வெள்ளி, 4 ஜனவரி, 2013

பிறந்த நாள்


இன்று எனது பிறந்த நாள் . புது வருடம் ஆரம்பித்து நான்காவது நாள். புது வருடத்தில் முக்கியமான சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று திடசங்கற்பம் -வழக்கம்போல - கொண்டுள்ளேன்.

இந்த ஊர்ச் சோலி , சமூக சேவை எல்லாம் போதும். கொஞ்சம் சுயநலமியாக இருந்து உடலையும் உளத்தையும் தேற்றிக் கொள்ளலாம் என்பதே  அந்த திடசங்கற்பம்.

போலிகளின் மத்தியில் நிற்பதே  உபாதையாக இருக்கிறது. அவர்கள் இல்லாத உலகமே இல்லை. சமூகமும் அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. இந்த What -is-in-it-for-me சமூகத்தில் நன்றி, விசுவாசம் எல்லாமே ஏலத்தில் விற்கப்படுகிறது.

Survival of the fittest. If I cannot fit in this community I cannot survive. Therefore I have to change, change for the worse and that is inevitable.

Wait a minute...haven't I said the same thing last year too?

I discussed this with my friend. He said, do it without declaring it. He may have a point.

I am confused.
இன்னும் என்னோடு விவாதித்துக் கொண்டிருக்கிறேன்.

1 கருத்து:

Venkat சொன்னது…

Belated birthday wishes.

ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் இந்த கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது என்றே தோன்றுகிறது. சுய தேவைகளை முற்றிலும் புறக்கணித்துப் பிறர் என்ன சொல்வார்களோ, பிறருக்கு எது தேவையோ என்றே நமது எல்லா கேள்விகளும், நடவடிக்கைகளுகும் மாறிப்போகின்றன. ஒரு சமயத்தில் கடின உழைப்பால் நாம் மேலேறி வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்பொழுது திருப்தி தோன்றினாலும் நம்முடைய அதே கடின உழைப்பால் நம்மைச் சார்ந்தவர் (குறிப்பாக பணியிடத்தில்) எப்படி ஒட்டுண்ணிகளாய் உயர்ந்திருக்கிறார்கள் என்ற பார்வையும் எழ, மொத்தத்தில் சலிப்பே விஞ்சி நிற்கிறது.

என்ற போதும் இந்த ஓட்டத்தை நிறுத்துவது அத்துனை எளிதானதாக இருக்குமெனத் தோன்றவில்லை.

சலிப்பேற்படும்போதெல்லாம் சற்று கவனத்தைத் திருப்பி, பின் தொடரோட்டத்தைத் தொடரவேண்டியிருக்கிறது. உங்கள் மனநிலையுடன் நான் பெரிதும் ஒத்துப்போகிறேன்.

ஆத்மார்த்தமான நண்பர்கள், உறவினர், புத்தகம், இசை இவையே வெக்கைப் பாதையில் நிழல்கள். - வெங்கட்