வெள்ளி, 18 ஜனவரி, 2008

சு.ப.தமிழ்ச்செல்வன்

சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலை: தனி நாடே தீர்வு?



விடுதலைப் புலிகளின் அழகிய குரலொன்று அடக்கப்பட்டுவிட்டது. புலிகளுக்கு மிதவாத முகத்தைக் கொடுத்தவரென சர்வதேச ஊடகங்களால் சிலாகிக்கப்பட்ட சு.ப. தமிழ்ச்செல்வன் சிறீலங்காவின் விமானப்படைத் தாக்குதலின்போது மேலும் பல போராளிகளுடன் சேர்த்துக் கொல்லப்பட்டார் என்ற சேதி தமிழ் மக்களை மட்டுமல்ல பல உலக தலைவர்களையும் அரசியல் அவதானிகளையும் எமது பிரச்சினை மீது அக்கறை கொண்டவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் மண்ணெங்கும் துன்பம் சூழ்ந்திருக்கிறது. அமைதிப் பேச்சுகளுக்கான அற்ப சொற்ப சந்தர்ப்பங்களையும் இக் கொலைகள் அறவே இல்லாது ஒழித்துவிட்டிருக்கின்றன.

இக் கொலைகளின் மூலம் புலிகளின் வெஞ்சினம் மேலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உலக தமிழர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள். தமிழர்களின் தனி நாட்டுக்கான அத்திவாரத்தைச் சிங்கள தேசமே போட்டுக் கொடுத்திருக்கிறது. தென்னிலங்கையின் அழிவுக்கான நகர்வு துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது.

இச் சம்பவத்தின் பின்னான அரசு சார்பான முதல் அறிக்கையில் “ எதிரியின் தலைவர்கள் எங்கு மறைந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம.; புலிகளின் அத்தனை தலைவர்களையும் ஒவ்வொருவராக அழித்தே தீருவோம்” என்று பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச கர்ச்சித்திருக்கிறாhர். மிகையொலியான கர்ச்சிப்பு. தென்னிலங்கை மகிழ்ச்சியில் ஆரவாரிக்கிறது. பிரதான சிங்கள அரசியற் கட்சிகள் எல்லாம் தமிழ்ச்செல்வன் கொலையை ஆதரிப்பதாகவே தெரிகிறது.

ஈழப் போர் சமீப காலமாக பரிணாம மாற்றத்துக்கு உட்பட்டு வருகிறது. சர்வதேசங்களின் ஈடுபாடு, குறிப்பாக இந்தியாவின் ஈடுபாடு, இம் மாற்றத்தின் அதி முக்கிய முடுக்கியாக இருக்கிறது. தமிழ்ச் செல்வன் குழவினரின் கொலைச் சம்பவம் இம் மாற்றத்தின் முதல் பெறு பேறு.

தமிழ்ச்செல்வன் படுகொலையில் இலங்கை விமானப்படை புதிய தொழில்நுட்பத்தைப் பாவித்திருப்பதற்கான தடயங்கள் தெரிகின்றன. ஏற்கெனவே இஸ்ரேலினால் பலஸ்தீன, ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராகப் பாவிக்கப்பட்ட குறி வைத்துத் தாக்கும் (வயசபநவவநன மடைடiபெ) நடைமுறை இங்கு முதல் முறையாக வெற்றிகரமாகப் பாவிக்கப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் வலுவாகவிருக்கிறது. கோதபாயயின் அதீத தன்நம்பிக்கையுடனான ஆர்ப்பரிப்பும், ஏனைய சிங்களத் தலைவர்களின் போரை முன்னெடுப்பதில் காட்டுகின்ற ஒற்றுமையும் இராணுவத்தின் வழமைக்கு மேலான உற்சாகமும் ஒரு பொதுமையைக் கோடிட்டுக் காட்டுகிறது. அது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பாரிய தொழில் நுட்ப, நிபுணத்துவ உதவியாகவிருக்கலாம் என்பதே எனது கருத்து. இந்தியாவின் சமீபகால ஈடுபாடுகளின் அதிகரிப்பும் சீன, பாகிஸ்தான் நாடுகள் பற்றித் தென்னிலங்கை இப்போது எதையுயே பேசிக்கொள்ளாத தன்மையும் இந்திய-சிறீலங்கா உறவின் இறுக்கத்திற்கான தடயங்கள். யாழ்ப்பாணத்தில் இடருறும் மக்களுக்காகத் தமிழ்நாட்டு மக்களால் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை அனுப்புவதற்கு மறுத்த இந்தியா தென்னிலங்கையின் வேண்டுகோளுக்கிணங்கி உடனடியாகவே 6000 தொன் அரிசியை ஏற்றுமதி செய்ய இணங்கியிருப்பது இந்தியாவின் தமிழ் விரோத மனப்பான்மைக்கு நல்ல உதாரணம்.

இப்பின்னணியில், இந்தியாவின் நவீன இராணுவத் தளபாடங்களின் பரீட்சைக் களமாகத் தமிழ் தேசம் மாற்றப்படும் அபாயம் உருவாகியிருக்கலாம், அதன் ஆரம்பமே தமிழ்ச்செல்வன் படுகொலை என்ற கருத்து வலிமை பெறுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் சிறீலங்கா இராணுத்துக்கு தாக்குதல் ஆயதங்களை (னநகநnஉiஎந றநயிழளெ)யும், சில நிபுணர்களையும் இந்தியா வழங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. அதே காலத்தில் துல்லியமாக வழிகாட்டித் தாக்கும் (Pசநஉளைழைn புரனைநன ஆரnவைழைn Pபுஆ) ஆயதங்களைத் தயாரிப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்த ரக ஆயதங்களை வேறு பெயர்களில் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகள் பல போர்களில் உபயோகித்தன. துழiவெ னுசைநஉவ யுஉவழைn ஆரnவைழைn (துனுயுஆ) எனப்படும் செய்மதி வழிகாட்டலில் இலக்கைத் தேடிச்சென்று தாக்கியழிக்கும் ளுஅயசவ டீழஅடிள வல்லமையுள்ள குண்டுகளை இஸ்ரேல் பாலஸ்தீனத்திலும், லெபனானிலும் அதேவேளை அமெரிக்கா இவற்றை வளைகுடாப் போரிலும் வெற்றிகரமாகப் பாவித்தன. இந்தியா இவ்வாயுதத்தை (Pசஉளைழைn புரனைநன ஆரnவைழைn) வேறு பெயரில் தயாரிப்பதெனவும் அவற்றை சிறீலங்கா இராணுவம் வாங்கவிருப்பதாகவும் சமீபகாலமாகச் செய்திகள் வெளிவந்தன. இப்படியான ஆயதங்களைப் பாவிப்பதற்கு இலக்கு தவறாமல் அடையாளப்படுத்தப்பட வேண்டும். புPளு என்ற செய்மதி குறிகாட்டும் கருவிகள் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் இந்தியா தனது பிரத்தியேக செய்மதியொன்றை இராணுவ பாதுகாப்பு காரணங்களுக்காக வானில் ஏவியது.

இத்தரவுகளை ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது தமிழ்ச்செல்வனின் கொலைக்கு இப்படியான Pபுஆ பாவிக்கப்பட்டதா? அதற்கான இலக்கை அடையாளப்படுத்துவதில் செய்மதித் தொழில்நுட்பம் உபயோகப்பட்டதா? அப்படியானால் அந்த வல்லமை சிறீலங்கா இராணுத்திடம் இருந்திருக்க முடியுமா?

விடைகள் இந்தியாவின் ஈடுபாட்டையே குறிவைக்கின்றன. இது எனது அனுமானமே தவிர முடிந்த முடிபல்ல. விடுதலைப் புலிகளின் பகுப்பாய்வே இவற்றுக்கு விடைதர முடியும்.

இதே வேளை பிராந்திய அரசியற் காரணங்கள் இந்திய ஈடுபாட்டை வலியுறுத்துகின்றன என்பதில் எனக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. அண்டை நாடான பர்மாவில் ஜனநாயகத்துக்கு எதிரான அச்சுறுத்தல் இடம்பெற்றபோது அதில் தலையிடவேண்டிய கடப்பாடு இருந்தும் அதைத் தவிர்த்ததன் காரணமாக சீனா அங்கு தன் கடையைப் பரப்பிவிட்டது என்ற குற்றச்சாட்டு வலுவாகவிருக்கிறது. நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் வலுப்பெற்றதற்கும் இந்திய அக்கறையின்மையே காரணம் எனப்படுகிறது. இப்பின்னணியில் சிறீலங்காவில் அதன் தலையீடு தவிர்க்கப்படின் சீனாவும் பாகிஸ்தானும் நிரந்தர குடிமக்களாகிவிடுவார்கள் என்ற அச்சம் இருப்பது உண்மையே. அதனால் இந்திய தலையீடு அவசியமானதே. ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான தலையீடாக மட்டுமே அது இருக்க வேண்டும். அந்த விடயத்தில் இந்தியா மாபெரும் தவறை இழைத்துவருவதற்கான தடயங்களே தெரிகிறது.

அதே வேளை தற்போதய இந்திய ஆடசியாளருக்கு புலிகளைப் பலவீனமாக்க வேண்டிய அக்கறையிருப்பதையும் அனுமானிக்க முடிகிறது. அது தனியே ராஜீவ் காந்தியின் கொலையில் மையம் கொண்டதல்ல. மாறாக புலிகளின் பலமும், அவர்கள் ‘வாங்கப்பட முடியாதவர்கள்’ என்ற தன்மையும் அதற்குக் காரணம் புலிகளின் தலைமைதான் என்பதுமே. அதனால் இப்போதுள்ள புலிகளின் தலைமை பலவீனமாக்கப்பட வேண்டும் அல்லது ஒழிக்கப்பட வேண்டும் என்ற முடிவில்தான் இந்திய ஈடுபாடு தொங்கி நிற்கிறது.

இந்த வேளையில் புலிகளின் விமானப்படை உருவாக்கம் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது. புலிகளின் விமானப்படை உருவாக்கம் பெறுவதற்கு முன்னர் இந்திய அரசின் அக்கறை சிறீலங்காவின் ஆயுதச் சேர்ப்பு, தனது எதிரிகளுடனான நட்பு போன்றவற்றில் மையமிட்டிருந்தது. புலிகளின் விமானப்படை உருவாக்கம் இந்திய பாதுகாப்பு சமூகத்தைத் தட்டி எழுப்பிவிட்டது. புலிகளினால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு என்று நான் நம்பவில்லை. ஆனாலும் புலிகளின் வளர்ச்சியையிட்டு இந்தியா ஒருபோதும் பெருமைப்படுமென்று நாம் எதிர்பார்க்கவும் முடியாது. இதன் பின்னர் சிறீலங்கா அரசின்மீது இருந்த இந்தியாவின் கவனம் புலிகளின் மீது திரும்பியது. ஈழப்போரில் இந்தியாவின் ஈடுபாட்டில் மாற்றமேற்படத் தொடங்கிதன் ஆரம்பப் புள்ளி இங்குதானிருக்கிறது. ஒரு காலத்தில் புலிகளைப் பாவித்து சிறீலங்காவைப் பதம் பார்த்தது இந்தியா. இப்பொழுது மேசை திருப்பப்பட்டிருக்கிறது. இந்தியாவின் சிறீலங்காவுக்கான (ஆயத) தான தருமம் இப்போது புதிய பரிணாமத்தை அடைந்திருக்கிறது. அதன் முதற் களப்பலி தமிழ்ச்செல்வனாக இருக்கலாமோ என்பது எனது பலத்த சந்தேகம்.

இதே வேளை ஈழப்போரை அதிவிரைவாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவை இலங்கை அரசுக்கு முன்னெப்போதும் போலல்லாது ஒரு அவசரத்தைக் கொடுத்திருக்கிறது. தென்னிலங்கையில் பொருளாதாரச் சீரழிவு, பால்மா, பாண் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் விலையுயர்வு போன்ற நெருக்கடிகள் தென்னிலங்கை பாமர மக்களை மிகவும் வதைத்து வருகிறது. இம் மக்களின் பட்டினியில் பசி போக்கிவரும் போலி மார்க்சீயவாதிகளான ஜே.வி.பி யினர் தொடர்ந்தும் ‘போர்ப் பாத்திரத்தில்’ வாக்குப் பிச்சை கேட்க முடியாதென்ற நிலையில் அரசை நிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிவிட்டார்கள். இதுவரை சரிந்து கொண்டிருக்கும் அரசுக்கு முண்டுகொடுத்துக் கொண்டிருக்கும் பெரிய கட்டையான இந்த ஜே.வி.பி;. அரசைக் கவிழ்க்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறார்கள். தேர்தலுக்குப் போகும்போது திட்டித் தீர்க்க அவர்களுக்கு ஒரு கட்சி தேவை. சுதந்திரக் கட்சியின் வாக்குத் தளம்தான் அவர்களதும். எனவே தனது ஆட்சிக் காலம் எண்ணப்பட்டுவிட்டது என்ற பயத்தில் தமிழரைத் தோற்கடித்த வெற்றி வீரனாக மக்களிடம் செல்லவேண்டுமென்பது ராஜபக்சவின் விருப்பம். எனவேதான் இந்த முடுக்கப்பட்ட போர். ரணிலுக்கு விருந்து வைத்து ராஜபக்சவை ஒதுக்கிய மன்மோகன் சிங்கிற்கு திடீரென்று ராஜபக்ச பரிவாரத்துக்கு விருந்து வைக்க வேண்டிய தேவை என்ன? மர்மம் துலங்க இன்னும் காலமிருக்கிறது. பொது மக்கள் இழப்பு அதிகமின்றி புலிகளை ஒழித்துக் கட்டுவதே இருவரதும் பொ.சி.பெ.

