வகுப்பு
நாளை பற்றி நேற்று இன்றுக்கு
வகுப்பெடுத்தது
"AI விவேகம், செவ்வாய் மோகம்
எதுவுமினி வேகாது;
நீரும், நிலமும், வானும்
தத்தமது விடுதலைக்காய்
போரிடத் தொடங்கிவிட்டன;
பேசாமல்,
எண்ணை விளக்கிற்கும்
எருதுழுத வயலுக்கும்
பழக்கப்படு;
பலன்
அவைக்கும்தான் உனக்கும்தான்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக