வெள்ளி, 5 மே, 2017


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கனடாவின் அவமானம்
 
2011 ஜூன் மாதம் சிண்டி கிளாடியூ என்னும் 36 வயதுடைய பெண் கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான எட்மன்ரனில் உள்ள ஓட்டல் அறையொன்றில் குளியற்தொட்டியொன்றில் இறந்திருந்தாள்அதிகப்படியான இர்த்த ஓட்டமே மரணத்திற்குக் காரணம் என மரண அதிகாரியின் தீர்ப்பு அமைந்திருந்தது
 
சிண்டியின் மரணம் ஒரு கொலை எனக் கூறி அக் கொலையைச் செய்தவரென ஒன்ராறியோவைச் சேர்;ந்த ட்ரக் சாரதியான ப்ராட் பார்ட்டன் கைது செய்யப்பட்டு வழக்குத்தொடரப்பட்டதுஇந்த மார்ச் மாதம் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதுபார்ட்டன் குற்றவாளியல்லவென அறிவிக்கப்பட்டது.
 
இச் சம்பவம் பற்றிய செய்திகள் பல வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஊடகங்களில் வெளிவந்த போதும் அவை இரக்க நரம்புகளை மெதுவாக வருடிச் சென்றதோடு அவைவழக்கம் போல் அன்நியப் பெருவெளிக்குள் அடக்கம் கொண்டுவிட்டன.
 
இன்று (மார்ச் 31) இச் செய்தி  சி.பி,சிவானொலியில் அனா மரியா ட்றெமொன்ரி யினால் அலசப்பட்டபோது தான் செய்தியின் முன் புலம் பின் புலங்கள் எல்லாம் சேர்ந்து எனதுமூர்க்க நரம்புகளைப் புடைத்தெழச் செய்தன.
 
சிண்டி ஒரு கனடிய சுதேசியப் பெண்இரண்டு குழந்தைகளுக்குத் தாய்பாலியல் தொழிலாளிகொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் செய்தவர் ஒரு வெள்ளை இனத்தவர்
 
தீர்ப்பு கொலைக் குற்றம் சாட்டப்பட்டவருக்குச்  சாதகமாக அமைந்ததா அல்லது இறந்துபோன சிண்டிக்கு நீதி கிடைக்கவில்லையா என்ற வாதப் பிரதி வாதஙகள் ஒருபுறமிருக்கட்டும்என் நரம்புகளைப் புடைத்தெழச் செய்த விடயம் வழக்காடப்பட்ட நீதிமந்றத்தில் நடைபெற்ற சம்பவம்தான்.
 
கனடிய சுதேசிகள் மீது பல நூற்றாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்பு இப்போதைக்கு நின்றுவிடப் போவதில்லை என்பதற்கு சிண்டியின் மரணம் புதிதாகநாட்டப்பட்ட இன்நுமொரு மைல் கல் என்பதற்கு இந்த நீதிமன்றம் பட்டயம் எழுதி வைத்திருக்கிறது.
 
சிண்டியின் மரணம் மிகுதியான இரத்த ஓட்டத்தினால் நடைபெற்றிருக்கிறது என்பதைச் சொல்ல சாட்சியங்களின் அவசியம் இருந்திருக்காதுசிண்டியின் பிறப்புறுப்பிணுள்மெல்லிழையம் (tissueவெடித்ததன் காரணமாக இரத்த ஓட்டம் ஏற்பட்டது என்பதையும் மருத்துவ அதிகாரிகள் 'ஐயம் திரிபுறநிரூபித்துமிருக்கலாம்இழைய வெடிப்புக்குக்காரணம் முரட்டுக் கலவி (rough sexஎன்பதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுவிட்டதுஆனாலும் அதற்குக் காரணமானவர் குற்றமேதும் இழைக்கவில்லை என நீதிமந்றம்தீர்ப்பளித்தால் குற்றம் சிண்டியின் மீதுதானே
 
சரி அதை விடுங்கள்உலகத்தில் எத்தனை கொலைகள் நடைபெற்றிருக்கின்றனஎந்தவொரு நாட்டிலாவது கொலை செய்யப்பட்டவர் இவர்தான் என நிரூபிப்பதற்கு கொலைசெய்யப்பட்டவரின் தலையைக் கொய்து  நீதிமந்றத்துக்குக் கொண்டு வந்து ஜூரர்கள் முந்நிலையில் காட்சிப் பொருளாக வைப்பார்களா
 
கனடா எப்படிப்பட்ட நாடுநாகரீகத்தின் உச்சியில் இருக்கும் நாடுஇங்குள்ள ஒரு நீதிமந்றத்தில் ஜூரர்கள் முந்நிலையில் காட்சிப் பொருளாக அன்நாட்டின் உரிமைக்காரப்பெண்ணின் பிறப்புறுப்பை அரிந்து கொண்டுவந்து காட்டியிருக்கிறார்கள்முரட்டுக் கலவியால் இழையம் கிழிந்து மரணமானாள் எனக் காட்டுவதற்கு இத்தனை நடவடிக்கை!  தூரதேசமொன்றில் சுய இன்பத்திற்காகக் கொலைக்களம் சென்று கொலையுண்டு வருகின்ற இராணுவத்தினனுக்கு கொடி போர்த்தி ஊர்வலம் செய்யும் இந்த நாட்டில் ஒரு சுதேசிப்பெண் 'குற்றவாளிஎன்பதை நிரூபிக்க கனடாவின் நீதித்துறை பெரும்பாடு பட்டிருக்கிறது! (இந்த இடத்தில் செருகக்கூடிய ஒரு கொசிறுசில நாட்களின் முன் முகநூலில் ஒருஇலங்கைப் பெண் குமுறியிருந்தார்கனடா ஒரு சுவர்க்க பூமிபிறந்த நாட்டில் நான் ஒரு மாமிசத் துண்டாகவே நடத்தப்படுவதுண்டு என்றுஇக்கரை madam க்கு அக்கரை சிவப்புத்தான்)
 
இந்த வழக்கில் ஜூரர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் யாரென்று நிநைக்கிறீர்கள்? 8 பேர் வெள்ளை இனத்தவர்ஒருவர் கறுப்பிநத்தவர்மற்றவர் மஞ்சள் இனத்தவர்சுதேசியர்எவருமில்லை
 
இதுபற்றி வழக்குத் தொடுநரிடம் அனா மரியா வினவியபோது அவர் சொன்ன பதில் சுதேசியர்களை ஜூரர்களாக நியமித்தால் அவர்கள் முற்சாய்வோடு (biasதீர்ப்பளித்துவிடலாம் என்பதற்காகவே அப்படி நியமிக்கவில்லை என்பதாக இருந்தது
 
சுதேசிகளின் சமூகத்தில் சிந்டியிந் கொலை ஆச்சரியத்தைத் தருமெந்பதற்கு ஆதாரங்கள் இல்லை. 1980 முதல் 2013 ஆண்டு வரையில் 1017 பெண்கள் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். 164 பெண்கள் காணாமற் போயிருக்கிறார்கள்மனிற்றோபா மானிலத்தில் இக் காலகட்டத்தில் கொலை செய்யப்பட்டவர்களில் 49% சுதேசிப் பெண்கள்
 
உலகெங்கும் சுதேசிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் விடயங்களில் நமது சுவர்க்க பூமியான கனடாவும் அதியுயர் இடத்தைப் பிடித்திருக்கிறது.நாவிந் பெண்களுக்குஇழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான அமமைப்பு 38 சிபார்சுகளுடந் கூடிய தனது அறிக்கை மூலம்  மிகவும் காட்டமாக கனடாவைச் சாடியிருக்கிறதுஇருந்தும் நமதுசுவர்க்க பூமி இது பற்றி எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
 
கனடாவின் கொலை செய்யப்படும் மற்றும் காணாமற் போகும் சுதேசியப் பண்கள் பற்றிய பிரச்சினைகளை ஆரய்வதற்காக ஒரு விசாரணைக் கமிஷனை நியமிக்கும்படி பலசுதேசிய மற்றும் பொதுசன அமைப்புக்கள் அரசிடம் மன்றாடி வருகின்றனஇருந்தும் நமது ஹார்ப்பர()சருக்கு இது ஒரு பிரதம விடயமே இல்லைஇது பற்றிய அவரதுசமீபத்திய இரு கருத்துக்கள்
காணாமற் போகும் அல்லது கொலை செய்யப்படும் சுதேசியப் பெண்களின் பிரச்சினை ஒரு சமூகவியல் சார்ந்த பிரச்சிநையே அல்லமாறாக அது ஒரு குற்றவியல்சம்பந்தமான பிரச்சினைஅதை அதன் வழியில் தான் அணுக வேண்டும்" (இன்நுமொரு சுதேசியப் பெண் ரீனா பொண்டெயின் கொலை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குஅளித்த பதில்)
 
"உண்மையைச் சொல்லப் போனால் இந்த விடயங்கள் எங்கள் றேடாரில் அதிக உயரத்தில் இல்லை" (சி.பி.சி யிம் மூத்த அறிவிப்பாளர் பீட்டர் மான்ஸ்பிறிட்ஜ் இன் கேவிக்குப்பதிலளித்த போது)
 
உண்மைதான்ஹார்ப்பரின் ரேடார் பிராந்தியத்தில் அதி உயரத்தில் பறப்பது போர் விமானங்கள் மட்டுமே
 
சிண்டிக்கும் அவளது பாதையில் வலிந்தநுப்பப்பட்ட சகோதரிகளுக்கும் நான் சொல்லக் கூடியது அடுத்த பிறப்பிலாவது சிகண்டிகளாகப் பிறவுங்கள்
 

திங்கள், 20 பிப்ரவரி, 2017

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

ஓ  பா(வ)மா?.

ஒபாமாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது பற்றிப் பலருக்குக்  கவலை.  அவர் ஒரு கண்ணியவான், நீதிமான், ஏழைபங்காளன், சமாதானம் விரும்பி என்று பலரும் பூ மழை பொழிகிறார்கள். அவர் இருக்கும்வரை வெள்ளை மாளிகை பளிங்கு மாளிகையாகவே சுவர்களுக்கு வெளியில் நின்றவர்களுக்குத் தெரிந்தது. துரும்பரின் வரவில் ஒபாமாவின் ஒளிவட்டம் பெரிதாகியதில் வியப்பில்லை.

துரும்பர் வெண்கலக் கடைக்குள் புகுந்த யானை என்பதிலும் மாற்றுக்  கருத்தில்லை. போன நாளிலிருந்து ஒரே 'சவுண்டு' விட்டுக்கொண்டுதான் இருக்கிறார். அவர்  இப்படித்தான் நடந்துகொள்வார் என்பதும் எதிர்பார்த்ததுதான். எதிர்பாராதது இவ்வளவு விரைவில் நடக்குமென்பது மட்டுமே.

'The Making of Trump' என்றொரு டேவிட் கேய்  ஜோண்ஸ்டன்  எழுதிய புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். துரும்பரின் குணாதிசயங்களைப் பற்றி அவர் ஆதாரங்களுடன் நிறைய எழுதியிருந்தார். அதில் முக்கியமான சில 1) எதிரிகளைப்  பழி வாங்குவதில் இன்பம் பெறுபவது  2) எடுத்த காரியத்தை குறுக்கு வழிகளில் போயாவது முடித்து வைப்பது 3) பொய் சொல்வது 4) உறவினரென்றாலும் ஈவு இரக்கம் காட்டாதிருப்பது ஆகியன. துரும்பரின் தந்தையும், தாத்தாவும் இவரைப் போலவே தார்மீகமற்ற வியாபாரிகள். கடும் உழைப்பாளிகள். துரும்பரின் வெற்றியின் பின்னால் ஊழல் நிறைத்த அரச ஊழியர்களும், அரசியல்வாதிகளும் (கிளின்டன் உட்பட), மாபியாக் கோஷ்டிகளும், போதை வஸ்து கடத்துபவர்களும், சூதாட்டக் காரர்களும் தானிருந்திருக்கின்றனர் என்கிறார் ஜோண்ஸ்டன்.

துரும்பர் ஒரு கோடீஸ்வரர். ஆனால் இதர கோடீஸ்வரர்கள் இவரை ஒட்டுமொத்தமாக ஒதுக்குகிறார்கள். அதிகார வர்க்கம் இவரை மதிப்பதில்லை. இந்த இரண்டு சாராரும் துரும்பருக்கு எதிரிகள். துரும்பரது நடவடிக்கைகள் பற்றி நன்றாக அறிந்தவர்கள். பெரும்பாலான ஊடகங்கள் இபார்கள் கைகளில் தான் இருக்கிறது. துரும்பரின் முதலாவது பழிவாங்கல் இவர்கள் மீதுதான் ஆரம்பிக்கிறது.. உழைப்பவர்களின் தோழனாக அவர் போடுவது  வேடம் தான். அரியாசனத்தில் அமர்வதுவே அவரது இலக்கு. அவர் வைத்த இலக்கை அவர் எவ்விதமாகவும் அடையாவே முற்பட்டார். வழிகளைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. அவரை எதிர்ப்பவர்கள் அவரைவிட மோசமானவர்கள் என்பது வாக்காளருக்குத் தெரிந்திருந்தது.

உலகில் அகதிகளை உருவாக்கியவர்களே அமெரிக்காவும் ஐரோப்பாவும் தான். வணிக லாபமே அவர்களது இலக்கு. அவர்களால் உருவாக்கப்படட அகதிகள் அவர்களது நாடுகளை நோக்கி ஓடுவதில் தப்பில்லை.

2015 ஐ.நா. அறிக்கையின்படி 63.5 மில்லியன் அகதிகள் தத்தம் நாடுகளிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். சமீப மனித வரலாற்றிலேயே இந்தளவு கொடுமை நடந்ததில்லை. இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். அமெரிக்கப் படையெடுப்புகளினாலும், குண்டுவீச்சுக்களினாலும் அவர்களால் உருவாக்கப்படட பயங்கரவாதிகளாலும் துரத்தப்படடவர்களே இந்த அகதிகள். துரும்பரின் முஸ்லீம் தடைக்கு எதிராக இன்று முதலைக்கண்ணீர் வடிக்கும் ஜனாநாயக, குடியரசுக் கட்சிக்காரர்களினாலேயே இம் முஸ்லிம்கள் அகதிகளாக்கப் படடார்கள்.

புஷ் ஆரம்பித்து வைத்த பயங்கரவாதத்துக்கு எதிரான போரை இறுதிவரை உக்கிரமாக முன்னெடுத்தவர் ஒபாமா. இப்போர்கள் உருவாக்கிய அகதிகளையே துரும்பர் தடை செய்கிறார். மனிதாபமானமில்லாதவாரென்று அறியப்படட துரும்பரிடம் இதை எதிர்பார்க்கலாம். ஆனால் மனித உரிமைகளின் காவலன் என்று மகுடம் சூட்டிக்கொண்டு, சமாதானத்துக்கான நோபல் பரிசையும் பெற்றுக்கொண்ட ஒபாமாவிடம் இதை எதிர்பார்க்கலாமா? ஆனால் அவரது அறுவடைதான் இந்த உலக அவலம். ஈராக்கில் புஷ் துரத்திய முஸ்லிம்களுக்கு லிபியாவில் பயிற்சி தந்து சிரியாவில் போரிட வைத்த ஒபாமா மீதான பழிவாங்கல் தான் இந்த முஸ்லீம் தடை. துரும்பரின் பார்வையில் ஒபாமா எப்போதும் ஒரு முஸ்லீம் தான்.

அது மட்டுமல்ல. ஒபாமா நிர்வாகத்தில் நாடு கடத்தப்படட முஸ்லிம்களின் எண்ணிக்கை 2.5 மில்லியன். இவருக்கு முன்னான அத்தனை ஜனாதிபதிகளினதும் மொத்த நிர்வாக காலத்தில் நடைபெற்றதைவிட இது அதிகம். . மூன்று வயதுக்கு குழந்தைக்குக்கூட ஒரு வக்கீல் பிரதிநிதியாக இருக்க முடியாது என்பது  சட்டம்,  அந்த குழந்தைகள் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந்தக் கொடுமை நீதிமான் ஒபாமா நிர்வாகத்தில்தான் நடந்தது.

துரும்பரின் அரசியல் ஒபாமா அரசியலின் நீட்சிதான். அவருடைய மந்திரிசபையில் அமர்த்தப்பட்டிருக்கும் பெரு வணிகர்கள், இராணுவ ஜெனெரல்கள், தீவிர வலதுசாரி கடும் போக்காளர்கள் எல்லோரும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியின் செனட்டர்களின் பெருமாதரவுடன் தான் நியமனம் பெறறார்கள். எனவே துரும்பர் எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளும் இவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு ஆமோதிக்கப்படடவையேதான். எனவே ஒபாமாவோ ஹிலாரி கிளின்ரனோ அல்லது புஷ் சோ இந்நியமனங்களுக்கு எதிராக ஒப்பாரி வைக்க முடியாது.

நிறவெறி நிறை வெறியாக இருக்கின்ற அமெரிக்காவில் ஒபாமாவின் நகர்வுக்கான வெளி மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது என்பதை ஒத்துக்கொள்கிறேன். அந்த வெளிக்குள்ளும் அவர் கைகள் கட்டுப்பட்ட்தா அல்லது தானாகவே கைகளைக் கட்டிக் கொண்டாரா என்பதுதான் கேள்வி.

ஒபாமா ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் முன்னெடுத்த 'நீதி யுத்த' த்தின் போது புஷ் சை விட பத்து மடங்கு அதிகமான குண்டு வீச்சுக்களை நிகழ்த்தினார். 2008-2016 காலப்பகுதியில் மட்டும் 272 ஆளில்லா விமானத்தாக்குதலின் மூலம் 600 க்குமதிகமான பொதுமக்களைக் கொன்றொழித்தார்.  ஆனால் எந்தவொரு ஆர்ப்பாட்ட்ங்களோ, தெருப்போராட்டங்களோ உலகெங்கும் முன்னெடுக்கப்படவில்லை.  ஆனால் துரும்பர் வெள்ளை மாளிகைக்குள் காலெடுத்து வைக்கு முன்னரே, குண்டுகளை முஸ்லீம் மக்களின் மீது பொழிவதற்கு முன்னரே பல்லாயிரக் கணக்கானவர்கள் தெருக்களில் இறங்கி விடடார்கள்.

பெரும்பான்மையான வாக்காளர்கள் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்தவுடன் காலாவதியாகிவிடுகின்றனர். தவணை முடியும்வரை அரசையும் அரசியல்வாதிகளையும் உரிய முறையில் செயற்பட வைப்பது செயல்வாதிகள் (activists) தான். அவர்களது ஆடுகளம் தெருக்கள்  தான். ஆனால் துரதிர்ஷ்டா வசமாக இந்த நவீன தாராளவாத முலாமைப் பூசிக்கொள்ளும் ஜனநாயகக் கட்சி போன்றவர்கள் ஆட்சியமைக்கும் போது செயல்வாதிகள் மௌனமாகிவிடுகிறார்கள். சமாந்த பவர், சூசன் ரைஸ் போன்ற மனித உரிமை செயல்வாதிகள் தாம் சார்ந்திருக்கும் அரசின் அராஜகங்களை நியாயப்படுத்துகிறார்கள். துரும்பரின் வரவுக்கெதிரான பெண்களின் போராட்டம் ஒபாமாவின் அக்கிரமங்களைக் கண்டுகொள்ளாதாது துர்ப்பாக்கியம்.

முகநூலில் ஒரு கார்ட்டுனில் பெண்கள் போராடடம் பற்றி ஹிலாரி சொல்வதுபோல் ஒரு வாசகம் இருந்தது. " இந்த "----------" எல்லாம் தேர்தல் அன்று எங்கே போயிருந்தார்கள்" என்று. கற்பனையானாலும் சிந்திக்க வேண்டியது.

துரும்பர் அதிபரானால் அவர் தனது நாட்டின் மீதே கவனம் செலுத்துவார். அது இதர உலக நாடுகள் சுயமாகச் சுவாசிக்க இடம் கொடுக்கும் என்று இதே பத்திரிகையில் முன்னொரு பத்தியில் எழுதியிருந்தேன். இப்போது துரும்பர் அதையேதான் செய்கிறார். சிரியாவில் பூட்டினோடு முண்டவில்லை. ஈரான் மீது குண்டு போடவில்லை. யுக்கிரேயினில் ரஷ்ய ஆதரவுப் பிரிவினர் மீது தாக்குதல் நடத்தவில்லை. உலகம் அவர் கவனத்திலில்லை.  அவரது கவனம் முழுவதும் அவர் நாட்டிலேயே. அமெரிக்காவை முதன்மையாக்குவதில் அவர் கவனம் செலுத்துகிறார். அதில் தவறென்ன இருக்கிறது?

உலகத்தில் எந்தவொரு நாட்டுக்கும் தர்மத்தைப் போதிக்கும் அருகதையில்லை. எல்லோர் கைகளிலும் இரத்தம் தோய்ந்திருக்கிறது. ஒரு நாடு இன்னொன்றுக்கு வகுப்பு எடுக்க முடியாது. அரசியல் ஊஞ்சல் இரண்டு பக்கமும் போகத்தான் வேண்டும். இப்போது வலதுசாரிகளின் பக்கம். அவ்வளவுதான். அதன் கால நியமத்தை அதற்கு ஆதரவளிக்கும் மக்கள் திண்மம் தான் தீர்மானிக்கும். அது நான்கு வருடங்களோ துட்டு வருடங்களோ  ஆகலாம்.

அமெரிக்காவின் அதிபராக ஒரு அசுரர் அவதரித்திருக்கிறார் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அவரது  வரவை இலகுவாக்கியவர்கள் ஒபாமா, ஹிலாரி போன்றவர்கள் தான்.

துரும்பர் ஆட்சிக்கு வந்ததும் கூறிய ஒரு வசனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
"நான் எனது நாட்டை முன்னேற்றவும் பாதுகாக்கவும் பாடுபடுவேன். நீங்களும் உங்கள் நாடுகளை முன்னேற்றுங்கள், பாதுகாருங்கள்"

ஒரு பாதிக்கப்படட அமெரிக்க உழைப்பாளியை அவறது இவ்வாசகங்கள் மகிழ்ச்சிப்படுத்துமேயானால் அவரது அவதாரம் தேவையானதே.

இந்து மதத்தில் கூறப்படுவதுபோல் முறைப்படி தவம் செய்த அசுரனுக்கு வரத்தை அருளவேண்டியது கடவுளின் கடமை. முக்காலமுமும் உணர்ந்த கடவுள்  அசுரன் தன் வரத்தை துர்ப்பிரயோகம் செய்யக்கூடுமென்பதையும் அரன் அறிந்தே இருந்திருப்பார். ஆனாலும் தவத்துக்கான வரத்தை அவர் கொடுப்பதுதான் நீதி.  துர்ப்பிரயோகம் செய்யின் அசுரன் அழிக்கப்படுவான் என்பதும் அசுரனுக்குத் தெரியும்.

அமெரிக்க மக்கள் அசுரனுக்கு வரத்தை அளித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் போய் பாற்கடலைக் கடைந்து நஞ்சை எடுத்துப் பருக்க முடியாது . பொறுப்பதே நீதி.



மாசி 2017 ஈ குருவியில் பிரசுரமானது 



















இரண்டாவது ஈழம்

முகப்பு
எல்லா காரியங்களும் காரணமில்லாமல் நடைபெறுவதில்லை என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு.

அது ஒரு எதிர்பாராத பயணம். ஒரு வாரத்தில் தீர்மானிக்கப்பட்டது. லண்டனிலிருந்து அவசரம் அவசரமாகப் புறப்படட பயணம். ஒரு வாரத்துக்கு முதல்தான் ஒரு மதுபான நிலையமொன்றில் நண்பர்கள் சந்தித்துக் கொண்டபோது அத் தீர்மானம் நிறைவேறியது..

ஆகஸ்ட்  31, 1983 கனடாவின் கியூபெக் மாகாணத்தின்  மிராபெல்  விமானத்தளத்தில் தரையிறங்கியதிலிருந்து தொடங்கியது எனது  இரண்டாம் காற்பயணம். நான், மனைவி, இரண்டு சிறிய தோள்ப் பைகள் கொஞ்சம் செலவுக்குப் பணம். விமான நிலையத்திலிருந்து வெளியேறியபோது எனது  நெற்றியில் போடப்பட்ட நாமம் 'அகதி'. அது நானாகத் தேடிக் கொண்ட நாமம்.

 விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரி கேட்டார்.
"போகும் இடத்தின் விலாசம் இருக்கிறதா?"
என்ன பொய்யைச் சொல்லலாம் என்று யோசிப்பதற்குள் "you never listen to me" என்று மனைவி பொரிந்து விழுந்தாள். அவளுக்குத் தமிழ் தெரியாது. கனடாவிற்குப் போகப் போகிறோம் என்று சொன்னது தருணம் தொடங்கிய சண்டை அது.

அந்த அதிகாரி  முதலே பலருக்கு நாமம் போட்டுப் பழகியிருக்க வேண்டும். மனைவியைப் பார்த்துப் புன்னகை செய்துவிட்டு  சொன்னார்."ஒரு டக்சியைப் பிடித்துக் கொண்டு மொன்றியாலில் இந்த விலாசத்துக்குப்  போ. அங்கு உனக்கு உதவி செய்வார்கள்.  வெல்கம் டு  கனடா". ஒரு நக்கலான அரைச் சிரிப்புடான் சொன்னார்.

டாக்சி அந்த விலாசத்தில் இறக்கி விட்டது. பிரஞ்சு மொழி தெரியாது. பெயர்ப்பலகையில் இருந்து எதுவும் பிடிபடவில்லை. உள்ளே போனதும் ஒரு பத்திரம் நிரப்ப வேண்டும் என்று ஒரு அறைக்குள் அனுப்பினார்கள். ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் வரவேற்று தகவல்களைக் கேட்டு பத்திரத்தை நிரப்ப ஆரம்பித்தார். அவருக்கும் ஒரு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் எனது உறவினர். நான் போகாமலேயே தெய்வம் குறுக்கால் வந்தது போலிருந்தது. அவரே தொடர்ந்தும் ஆங்கிலத்தில் பேசி  என் மனைவிக்கு முன் கதையைச் சொன்னார். நான் இறுமாப்போடு  மனைவியைப் பார்த்தேன். ரூமுக்கு வா அங்க பார்த்துக் கொள்ளலாம் என்பது போல் அவளது பார்வை இருந்தது.

"எங்கே தங்கப் போகிறீர்கள்"
"இனித்தான் ஓட்டல் ஏதும் பார்க்க வேணும்"
"உங்களுக்குப் பிரச்சினை இல்லாட்டி என்ர ரூமிலேயே தங்கலாம். பிறகு இடத்தை எடுத்துக் கொண்டு போகலாம்" என்றார். தெய்வம் குறுக்கால் போகவில்லை. எனது தோளிலேயே உட்கார்ந்து விட்டது.

தான் பணி புரியம் இடம் அகதிகளுக்கு உதவி செய்யும் இடம் எனவும் அதை  எல்லோரும் 'மேடம்' அலுவலகம் எனவும் அழைப்பார்கள் எனவும் அவர் சொன்னார். யாத்திரீகர்கள்  தங்கி இளைப்பாறிப் போகும் மடம் போலத்தான் இதுவும் என நினைத்துக் கொண்டேன். அவர் பெயர் சிவசாமி திருச்செல்வம்.

மாலை ஐந்து மணியிருக்கும். கோடை மலைக் காற்று தென்றலாக இதம் தந்தது. திருச்செல்வத்தோடு  நாங்கள் அவரது  இருப்பிடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தோம். பாதசாரி நடைபாதையில் தெருவைக் கடந்து கொண்டிருந்தபோது இடையே "சித்தப்பா" என்றொரு ஒரு உரத்த குரல் கேட்டது. அவர் எதிர்ப்பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்தார். பாதையோரம் வரை வந்து "என்ன இந்தப் பக்கம்" என்றார். அவர் பெயர் தேவதாசன். அவரும் எனது உறவினர். அவரும் தன் வீட்டில் தான் தங்க வேண்டும் என்று அடம் பிடித்தார்.

திருச்செல்வம் இருந்த அப்பாட்மென்ட் மூன்று அறைகளைக் கொண்டு வசதியாக இருந்தது. ஐந்து ஆறு தமிழ் இளைஞர்கள் இருந்தார்கள். ஒரு அறையைக் காலி செய்து எங்களுக்குத் தந்து சிரமதானம் செய்து கொண்டார்கள். அவர்களில்  பெரும்பாலானோர் ஜேர்மணியிலிருந்து அகதிகளாக வந்திருந்தவர்கள்.

படி 1
நாங்கள் இருந்தது மொன்றியல் நகரின் மையப் பகுதி. பெரும்பாலாருக்கு வேலை இல்லை. 'மேடம்' கொடுக்கும் சிறிய உதவிப் பணம் மட்டுமே சகல தேவைகளையும் சமாளிக்க வேண்டும். நான் இருந்த  வீட்டில்  எட்டுப்  பேர். அந்தக் கட்டிடத்தில் இதர அப்பாட்மென்ட்களில் இன்னும் சில நாமம் போட்ட தமிழர்கள் இருந்தார்கள்.  ஆனால் படுக்கைக்கு மட்டும் தான் அந்த அறைகள். சமையல் சாப்பாடு தண்ணி வென்னி  எல்லாம் திருச்செல்வத்தின்  அறையில்தான்.

அப்போது மொன்றியல் நகரில் திக்குத் திக்காக ஒரு இருநூறு தமிழர்கள் வாழ்ந்திருந்தார்கள் என நினைக்கிறேன். தமிழர்கள் வியாபாரங்கள் எதுவும் தொடங்கியிருக்கவில்லை. எண்பத்தியிரண்டில் வந்த சில மூத்த தமிழர்கள் சிலர் அகதிகளுக்கு உதவி செய்து வந்தார்கள். அகதி வழக்கு எழுதிக்  கொடுப்பது, சடடத்தரணி, குடிவரவு, மருத்துவ நிலையங்கள் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்வது எனப் பலர் உதவியாகவும் உழைப்பாகவும் செய்து வந்தார்கள். கோவில் என்று இல்லை.  ஆனாலும் எந்த சூழலையும் தங்கள் சூழலாக்கி இசைவடையும் ஈழத் தமிழர்களுக்கு எதுவும் கோவில்தான். மலைக்  கோவில் என அழைக்கப்படும் கத்தோலிக்க தேவாலயம் தான் பலரது முருகன் கோவில். குன்றில் தானே முருகன் இருப்பான்.

ஒரு சிலர் கூடி ஒரு சங்கம் அமைத்திருந்தார்கள். 'கியூபெக் ஈழத்தமிழர் ஒன்றியம்' என்றதற்குப் பெயர். இதில் முன்னின்று உழைத்தவர்களில் திரு பொன்னுச்சாமி, திரு முல்லைத்திலகன்,  திரு கவிதா ராஜன், மறைத்த திரு நந்தகுமார் ஆகியோர் முக்கியமானவர்கள். சங்கமென்று வைத்தால் தமிழை வளர்க்காமல் நம்மவர்கள் விடமாடடார்கள் தானே. 'தமிழ் எழில்' என்றொரு கையெழுத்துச் சஞ்சிகை ஒன்று திரு முல்லைத் திலகனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

இந்த நாமம் போட்ட  தமிழர்களை விட சில ஆதித் தமிழ்க் குடிகளும் கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளிலும் டொரோண்டோ, ஓடடாவா, வினிபெக், ஹாலிபாக்ஸ் போன்ற இடங்களிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் கல்வி, தொழில் நிமித்தம் எழுபதுகளில் குடிவந்தவர்கள். இருப்பினும் எண்பத்தியிரண்டுக்குப் பின்னர் வந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம் மட்டுமல்ல முதன் முதலில் கனடாவில் ஒரு தமிழ்ச் சமூகமாக வாழத் தொடங்கியவர்கள்.

ஈழத்து அரசியல் பிரச்சினைகள், எண்பத்தி மூன்று இனக்கலவரம் என்பன கனடிய தொலைக்காட்சிகளில் எம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த காலம். மூத்த குடிகள் பலர் புதிய தமிழர்களுக்கு உதவி புரிய முன்வந்தனர். மொன்றியாலில் பொறியியலாளர்களாகப் பணி புரிந்த திரு.பாலேந்திரன், சுப்பிரமணியம் ஐயர், ஓடடாவாவில் கலாநிதி இலகுப்பிள்ளை, திரு.சிவசுந்தரம், டொரோண்டோவில் திரு.சிறிஸ் கந்தராஜா, திரு.தேவதாசன், திரு.புனிதவேல் என்று பலர் புதிய தமிழர்களுக்கு பல வகைகளிலும் உதவிகளை புரிந்தனர்.

அப்போது டொரோண்டோ வந்திறங்கும் அகதிகளுக்கு உதவிப்பணம் வழங்கப்படுவதில்லை. அதனால் பெரும்பாலான 'திக்கற்ற' அகதிகள் மொன்றியலை நோக்கியே வந்துகொண்டிருந்தார்கள். உறவுகள், நண்பர்களின் ஆதரவு பெற்றவர்கள் டொரோண்டோவில் தங்கினார்கள். இங்கு வேலைகளைப் பெறுவதும் இலகுவாக இருந்தது. குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் கல்வி கற்பிப்பதும் முக்கிய நோக்கமாகவிருந்தது.

ஆனாலும் மொன்றியல் ஒரு சிறு நகரம் என்பதும் இலகுவில் சங்கமிக்கக் கூடிய வசதிகளைக் கொண்டிருந்ததும் மகிழ்ச்சியான சமூக வாழிடமாக எமது மக்களால் தெரிவு பெற்றது. துயரமான தாயக நினைவுகளைத் தாங்கி வந்திருந்த நம்மவர்களுக்கு இந்த சமூக உருவாக்கம் அவசியமான ஒளடதமாக இருந்தது. டொரோண்டோவில் வாழ்ந்த தமிழர்கள் வருவாயில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் மொன்றியல் தமிழர்களின் மகிழ்வுத் தரத்தை  அவர்களால் சற்றுத்  தாமதமாகவே  எட்டக்கூடியதாக இருந்தது.

ஆரம்பத்தில் பொதுநலவாய நாடுகளின் குடிகள் கனடா வருவதற்கு விசா தேவையாக இருந்திருக்கவில்லை. பின்னர் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததும் ஈழத்தமிழருக்கு விசா அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பிந்திய அகதிகள் பயண முகவர்கள் மூலமோ அல்லது அடையாள மாற்றங்களை மேற்கொண்டோ தான் வர முடிந்தது.

இந்தக் காலத்தில் பல மூத்த குடிகள் பல நிலை அரசுகளுடனும் உறவுகளைப் பேணி ஈழத் தமிழர்களின் வருகையை இலகுவாக்கும் முயற்சியில் இறங்கி வெற்றியும் கண்டார்கள். பல அகதிகள் நிரந்தர வதிவிடம் பெற்று தமது உறவுகளை ஈழத்திலிருந்து குறுகிய காலங்களில் வருவிக்கக் கூடியதாகவிருந்தது.

எண்பத்தி மூன்று / நான்கு காலத்தில் ஈழத் தமிழர் ஒன்றியம் அட்வாட்டர் என்னுமிடத்திலுள்ள ஒரு தேவாலயத்தின் கீழறைக்குள் தஞ்சம் புகுந்தது. வண பிதா பிரான்சிஸ் சேவியர் அவர்கள் இந்த தேவாலயத்தில் இலவசமாக இந்த அறையைப் பெற்றுக்  கொடுத்தார். தொண்டர்களின் உதவியுடன் 'ஒன்றியம்' ஒரு நூலகத்தையும் தொலைபேசிச் செய்தித் சேவையையும் செய்து வந்தது. விமான நிலையத்தில் வந்திறங்கும் போக்கற்ற அகதிகளை அதிகாரிகள் ஒன்றியத்துக்கு அனுப்பிவிடுவதுமுண்டு.

இதன் பின்னர்  உதவி மனப்பான்மை கொண்ட 'மூத்த' தமிழர்களும் ஒன்றியத்துடன் இணைந்து பல சேவைகளைச் செய்தார்கள். பல அரசியல் வாதிகளுடனும் ஊடகங்களுடனும் தொடர்புகள் உருவாகின. ஈழத்தமிழரின் உத்தியோக பூர்வமான பிரதிநிதியாக ஒன்றியத்தை பெரும் சமூகம்  அங்கீகரித்தது.

இதே கால கட்டத்தில் கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் சிலர் 'தமிழர் ஒளி' என்றொரு அமைப்பையும் தோற்றுவித்து அதன் மூலம் பல சமூக, கலை கலாச்சாரப்பணிகளைச் செய்து வந்தார்கள்.

அக்காலத்தில் கியூபெக் மாகாணத்தில்  இருந்த தமிழ் அகதிகள் இலவச அரச  மருத்துவ உதவிகள் பெறுவதற்கான அட்டைகளைப் பெற்றுக் கொடுத்தத்தில் மூத்த தமிழர்களுக்கும் ஈழத்  தமிழர் ஒன்றியத்திற்கும் பெரிய பங்குண்டு.

அத்தோடு, மிராபெல் விமானநிலையத்தில் வந்திறங்கும் தமிழ்  அகதிகள் தடுப்பு நிலையங்களில் இருக்காது வெளியே வரவேண்டுமானால்  நிரந்தர வதிவுடமையுள்ளவர்கள் பிணை நிற்கவேண்டிய தேவையும் இருந்தது. இதற்காக நிரந்தர பதிவுடமையுடைய தமிழர்களைத் தேடி தொலைபேசிக்  கோவைகளைபி புரட்ட  வேண்டி இருந்தது. கலாநிதி இலகுப்பிள்ளை போன்றவர்கள் இந்த விடயத்தில் பெரிதும் உதவினார்கள்.

வசதி படைத்த தமிழ் நாட்டுத் தமிழர் பலர்  மொன்றியல் தீவிற்கு வெளியே புரோஸார்ட், வெஸ்ட் ஐலண்ட் போன்ற பகுதிகளில் வாழ்த்து வந்தனர். தமிழர் கலாச்சாரத்தைப் பேணுவதில் அதிக விருப்புள்ள பலரை திரு பாலேந்திரன் அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்தார். பிரட் அண்ட் விட்னி என்ற பொறியியல் நிறுவனத்தில் அவரோடு பணி  புரிந்த இராஜசேகரன் என்ற தமிழ்நாட்டு இளைஞர் இவர்களில் முக்கியமானவர். ஒன்றியத்தினால் வருடா வருடம் ஒழுங்கு செய்யப்படும் பொங்கல் விழாவில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் பலர் ஆர்வத்துடன் பங்குபற்றினர். இராஜசேகரன் இசைக்கலையிலும் வல்லவர். அவரது இசைக்குழுவில்  இருந்த ஒரு கியூபெக் காரர் இந்த விழாவொன்றில் முற்றிலும் தமிழில் பாடி அசத்தியமை அப்போது ஆச்சரியமாக இருந்தது.

திருச்செல்வம் இருந்த அப்பாட்மெண்டில் பாஸ்கரன் என்றொரு இளைஞரும் வசித்து வந்தார். அவர்  வீடியோ கசட்டுகளில் தமிழ்ப் படங்களைப்  பிரதிபண்ணி வாடகைக்கு கொடுத்துவந்தார். அதனால் அவரை வீடியோ பாஸ்கரன் என்று தான் பலரும் அழைப்பர். கியூபெக் மாகாணத்தின் பல பகுதிகளிலும் இல்லை மறை காயாக வாழ்ந்த தமிழர் பலரை ஒன்றிணைய வைத்ததில் ஒன்றியத்துக்கு இணையான பங்கு இவருக்குமுண்டு. புதிய படமொன்று  ரிலீஸாகிவிடடால் அவருடைய  வாசலில் லைன் நிற்கும். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டுத் தமிழர்கள்.

இதன் பிறகு ஈழத்தமிழர்கள் பலர் சுய தொழில் முயற்சியில் இறங்கினார்கள். முதலில்லாமல் உடனே தொடங்கக்கூடிய ஒரே தொழில் சீட்டுப்  பிடித்தல் தானே.  அதில் இறங்கி தொப்பி வாங்கியவர்களும் உண்டு தொப்பி போட்டவர்களும் உண்டு. ஆனாலும் பலரின் உறவுகளைக் கனடாவிற்கு அழைப்பதற்கு இச் சீட்டு முதலாளிகள் பெருமுதவிகளைச் செய்ததை மறுக்க முடியாது.

ஆளிறக்குதல் (பயண முகவர்) அடுத்த பெரும் தொழிலாகப் பரிணமித்தது. இதுவும் சீட்டுத் தொழிலும் மிகவும் புரிந்துணர்வுடன் செயற்படடன. நிறைய இளைய தலைமுறையினரை இராணுவத்தினரிடமிருந்தும் இயக்கங்களிடமிருந்தும் காப்பாற்றிய தொழில்கள் இவை.

1986 கனடாவில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. 155 ஈழத்தமிழ் அகதிகள் வந்த கப்பலொன்று நியூபவுண்டலாந்துக் கரையில் ஒதுங்கிய செய்தி ஊடகங்களை ஒரு கலக்குக் கலக்கியது. அப்போதைய கனடிய பிரதமர் மாண்பு மிகு பிரையன் மல்ரோணி தமிழருக்கு கவசமாகிக்  காப்பாற்றியமை ஒரு அற்புதம் தான். இந்த  தமிழர்களின் வரவை எதிர்கொண்டு வரவேற்று உதவிகள் புரிந்ததில் கியூபெக் ஈழத்தமிழர் ஒன்றியத்துக்கும் டொரோண்டோ தமிழ் ஈழச் சங்கத்துக்கும் பெரும் பங்குண்டு.

மலைக் கோவிலை குமரக் குன்றமாக வழிபட்ட இந்துக்கள் ஒருவாறாக ஒரு 'வேயர்ஹவுஸ்' கோவிலையும் உருவாக்கி விட்டார்கள். வருடமொரு முறை வல்மோரின் காவடி யாத்திரையும் ஆரம்பமானது.

இக்காலத்தில் அநேகமாக ஒவ்வொரு இயக்கமும் தத் தம் பரிவாரங்களை புலத்திலும் இயக்கி வந்தன. பலருக்கு இதுவே சுய தொழிலாகவும் அமைந்தது. அரசியல் மயப்படுத்துதலும் ஆயுத மயப்படுத்துதலும் இவை தப்பினால் பயப்படுத்துதலும் வாழ்வோடு இணைந்து பயணித்தன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் டொரோண்டோவிற்குப் படையெடுத்தனர். வேலை, பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வி, வெல்பெயர் எனப்படும் உதவிப்பணம் எல்லாமே 'வின் வின்' சிற்றுவேஷன். பழையவர் கழிய புதிய அகதிகளுக்கு கியூபெக் நாமமிட்டுக்கொண்டிருந்தது.

படி 2

எண்பத்தி ஏழாம்  ஆண்டு காலப்பகுதியில் டொரோண்டோவில் அப்பாட்மென்ட் வாடகைக்கு எடுப்பது மிகவும் சிரமம். சுப்பெறின்டென்களுக்கு  ஆயிரம், இரண்டாயிரம் லஞ்சம் வைக்காமல் இடம் கிடைக்காது. அப்படியிருந்தும் வகை துறை அறிந்த நமது தமிழர்கள் டொரொண்டோவை இரண்டாவது ஈழமாக மாற்ற ஆரம்பித்தனர். ஈழத்தின் அத்தனை அம்சங்களும் பிரதி செய்யப்பட்டன.

வெட்டி ஒட்டி முதலாவது பத்திரிகை வெளிவந்தது. செந்தாமரை என்றதற்குப் பெயர். பின்னர் கணனி வடிவமைப்பில் பல பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பரிணமித்தன. வியாபாரங்கள் பெருகின. விளம்பரங்கள் பெருகின. வானொலிகள் பெருகின. வசதிகள் பெருகின. சொந்தமான வீடுகள் பெருகின. விற்பனை முகவர்கள் பெருகினர். மேடைகள் பெருகின. பேச்சாளர் பெருகினர். சங்கங்கள் பெருகின, சங்கங்கள் பிளந்தன. சண்டைகள் வளர்ந்ததன. ஊர்கள் பெருத்தன. ஈழத்தின் பிரதியும்  உருவாகியது.

வன்முறைகள், தற்கொலைகள், மோசடிகள் என்பவற்றின் மத்தியில் சாதனைகளையம்  படைத்துக்கொண்ட பிரஜைகளுடன் இந்த இரண்டாவது ஈழம் தன்  வலுவோடு முன்னேறிக் கொண்டது. தான் உருவாக்கிய அழுக்குகளையே  பசளையாக்கி பிரமிக்கும் வளர்ச்சியைக் கண்டது.

காணாமற் சென்ற அரசியல் தேடி வந்தது. பிரமுகர்கள் ஓடி வந்தனர். வெள்ளை உதடுகள் தமிழைப் பிசைந்தன. வாக்குச் சாவடிகளில் முதன் முதலாக தமிழர்கள் தமிழருக்கு வாக்களித்தனர். 2006 நவம்பர் மாதம் மார்க்கம் நகரசபை அங்கத்தவராகத் தெரியப்பட்ட திரு லோகன் கணபதி அவர்களும் கல்விச் சபைக்குத் தெரிவான நீதன் சான் அவர்களும்   போட்ட சுழியோடு தமிழரின் அரசியல் வரவு ஆரம்பித்தது. 2011 இல் கனடிய மத்திய பாராளுமன்றத்துக்கு ராதிகா சிற்சபைஈசனைத் தெரிவு செய்ததன் மூலம் எண்பதுகளின் ஆரம்பத்தில் எம்மீது போட்ட நாமம் நிரந்தரமாக அகற்றப்பட்டது. அடுத்து கெரி ஆனந்தசங்கரி அவர்களைப் பாராளுமன்றம் அனுப்பியது. அடுத்த வருடம் ஒண்டாறியோ மானில அரசின் ஆசனங்களில் ஒரிரு தமிழர் அமரக்கூடிய அறிகுறியம்  தெரிகின்றது..

இது தரப்பட்ட விடுதலை அல்ல பெறப்பட்ட விடுதலை. இந்த இரண்டாவது ஈழத்தின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழரும் மிதித்துச் செல்வது நம் முந்தியவர் சிந்திய வியர்வையையும், வலிகளையும், அவமானங்களையுமும் என்பதை  மட்டும் பதிவு செய்வதே இச் சிறு முயற்சி. கனடிய மண்ணில் தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் நிறையப் பேர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். எல்லோர் பெயர்களும் இங்கு குறிப்பிடப்படவில்லை. அதற்காக எனது வருத்தங்கள்.

லண்டனில் ஒருநாள் எதிர்பாராத பொழுதில் எதிர்பாராமால் எடுத்த தீர்மானம் இந்த இரண்டாவது ஈழத்தின் வாழும் சாட்சியாக என்னை ஆக்கியமை நான் செய்த பாக்கியம்.

காரணமில்லலால் எதுவுமே நடைபெறுவதில்லை.

Nov 2016
(இக் கட்டுரை 'தமிழர் தகவல்' 26 வைது ஆண்டுமலருக்காக எழுதப்பட்டு பிரசுரமும் ஆனது. ஓரிரு சிறுமாற்றங்களுடன் இங்கு இணைகிறது ) 

















புதன், 18 ஜனவரி, 2017

நரம்பின் மறை

விபுலானந்த சுவாமிகளின் தமிழ்த்தொண்டு
இலங்கைத் தமிழருள் ஒரு பல்துறை வல்லுநர் என்ற வகையினருள் அடங்கக்கூடிய வெகு சிலருள் முதன்மை இடத்தைப் பெறுபவர் சுவாமி விபுலானந்தர். பொறியியல் (engineering), ஆங்கிலம், எண்ணியல் (mathematics) , இயற்பியல் (physics) , சோதிடம் (astrology), வானவியல் (astronomy), இசையியல் (music),  தாவரவியல் (botany), சங்க இலக்கியம் (sangam literature), கூத்தியல் (theatre ), வடமொழி (sanskrit)  என்று பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் அவற்றையெல்லாம் தன் தமிழ் சார்ந்த, தமிழிசை சார்ந்த ஆய்வுக்கான சுய புரிதலை மேம்படுத்துவதற்காகவே கையாண்டிருந்தார்.

சுவாமிகள்  எழுதிய 'யாழ்  நூல்' (நரம்பு வாத்தியங்கள் பற்றிய ஆய்வு) மற்றும் 'மதங்க சூளாமணி' (சேக்ஸ்பியரின் அரங்க நாடகங்கள் , வடமொழி நாடகங்கள், சிலப்பதிகார நாடகங்கள் பற்றிய ஒப்பீடு) ஆகியன மதுரைத் தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பெற்றவை. இவற்றில் 'யாழ் நூல்' சுவாமிகளின் புகழை உலகெங்கும் பரப்பியது.

சுவாமிகள் பங்குனி 29, 1892 இல் கிழக்கிலங்கையிலுள்ள மடடக்களப்பில் பிறந்தார். லண்டன் பல்கலைக் கழகப் பரீட்சையான பி.எஸ்.சி. இல் தேறியிருந்தாலும் அவருடைய ஆர்வம் முழுவதும் தமிழைச் சுற்றியே தான் இருந்தது. இறை பக்தியுள்ள அவரை ஒரு இந்து மதக் கண்ணாடியூடு பார்ப்பவர்களும் உளர். இராமகிருஷ்ண மடம், யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் என்பன அவரது தமிழாய்வுக்கான பயணத்தின் சில தங்கு மடங்களெனவே நான் பார்க்கிறேன். யாழ் நூலாக்கத்தின்போது அவர் தன் எண்ணக்கிடக்கையை இவ்வாறு வெளியிடுகிறார்.

ஆயிரம் ஆண்டுகளாக மறைந்து கிடந்த அருங்கலை நிதியத்தின் பெருமையினையும், அதனைத் தேடிக்காணப்புகுந்த எனது சிறுமையினையும் ஒப்புவைத்து நோக்கும் சான்றோர் என்னை எண்ணி நகையாடுதல் இயல்பேயாம். 'வையமென்னை இகழவும் மாசெனக்கெய்தவும்' இவ்வாராய்ச்சியினை யான் எழுதத்துணிந்தது, 'பொய்யில் காட்சிப் புலைமையினோ' ராகிய இளங்கோவடிகள் தமிழ்த் தெய்வத்தின் திருவடிகளுக்கு அணியாகப் புனைந்தளித்த தெய்வமாக்கவியாகிய சிலப்பதிகாரத்தின் மாட்சியினை என்னாலியன்றவரை உலகிற்குத் தெரிவிக்கும் பெருவிருப்பினாலேயாம். இயற்றமிழ் நூல்களிலே பறந்து கிடைக்கும் இசைநூன் முடிபுகளை என்போன்ற தமிழ் மாணவர்கள் ஓரளவிற்கு உணர்ந்து கொள்ள இவ்வாராய்ச்சி உதவுமாயின், எய்தும் பயனும் பெறுதற்குரிய பேறும் அதுவேயெனக் 
கொண்டு உளமகிழ்வுருவேன்"

சிலப்பதிகாரம் தமிழ் உரை ஆசிரியர்கள் மத்தியில் மிகவும் ஆர்வத்தோடு நோக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இளங்கோவடிகளின் புலமையை இலகுவாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றோர் சிலரே இருந்தனர். அதிலும் அரங்கேறு காதையைப் புரிந்து கொள்வதென்பது பல புலவர்க்கும் பண்டிதர்க்கும் மிகவும் சிரமமாகவே இருந்தது. சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதுபவர்கள் அரங்கேறு காதையைத் தவிர்ப்பதே வழக்கமாகவிருந்தது.  சுவாமிகள் அதை ஒரு சவாலாக எடுத்து அரங்கேறு காதைக்கு உரை எழுத முற்பட்டார்.

அரங்கேறு காதையில் மாதவியின் நடன அரங்கேற்றம் பற்றிய குறிப்பில் 25 அடிகள் யாழிசையின் ஆசிரியரொருவர்  எத்தகைய குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்றும் அவரது கடைமைகள் என்னவென்பன என்றும் விபரிக்கின்றன. பல்லாயிரம் வருடங்களாகத் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்த தமிழிசை உருவாக்கத்தில் உள்ள நுட்பங்களும் நுணுக்கங்களும் சுவாமிகளின் ஆய்வுணர்வுகளைத் தூண்டின. மாதவியால் பாவிக்கப்பட்ட யாழ், அதன் உருவாக்கம், அதிலிருந்து உருவாகும் இசையின் தன்மைகள் என்று அனைத்தையும் அறிய முற்பட்டபோதுதான் அதன் ஆழம் அவருக்குப் புரிந்தது. தனியே தமிழிசை பற்றிய அறிவு மட்டும் போதாது எண்ணியல், இயற்பியல், தாவரவியல் என்று இன்னோரன்ன துறைகளில் நிபுணத்துவம் தேவை என்பதை உணர்ந்து அவற்றைக் கற்றறிந்தார்.

தமிழிசையின் உருவாக்கம், அதன் பண்புகள், சுர வரிசை அமைப்பியல் பற்றிய விளக்கமோ விபரிப்போ இக்கட்டுரையின் நோக்கமல்ல. சுவாமிகளின் பல்வேறு முயற்சிகளும் தமிழ் சார்ந்த வகையில் எவ்வாறு முனைப்போடு நகர்த்தப்படடன தமிழுக்கு அவரது பங்களிப்பு என்ன என்பதைச் சுற்றியே இக் கட்டுரை வடடமிடுகிறது.

ஐந்திணை மாந்தர்,  அவர்களின் பழக்கத்திலிருந்த இசைப் பாரம்பரியம், இசைக்கருவிகலின் பயன்பாடு பற்றி சங்க இலக்கியங்களில் பரவிக் கிடக்கிறது. இன்றய வாசகனுக்கு இவ்விலக்கியங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை. உரையாசிரியர்களாலேயே தவிர்க்கப்படட அரங்கேற்று காதையில் வரும் இசை இலக்கணம் மட்டுமல்ல கருவிகளின் கட்டுமானம், அவற்றுக்கான உதிரிகளை எவ்வகையான தாவரங்களிலிருந்து பெற வேண்டும், நரம்புகளின் எண்ணிக்கை, நரம்புகளின் அளவு, துளைகளின் இடைவெளி என்று சகல இசைக் கூறுகளையும் ஆய்கூடத்தில் பிரதி பண்ணி (re-engineered) கணிதச் சமன்படுத்தலுக்கு உள்ளாக்கியே தன நிறுவல்களைச் செய்கிறார். அவருக்கிருந்த ஆழமான தமிழறிவே இதைச் சாத்தியமாக்குகிறது.

" ஆயிரம் ஆண்டுகளாக மறைந்து கிடந்த அருங்கலை நிதியத்தின் பெருமையினையும், அதனைத் தேடிக்காணப்புகுந்த எனது சிறுமையினையும் ஒப்புவைத்து நோக்கும் சான்றோர் என்னை எண்ணி நகையாடுதல் இயல்பேயாம். 'வையமென்னை இகழவும் மாசெனக்கெய்தவும்' இவ்வாராய்ச்சியினை யான் எழுதத்துணிந்தது, 'பொய்யில் காட்சிப் புலைமையினோ' ராகிய இளங்கோவடிகள் தமிழ்த் தெய்வத்தின் திருவடிகளுக்கு அணியாகப் புனைந்தளித்த தெய்வமாக்கவியாகிய சிலப்பதிகாரத்தின் மாட்சியினை என்னாலியன்றவரை உலகிற்குத் தெரிவிக்கும் பெருவிருப்பினாலேயாம். இயற்றமிழ் நூல்களிலே பறந்து கிடைக்கும் இசைநூன் முடிபுகளை என்போன்ற தமிழ் மாணவர்கள் ஓரளவிற்கு உணர்ந்து கொள்ள இவ்வாராய்ச்சி உதவுமாயின், எய்தும் பயனும் பெறுதற்குரிய பேறும் அதுவேயெனக் 
கொண்டு உளமகிழ்வுருவேன்" என சுவாமிகள் தன் நிலை விளக்கம் செய்கிறார்.

சங்கப் பாடல்களில் கூறப்படுகின்ற பல சொற்கள் இன்று நடைமுறையில் இல்லாதவை. அவற்றை இலகுவாக்கி பாடல்களின் பின்புலம் (திணை ), அத்திணைகளில் காணப்படும் பறவைகள், விலங்குகள், தாவரங்கள், அவை எழுப்பும் இசை எல்லாவற்றையும் கதை சொல்லும் பாணியில் முன்வைக்கிறார். உதாரணத்திற்கு யாழ் நூலில் வரும் யாழுறுப்பியல் அதிகாரத்தில் வில் யாழ் என்ற தலைப்பின் கீழ் இப்படி விவரிக்கின்றார் :

"பழந்தமிழ்நாட்டுப் பஹ்ருளியாற்றங்கரைக்குச் செல்வோமாக. மிக மிகப் பழைய காலம். முல்லை நிலம். மரங்களடர்ந்த சோலையின் பாங்கர் ஒரு பசும்புற்றரை. புற்றரையிலே பசுக்களும் கன்றுகளும் மேய்கின்றன. கார்காலம்; செடி கொடிகளில் பூக்கள் நிரம்பியிருக்கின்றன. இடையானொருவன் வருகிறான். காலிலே செருப்பு அணிந்திருக்கிறான். உறுதியான உடல்; மயிரடர்ந்த தோட்கட்டு; பால் மனம் நாறுகின்ற தலை மயிர். அறையின் கட்டிய ஆடையின் ஒரு தலைப்பினைத் தோளில் போட்டிருக்கிறான். பலநிறமாகிய கோட்டுப்பூக்களையும் கொடிப்பூக்களையும் கலம்பகமாகத் தொடுத்த மாலையொன்று தோளிற்கிடக்கிறது. இடுப்பிலே ஒரு மூங்கிற்குழல் சொருகப்பட்டிருக்கிறது.
ஒரு கையிலே கோல்; மற்றொரு கையிலே வில்வடிவமான ஒரு பொருள். ஒரு வில்லல்ல; பல விற்கள் சேர்த்துக் கடடப்பட்டிருக்கக் காண்கிறோம். 

நண்பகற்காலமாகிறது. இடைச்சி ஒரு குடுவையிலே பாலிட்டுக் காய்ச்சிய கூழ் கொண்டு வருகிறாள். இடையன் கூழினையுண்டு நீரருந்துகிறான். பின்பு கையிலே குழலை எடுக்கிறான். சில நாட்களுக்கு முன் அம மூங்கிற்குழல் இடையனால் இசைக்கருவியாக்கப்பட்டது. தீக்கடை கோலினாலே, புகையெழக் கைமுயன்று தீயைக் கடைந்து கொண்டு, அக் கடைக்கோலிலுள்ள தீயினாலே மூங்கிலிலே  துளையிடடான். குழலிலே பாலைப்பண் வாசிக்கிறான். இடைச்சி கேட்டு மகிழுகிறாள்."

சங்கஇலக்கியம் இன்றய வாசகனுக்கு அந்நியமாக இருப்பதற்கு ஒரு காரணம் அவனது மொழிப்புலமை பற்றாக்குறையே. சுவாமிகளின் எளிய, இலகுவான, காடசிப்படிமத்தைப் பின்புலமாகக் கொண்ட குறு வசனங்களாற் கட்டியமைக்கப்படட விவரணை சங்க இலக்கியங்கள் மீது இளைய தலைமுறையினருக்குப் போதையேற்றும் வகையில் அமைந்துள்ளது.

தமிழிசையின் இன்றய வடிவத்தை பண்டைய தமிழிசையோடு மட்டுமல்ல மேற்கத்தைய இசை வடிவங்கள், வட இந்திய இசை வடிவங்களோடு ஒப்பிட்டு தமிழிசையே இவையெல்லாவற்றிற்கும் முன்னோடி என முடிபு செய்கிறார். அத்தோடு இன்றய வயலின் இசைக் கருவியின் மூலம் மேற்கு நாடுகளல்ல, கூர்ம வீணை தானென்றும் இசைக்கருவிகளின் பாவனை சால்தியா, மெசோபொட்டேமியா போன்ற இடங்களுக்கு தமிழ்நாட்டின் வாணிபப்பரம்பலோடு சென்றடைந்திருக்க வேண்டும் எனவும் சுவாமிகள் கருதுகிறார்.

யாழ் நூல் சாதாரண வாசகனுக்கு தமிழின் பெருமையை உணர்த்தும் பொருட்டு எழுதப்படவில்லை, மாறாக அது தமிழிசை பற்றி ஆய்வு செய்பவனுக்காக எழுதப்பட்டது எனவே கருத வேண்டும். ஆனால் இத்துணை விடயங்களையும் சுவாமிகள் சங்க இலக்கியங்களை அகழ்ந்து தோண்டியே கண்டறிந்திருக்கிறார் என்ற வகையில் அதை  அவர் தமிழுக்குச் செய்த மிகப்பெரும் பங்களிப்பாகவே நான் பார்க்கிறேன். அதே வேளை தமிழிசை பற்றிய முதலாவது ஆய்வு தஞ்சை ஆபிரகாம் பண்டிதரால் எழுதப்பட்ட கருணாமிர்த சாகரம் என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.

சுவாமிகள் சுமார் பதினான்கு ஆண்டுகள் அயராது உழைத்து யாழ் நூலை  1947 இல் வெளியிட்டார். சுவாமிகளின் திறமையை நன்கறிந்த டாக்டர் உ.வே.சாமிநாதையர் பல வழிகளிலும் இந்நூல் வெளிவரக் காரணமாகவிருந்தார். மிகவும் சுகவீனமுற்றிருந்த நிலையிலும் இந்நூலை வெளியிட்டபின்னர் சில நாட்களில் சுவாமிகள்  இயற்கையெய்தினார்.

யாழ் நூலின் இரண்டாவது பதிப்பை கரந்தை தமிழ்ச் சங்கம் 1974 இல் வெளியிட்டது. மூன்றாவது பதிப்பை 2003 ஆம் ஆண்டு கனடாவிலிருந்து 'மறுமொழி ஊடக  வலையத்தின்' மூலம் வெளியிடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்நூலை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யும் பொறுப்பை கனடா விபுலானந்தர் கழகம் ஏற்றிருக்கிறது என்பது பெருமைக்குரிய விடயம்.

யாழ் நூலின் பெருமையை உலகம் கண்டு வியக்கும் போதுதான் சுவாமிகளின் பெருமையைத் தமிழுலகம் அறியவும் போற்றவும் செய்யும்.

(இக்  கட்டுரை கனடிய தமிழர் பேரவையின் 2017 பொங்கல் விழா மலரான 'The Voice' இல் பிரசுரமானது)
















வியாழன், 5 ஜனவரி, 2017


முக்கோண சூத்திரம்


காரியங்கள் காரணமில்லாமல் நடைபெறுவதில்லை என்பதில் மிகவும் உறுதியான நம்பிக்கை எனக்குண்டு. வரலாற்றுத் தடயங்கள் இதற்கு  நிறைய ஆதாரங்களைத் தந்துள்ளன.

அந்த நம்பிக்கையில் கடந்து போன ஆண்டும்,  வந்திருக்கும் புத்தாண்டும் திடடம், ஒழுங்கு தவறாமல் நடந்தது, நடக்கும் என்பது என் யூகிப்பு.

உலக அரசியல், பொருளாதாரம், சூழல் இந்த இணைக்கப்படட மூன்று புள்ளிகளிடையேயும் தான் எமது வாழ்க்கை. இந்த முக்கோணத்தில் ஒரு மூலை  பெரிதாக வேண்டுமானால் மீதி இரண்டும் சிறிதாகுவது வழமை. மொத்தம் 180 பாகைகள் தான்  என்கிறது கணித சூத்திரம்.

இந்தப் புள்ளிகளை நகர்த்துவதில் காரணிகளாக இருந்த  உலக மகா புள்ளிகள் சிலர் - ஸ்டாலின், ஹிட்லர், சேர்ச்சில், ட்ருமன், பூட்டின் வரிசையில் இடம்பெறப்போகும் துரும்பர் வரையிலான எனது அவதானிப்பு இது.

உலக வரலாற்றின் உந்து புள்ளிகளாக மேலும் பலர் இருந்தாலும் மேற்சொன்னவர்கள் ஒரு வகையில் திசை திருப்பிகளாக இருந்தனர் என்பது எனது அவதானம்.

லெனினின் ரஷ்யப் படைகள் பலத்த இழப்பைத் தொடர்ந்தும் ஹிட்லரை முறியடித்ததற்கு ஸ்டாலின்  தான் காரணம். நேசப் படைகள் நோர்மண்டியில் தாமதமாகவே இறங்கின. யாள்டா ஒப்பந்தத்தின் படி  போரின் முடிவில் ரஸ்யா, பிரித்தானியா போன்ற  நாடுகள் ஐரோப்பாவில் பல நாடுகளைத் தம் வசமாக்கின.

சேர்ச்சிலுக்கு, ஹிட்லரை ஒழிப்பதை விட ஆசிய, ஆபிரிக்க, மத்திய கிழக்கில் தனது சாம்ராஜ்யத்தையும் வருவாயையும் தக்க வைப்பதில் தான் குறி இருந்தது. தனது வர்த்தகக் கப்பல் பாதைகள் யப்பானியரால் முடக்கப்படாது என்பதற்காகவே யப்பான் மீது தாக்குதலை மேற்கொள்ளும்படி ருஸ்வெல்டைத் தூண்டினார் என்கிறார்கள்.

மிக மோசமான குண்டு வீச்சுக்களை யப்பானிய நகரங்கள் மீது அமெரிக்கா நிகழ்த்தி கொடூரமான மனிதப் படுகொலைகளை நிகழ்த்தியிருந்தாலும் யப்பானியரின் சாமுராய் படைகள் மற்றும் கமிகாசி தற்கொலைப் படைகளோடு மக்களும் சரணடைவிற்கு மறுப்புத் தெரிவித்து வீர மரணத்தைத்  தழுவக் காத்திருந்தார்கள். நிபந்தனையற்ற சரணடைவு சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோவின் பல நூற்றாண்டு பரம்பரை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதற்காக சக்கரவர்த்தியின் விருப்பத்திற்கிணங்கவே சரணடைவு உடன்பாடாகியது.

யப்பானின் சரணடைவை நிபந்தனையோடு ஏற்றுக்கொள்வதற்கு ரூஸ்வெல்ட் இணங்கியிருந்த போது துரதிர்ஷ்ட வசமாக அவர் மரணிக்கவே ட்ரூமன் அதிபராகிறார். வரலாற்றில் இது ஒரு முக்கிய திருப்பப் புள்ளி.

ட்ரூமன் காலத்தில் தான் அணுக்குண்டு பரீட்சிக்கப்பட்டது. அதில் எதிர்பார்த்ததை விடவும் பன்மடங்கு அழிவு சக்தி இருக்கப்போகிறது என்பதை அறிந்தவுடன் அதில் பணியாற்றிய பெரும்பான்மை விஞ்ஞானிகள் இது உலக அழிவுக்கு  வழிவகுக்கப் போகிறது என்றும் இது திடடத்தைக் கைவிடும் படியும் கூறி கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை தலைமை விஞ்ஞானி ஓப்பன்ஹைமர் மூலம் ட்ரூமனுக்கு அனுப்பினார்கள். ஓப்பன்ஹைமர் அதை ட்ருமனிடம் கொடுக்காமல் குண்டுகளைத் தயாரிக்க உத்தரவிடடார். இது இன்னுமொரு திசை திருப்பி.

ட்ருமன்  ஒரு 'ஆண்' தன்மை குறைந்தவரென அவரது தந்தையாராலே இகழப்பட்டவர். ஒரு உலக வல்லரசுக்கு அதிபராகத்  தெரியப்பட்டது அவரது சுய மேலாண்மைக்கு வழி வகுத்தது. யாள்ரா ஒப்பந்தத்தின் பிரகாரம் ரஸ்யா யப்பானைத் தாக்குவதற்குத் தயாராகவிருந்தபோது அதற்கு முன்னதாகவே ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளைப்  போடக்  கட்டளையிடுகிறார். ஜெர்மனியை வென்று 'உலகைக் காப்பாற்றிய ஸ்டாலின் மீது அளவிலாக் காதல் கொண்டிருந்த' அமெரிக்க மக்களின் முன் தனது வீரப்பிரதாபத்தைக் காட்ட ட்ருமன் எடுத்த நடவடிக்கை இது என்று சில வரலாற்றாளர் கருதுகின்றனர்.

இந்த ஸ்டாலின், ட்ருமன், சேர்ச்சில் என்ற மூன்று புள்ளிகளின் காரியங்களும்  என்ன காரணங்களுக்காக நடைபெற்றன என்பதைவிட அதன் விளைவுகள் என்ன என்பதுவே இங்கு முக்கியம். ஜெர்மனி, யப்பான், இத்தாலி போன்ற நாடுகள் போரில் வெற்றிபெற்றிருந்தால் இன்றய உலகம் வித்தியாசமாகவிருந்திருக்கும்.

இந்தக் கோணத்தில்தான் துரும்பரின் வரவையும் நான் பார்க்கிறேன். இது ஒரு திருத்த நிகழ்வு (correction process).

ஒபாமாவைப் பொறுத்தவரையில் ஒரு கறுப்பர் அமெரிக்க அதிபராக வந்தார் என்பதும் துரும்பர் வரவுக்கு வழிகோலியவர் என்பதும் மட்டுமே அவரது சாதனைகள். அவர் ஒரு அடிமையின் பரம்பரை என்றிருந்தாலும் கூட ஓரளவுக்குப் பெருமை சேர்த்திருக்கும்.

சிரியா, பாலஸ்தீனம், இஸ்லாமிய பயங்கரவாதம், சீனாவின் எழுச்சி என்று எதிலும் அவரால் வெற்றிகாண  முடியவில்லை. அமெரிக்க பொருளாதாரம் சிறிது முன்னேற்றம் கண்டிருந்தாலும் மக்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. இறுதியில் ஒரு மனமுடைந்த தோற்றுப்போன அதிபராகவே அவர் விடைபெறுகிறார்.

இதற்கு ஒபாமாவின் இயலாமை காரணமல்ல. அதிபராகிய பின்னர்தான் அவர் அடிமையானார். விலங்குகள் போடப்படடன. சொல்வதை மட்டுமே செய்தார்.

உலக அரங்கில் அவரது 'நிறம்' துவேஷிக்கப்பட்டது. புட்டின் அவரைக் கணக்கிலே எடுக்கவில்லை. சவூதி அரேபியாவில் அவமானப்படடார். இஸ்ரேலினால் அவமதிக்கப்படடார். பிலிப்பைன்ஸ் அதிபர் கூட அவரை இகழுமளவிற்கு அவரது நிலைமை இருக்கிறது. புட்டின் - துரும்பர் உறவு கூட இந்த துவேஷ அச்சில் தான் நிகழ்கிறது. ஒரு வகையில் ஒரு கருமை நிறத்தவரால் உலக ஒழுங்கை நிர்வகிக்க முடியாது என்ற உண்மையே ஒபாமா விட்டுச் செல்லும் பாடம்.

உலகமெங்கும் துவேஷிகளின் மீழெழுச்சி அதிவேகத்துடன் முன்னெடுக்கப் படுகிறது. துரும்பரின் வரவு அதன் ஒரு அடையாளம். பிரித்தானியாவின் வெளியேற்றம் ஒரு சலனம். புட்டினின் தினவு அந்த இழந்த பெருமையை மீட்டெடுக்கும் முயற்சிக்கான முழக்கம்.

இதுவெல்லாம் உலகம் இழந்த சமநிலையைச் சீர் செய்ய எடுக்கும் தன்னியக்க திருத்த முயற்சிகள். இவை பல தடவைகள் நிறைவேறியிருக்கின்றன. எகிப்திய, ரோம , ஒஸ்ட்றோ - ஹங்கேரிய, மொங்கோலிய, சோழ, பிரித்தானிய சாம்ராஜ்யங்கள் எல்லாம் எழுந்ததற்கும், அழிக்கப்பட்டதற்கும்   காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆபிரகாமின் குழந்தைகளின் அட்டகாசம் கை மீறிப் போவது கண்டுகொள்ளப்படவில்லை என்று  எண்ணத்  தேவையில்லை.  துவேஷிகளின் மீழெழுச்சிக்கு இதுவும் ஒரு  காரணமாக இருக்கலாம். யார் கண்டது?. இந்த துவேஷிகளின் காலம் முடிவுறும்போது ஒரு முதுகெலும்புள்ள வெள்ளையில்லாத ஒரு நாடு உலகை ஆளலாம். அதுவும் நிச்சயமானதொரு துவேஷத்தில் எழுப்பப்பட்ட சாம்ராஜ்யமாகவும்  இருக்கலாம்.

எல்லா வினைகளும் சமமானதும் எதிரானதுமான விளைவுகளைத் (Every action has equal and opposite reaction) தோற்றுவிக்கும் என்ற விதி எப்போதுமே அமுலில் இருக்கிறது. விளைவுகளை அவதானித்து வினைகளைப்  புரிவதே சிறந்த நடைமுறை.  நீண்ட வரலாற்றில்  முன் வினைகளும் விளைவுகளும் விழிப்புலத்திலிருந்து தப்பியது என்பதற்காக அவை எங்கேயும் போய்விட்டதாக அர்த்தமில்லை.

காரணமில்லாமல் அவர் 'அவதரிக்கவில்லை'. முக்கோண சூத்திரம் பொய்க்காது.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஜனவரி 2017 ஈ குருவியில் பிரசுரமானது. அதில் ஸ்டாலினுக்குப் பதிலாக லெனின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மன்னிக்கவும். 














வியாழன், 8 டிசம்பர், 2016

வந்தோம், பார்த்தோம், கொலை செய்தோம்

துரும்பர் அவதரித்து விட்டார். விருப்பமோ விருப்பமில்லையோ வந்துதித்து விட்டார். இனி வணங்காமல் விட முடியாது. 
அவர் வரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாகவிருந்தன  ஊடகங்கள். அவர் வரவே மாட்டார், இலக்கங்கள் அதைத்தான் சொல்கின்றன என்று செவிப்பறைகள் தகரச் சங்கூதின. அதையும் மீறி அவர் வந்து விட்டார். ஊடகங்கள் முட்டாக்குப் போட்டுக்கொண்டு கோடியால் ஓடி விட்டன. 

இதெல்லாம் அவர்களுக்குப் பழக்கப்பட்ட விடயம். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டு மீண்டும் நெளிந்து கொண்டு முன்னால் வருவார்கள். 

மக்களது அபிப்பிராயத்தை ஆதிக்க சக்திகளுக்கு சார்பாக மாற்றி எடுப்பதில் இவர்கள் வல்லவர்கள். மக்களது பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப உடுக்கடித்து உருவேற்றும் ஊடகங்களினால் தான் துரும்பர் வென்றார், ஹிலாறி தோற்றார். ஹிலாரி வென்றுவிடக் கூடாது என்று வாக்களித்தவர்களில் பலர் குடியரசுக்கட்சிக்காரரல்லர். அவருக்கு எதிரிகள் அதிகம். லிபியன் தலைவர் கடாபி கொல்லப்படட செய்தியைக் கேட்ட போது தொலைக்காட்சி முன் "We came, we saw and we killed him" என்று எகத்தாளமான சிரிப்புடன் அட்டகாசம் பண்ணியபோதே நினைத்தேன் இது உலகத்துக்கு ஆகாத ஒன்று  என்று.

அளிக்கப்படட வாக்குகளைப் பகுப்பாய்வு செய்தவர்கள் சொல்கிறார்கள் துரும்பரின் குடியரசு வாக்குத்தளம் வழமைபோல் தான் வாக்களித்திருக்கிறது. ஹிலாரியின் ஜனநாயகத் தளமே வற்றியிருக்கிறது  என்று. அதனால் தான் சொல்கிறேன் துரும்பர் வெல்லவில்லை ஹிலாரி தோற்றிருக்கிறார். அதற்கு காரணம் அவரது குடும்பமும் ஜனநாயகக் கட்சியின் மூலஸ்தானமும் தான். தொண்டர்கள் பாவம். அவர்களுக்கு ஆறுதல் கூறாமலேயே பள்ளி கொள்ளப் போன ஹிலாரியின் மீது எனக்கு அனுதாபமில்லை. 

துரும்பர் ஒரு துவேஷி என்பதில் சந்தேகமேயில்லை. துவேஷி எல்லோருள்ளும்  தான் இருக்கிறார்.  புழுங்குகிறார்கள்  சிலர் புகைகிறார்கள் சிலர் குரைக்கிறார்கள். பலர் சிரிக்கிறார்கள். துரும்பரின் குறைப்பிற்கு ஹிலாரியின் சிரிப்பிற்கும் எந்த வித்தியாசமுமில்லை. 

பெரும்பான்மையினர் மௌனமாய் இருப்பதால் தான் சிறுபான்மையினரின் விருப்புக்கள் இலகுவாக நிறைவேறுகின்றன என்றொரு புண்ணியவான் சொன்னான். இது ஒரு நித்திய உண்மை. 

துரும்பர் விடயத்தில் இது தான் நடந்தது. ஸ்டாலின், ஹிட்லர் விடயங்களிலும் இது தான். இந்த தத்துவத்திற்கு  வலது இடது என்றெல்லாம் பேதம் தெரியாது. அதி தீவிர இடதுசாரிக் கொள்கைகளால் துருவப்படுத்தப்படட வலதுசாரிகள் இப்போது வெளியே வருகிறார்கள். அவர்களை சரியான தருணத்தில் இனம் கண்டு அவர்களின் பலவீனத்தைச் சாதகமாக்கிக் கொண்டதனால் தான் துரும்பர்  வெற்றி பெற்றார். அது அவரது சாதுரியம். 

அவரது வெற்றி உலகம் முழுவதும் கொதித்துக் கொண்டிருக்கும் வலதுசாரிச் சிறுபான்மையினரை உருவேற்றியிருக்கிறது. அங்கெல்லாம் புதிய துரும்பர்கள் வருவார்கள்,  பெரும்பான்மை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும். இடது சாரிகள் தமது முற்போக்கு கொள்கைகளை ஓரிரண்டு தசாப்தங்கள் அடைகாத்து மீண்டும் வருவர். 

துரும்பரின் வரவு எதையும் வெட்டி விழுத்தப் போவதில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவரால் இலகுவில் முடியாது. வழக்கமாக இவற்றையெல்லாம் பூசி மெழுகி அதிகார வர்க்கத்தைக்  காப்பாற்றி வரும் ஊடகங்கள் அவர் பக்கம் இல்லை.  அவர் கவனம் எல்லாம் அமெரிக்கா மீதே இருக்கும். அதனால் உலகம் கொஞ்சக் காலம் சுயமாகச் சுவாசிக்கும். திணிக்கப்படட ஊன்றுகோல்களை எறிந்து விட்டு தாமாக நடக்க முற்படும். 

சமநிலையாக்கம் என்ற இயற்கையின் தத்துவப் பிரகாரமே எல்லாம்  நடக்கிறது.

Relax and enjoy!


2018ல் கதலீன் வின்னுக்கு பத்தாமிடத்தில் வியாழன்...

ஒன்ராறியோ மாகாண பொதுத் தேர்தல் 2018 இல் வரவிருக்கிறது. அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளைப்போல் feel பண்ணுபவர்களும் உடலெல்லாம் பதாகைகளோடு வலம் வர ஆரம்பித்து விடடார்கள். கடை வாசல்களில் காவற்காரைப் போல் தவமாய் தவம் கிடந்து ஆதரவு கேட்கும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான்  இருக்கிறது. 

இந்த தடவை கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என்கிறார்கள். அதற்கு காரணம்  கொள்கைகள் இல்லை. தற்போதைய ஆளும் கட்சி மீதான, அதன் தலைவர் மீதான வெறுப்பு எனச் சொல்கிறார்கள். இதைச்  சமூக ஊடகங்கள் சொல்கின்றன என்பதனால் நம்பலாம். 

ஒன்ராறியோ மாகாணத்தைக் குட்டிச் சுவராக்கியதில் மைக் ஹாரிஸுக்கு பெரும் பங்குண்டு. அதைச் சமநிலைப் படுத்தவே நான்கு தடவைகள் லிபரலுக்கு மக்கள் வாக்களித்தார்கள். பிரதமர் கதலீன் வின் ஆட்சிக்கு வந்தபோது முன்னாள் பிரதமர் டால்ரன் மக்கின்ரி தன பொதியை இவர் மீது சுமத்தி விட்டார். அதை இறக்கி வாய்க்கு முன்னரே தன பங்குக்கு அவசரம் அவசரமாகச் சில பொதிகளை ஏற்றி விடடார். மின்சாரக் கட்டனம் அதில் முக்கியமானதொன்று. அவசியமற்ற விடயங்களில் அவர் விரயம் செய்த பணத்தையும் காலத்தையும் வளத்தையும் முக்கிய விடயங்களில் செலவிட்டிருந்தால் வறிய குடும்பங்கள் இருட்டில் வாடா மாட்டா. 

எதிர்க்கட்சித் தலைவர் பற்றிக் பிரவுண் கொஞ்சம் smart ஆன மனிதர். லிபரல் படகு மூழ்கப் போகிறது என்பதைத் தூரத்திலிருந்தே அவதானித்து விடடார். அவர் பிரச்சாரம் என்று எதுவும் செய்யாமலேயே தேர்தலில் வெல்வதற்கு சாத்தியமிருக்கிறது. லிபரல் வெறுப்பு வாக்குகளே போதும். 

ஜனன கிரகங்கள் ஜாதகருக்கு சாதகமாக அமைந்தாலும் சஞ்சார கிரகங்களின் கோசார பலன்கள் எப்படி அமையுமென்பதைக் கணித்துத்தான் பலன் சொல்ல முடியும்.

பத்தில் வியாழன் பதியை விட்டுக் கிளப்பும் என்றொரு சோதிடப் பழமொழியுமுண்டு. 

பார்க்கலாம். 

காஸ்ட்றோவின் கால மரணம் 

பிடல் காஸ்ட்றோவின் மரணம் முகனூலில் எழுப்பிவரும் விவாதங்கள் கியூபாவின் சுருட்டை விடப் போதை தருவதாக இருக்கின்றன. அவற்றை வாசிக்க ஒரு நாளே போதாது.

ஈழத்தமிழரின் விடயத்தில் கியூபா நடந்துகொண்ட விதம் பிடலின் மீது வெறுப்பை உருவாக்குவது நியாயம் என்று சிலரும் அவர் கடைசிவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற உண்மையான பொதுவுடைமை வாதி எனச் சிலரும் பொருத்திக் கொள்கிறார்கள். காஸ்ட்றோ வின் சிங்கள சாய்வு  பொதுநலவாய நாடுகளென்ற நட்பின் காரணமா தமிழர்கள் மீதான வெறுப்பு காரணமா புலிகளின் அமெரிக்க சாய்வு காரணமா அல்லது அதிகளவு கனடியத்  தமிழர்கள்  மிளகாய்த் தூளும் ஒடியல் மாவும் கொண்டுவருமளவிற்கு அங்கிருந்து போயிலைச் சுருள்களை வாங்கித் செல்வதில்லை என்ற கோபத்தின் காரணமா  தெரியாது.

இந்த காஸ்ட்ராவின் கசப்ப்பில் உண்மையிருக்கிறதா என்பதை அறிய வேண்டுமென்பதற்காய் நானே நேரில் சென்று பார்த்தேன். சென்றது குடும்பத்துடன் தான் என்பதனையும் இங்கு அழுத்தத்தோடு பதிய வைத்துக் கொண்டு - பார்த்ததும், கேட்டதும் நிச்சயமாக காஸ்ட்றோவின் மீது - தமிழர் விரோதத்தையும்  மீறி - ஒரு மதிப்பை ஏற்படுத்தியது உண்மை.

அவர் இறுதி வரைக்கும் கம்யூனிஸ்ட்டாகவே வாழ்ந்து முடிந்ததற்கு அவர் அமெரிக்காவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அமெரிக்காவின் உற்ற நண்பரான  முன்னாள் ஆடசியாளரின் கீழ் மக்கள் பட துன்பத்தைவிட காஸ்ட்றோவின் ஆட்சியில் மக்கள் படும் துன்பம் பெரிதல்ல. 600 க்கும் மேலான அமெரிக்க கொலை முயற்சிகளில் இருந்து அவரைக் காப்பாற்றி அவரை இதுவரை வாழ வைத்தது அவரது ஊழலற்ற ஆட்சி. ஆபிரிக்கக் கண்டத்தின் விடுதலைக்கு மட்டுமல்ல ஹெயிட்டியின் இயற்கை அழிவுகளின் போதெல்லாம் எதுவும் அலட்டிக் கொள்ளாது பெருந்தொகையில் மருத்துவ தொண்டர்களை அனுப்பியதாலும் உலக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் காஸ்ட்றோ. மாதத்திற்கு 67 டாலர்கள் சம்பளம் எடுத்துக்கொண்டு சந்தோசமாகப் பணிபுரியும் வைத்தியர்களைக் கொண்ட ஒரு நாடு - அதுவும் அமெரிக்காவின் கோடியில் இருக்கிறதென்றால் - அது காஸ்ட்றோ வினால் தான் சாத்தியமாக்க முடிந்தது.

அவர் வரித்த சித்தாந்தம் தோல்வி கண்ட போதும் அவர் தோல்வியடையவில்லை என்ற மகிழ்வோடு அவர் மறைந்திருக்கிறார்.

மகிழ்வான வாழ்வை நாமே தான் உருவாக்க வேண்டும் என்பதைகே காட்டிச் சென்ற ஒரு நல்ல மனிதர்.


இக் கட்டுரை டிசம்பர் 2016 ஈ குருவி பத்திரிகையில் பிரசுரமானது.