வியாழன், 30 அக்டோபர், 2025

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குற்ற ஆலம் என்னும் தலைப்பில் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு அக்டோபர் 5, 2025 அன்று ஸ்காபரோ, கனடாவில் (3600 Kingston Rd.) வெளியிடப்பட்டது.


வானொலி அறிவிப்பாளர் Y.K. நாதனின் நெறிப்படுத்தலில், கவிஞர் பா.அ.ஜயகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் 'காலம்' வெளியீடான இந்நூல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது.

நூல் பற்றிய மதிப்பீட்டுரைகளை விஞ்ஞானியும் எழுத்தாளருமான வெங்கட் ரமணன் அவர்களும் எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருண்மொழி வர்மனும் வழங்கியிருந்தனர்.

எழுதாளர் 'பூரணி' மகாலிங்கம் நூலை வெளியீட்டு வைத்தார். சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான 'நக்கீரன்' தங்கவேலு, 'தாய் வீடு' ஆசிரியர் திலீப்குமார், ஆன்மீக செயற்பாட்டாளர் சிவசாமி திருச்செல்வம் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் மெய்கண்ட தேவன் (சந்திரன்) ஆகியோர் சிறப்பு பிரதிகளை வாங்கிக் கெளரவித்தனர்.

இவ்விழாவை ஒழுங்கு செய்த 'காலம்' செல்வம், மண்டப, தீனி ஒழுங்குகளைச் செய்துதவிய தேடகம் நண்பர்கள், ஒளி, ஒலிப் பதிவுகள் மற்றும் விளம்பரங்களைச் செய்துதவிய 'தடயத்தார்' கிருபா கந்தையா மற்றும் சரீர உதவிகளைச் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நூலை வாங்கி, வாசித்து, கருத்துக்களைக் கூரிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.



அசை சிவதாசன்


கருத்துகள் இல்லை: