கனடாவின் அவமானம்
2011 ஜூன் மாதம் சிண்டி கிளாடியூ என்னும் 36 வயதுடைய பெண் கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான எட்மன்ரனில் உள்ள ஓட்டல் அறையொன்றில் குளியற்தொட்டியொன்றில் இறந்திருந்தாள். அதிகப்படியான இர்த்த ஓட்டமே மரணத்திற்குக் காரணம் என மரண அதிகாரியின் தீர்ப்பு அமைந்திருந்தது.
சிண்டியின் மரணம் ஒரு கொலை எனக் கூறி அக் கொலையைச் செய்தவரென ஒன்ராறியோவைச் சேர்;ந்த ட்ரக் சாரதியான ப்ராட் பார்ட்டன் கைது செய்யப்பட்டு வழக்குத்தொடரப்பட்டது. இந்த மார்ச் மாதம் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. பார்ட்டன் குற்றவாளியல்லவென அறிவிக்கப்பட்டது.
இச் சம்பவம் பற்றிய செய்திகள் பல வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஊடகங்களில் வெளிவந்த போதும் அவை இரக்க நரம்புகளை மெதுவாக வருடிச் சென்றதோடு அவைவழக்கம் போல் அன்நியப் பெருவெளிக்குள் அடக்கம் கொண்டுவிட்டன.
இன்று (மார்ச் 31) இச் செய்தி சி.பி,சி. வானொலியில் அனா மரியா ட்றெமொன்ரி யினால் அலசப்பட்டபோது தான் செய்தியின் முன் புலம் பின் புலங்கள் எல்லாம் சேர்ந்து எனதுமூர்க்க நரம்புகளைப் புடைத்தெழச் செய்தன.
சிண்டி ஒரு கனடிய சுதேசியப் பெண். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். பாலியல் தொழிலாளி. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் செய்தவர் ஒரு வெள்ளை இனத்தவர்.
தீர்ப்பு கொலைக் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமாக அமைந்ததா அல்லது இறந்துபோன சிண்டிக்கு நீதி கிடைக்கவில்லையா என்ற வாதப் பிரதி வாதஙகள் ஒருபுறமிருக்கட்டும். என் நரம்புகளைப் புடைத்தெழச் செய்த விடயம் வழக்காடப்பட்ட நீதிமந்றத்தில் நடைபெற்ற சம்பவம்தான்.
கனடிய சுதேசிகள் மீது பல நூற்றாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்பு இப்போதைக்கு நின்றுவிடப் போவதில்லை என்பதற்கு சிண்டியின் மரணம் புதிதாகநாட்டப்பட்ட இன்நுமொரு மைல் கல் என்பதற்கு இந்த நீதிமன்றம் பட்டயம் எழுதி வைத்திருக்கிறது.
சிண்டியின் மரணம் மிகுதியான இரத்த ஓட்டத்தினால் நடைபெற்றிருக்கிறது என்பதைச் சொல்ல சாட்சியங்களின் அவசியம் இருந்திருக்காது. சிண்டியின் பிறப்புறுப்பிணுள்மெல்லிழையம் (tissue) வெடித்ததன் காரணமாக இரத்த ஓட்டம் ஏற்பட்டது என்பதையும் மருத்துவ அதிகாரிகள் 'ஐயம் திரிபுற' நிரூபித்துமிருக்கலாம். இழைய வெடிப்புக்குக்காரணம் முரட்டுக் கலவி (rough sex) என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுவிட்டது. ஆனாலும் அதற்குக் காரணமானவர் குற்றமேதும் இழைக்கவில்லை என நீதிமந்றம்தீர்ப்பளித்தால் குற்றம் சிண்டியின் மீதுதானே!
சரி அதை விடுங்கள். உலகத்தில் எத்தனை கொலைகள் நடைபெற்றிருக்கின்றன. எந்தவொரு நாட்டிலாவது கொலை செய்யப்பட்டவர் இவர்தான் என நிரூபிப்பதற்கு கொலைசெய்யப்பட்டவரின் தலையைக் கொய்து நீதிமந்றத்துக்குக் கொண்டு வந்து ஜூரர்கள் முந்நிலையில் காட்சிப் பொருளாக வைப்பார்களா?
கனடா எப்படிப்பட்ட நாடு. நாகரீகத்தின் உச்சியில் இருக்கும் நாடு. இங்குள்ள ஒரு நீதிமந்றத்தில் ஜூரர்கள் முந்நிலையில் காட்சிப் பொருளாக அன்நாட்டின் உரிமைக்காரப்பெண்ணின் பிறப்புறுப்பை அரிந்து கொண்டுவந்து காட்டியிருக்கிறார்கள். முரட்டுக் கலவியால் இழையம் கிழிந்து மரணமானாள் எனக் காட்டுவதற்கு இத்தனை நடவடிக்கை! தூரதேசமொன்றில் சுய இன்பத்திற்காகக் கொலைக்களம் சென்று கொலையுண்டு வருகின்ற இராணுவத்தினனுக்கு கொடி போர்த்தி ஊர்வலம் செய்யும் இந்த நாட்டில் ஒரு சுதேசிப்பெண் 'குற்றவாளி' என்பதை நிரூபிக்க கனடாவின் நீதித்துறை பெரும்பாடு பட்டிருக்கிறது! (இந்த இடத்தில் செருகக்கூடிய ஒரு கொசிறு: சில நாட்களின் முன் முகநூலில் ஒருஇலங்கைப் பெண் குமுறியிருந்தார். கனடா ஒரு சுவர்க்க பூமி. பிறந்த நாட்டில் நான் ஒரு மாமிசத் துண்டாகவே நடத்தப்படுவதுண்டு என்று. இக்கரை madam க்கு அக்கரை சிவப்புத்தான்)
இந்த வழக்கில் ஜூரர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் யாரென்று நிநைக்கிறீர்கள்? 8 பேர் வெள்ளை இனத்தவர். ஒருவர் கறுப்பிநத்தவர். மற்றவர் மஞ்சள் இனத்தவர். சுதேசியர்எவருமில்லை.
இதுபற்றி வழக்குத் தொடுநரிடம் அனா மரியா வினவியபோது அவர் சொன்ன பதில் சுதேசியர்களை ஜூரர்களாக நியமித்தால் அவர்கள் முற்சாய்வோடு (bias) தீர்ப்பளித்துவிடலாம் என்பதற்காகவே அப்படி நியமிக்கவில்லை என்பதாக இருந்தது.
சுதேசிகளின் சமூகத்தில் சிந்டியிந் கொலை ஆச்சரியத்தைத் தருமெந்பதற்கு ஆதாரங்கள் இல்லை. 1980 முதல் 2013 ஆண்டு வரையில் 1017 பெண்கள் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். 164 பெண்கள் காணாமற் போயிருக்கிறார்கள். மனிற்றோபா மானிலத்தில் இக் காலகட்டத்தில் கொலை செய்யப்பட்டவர்களில் 49% சுதேசிப் பெண்கள்.
உலகெங்கும் சுதேசிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் விடயங்களில் நமது சுவர்க்க பூமியான கனடாவும் அதியுயர் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஐ.நா. விந் பெண்களுக்குஇழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான அமமைப்பு 38 சிபார்சுகளுடந் கூடிய தனது அறிக்கை மூலம் மிகவும் காட்டமாக கனடாவைச் சாடியிருக்கிறது. இருந்தும் நமதுசுவர்க்க பூமி இது பற்றி எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
கனடாவின் கொலை செய்யப்படும் மற்றும் காணாமற் போகும் சுதேசியப் பண்கள் பற்றிய பிரச்சினைகளை ஆரய்வதற்காக ஒரு விசாரணைக் கமிஷனை நியமிக்கும்படி பலசுதேசிய மற்றும் பொதுசன அமைப்புக்கள் அரசிடம் மன்றாடி வருகின்றன. இருந்தும் நமது ஹார்ப்பர(ர)சருக்கு இது ஒரு பிரதம விடயமே இல்லை. இது பற்றிய அவரதுசமீபத்திய இரு கருத்துக்கள்:
" காணாமற் போகும் அல்லது கொலை செய்யப்படும் சுதேசியப் பெண்களின் பிரச்சினை ஒரு சமூகவியல் சார்ந்த பிரச்சிநையே அல்ல. மாறாக அது ஒரு குற்றவியல்சம்பந்தமான பிரச்சினை. அதை அதன் வழியில் தான் அணுக வேண்டும்" (இன்நுமொரு சுதேசியப் பெண் ரீனா பொண்டெயின் கொலை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குஅளித்த பதில்)
"உண்மையைச் சொல்லப் போனால் இந்த விடயங்கள் எங்கள் றேடாரில் அதிக உயரத்தில் இல்லை" (சி.பி.சி யிம் மூத்த அறிவிப்பாளர் பீட்டர் மான்ஸ்பிறிட்ஜ் இன் கேவிக்குப்பதிலளித்த போது)
உண்மைதான். ஹார்ப்பரின் ரேடார் பிராந்தியத்தில் அதி உயரத்தில் பறப்பது போர் விமானங்கள் மட்டுமே.
சிண்டிக்கும் அவளது பாதையில் வலிந்தநுப்பப்பட்ட சகோதரிகளுக்கும் நான் சொல்லக் கூடியது அடுத்த பிறப்பிலாவது சிகண்டிகளாகப் பிறவுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக