்தியதின் விளைவுகளே.

மேற்கத்திய இலக்கியங்கள் காதல் (romance) என்றதும் King Arthur ஐ உதாரணமாகக் காட்டுவதற்குக் காரணம் அம் மன்னன் புரிந்த சாகசங்களினால் (adventures) மக்கள் கவரப்பட்டமையே.

புராண காலங்களிலிருந்து இப்படிப்பட்ட பிம்பங்கள் உருவாக்கப்படுவதும் (அது கற்பனைக் கதைகளாகவோ அல்லது நிஜமாகவே சாகசம் புரிந்த மானிடர்களாகவோ இருக்கலாம்) அவற்றைச் சுற்றி மக்கள் கூட்டம் கூடுவதும் காலப்போக்கில் அவற்றில் சில தெய்வங்களாக்கப்பட்டு வழிபடப்படுவதும் வழக்கமாக வந்துள்ளது. (இன்றய தமிழ்ச் சினிமா உருவாக்கிய சினிமாத் தெய்வங்களைப் போலவே). இவ்வுருவ வழிபாடுகளை வெறும் கல்லார் செயல்களென நாம் முற்றாக ஒதுக்கிவிட முடியாது என்பதற்கு இன்றய தமிழ் சினிமாவே நல்ல உதாரணம். மதுரையை எரிக்காது கண்ணகி வெறுமனே தூக்குப் போட்டுக்கொண்டு செத்துப்போயிருப்பின் இன்று அவள் தெய்வமாக ஆக்கப்பட்டிருக்க மாட்டாள்.

அதற்காக நம்ம பகுத்தறிவுக் கொழுந்துகள் ஆர்ப்பரிக்கவும் முடியாது. பிள்ளையாரின் கற்சிலையைத் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் அவ்விடத்தில் இன்னுமொரு சிலையைத்தானே வைக்கிறார்கள். அச்சிலைக்கும் இன்னுமொரு ஆயிரம் வருடங்களில் மூன்று சாமப் பூசைகள் நடக்காதென்பதற்கு என்ன உத்தரவாதம்?

எனவே நாயகர்கள் உருவாகப்படுவதும் அச்ச்ம்பவங்கள் புராணங்களாகும்போது அதே நாயகர்கள் தெய்வங்களாக மாற்றமெடுப்பதும் நெடுங்கால நடைமுறை. அதை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ உளவியல் ஞானி கார்ல் ஜுங் ஏற்றுக்கொள்கிறார்.

1913ம் ஆண்டு தனது குருவான சிக்மண்ட் பிராய்ட் டுடன் கருத்து வேறுபாடு கொண்டு புறப்பட்ட கார்ல் ஜுங் உலகின் பல மூலைகளிலுமிருந்து பெற்ற தரவுகளைக் கொண்டு அவர் தனது கருதுகோளை நிரூபிக்கிறார்.

இடுகுறி (symbol), கொள்கை (theme ?), பகைப்புலம் (setting) அல்லது குணாம்சம் (character) போன்ற மூலப் படிவங்கள் (archetypes) பல தொடர்பற்ற இடங்களிலும், காலங்களிலும், இலக்கியங்களிலும் மீண்டும் மீண்டும் தோற்றம் பெறுகின்றன. இப்படியான மூலப் படிவங்களை ஆழ்மனச் சேர்க்கை (collective unconscious) என்று கார்ல் ஜுங் கூறுகிறார். வீரத்தின் (சாகசத்தின்) அடிப்படையில் தோன்றும் காதலுக்கு மூலப் படிவங்கள் பலவற்றை உதாரணமாகக் காட்டலாம். ஆதர் ராஜாவை புராண காதலுக்கு உதாரணமாகக் காட்டும்போது அவரின் வாழ்வும் அவர் புரிந்த சாகசங்களுமே அவரை பன்னெடுங்காலமாக நினைவில் வைத்திருக்கின்றன. ஆதர் மன்னனின் வாழ்வு நமது காவியங்களின் கதை அமைப்பையும் அதில் வரும் பாத்திரங்களையும் பெரும்பாலும் ஒத்துப் போகிறது. அவற்றில் வருகின்ற பாத்திரங்கள், கதையமைப்பு எல்லாவற்றிலும் பல பொதுமைகள் காணப்படுகின்றன.

அதி மானுட சக்தி (super power) - இராமாயண ராமன்
மானிட மேம்பாடு (bettering humankind) - பகவத் கீதைக் கண்ணன்
துணிவு (courage) - மஹாபாரத வீமன்
மீள் பிறப்பு (resurrection myth) - சூரன் / சிகண்டி
அடியாள் )assistant) - அனுமான்
எதிரி (nemesis) - இராவணன்
இடையூறு (tragic flaw) - சீதை கடத்தப்படுதல்
படிப்பினை (moral) - பிறர் மனை தவிர்த்தல் (இராமயணம்)
சாதுரியம் (clever / sharp)- கிருஷ்ணன்
பணிவு (humble) - தருமன்
மர்மமான பிறப்பு (mysterious birth) - கர்ணன்

ஆதர் மன்னனின் வரலாற்றைப் படித்தவர்கள் மேற்கூறிய பொதுமைகளைக் காணமுடியும்.

எனவே இப்படியான கதைகளும் பாத்திரங்களும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் எப்படி பல பொதுமைகளோடு உருவாக்கப்பட முடியும்?

கார்ல் ஜுங் 'ஆழ்மனங்களில் தோற்றமளிக்கும் பல வடிவங்கள் 'நாம் வேறெங்கோ பார்த்திருக்கிறோம்' (de-javu) என்கின்ற நினைப்பை உருவாக்குகின்றன என்றும் அவ்வடிவங்கள் பிரபஞ்ச ரீதியாக எல்லா ஆழ்மனங்களிலும் (collective) சம்பவிக்க முடியும்' எனக் கருதுகிறார். ஆழ் மனங்களினிடையே பரிபாஷிக்கப்படும் விடயங்களுக்கு மொழியில்லை பிம்பங்கள் மட்டுமே என அவர் கருதுகிறார்.

இப்படியான உருவங்கள் ஆழ்மனதில் தோன்றி மறையும்போது அவை கனவுகளாகவும் அவை வெளி மனத்தால் நிரந்தரமாக்கப்படும்போது அது மனப்பிறழ்வு நிலையெனக் கருதப்படுகிறது என்றும் கார்ல் ஜுங் கருதுகிறார். இன்றய சினிமா உதாரணத்தில் கூறினால் ஒருவர் ரஜனியைக் கனவில் காண்பதற்கும் தினமும் தன்னை ரஜனியாகவே மாற்றிக்கொண்டு விடுபவருக்கும் (பைத்தியம்) வித்தியாசம் உண்டு.

காதலில் மூழ்குபவர்கள் தனது நாயக / நாயகி களின் மீது மோகம் கொள்வத்ற்கு முன்னர் அவர்களது ஆழ்மனங்களில் பல பிம்பங்கள் தோன்றி விடுகின்றன. பெரும்பாலான பெண்கள் போர் வீரர்களையும், சீருடைக்காரரையும், அதிகாரத்திலுள்ளவர்களையும், சாகசம் புரிபவர்களையும், கலகக் காரர்களையும் மோகிப்பதற்குக் காரணம் இவர்களைப் போன்ற பிம்பங்கள் ஏற்கெனவே அவர்களது ஆழ்மனங்களில் நடமாடியமையே.

பொன்னார் மேனியன் எத்தனை அடியார்களின் கனவில் தோன்றினார்? புலித் தோலை அரைக்கசைத்திருந்தது பற்றி அடியார்கள் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? முன் பின் யாராவது அடியார்கள் மனத்தில் அப் படிவத்தைப் போட்டு வைத்தார்களா? பலரது கனவுகளில் ஒரே பிம்பங்கள் ஏன் தோன்ற வேண்டும்?

இதையேதான் கார்ல் ஜுங் ஆழ்மனச் சேர்க்கைகளிலிருந்து வரும் மூலப்படிவங்கள் என்கிறாரா?

ஞாயிறு, 17 ஜூன், 2007

இவ்வ்ழியால் வாருங்கள்- திரை விமர்சனம்

யாப்பன விற்கு வாருங்கள்

இலங்கையில் தடை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சிங்கள திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் அசோக கங்கம. ஏனையோர் பிரசன்ன விதானக, விமுக்தி ஜயசுந்தர ஆகியோர்.

இவாகளது படங்களின் தடைக்கு எதிராக, மூத்த திரைப்பட இயக்குனரும், சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றவருமான லெஸடர் ஜேம்ஸ் பீரிஸ் கருத்து தெரிவித்தபொழுது, இவ்வாறான தடைகள் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்துக்கு நாட்டை இட்டு செல்கின்றமைக்கான அறிகுறியாகும் என தெரிவித்துள்ளார். The Chairman of the National Film Corporation (NFC) Sunil S. Sirisena (who is also a secretary to the Defence Ministry) கருத்து தெரிவிக்கையில் படைப்பாளிகளுக்கு எல்லைகள் வகுப்பது தரமான படங்கள் வெளிவருவதை தடைசெய்யும் என்றார். தனது 'Pura Handa Kaluwara’ படத்துக்கு எதிரான தடைக்கு உயர் நீதி மனறம் சென்றவரும் சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றவருமான பிரசன்ன விதானக கருத்து தெரிவிக்கையில் அரசியல்வாதிகள், தங்களின் சப்பாத்துக்களின் கீழ், படைப்பாளிகள் தமது கருத்துக்களை, கொள்கைகளைப் போட்டுவிடவேணடும் என நினைக்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் படைப்பாளிகள் அடிபணியப் கூடாது. ஹிட்லர், ஸ்ராலினுக்கு எதிராக நிமிர்ந்து நின்ற படைப்பாளிகளை இன்றும் உலகம் மதிக்கின்றது என்றார்.ஆனாலும் பெரும்பாலான வெகுசனத் தொடர்பு சாதனங்கள், இத்தடையை ஆதரித்து மௌனம் தெரிவித்தன. இவற்றையும் மீறி இந்த படைப்பாளிகள் தொடர்ந்து படங்களைத் தயாரிக்கின்றனர். இதில் அசோக கங்கம வும் ஒருவர். இவர் இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமாக முதலில் 'This is my moon ' (இது என் நிலா) என்ற படத்தையும், பின்னர் சுனாமி பற்றிய கிழக்கிலங்கையை மையமாகக் கொண்ட ''Neganahira Weralen Asena' or 'The East is Calling' என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து 'Take This Road' (இவ்வழியால் வாருங்கள்- 'Me Paren Enna' ) என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இந்த தொடரைப்பற்றி பார்ப்பதற்கு முன்னர், இவர் தமிழ் தேசியம் பற்றி தெரிவித்த கருத்துக்களைப் பார்ப்பது அவசியம். அவற்றில் சில.

• இலங்கையில் கலாச்சாரம் இல்லை, சமூகம் இல்லை, மனித உறவுகள் இல்லை. இருப்பதெல்லாம் தனி மனிதர்கள். அவர்கள் தன்னிச்சையாக இருக்கலாம், விரும்பின் நிர்வாணமாக நடந்து திரியலாம். சுதந்திரமாக செக்ஸ் படம் எடுக்கலாம

• தேசியவாதிகள், இனவாதிகளின் கருத்துப்படி “ இனப்பிரச்சினை மேறகத்தியரால் ஏற்படுத்தப்பட்டது. இவாகளுக்கு மேற்கத்திய சினிமாவும், விஞ்ஞானமும் எதிரி. ஆனால் இன்று வீதியால ஒரு பெண் நடந்து செல்ல முடியாது, பாடசாலைக்கு சிறுவர்கள் வாகனத்தில் கூட பாதுகாப்பாக செல்லமுடியாது. மக்கள் தங்களுக்குத் தேவையான உணவு, உடையை வாங்கமுடியாதுள்ளது. வெகுசன தொடாபு சாதனங்களில் வன்முறைப்பற்றிய செய்திகள் நிரம்பி வழிகின்றன. யுத்தத்தில் இராணுவத்தின் தியாகம் என்பதும் தேசத்துக்காக, நாட்டு மக்களுக்காக என்று கூறப்படுபவையும் வெறும் அரசியல் கோஷங்கள். வேறு தொழில் இல்லாமையினால் வாழ்க்கையைக் கொண்டு நடத்தவே இராணுவத்தில் பலர் சேர்கின்றனர்.

• போரின் விளைவு- உ.ம் - குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் பிரகாரத்தின் படி, சுமார் 33,000 குழந்தை பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 20 விகிதம் பெண் சிறுவர்கள், 10 விகிதம் ஆண் சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர்.


• நான் விடுதலைப்புலிகள் ஆதரவாளனில்லை. ஆனால் தமிழ் மக்கள் பிரச்சினையை ஆதரிக்கின்றேன். நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை வலியுறுத்துகின்றேன்.

இவை அசோக கங்கம இலங்கையைப்பற்றி தெரிவித்த கருத்துக்கள்.

This is My Moon (இது என் நிலா)

போரின்போது இராணுவச் சிப்பாயிடம் சென்றடைகிறாள் ஒருத்தி. சிப்பாய் இவளைக் கண்டதும் சுட முயற்சிக்கிறான். அவள் தனது சங்கிலியைக் கழற்றுகிறாள். ஆனால் அவன் குறி வைப்பதில் இருந்து விலகவில்லை. அடுத்து பாவாடையைத் தூக்குகிறாள். முகத்தை மூடிக் கொள்கிறாள். அவன் புணர்கிறான். அவனைத் தொடர்ந்து அவளும் கிராமத்துக்குச் செல்கிறாள். இவளது வருகை அவனது முறைப் பெண்ணுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. கிராமத்தில் சிப்பாயின் அண்ணன், மாணவன் போன்றோரால் அவள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிறாள். இறுதியாக அருகில் உள்ள பௌத்த விகாரையில் தஞ்சம் அடைகிறாள். மறுநாள் காவியுடையை அநாதரவாக விட்டுவிட்டு பிக்கு காணாமல் போய்விடுகிறார். இறுதியில் இப் பெண்ணுக்கு பிறக்கும் பிள்ளையை கைகளில் ஏந்தி 'இது என் நிலா என்கிறான். இதுவும் தமிழ் மக்கள் பிரச்சினை தங்களது கைகளில் உள்ளன என்று கூறுவது போல் உள்ளது.இங்கு யுத்தத்தின் கொடுமையை பாலியல், மதம் எனபனவற்றின் ஊடாக் காட்ட முற்படுகிறார். யுத்தத்தின் பிரதிபலிப்புகளை சமூக தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். கிராமங்களில் பாலியல் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதன் வெளிப்பாடு தான் போர்ப்பிரதேசங்களில் இராணுவ வீரர்களின் பாலியல் கொடூரங்கள் என சமாதானம் கூறுகிறாரோ என்ற ஜயமும் எழுகிறது. மனிதனின் வழமையான இயங்குதலை, இருத்தலை தீர்மானிப்பது பாலியலா? இன்றைய சிங்கள சமூகம் பாலியலை மையப்பட்டு இயங்குகிறது என்பது இவரது குற்றச்சாட்டு. இது பௌத்த, சிங்கள சமூகத்ததை விமர்சிக்கலாம், ஆனால் இனப்பிரச்சினை கொடூரங்களுக்கான காரணிகளில் ஒன்றாக கருதமுடியாது.இறுதியாக 'இது என் நிலர்' என இராணுவவீரர் கூறும் காட்சி தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒன்ற விடவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்புகின்றது. இங்கும் யுத்தத்தின் மூலவேர் ஆராயப்படாமல் அதன் எச்ச சொச்சங்கள் விமர்சிக்கப்படுகின்றன.

இவ்வழியால் வாருங்கள் Take This Road

இந்த 11 வார தொடரை ரூபவாகினி மற்றும் சனல் ஜ தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பின. இதன் மூலம் 25 விகிதம் கிராம பார்வையாளர்களையும், 41 விகிதம் நகர பார்வையாளர்கயையும் பார்வையிட்டுள்ளனர். இது மொத்தம் 4.1 மில்லியன் மக்களாவார். இதில் தமிழ், முஸலீம் பார்வையாளர்களும் அடங்குவர். இவரது முந்தைய படங்களை தடைசெய்த அரசு, இந்த தொடரை, அதுவும் தனது அரச தொலைக்காட்சி நிறுவனம் மூலம் ஒளிபரப்பச்செய்தமை ஆச்சரியத்துக்குரியதும், சிந்திக்கவேண்டிய விடயமுமே.

A9 பாதை திறந்து விட்ட பொழுது, அவ்வழியே சுபசிங்க குடும்பமும், ஒரு முஸ்லீம் குடும்பமும், பிரயாணிக்கின்றது. சுபசிங்க குடும்பம் நாகதீபத்திற்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். சிங்கள நூல்களும், இணையத்தளங்களும் யாழ்ப்பாணம் முழுவதும் புத்தர் யாழ்ப்பாணம் வந்த பொழுது சிங்கள மக்கள் நிறைந்து வாழ்ந்தார்கள் என பிரச்காரம் செய்கின்றார்கள். கந்தரோடை, நிலாவரை, உருத்திரபுரம், வவனிக்குளம், சுன்னாகம், கொடியவத்தை, மல்லாகம், உடுவில், புலோலி போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாக கூறிய சுவடுகளை சான்றாக காட்டுகிறர்கள்.( http://easyweb.easynet.co.uk/~sydney/jaffna.htm) கி.மு 1ம் நூற்றாமாண்டு புத்தர், இலங்கைக்கு இரண்டாம் தடவை விஜயம் செய்த பொழுது நாகதீபத்திற்கும் சென்றதாக கூறப்படுகிறது. நாகதீபம், நயினாதீவில் அமைந்துள்ளது. புத்தர் சென்ற தலமாதனால் பௌத்தர்கள் இக் கோவிலுக்கு தரிசனம் செல்வது வழமை.

பயணங்களை அடிப்படையாகக்கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளன. இது கதையை நகர்த்துவதற்கான பொதுவான ஓர் உத்தியாகும். இங்கும் யு9 வழியே சென்று யாழப்பாணத்தை அடைந்து, பின்னர் நாகதீபம் சென்று, மீணடும் வந்து யாழ்ப்பாணம் வந்து தங்குகின்றனர். படத்தின் பெரும்பாலன பகுதி யாழப்பாணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. நாகதீபம் செல்லும் வழியில், சுபசிங்கவின் மகள், தனது முன்னால் பல்கலைக்கழக சகாவும், இந்நாள் அரசு சார்பற்ற நிறுவன அதிகாரியை சந்திக்கின்றார். இவரின் வேண்டுக்கோளுக்கினங்க யாழ்ப்பாணத்தில் இவர்கள் வீட்டில் தங்குகின்றனர். அந்த தமிழ்க் குடும்பத்தில், அவர்களது மகன் இயக்கத்தில் இருந்து விட்டு தங்கியுள்ளார். அரசு சார்பற்ற நிறுவன அதிகாரி நாவலப்பிட்டியிலிருந்து வந்து இந்த வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார். சுபசிங்க குடும்பம் மீண்டும் கொழும்புவிற்கு செல்ல வெளிக்கிடும் பொழுது, பக்கத்து வீட்டு சிறுமி நிலக்கீழ் குண்டு வெடித்து ஓரு காலை இழந்து விடுகின்றார். இதனால் சுபசிங்கவிற்கு மாரடைப்பு வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். இதனால் இவர்கள் அதே வீட்டில் தங்குகின்றனர். ஆரம்பத்தில் இவர்களுக்கிடையிலிருந்த மனப்புகைச்சல், நம்பிக்கையின்மை பின்னர் நீங்கி விடுகின்றது.

யாழ்ப்பாணம் மீண்டும் வந்துள்ள, வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் படும் அவலங்கள் சிறப்பாக பதியப்பட்டுள்ளது. சொந்த மண்ணின்றி, அகதி முகாமிலேயே தஞ்சமாக இருக்கும் இந்த மக்கள் உண்மையில் இந்த போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். தங்களது சொந்த வீட்டிலேயே நிலக்கீழ் குண்டுகள். இது வரை எந்த வித மீள் குடியேற்ற திட்டங்களும் இன்றி அவலப்படுகின்றார்கள்.


சுபசிங்கவும், முன்னால் சமசமாஜக் கட்சி உறுப்பினரும், முன்னால் ஆசிரியருமான குடும்பத்தலை வரும், அரசியல் பேசும் பொழுது எழும் விமர்சனங்களில் பண்டாரநாயக்கவையும், இடது சாரிகளையும் விமர்சித்தளவிற்கு, தமிழ் தேசியவாதிகளை, சிங்கள பேரினவாதிகளை விமர்சிக்கவில்லை. இந்த போரின் இன்றைய நிலை இரு இனங்களுக்குமிடையாலான புரிந்துணர்விற்கப்பால் பரந்து விரிந்துள்ளது. மக்களுக்கப்பால் இரு போர் இயந்திரங்களும், துணை இயந்திரங்களும் இயங்குகின்றன. இவை மக்கள் நலனில் அக்கறையின்றி சொந்த நலனில் அக்கறை காட்டுகின்றன. நவீன தேசியத்துக்கு, இனங்களுக்கிடையில் தொடர்ச்சியான கருத்துரையாடல்களும், புரிந்துணர்வும் அவசியம். அதனை இயக்குனர் இப்படத்தில் வலியுறுத்துகின்றார். போர் இயந்திரங்களுக்கு அப்பால் மக்கள் தனித்து இயங்குகின்றார்கள். இவர்கள் இணைவை இந்த இயந்திரங்கள் தடுக்கின்றன என்பதை பதிவாக்கியுள்ளார். போரைப்பற்றிய அறிவு சார் மதீப்பீடுகளை (Cognitive Values) இங்கு விவாதிக்கின்றார். (தர்மசேன பத்திராஜ, சொல்லாது உன்னகே என்ற படத்தில் விரிவாக சுதந்திரம் பற்றி விவாதிக்கின்றார்)
ஒரு சிங்கள படைப்பாளியாக, தனது குற்ற உணர்வின் கருத்தாக்கங்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளார். எதிர் முரண் பாத்திரங்களுக்கூடாக, விசாரணைகளை தொடர்கின்றார். இந்த யதார்த்த நிலை இவர்களை நேர் கோட்டில் நிறுத்துகின்றது. இவரது குற்ற உணர்வின் வெளிப்பாடாக இவர்கள் தங்கியுpருந்த வீட்டின் மகனை, இவர்களது வாகனஓட்டி தாக்க முற்படும் பொழுது, சுபசிங்கவின் மூத்த மகன் வாகனஓட்டியை அடிப்பது வெளிப்படுகின்றது. சுபசிங்கவுக்கும், குடும்பத்தலைவருக்குமான விவாதங்களில், குடும்பத்தலைவர் குரல், கருத்துக்கள் ஓங்கி இருப்பமை மற்றொரு உதாரணம். இப்படத்தின பெரும்பாலான பார்வையாளர்கள் சிங்களவர்கள். இவர்களையும் இந்த குற்ற உணர்வு தொற்ற வேண்டும் என்பதே இயக்குனரின் நோக்கம். (இந்த குற்றஉணர்வின் வெளிப்பாட்டை, இவரையும் விட சிறப்பாக பிரசன்ன விதானகே, தனது படங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.) ஆனாலும் புரிந்துணர்வில் சிங்களவர் மேலோங்கி நிற்பதாக காட்டியுள்ளார். படத்தில் வரும் அரசு சார்பற்ற அதிகாரி மலையகத்தை சோந்தவர். இவர் யாழ் வாழ் மக்களில் ஒருவரக கருதப்படுவதாக காட்டுகின்றார். இது கூட சற்று அதிகம் தான். யாழ் வாழ் சமூகம் இன்னமும் தங்களுக்கிடையில் சாதி, பிரதேச வேறு பாடுகளை முற்றாக கழைந்துவிடவில்லை.
போரில் மனித வாழ்வின் நிச்சயமற்ற தன்மை, போர் வாழ்வின் தாக்கங்கள், இழப்புக்கள், பிரிவுகள் மனிதர்களை மாற்றிவிடுகின்றது. அவர்களது அக உணர்வின் அச்சங்களையும் மீறி அறிவுசார் முடிவுகளை, மொழி, மதங்களுக்கப்பால் எடுக்கவைக்கின்றது. எனக் கூறியுள்ளார். ஆனால் இன்னமும் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பெரும்பாலோனோர் அறிவு சார் முடிவுகளை எடுப்பதில்லை.
ஏனைய வெகுசனத் தொடர்புசாதனங்களை விட சினிமா நவீன தேசியத்துக்கான கற்பிதங்களை மக்கள் மத்தியில் வழங்கும் வல்லமை பெற்றது. அசோக கங்கமவும், நல்ல சினிமா மொழிக’கூடாக இதனை நெறிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் தேசிய, குற்ற விசாரணைக்களுக்கப்பால், வழமையான பொறாமை, குறிப்பாக எதிர் பால் உறவுகளது மீதான பொறாமை, போட்டி உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
கணித உயர் பட்டதாரியும், இஙகிலாந்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவருமான அசோக கங்கம தனது கட்புலத்திற்கூடாக சிங்கள மக்களை நோக்கி விசாரணைகளை முன்வைத்துள்ளார். இது நவீன தேசியத்துக்கான ஓர் விவாதத்தை உருவாக்குமா?


தமிழ்த் தேசியத்தை பொறுத்தவரை, இன்று அதனை கேள்விகளுக்கோ, அல்லது விசாரணைகளுக்கோ இட்டு செல்ல முடியாதுள்ளது. மரணம் வரவேற்கப்படவேண்டிய் ஓர் கலை யாக, வாழ்வாக, இயல்பாக மாறப்பட்டுவிட்டது. எனவே இங்கு புதிய தேசியத்துக்கான எந்த கருத்தாடல்களையும் முன்வைக்க முடியாது. நாம் சார்ந்திருக்கும் நிலை சார்ந்து இயங்குகின்றோம்.. இது ஓர் வகையில் எமது அக உணர்வுகளின் வெளிப்பாடாகும். இதனால்தான் கொலைகளையும் எந்த வித விசாரணையும் இன்றி ஏற்றுக்கொள்கின்றோம். எமது அறிவுசார் கற்பிதங்கள் புத்தகங்களில் மாத்திரமே. திருநீறு அணிந்து, கூர்ப்பை போதித்தவர்கள் எமது ஆசிரியர்கள். சாதிகள் இல்லையடி பாப்பா எனக் கூறி சாதிக் கொலை புரிந்தவர்கள். எனவே எம்மிடம் எமது குற்றங்களுக்கான விசாரணைகளை படைப்புக்களாக எதிர்பார்க்க முடியாது.
தமிழ் தேசியம் பற்றி, இந்திய தமிழ் படைப்பாளிகளை விட, எமது படைப்பாளிகளை விட சிங்கள படைப்பாளிகளே அக்கறை காட்டியுள்ளார்கள். சர்வதேசத்துக்கு எமது நிலையை சொல்லும் வல்லமை பெற்றவை. இந்திய படைப்பாளிகளின் வியாபாரத்தன்மையே இப்படத்தை ரொரன்ரோவில் விநயோகிப்பதிலும் கையாளப்பட்டுள்ளது. ஏனோ தானோவாக, பத்தோடு, பத்தாக ரொரண்ரோ கடைகளில் விற்கப்படுகின்றன. இதனால் இப்படத்துக்கான முக்கியத்துவம் இழக்கப்படுகின்றது. கலையை வியாபாரமாக, தமது வாழ்விற்காக பயன்படுத்துவர்களின் திருவிளையாடல் இது. எது எப்படியிருப்பினும், மக்கள் மத்தியில் இப்படம் சென்றடையவேண்டும.;. இப்படத்தை 2 டொலர்களுக்கு பெரும்பாலான ரொரண்ரோ கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். மீண்டும் ஒரு தடைவ கூற வேண்டியுள்ளது ஆணி வேருக்கோ. புத்திரின் பெயரால் படத்துக்கோ இந் நிலை வராது.

Asoka Handagama
tele-dramas


Dunhinda Addara
Diyakata Pahana
Synthetic Sihina
Neganahira Weralen Asena

Movies
Thani Thatuwen Piyambanna
Me Mage Sandai
-ரதன்

என் உணர்வுகளைத் தொட்ட, தர்க்க மனத்தை விசாரித்த படம் இது. இருப்பினும் ஒருவேளை என்னுள் பதாங்கமாகவேனும் ஒதுங்கியிருக்கலாமென்றஞ்சிய முற்சாய்வைக் காரணம் காட்டி இப்படத்தைத் தமிழ்த் தேசீய அரசியலாற் காயப்படாத இளைஞர்களிடம் பார்க்கும்படி கொடுத்தேன். அவர்களது கருத்துக்கள்:

  • 'இப் படத்தைப் பிரதி செய்து இலவசமாக இலங்கை முழுவதும் விநியோகிக்க வேண்டும்.
  • இப் படத்தை இந்தியாவுக்கு அனுப்பி 'இப்படித்தான் படம் எடுக்க வேண்டும்' என்று அறிவுறுத்த வேண்டும்'

இதைவிட இப்படத்துக்கு வேறெந்த விமர்சனம் வேண்டும்.

-சிவதாசன்

புதன், 9 மே, 2007

மு.தளையசிங்கம்

மு.தளையசிங்கம் : இந்த யுகத்தின் சத்திய காவலர்

“தற்காலம் ஒரு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது மற்றது பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது”
மு.த. என்று இலக்கிய உலகம் அடையாளப்படுத்திய மு.தளையசிங்கம் புங்குடுதீவு மக்களுக்கு மிகவும் அந்நியமானவர். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் அடுத்து உட்காரும் இந்தச் சிந்தனாவாதிக்குரிய இடம் ஈழத்தில் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.
இதனால் மு.த.வைப் பற்றிய அறிமுகம் முதலில் இங்கு அவசியமாகிறது.
******
மு.தளையசிங்கம் 1935ல் புங்குடுதீவில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். கல்லாப் பெட்டியில் கணக்கைப் பாhத்துக்கொள்ளும் சந்தான மரபிலிருந்து தன்னை மாற்றி இலக்கியத்தின் மூலம் இன்னுமொரு உலகத்திற் புகுந்து கொண்டவர். புவியியலிற் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு ஆசிரியரானார். 1957ல் எழுதத் தொடங்கினார். இவரது வேகமான சிந்தனைகளிற் பிறந்த விமர்சனங்கள் பல இலக்கிய ஜாம்பவான்களை உலுக்கியது. மேலான வாழ்வுக்கான சமூக பொருளாதார மாற்றங்கள் சத்திய நிலையை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்ற எழுச்சிக் கோஷத்தை முன்வைத்து அவர் எழுதினார். ‘முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களுக்கு வழிவகுக்க வேண்டும்’ என்ற அவாரது கூக்குரல் புரிந்தவர்களுக்கு நாராசமாகவும் புரியாதவர்களுக்கு பைத்தியக்காரப் புலம்பலாகவும் கேட்டது.
‘ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி’. ‘புது யுகம் பிறக்கிறது’, ‘போர்ப்பறை’, ‘மெய்யுள்’, ‘யாத்திரை’, ‘கல்கி புராணம்’ என்று பல நூல்களும் பற்பல கட்டுரைகளும் இவரது சத்திய அழைப்பின் வடிவங்கள். இவரது எழுத்துக்கள் சர்ச்சைகளையும் சலசலப்புக்களையும் ஈழத்து இலக்கிய வட்டத்தில் ஏற்படுத்தின. இதுவே இவரைப் பலர் நாடி வந்து ஒட்டிக் கொள்ளவும் பலர் தம்மை இவரிடமிருந்து வெட்டிக் கொள்ளவும் காரணமாயிற்று.
1966ல் மு.த. தனது ஆன்மீக குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியிற் சந்தித்தார். தனது கலைப்பார்வையைப் பிரபஞ்ச யதார்த்தம் என்றiழைக்கும் மு.த.வின் வாழ்க்கை பற்றிய பார்வையில் பல மாற்றங்கள் இக்காலகட்டத்தில் ஏற்பட்டன. புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகி அங்கு தனது ஆன்மீகத் தளத்தை மேலும் விரிவு படுத்தினார்.
1968 ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து தனது சமூகப் பணிகளைப் பரவலாக்கும் கருவியாக அரசியலைப் பிரயோகிக்கும் நோக்கத்தில் குறுகிய கால அரசியற் பிரவேசம் செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காய் கடுமையாக உழைத்தார். 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு இவர் நடாத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு சித்திரை மாதம் 2ம் திகதி தன் உலகப் பணியை முடித்துக்கொண்டு பிரபஞ்ச மடியில் நித்திய தூக்கத்தில் ஆழ்வதே யதார்த்தம் என்று சென்றுவிட்டார்.

*******
மு.த. வைப் புரிய வைக்க இக்கட்டுரை முயற்சித்தால் அதில் வெற்றி பெறாது. அவரது சிந்தனைத் தளத்தை என்னால் அணுகவே முடியாது என்பதை முதலில் ஒத்துக் கொள்கிறேன். மு.த. புங்குடுதீவைச் N;சர்ந்தவரானாலும் அவர் உலகத்தின் சொந்தக்காரார். அப்படியொரு உலகத்தரமான சிந்தனாவாதி ஒருவரைப் பெற்றிருந்தும் அனுபவிக்காமற் போய்;விட்டது புங்குடுதீவ மக்கள் செய்த துர்ப்பாக்கியம். 1966 தொடக்கம் 1973ல் அவர் மரணமாகும்வரை அவர் புங்குடுதீவில் வாழ்ந்த காலம் அவ்வூர் மக்களின் பொற்காலம் என உறுதியோடு சொல்லலாம். அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு ஆசிரியராகவோ, இலக்கியவாதியாகவோ, சமூகவாதியாகவோ அல்லது குறுங்கால அரசியல்வாதியாகவோ அல்லது சிலர் கண்களில் ‘ஒரு பனியனாகவோ’ பார்க்கப்பட்டிருக்கலாம். அப் பார்வைகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. உலகச் சிந்தனாவாதிகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. அவர் உலாவந்த பல்வேறு மனத்தளங்களை அறியும்போதுதான் அவரின் கருத்துலகம் பற்றி முழுதாக அறிந்துகொள்ளும் பாக்கியத்தை நாம் பெறுவோம்.

‘மு.தளையசிங்கம் இருபதாம் நூற்றாண்டிற்குரிய பிரச்சினைகளையும் ஓரளவு இருபது நூற்றாண்டுகளின் சாரத்தையும் வெளிப்படுத்த முயன்ற ஒரு சிந்தனையாளர். பிரச்சினைகளுக்கு விடைகள் தேடிச் செல்லும்போது தனது தேசம், தனது மொழி, தனது சமயம், தனது இலக்கியம் ஆகியவற்றின் வட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, முன் தீர்மானங்களின் சொச்சங்களை சுமக்காமல் உண்மைகளைத் தேடிச் சென்றவர். பிரச்சினைகள், அவற்றைப் புரி;ந்துகொள்வதற்கான தயாரிப்பு, விருப்பு வெறுப்பற்ற ஆராய்ச்சிகள், உணர்வு நிலைகள் தாண்டி தருக்க மொழியில் தன் எண்ணங்களைக் கூறல். இவைதான் தளையசிங்கத்தின் அடிப்படையான பண்புகள்.’ என்று மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் குறிப்பிடுவார்.

இத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு மனிதர் எம்மத்தியில் வாழ்ந்து மறைந்தார் என்பதை உலகம் சுட்டி நாம் பார்க்கவேண்டிய கடப்பாடு.
ஈழத்துக் கலை இலக்கியம் பொதுவுடமைவாதிகளின் தத்துவப்பிடியில் அகப்பட்டிருக்கும் காலத்திலேயே சத்திய ஆயுதத்தைச் சுழற்றிக்கொண்டு பிரவேசிக்கிறார் மு.த. பல்வேறு பிரச்சினைகளால் சஞ்சலப்படும் மனிதனின் உடனடித் தீர்வாக பொழுது போக்கு இலக்கியம் என்ற போர்வையில் கலையையும் இலக்கியத்தையும் அவர்கள் பயன்படுத்துவதைச் சாடுகிறார். மனிதனின் அகத்தையும் அவன் வாழும் சமூகத்தையும் பூரணப்படுத்தும் முக்கிய மருந்துகளில் ஒன்றாகவே கலை இலக்கியத்தை அவர் பார்த்தார்.
இங்குதான் மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனம் ஆரம்பமாகிறது. பல முற்போக்கு, நற்போக்கு, தேசீய இலக்கியக் காப்பாளர்கள் என்று பலர் இவ்வீச்சில் அடிபட்டு வீழ்ந்தார்கள். ‘கலை கட்சிக்காக’ என்று கலையைச் சித்தாந்த அறிவு வழியில் மட்டும் காட்டி இலக்கியத்தை வெறும் இயந்திர முயற்சியாக நிறுத்தி வைத்திருந்த பலரால் மு.த. வை எதிர்கொள்ள முடியாமற் போனது. தம்மால் முடியாதபோது மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனப் பயணத்திற்கு அடிக்கடி கட்டை போட்டுக் கொண்டார்கள். இவை எவற்றினாலுமே அவரது பயணத்தை தடுக்கவோ நிறுத்தவோ இயலாமற் போனது. ‘இன்றய மனிதனின் பரிணாம நிலையில் பூரணமின்மையே அவனது நோய் என்றும் அதற்கான தீர்வைத் தரவல்லது சர்வோதயப் பொதுவுடமையே’ என்று கர்ச்சித்த மு.த. வின் மெய்முதல்வாதக் கோட்பாடு வீதியுலா வந்தது.

புpராய்ட், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஹேகல் மட்டுல்லாது இந்திய பண்பாட்டின் ஆழத்தையும் அறிந்து வைத்திருந்தவர் மு.த. கலை இலக்கியம், விஞ்ஞானம், சமய ஞானம் என்று பல களங்களிலும் அவர் இலகுவாகப் பொருந்தக்கூடியவர். மஹாத்மா காந்தி, வினோபாபாவே, அரவிந்தர் ரமணர் போன்றவர்களின் சத்திய மரபை அவர் வரித்துக் கொண்டது வெறும் விபத்தல்ல.

“எப்போது மனிதன் உண்மையின்- சத்தியத்தின் - அழகைத் தரிசிக்க ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் உண்மையான கலையும் உதயமாகிறது.
வாழ்க்கையே எல்லாக் கலைகளிலும் உயர்ந்தது. பூரணத்துவத்துக்கு சமீபித்துவிட்ட மனிதனே உயர்ந்த கலைஞன். உயர்ந்த வாழ்க்கை பற்றிய எல்லைகளும், அவை பற்றிய உரமான அடிப்படையுமற்ற கலை எதற்காக?’
- என்ற மஹாத்மா காந்தியின் வாசகங்களே மு.த. வின் வாழ்வை வளப்படுத்தியவை. தான் நம்பிய, வரித்துக்கொண்ட தத்துவத்தைத் தன் வாழ்விலே பரீட்சித்துப் பார்த்த பின்னரே அதைச் சமூகத்தில் பிரயோகித்தவர் மு.த. இதனால் மரபு சார்ந்த இலக்கிய நடைமுறைகளை அவர் பல தடவைகளில் கட்டுடைத்தார். ‘மெய்யுள்’ என்ற அவரது படைப்பு இத்தகையது. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் உருவம் அது. “இதுகாலவரையுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. கற்பனைக் கோலங்கள் அனைத்தையும் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய கலை இலக்கிய வடிவமே ‘மெய்யுள்’”என அவர் தனது முன்னுரையில் கூறுகிறார். “பூரணமின்மையே இன்றய மனிதனது நோய். இலக்கியம் பூரணமடையும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. அதன் பொருட்டு சகல தொழில்களுமே கலையாகவும் இலக்கியமாகவும் மாற்றப்பட வேண்டும். இதற்காக இன்றய ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்” என்று அவர் வாதிடுகிறார்.
மு.த. புங்குடுதீவுக்கு மாற்றலாகியது அவரது சுய பூரணத்துவத்தின் இறுதிக்கட்டமாகவே என்றும் சமூக மாற்றத்துக்கான அவரது முயற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் செயல் வடிவம் கொடுப்பதற்கான பணிப்பின் வடிவமே இந்த இடமாற்றம் என்றும் இப்போது நம்பவேண்டியிருக்கிறது. இக்கால கட்டத்தில் அவர் பல இளைஞர்களைத் தன் வசம் ஈர்த்தார். பிரச்சினைகளுக்கு வன்முறையே தீர்வு என்று போர்க் கோலம் பூண்டிருந்த இளைஞர்கள் பலர் இவரது சாத்வீகக் கட்டுக்குள் அகப்பட்டது ஆச்சரியமாகவிருந்தது.

ஆன்மீகத்தின் மூலம் பொருளை நாடும் கருத்து முதல்வாத ஆசார மரபை நிராகரித்த அதே வேளை பொருள் மூலம் ஆன்மீகத்தை நாடிய பொருள் முதல்வாதத்தையும் நிராகரித்ததன் மூலம் இவ்விரண்டிற்குமே பொதுவான அடித்தளமாகவிருந்த சத்தியத்தைத் தனது முதல்வாதமாகப் பிரகடனம் செய்தார். கருத்து, பொருள் முதல்வாதங்களால் அதிருப்தியடைந்திருந்த பல இளைஞர்கள் இவரிடம் புகலிடம் கண்டனர். சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து பல ஆத்மீகப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு அளித்து வந்தார். இவரது சர்வோதய இயக்கம் ஆரியரத்தினாவின் பராமரிப்பிலிருந்த- சமூகப் பணிகளில் மட்டுமே குவிவு பெற்ற - இயக்கமல்ல. மாறாக, வினோபாபாவே யின் ஆன்மீக மரபினைத் தழுவிய சாத்வீக குணவியல்புகளை முதன்மைப்படுத்தும் சர்வோதய இயக்கமாகவே இருந்தது. இதனாலேயே அவர் ஆத்மீகப் பயிற்சிகளை முன்னின்று நடாத்தினார். இவரிடம் கல்வி கற்ற மாணாக்கர்கள் மட்டுமல்லாது இதர பணிகளை மேற்கொண்ட பல இளைஞர்களும் இணைந்து ஒரு ஆன்மீகப் பேரலையாக உருவெடுத்தது.
தனது சத்திய சேனையின் விரிவு படுத்தலின் ஆயுதமாக அவர் கலை இலக்கியத்தைப் பாவித்தார். ‘அதிருப்தியாளனே போராட வருவான், அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சிக்குரிய அலைகள் அவர்களிடமே உண்டு’ என்று மு.த. நம்பினார். சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம், ‘பூரணி’ மகாலிங்கம் போன்ற பலர் அவரது வேட்கையைத் தணித்தனர். 1970ல் ‘சத்தியம்’ என்ற பத்திரிகை இவரால் ஆரம்பிக்கப்பட்டது.

சர்வோதயக் கோட்பாட்டின் பிரயோகப்படுத்தலின் அடுத்த கட்டமாக புங்குடுதீவையே மீண்டும் ஒரு தடவை களமாக்கிக் கொள்கிறார் மு.த. 1971ம் ஆண்டு கண்ணகையம்மன் கோவில் நன்னீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் அள்ளுவதற்கு வழி செய்து கொடுக்கும்படி சாத்வீகப் போராட்டம் ஒன்றை நடாத்தினார். புங்குடுதீவு மக்கள் சிலரின் அகோரமான முகங்களை இப் போராட்டம் உலகுக்குக் காட்டியது. காவற்துறையினராற் கைது செய்யப்பட்டு மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டார். இதே போன்று காளி கோவிற் பிரகாரத்தில் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது ‘உண்டியல் திருடியதற்காக’ மு.த. கைது செய்யப்பட்டார். இதற்குப் பொய்ச் சாட்சி சொன்னவர் எமதூரின் இன்னுமொரு பிரபல ‘சமூகத் தொண்டன்’ என்பது வெட்கத்துக்குரிய விடயம்.
தனது மெய்முதல்வாதக் கோட்பாட்டைப் பிரயோகித்த முதல் தளமாக அவர் புங்குடுதீவை எடுத்துக் கொண்டார். புங்குடுதீவு மக்களின் மாபெரும் பண்புகளில் ஒன்று அவர்களது கலை இலக்கியங்களின் மீதான அதீத பற்று. வாழ்க்கையே கலை, வாழ்க்கையே பேர் இலக்கியம் என்ற வகையில் அதை ஆற்றுப்படுத்தலின் தேவையாக மெய்முதல்வாதத்தைப் பிரயோகிக்க மிகவும் பண்பட்ட தளமாக புங்குடுதீவை அவர் தேர்ந்ததில் வியப்பிருக்க முடியாது.
புங்குடுதீவு மக்களின் அரசியல் பாரம்பரியம் பொதுவாக தமிழரசுக் கட்சியின் நிழலாகவே இருந்து வந்தது. மு.த. தன் இளமைக் காலங்களில் தமிழரின் விடுதலைக்காக வன்முறையே ஒரே வழி என்கின்ற போக்கினையே கடைப்பிடித்து வந்தார். இரத்தினபுரி வாழ்க்கையும், அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பல்வித குணவியல்புகளுடைய மாணவர்களின் பாதிப்பும் அவரது சிந்தனைத் தளங்களை மாற்றியமைத்தன. கலை இலக்கியப் பேர்வழிகள் சிலரின் போலித்தனம், அரசியல்வாதிகளின் கபடங்கள் எல்லாமே அவரது உருவாக்கத்தில் பெரும் பங்கு பெறுவன. இருப்பினும் கலை இலக்கியத்தையோ அல்லது அரசியலையோ அவர் நிராகரித்துவிட்டு துறவியாகிவிட முயற்சிக்கவில்லை. மனித மேம்பாட்டிற்கு சிந்தனைத் தெளிவும் பூரணத்துவம் பெறுவதுமே ஒரே வழி என்று அவர் உண்மையிலேயே நம்பினார். கலை இலக்கியக் காரனோ, அரசியல்வாதியோ அல்லது எந்தவொரு சாதாரண மனிதனோ பூரணமின்மை என்ற தனது நோயை உணரும்போது தனது போராட்டத்தில் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர் இயங்கினார். தனது சத்திய இயக்கத்தின் மூலம் எதையும், எவரையும் பூரணமாக்க முடியும் என்பதில் அவர் அசைக்க முடியதம நம்பிக்கை வைத்திருந்தார். அதனால் அவரது முகாமிற்கு யார் வருகிறார் யார் போகிறார் என்பதில் அவர் அதிகம் அக்கறை காட்டவில்லை.
அவர் குறுகிய கால அரசியல் பிரவேசமும் இப்படியான ஒரு சத்திய பரிசோதனையே. தனது சர்வோதய இயக்கத்தின் சார்பில் புங்குடுதீவின் முன்னாள் சட்டத்தரணியாகிய ப.கதிரவேலு அவர்களைத் தேர்தல் வேட்பாளராக ஆதரித்தார். இதற்காக மு.த. வின் சீடர்கள் பலர் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்தனர். ஆனாலும் தனது பரீட்சையில் வெற்றி கிடைக்கும். என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனாலும் அவரது பரிசோதனையில் அவருக்குக் கிடைத்த வெற்றிகளைவிடவும் கிடைத்த எதிரிகளே அதிகம்.
அவரது இறுதிக்காலத்தை அவசரப்படுத்தியதும் இப்படியான நிகழ்வுகள்தானோ என்ற ஐயம் எனக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவரது சத்திய பரிசோதனையில் முடிதேடிப் போகாது அடிதேடிப் போனதால்தான் அவர் விஷ்ணுவாக முடிந்தது என்பது மட்டும் திருப்தி.
‘கருத்துகள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும், அவற்றில் காணும் உண்மைக்காக அல்ல. எது சௌகரியமானது, எது தனக்குப் பாதுகாப்பானது என்பதைப் பொறுத்தே கருத்துக்கள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் நிகழ்கின்றன. இதன் காரணமாகவே நிறுவனம் சார்ந்தவை, கட்சி சார்ந்தவை, சாதி சார்ந்தவை, இரைச்சல் பலம் சார்ந்தவை, சலுகைகள் சார்ந்தவை ஏற்கப்படுகின்றன. தனிமனிதனின் குரல் எடுபடுவதில்லை’ என்று விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன் அவர்கள் சொல்வார்கள்.

மு.தளையசிங்கம் ஒரு சத்திய காவலர். அவர் தனது சடவுடலை விட்டு சூக்கும உடலில் ‘அது’ வோடு ஆத்ம வாதம் புரிந்து கொண்டிருக்கிறார். தொப்புள் கொடி இன்னும் அறுக்கப்படவில்லை. மீண்டும் வருவார். நம்பிக்கை இருக்கிறது.

(எனது இக் கட்டுரை புங்குடுதீவு பழைய மாணவர் சங்க 2006ம் ஆண்டு மலரில் பிரசுரமானது)

ஞாயிறு, 6 மே, 2007

பிசத்த்ப் போவது யார்?

பிசத்தப் போவது யார்?

மூன்றாவது தடவையாக விடுதலைப்புலிகளின் வான்படையினர் சிறீலங்காவின் இராணுவ இலக்குகளின்மீது குண்டுகளைப் பொழிந்துவிட்டு பாதுகாப்பாக தாயகம் திரும்பியிருக்கின்றனர்.

முதலாவது தடவையாக வான் தாக்குதல் நடத்தப்பட்டபோது அதன் எதிர்வினைகள் பல முகாம்களிலிருந்தும் பல வடிவங்களிலும் வந்திருந்தன. புலிகளை விமர்சிப்பவர்களால் அது பூச்சாண்டியெனவும் ஆதரவாளர்களால் அது போராட்டத்தின் புதிய பரிமாணம் எனவும் கருத்துரைக்கப்பட்டது.
மூன்று தடவைகள் அதுவும் வெற்றிகரமாகப் புலிகள் எதிரியின் அதிபாதுகாப்புக் களங்களுக்கு இலகுவாகச் சென்று காரியங்களைக் கச்சிதமாக முடித்துவிட்டுத் திரும்பியிருப்பது நி;ச்சயம் பூச்சாண்டி ரகத்தில் பொருந்தாது.

கட்டுநாயக்கா வான்படைத் தளம், பலாலி கூட்டுப்படைத் தளம், கொலன்னாவ எரிபொருட் களஞ்சியம் என்று எல்லாமே ஒரு வகையில் இராணுவ இலக்குகள்தான். இந்த மூன்று தாக்குதல்களின்போதும் பொது மக்களின் உயிர்களோ உடமைகளோ தாக்கப்படவில்லை. இதிலிருந்து பல விடயங்கள் உய்த்துணரப்படலாம்.

முதலாவதாக, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சொல்வதுபோல புலிகளின் போராட்டத்தில் இது ஒரு நிச்சயமான பரிணாம வளர்ச்சியேதான். பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் புலிகள் சர்வதேசங்களின் தரங்களுக்கு அல்லது அவற்றின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவைக்குள் தள்ளப்பட்டனர். சிறார்களைப் படையில் சேர்த்தல் மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்களில் புலிகளின் மீது சர்வதேசங்கள் முன்வைத்த அழுத்தங்களைப் புலிகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு தங்கள் களநிலவரங்களுக்கேற்ப அமைப்பின் நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தினர். போராட்ட இயக்கமாக இருந்தபோது எந்த ஒரு வெளிநாட்டினதும் அறிவுறுத்தலை அவர்கள் ஏற்றுக் கொணடதில்லை. ஆனால் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் செய்துகொண்டதற்குப் பின்னர் சர்வதேசங்களினதும் அவைசார்ந்த அமைப்புகக்களினதும் பரிந்துரைகளை அவர்கள் பரிசீலனை செய்ததன் காரணம் தாம் இப்போது போராட்ட அமைப்பில்லை மாறாக தாம் ஒரு நாட்டை ஆள்கிறோம் என்ற நினைப்பில்தான். சர்வதேசங்கள் சில பரிந்துரைகளை முன்வைக்கும்போது அதுவும் ஒருவகையில் ஒரு நாட்டிற்கு விடப்படுகின்ற வேண்டுகோள்களெனவே பார்க்கப்பட்டது.
எனவே, சர்வதேசங்களின் வேண்டுகோள்களோ, கட்டளைகளோ, பரிந்துரைகளோ எதுவாகவிருந்தாலும் அதை முன்வைப்பதும் அதைப் பரிசீலிப்பதும், நடைமுறைப்படுத்துவதும்கூட ஒருவகையில் தேசமொன்றைச் சர்வதேசங்கள் அங்கீகரிப்பதற்கான நடைமுறைகளே. அந்த வகையில் புலிகள் நிச்சயம் மாறியிருக்கிறார்கள். அது ஒரு படிமுறை வளர்ச்சி.

இரண்டாவதாக, புலிகளின் இவ்வான் தாக்குதல்கள் அவர்களது பலத்தை எடுத்துக்காட்டியது மட்டுமல்ல இலங்கை ஆட்சியாளரினதும், இராணுவத்தினதும் பலவீனங்களை மிகவும் துலாம்பரமாக தென்னிலங்கை மக்களுக்கும் சர்வதேசங்களுக்கும் எடுத்துக் காட்டியிருக்கிறது. 13000 கோடி ரூபாக்களை ஒதுக்கி நாட்டின் வரவு செலவில் பெரும்பகுதியைப் போருக்காகச் செலவு செய்து கொண்டு மேலும் மேலும் அபிவிருத்திக்கென உலக நாடுகளிடம் கையேந்திப் பெறும் பணத்தை வாரியிறைத்து உலகின் அதி பெரிய அமைச்சரவையைக் கொண்ட ஆட்சியினாலேயே சிறிய ரக விமானங்களாலான விமானப்படையைக் கண்டுகொள்ள முடியாமற் போனது, அதுவும் மூன்று தடவைகள், வெட்கப்படும் விடயம். சர்வதேசங்களின் முற்றங்களில் இலங்கை ஆட்சியாளர் அவமானப்பட்டுப் போயிருக்கின்றனர்.
மூன்றாவதாக, சமீப காலங்களில் சிறீலங்காவின் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தன்னைச்சுற்றி உருவாக்கிய ‘கைமுனு’ பிம்பம், தானே சிங்கள இனத்தைக் காப்பாற்றப் பிறந்த ஒரே தலைவர் என்று தன்னைச்சுற்றி அவர் உருவாக்கிய செயற்கை ஒளிவட்டம் எல்லாமே கண் முன்னால் தகர்க்கப்படும் நிலைமை. தனது பரிவாரங்களின் பரப்புரைகளில் தானே மயங்கி புது வருடத்தில் கிழக்கையும் அதன் பிறகு மூன்று வருடங்களுக்குள் வடக்கையும் பிடித்து புலிகளைக் கொன்றொழித்து விடுவதாக அவர் செய்த சவால்கள் எதுவுமே நிறைவேறாமற் போகும் நிலைமை. தென்னிலங்கை மக்களால் விரைவிலேயே தூக்கியெறியப்படும் அபாயம் என்று பலவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய பரிதாபம் மஹிந்தவுக்கு.

இவற்றுக்கு அப்பால் பல இராணுவ மேதைகளே ஆச்சரியப்படுமளவுக்கு உலக நாடுகளால் அதி சிறந்த திட்டமிடலாளர் (the best strategist) என்று வர்ணிக்கப்படும் புலிகளின் தலைவர் பேச்சிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காது செயலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தின் வடிவமே புலிகளின் இன்றய விமானப்படை. மாறாக தென்னிலங்கை அரசியல்வாதிகளுஞ்சரி இராணுவ அதிகாரிகளுஞ்சரி செயலுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைவிட பேச்சுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தின் வடிவமே பலம் குன்றிப் போயிருக்கும் அவர்களது மொத்த இராணுவம்.

புலிகள் சமீப காலங்களில் பல களங்களிலிருந்து பின்வாங்கியபோது அதை அவர்களது பலவீனமாக அரசும் அதன் சாதனங்களும் நம்பித் தென்னிலங்கை மக்களைத் தமது பரப்புரைகளால் வென்றெடுத்திருந்தனர். அதே வேளை புலிகளும் தம்மிடமிருக்கும் நவீன ஆயுதங்கள் எதையும் பாவிக்காது பலவிடங்களில் தாம் பலவீனப்பட்டுவிட்டோம் என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டைத் தமிழ் மக்களிடமும் பரவ விட்டிருந்தார்கள். ‘ஏன் இன்னும் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். திருப்பித் தாக்குவதற்கு முடியவில்லைப் போலிருக்கிறது’ என்று மக்கள் நம்புமளவுக்கு காரியங்கள் நடைபெற்றன. இவையெல்லாமே வியூக மாற்றத்தின் போதான நடவடிக்கைகள் என்பதை இப்போது புலிகள் நிரூபித்திருக்கிறார்கள்.
புலிகளின் முதலாவது விமானப்படையின் தாக்குதலின் பின்னர் நாடு தழுவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனாலும் அதன் பின்னரே பலாலி கூட்டுப்படைத் தலைமையகமும், இப்போது கொழும்பு தலைநகர் மற்றும் சுற்றுப்புறங்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு எந்தவகையிலும் அதிகரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எந்தவிதமான ரேடார்களோ, விமான எதிர்ப்புச் சாதனங்களோ வான் தாக்குதலின்போது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படவில்லை. நகரம் இரண்டு தடவைகள் விமானத் தாக்குதலைச் சந்தித்திருந்தும் இரண்டு தடவைகளிலும் மின்சாரம் தடைசெய்யப்பட்டிருந்தும் பிரத்தியேக ஜெனறேட்டர்கள் தாராளமாகப் பாவனையிலிருந்தன என்கிறார்கள். மேற்கு நாடுகளிற் கையாளப்படும் போர்க்கால ட்றில்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பின் இந்த மாதிரியான விடயங்கள் அறியப்பட்டு தவிர்க்கப்பட்டிருக்கும். அது நடைபெறவில்லை.

மார்ச் 26ம் திகதி கட்டுநாயக்கா வான்படைத் தளம் தாக்கப்பட்ட பி;ன்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும்படி அமெரிக்கா இந்தியா Nபுhன்ற நாடுகள் வலியுறுத்தியிருந்தன. நவீன ஆயுதங்களை மிகவும் மலிவாகத் (இலவசமாக?) தருவதற்கு சீனாவும் பாகிஸ்தானும் முண்டியடித்துக் கொண்டு வந்தன. கட்டுநாயக்காவில் பொருத்தப்பட்டுள்ள இந்தியாவினால் வழங்கப்பட்ட ராடார் சரியாகத் தொழிற்படவில்லை என்ற குற்றச்சாட்டை அரசு முன் வைத்தாலும். அது இயங்கு நிலையில் வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற உண்மை பின்னர் ரணில் விக்கிரமசிங்கவினால் தரப்பட்டது. சிறீலங்காவிடம் தற்போதுள்ள விமானங்கள் இரவு நேரப் பறப்புக்களைச் செய்யவல்ல பார்வைக் கருவிகள் பொருத்தப்படாததால் அவற்றினால் புலிகளின் வான்கலங்களை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறது. விண்ணிலிருந்து விண் தாக்கும் வல்லமையுள்ள விமானங்கள் அரசிடம் இல்லை. நிலத்திலிருந்து விண்ணைத் தாக்கும் பீரங்கிகள் குறிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிலைகொண்டுள்ளன. அவையும் இயங்கு நிலையில் வைக்கப்படவில்லை எனவும் வதந்திகள் கிடைத்தன. இப்படியான பல விடயங்களைப் புலிகள் அறிந்து வைத்திருந்தனர் என்பது மட்டுமல்ல படையினரின் அசமந்தப் போக்கு, உஷார் இல்லாமை போன்ற விடயங்களைப் புலிகள் அறிந்து வைத்திருந்ததுடன் சரியான தருணங்களைச் சாதுரியமாகப் பயன்படுத்தும் விவேகத்தையும் அவர்கள் கொண்டிருப்பதே தொடரும் அவர்களது வான்படை வெற்றிகளுக்குக் காரணம். அத்தோடு அதி நவீன பாதுகாப்பு, போர்ச் சாதனங்களைப் பற்றிய அறிவும் அதை எங்கிருந்தும் பெற்றுக் கொண்டு சுய பயிற்சிகளின் மூலம் அவற்றை வெற்றிகரமாகக் கையாளப் பழகிக் கொள்வதும் புலிகளின் சிறப்புப் பண்பு. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் புலிகளின் அலுவலகத்துக்குச் சென்ற ஒரு ஊடகவியலாளர் கூறிய கூற்று. நவீன போர்க கருவிகளின் சந்தை வருகை பற்றியும், மற்றும் உலக இராணுவங்கள் பற்றிய சமகால ஆய்வுகள் பற்றியும் விபரங்களைத் தரும் ‘ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி’ (Jane's Defence Weekly) என்ற வாராந்தர சஞ்சிகையின் பல பிரதிகள் புலிகளின் அலுவலகத்தில் பெருந்தொகையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன என்று அந்த ஊடகவியலாளர் எழுதியிருந்தார்.

அதே வேளை உலகில் நடைபெறும் பெரும்பாலான போராட்டங்கள் பற்றியும் உலகப் போர்கள் நடாத்தப்பட்ட முறைகள் பற்றியும் தலைவர் பிரபாகரன் பல நூல்களையும் வீடியோக்களையும் தருவித்து அறிந்துகொள்பவர் என்கின்ற கருத்து பொதுவாகவே உண்டு. அத்தோடு சாண்டில்யனின் கடற்புறா போன்ற நூல்களிலிருந்து பெறப்பட்ட சில போர்த்தந்திரங்கள் புலிகளின் பல போர்களில் பிரயோகிக்கப்பட்டது. ஆனையிறவு தரையிறக்கத்தின் காலத் தெரிவின் பின்னணியில் சாண்டில்யனின் கடற்புறா இருந்திருக்கிறது.
தற்போதய வான்படையின் உருவாக்கத்தின் பின்னணியிலும் பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. வான் கலங்களை இறக்குமதி செய்தது முதல் அவற்றின் ஓட்டிகளைப் பயிற்றுவித்தது வரை பல ஆச்சரியமான விடயங்கள் புலிகளிடமுண்டு. புலிகள் நவீன கருவிகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்வதோடு இருந்துவிடுவதில்லை. அக்கருவிகளைத் தமது கள நிலைகளுக்கேற்ப மாற்றியமைப்பது முதல் அவற்றின் திறன்களை அதிகரிக்கச் செய்வதுவரை பல தொழில் நுட்ப சாதனைகளை அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். (சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இரவுப் பார்வைக் கருவிகளை வாங்க முயற்சித்தார்கள் என்ற குற்றத்தில் சில தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.) இக்கருவிகளைக் கொண்டே இரவுநேரப் பறப்பு மேற்கொள்ளப்படுகிறது. புலிகளின் வான் கலங்களிற் பெரும்பாலானவை உள்நாட்டு உற்பத்தியாகவிருப்பினும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேற்கு நாடுகளில் சாதாரண சிறியரக மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தைப் பாவித்து பொழுபோக்கு பறப்புக்கான சாதனங்களை உருவாக்குவது வழக்கம். அதே போன்று இயக்கங்கள் ஆரம்பித்த காலத்தில் வெளி நாடுகளில் தங்கியிராத சுதந்திரப் போராட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற கொள்கையோடு பல இயங்கின. புலிகள் இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

தற்போதய நிலையில் இலங்கை அரசுக்கு பல வழிகளிலும் பண உதவியும், ஆயுத உதவியும், ஆளுதவியும் தரப் பலநாடுகளும் முன்வருகின்றன. ஆனால் புலிகளுக்கு இப்படியான உதவிசெய்வதற்காக விரும்பனாலும் செய்ய முடியாத நிலைக்கு பல நாடுகள் தளள்ப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் நியாமான பல போராட்டங்கள் முடக்கப்பட்டு விட்டன. இவற்றின் பெரும்பாலான அழிவுக்குக் காரணம் அவை வேறு நாடுகளின் தயவில் வாழ்ந்தமையே. அந்த வகையில் புலிகள் தமது போராட்டத்தைத் தமது கள நிலவரங்களுக்கேற்ப சுதேச வளங்களுக்கு இசைவாக்கப்பட்ட வகையில் வடிவமைத்துக் கொள்கிறார்கள். பல மாற்று வழிகளையும் உத்திகளையும் கண்டுபிடிப்பதன் மூலம் (inழெஎயவiஎந) தமது போரியல், வாழ்வியல் முறைகளை உள்ளுர்க்களநிலைகளுக்கேற்ப அமைத்துக் கொள்கிறார்கள். கடற்புறா, பொன்னியின் செல்வன் போன்ற நூல்களின் பங்கும் இவற்றுக்குத் துணைபோயிருக்கிறது என்பதே புலிகளின் சுயநம்பிக்கையின் எடுத்துக்காட்டு.

அதே வேளை புலிகள் பல நாடுகளால் ‘புறக்கணிக்கப்’ படுவதற்கும் அவர்களது சுதேசிய மனப்பான்மையே காரணம். உலகில் நடைபெற்ற பல (சுதந்திரப்) போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டமைக்கும் வெற்றிகளற்று முடித்து வைக்கப் பட்டமைக்கும் வெளி நாடுகளே காரணம். தமது நோக்கம் நிறைவேறும் வரைக்குமே அவர்களது உதவி நிலைத்திருக்கும். வெற்றிகரமான தீர்வுக்கு உதாரணமான தென்னாபிரிக்காவின் சுதந்திரம் ஒரு உள்நாட்டு உற்பத்தி. துணிச்சலான தலைமைக்கு அது ஒரு எடுத்துக்காட்டு. இந்த உண்மையை முற்றாக உணர்ந்து புலிகள் ஆரம்பத்திலிருந்தே தமது போராட்டத்தைத் தாமே வடிவமைத்து, நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள். முற்று முழுதாக ஈழத் தமிழர்களை மட்டுமே நம்பி இப் போராட்டம் முன்னெடுக்கப் படுகிறது. வெளிநாடுகளின் பார்வையில் நிலை குத்தி நின்று கொண்டிருக்கும் ஈழ தேசத்தின் வளங்களைத் தாரை வார்த்துக் கொடுக்க புலிகள் தயாரானால் நாளையே ஈழம் பெற்றுக் கொடுக்கப்படும். இன்றய புலிகளின் தலைமையில் அது நடக்காது. அதுவே புலிகள் இன்று தனிமைப் படுத்தப்பட்டமைக்குக் காரணம். அதுவே அவர்களது வெற்றியும் தோல்வியும்.
ஈழ தேசம் உருவாகுவதானால் அதற்கு இந்திய அங்கீகாரம் வேண்டும். காரணம் அரசியல், பொருளாதாரம் சம்பந்தப்பட்டதல்ல. அவர்கள் ஈழத்திற்குப் பாதுகாப்புத் தரவேண்டியதுமல்ல. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இன்னுமொரு வல்லரசு நுழைவதற்கு ஈழம் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே. ஈழ தேசம் தன் மக்களைத் தானே பார்த்துக்கொள்ளும். பிராந்தியத்தைப் பாதுகாப்பதே இந்தியாவின் தேவை. ஈழத்தால் இந்தியாவுக்கோ அல்லது பிரிந்து போன பின்னர் சிறீலங்காவிற்கோ அல்லது வேறெந்த நாடுகளுக்கோ ஆபத்து ஏற்படுமென்று யாராவது கூறின் அது முட்டாளின் கூற்றாகவே இருக்கும். சிங்கப்பூரைப் போல அயல் நாடுகளோடு ஒற்றுமையாக இருக்கும் ஒரு நாடாகNவு ஈழம் இருக்கும்.

எனவே இனிவரும் வாரங்கள், மாதங்கள் ஒரு தீர்வுக்கான இறுதிப் போராட்டத்தைக் காணும் காலங்களாகவே அமையும். போராட்டம் நாடெங்கும் விரிவுபடுத்தப்படும். அது சிங்கள மக்கள் மீதான நேரடியான தாக்குதலாக இருக்காது. அரசியல், பொருளாதார, இராணுவ இலக்குகளையே குறி வைத்து புலிகள் போராட்டத்தைத் தொடர்வார்கள். ஆனால் கிழக்கில் நிலைமை வேறுவிதமானதாக அமையலாம். பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாக அமையலாம். புலிகள் அதற்குக் காரணமாக இருக்க மாட்டார்கள்.

இதைத் தடுத்து நிறுத்தும் வல்லமை தென்னிலங்கை மக்களிடம்; மட்டுமே உண்டு. அரசியல்வாதிகளை நிதானமாகச் சிந்திக்க வைக்குமளவுக்கு சிங்கள மக்களிடமிருந்து போதுமான அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும ஆனால் அரசியல்வாதிகளை ஊக்குவிப்பது போலவே அவர்கள்; செயற்படுகிறார்கள். இன்றுவரை எந்தவொரு அரசியற் தீர்வுக்காகவும் நம்பிக்கை வைத்து உழைக்காதவர் என்ற வகையில் மஹிந்தவிடம் எதையுமே எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் அதற்கு மாற்றீடான ரணில் அரசு நாட்டையே அடகு வைத்து விடும். அது வரையில் இந்தியாவினால் அனுராதபுரத்தில் பூசைபோட்டு ஆரம்பித்து வைத்த இரத்தக் களரி தொடரவே செய்யும். துணிச்சலான ஒரு னந ஊடநசம தென்னிலங்கையில் உருவாகும் வரை.
இதற்கு ஒரே முடிவு ஈழம் தான். அது சிசேரியனா அல்லது இயற்கைப் பிறப்பா என்பது இந்தியாவின் கைகளிலேயே இருக்கிறது.

அது வரையில் (அடுத்ததாகப்) ‘பிசத்தப் போவது யார்?’

(எனது இக் கட்டுரை மே மாத 'தாய் வீடு' பத்திரிகையில் பிரசுரமானது)