மறு பக்கத்தில் ரணில் காட்டில் கொண்டாட்டம் விமரிசையாக நடக்கிறது. புலிகளை ஒழித்துக்கட்டினால் பிரச்சினையற்ற அரசைத் தான் சுவீகரித்துக் கொள்ளலாம். அதே வேளை போரை நடத்துவதன் மூலம் அரசின் கஜானா விரைவில் காலியாகிவிடும். மக்கள் மஹிந்தவைத் தூக்கி எறிந்து விடுவார்கள். அதனால் தனது செங்கம்பளம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அவர் கனவு கண்டுகொண்டிருக்கிறார். சில வேளை இந்தியாவின் நோக்கமும் அதுவேயாகவும் இருக்கலாம். அல்லாது போகில் இந்தியா மஹிந்த பரிவாரத்தை உபசரித்தபோது ரணில் ஆர்ப்பாட்டமெதுவுமில்லாது இருந்தார். தலையணை மந்திரம் பலமானதாக இருந்திருக்கலாம்.

தமிழ்ச்செல்வனது கொலையின் பின்னால் இந்திய ஆயதமும் நிபுணத்துவமும் இருந்திருக்கலாமென்று வைத்துக் கொண்டால் ‘குறி’ வைத்துக் கொடுத்தது யார்? யாரோ நம்மவராகவே இருக்க வேண்டும். கிளிநொச்சி, வன்னி என்று அத்துபடியாகப் பழகிய அம்மானின் அனுக்கிரகம் இன்னும் சிங்கள அரசு பக்கம் இருக்கிறது. அதைவிட அருகே வவுனியாவில் ஆழ ஊடுருவும் நாட்கூலிக்காரர்கள் நிறையவே இருக்கிறார்கள். புPளு கருவிகள் தாராளமாகக் கிடைக்கிறது. வசதிகள் ஏராளம். தாராளம். இப்படியிருக்கும் போது கோதபாய மிகையொலியில் கர்ச்சிக்காமல் என்ன செய்வாh?

தமிழ்ச்செல்வனின் கொலை புலிகளின் முதகெலும்பை உடைத்துவிட்டதாக சிங்கள அரசு எக்காளமிட்டால் அது நகைப்புக்குரியது. மாறாக, இக்கொலை விடுதலைப் புலிகளின் கைவிலங்குகளை உடைத்திருக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சாவதேச சமூகம் புலிகளின் கரங்களில் மாட்டிய விலங்குகள் தகர்க்கப்பட்டு விட்டன. சர்வதேசங்களின் நியமங்களை மதித்து தற்கொலைப் போராளிகளைத் தடுத்து வைத்துக்கொண்டிருந்த தலைவரைச் சர்வதேச சமூகம் வஞ்சித்து விட்டது. தமிழ்ச்செல்வனின் கொலை மூலம் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தையே கொலைசெய்திருக்கிறது சிறீலங்கா அரசு. அத்தோடு இனி வரப்போகும் இரத்தக்களரிக்கும் இவர்களே பொறுப்பு.

மண்ணின் பொருட்டு மடிந்துபோன தமிழ்ச்செல்வன் மற்றும் இதர போராளிகளினதும் குடும்பத்தினருக்கும் இவர்களைத் தன் தானையில் ஊட்டி வளர்த்து அறுவடை காட்டுவதற்கு முன்னர் அஞ்சலி செலுத்தவேண்டி ஏற்பட்டதற்காக தலைவர் பிரபாகரனுக்கும் எமது ஆழ்நத அனுதாபங்கள்!

கருத்துகள் இல்லை: